Author Topic: சாபத்திற்குரியவர்கள்!!!  (Read 1310 times)

Offline Yousuf

இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது அனைவர்மீதும் கட்டாயமாதாகும். சாபத்திற்குரிய காரியங்கள் எவை?

சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள்
சபிப்பதைத் தடை செய்யும் நபிமொழிகள்
யாரை சபிக்கலாம்? யரை சபிக்கக் கூடாது?


சாபத்திற்குரியவர்கள்:

1) இணைவைத்தல் மற்றும் அதனைச் சார்ந்த செயல்களைச் செய்பவர்கள்.

2) விதியைப் பொய்ப்பிக்கக் கூடியவர்கள்.

3) புனித பூமிகளான மக்கா, மதீனா போன்ற இடங்களில் கலகம் செய்பவனுக்கும் அனாச்சாரங்கள் செய்பவனுக்கும் அடைக்கலம் தருபவர்கள்.

4) மக்கள் நடமாடும் பாதை போன்ற பொது இடங்களை அசுத்தப் படுத்துபவர்கள்.

5) மார்க்கக் கடமைகளை தட்டிக் கழிக்க தந்திரங்களைக் கையாள்பவர்கள்.

6) பிராணிகளின் அங்கங்களை சிதைப்பவர்கள்.

7) ஆண்களைப் போல் நடக்கும் பெண்கள், பெண்களைப் போல் நடக்கும் ஆண்கள்.

8 இறைவனின் இயல்பான படைப்பில் மாற்றம் செய்பவர்கள்.

9) பிறர் செல்வத்தை அபகரிப்பவர்கள்.

10) உலகப் பேராசை.

11) நபித்தோழர்களை விமர்சிப்பவர்கள்.

12) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள்.

13) கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் மனைவி.

14) மண்ணறைகளுக்குச் செல்லும் பெண்கள், ஒப்பாறி வைத்து அழும்பெண்கள்.

15) மது அருந்துபவர்களும் அதை ஆதரிப்பவர்களும் அதற்கு துணை நிற்பவர்களும்.