FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 23, 2019, 10:16:15 PM

Title: எண்ணங்களின் மொழிபெயர்ப்பு
Post by: thamilan on April 23, 2019, 10:16:15 PM
தூரங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது பாதையானது
பாதைகளை நான் மொழிபெயர்த்தேன்
அதில் என் பயணம் தொடர்ந்தது

வாசங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது பூக்களானது
பூக்களை நான் பொழிபெயர்த்தேன்
அது வேர்களின் வலிமையை சொன்னது

எண்ணங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது சிறகானது
சிறகுகளை நான் மொழிபெயர்த்தேன்
அது சிகரத்தின் முகவரி தந்தது

பசுமைகளை நான் மொழிபெயர்த்தேன்
அது பயிரானது
பயிர்களை நான் மொழிபெயர்த்தேன்
அது உழவனின் உயிரானது

தோல்விகளை நான் மொழிபெயர்த்தேன்
அது தொடர்ந்து வந்தது
தொடர்ந்து நானும் மொழிபெயர்த்தேன்
அது வெற்றியை வாங்கித் தந்தது

துன்பங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது அனுபவமானது
அனுபவங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது ஞானமானது

உணர்வுகளை நான் மொழிபெயர்த்தேன்
அது வார்த்தைகளானது
வார்த்தைகளை நான் மொழிபெயர்த்தேன்
என் பேனாவின் மை தீர்ந்தது
Title: Re: எண்ணங்களின் மொழிபெயர்ப்பு
Post by: Guest 2k on April 24, 2019, 11:53:42 AM
வாவ் வாவ் வாவ்வ் அட்டகாசமான கவிதை தமிழ்

//
துன்பங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது அனுபவமானது
அனுபவங்களை நான் மொழிபெயர்த்தேன்
அது ஞானமானது - Beautiful