Author Topic: நாட்டு நடப்பு...  (Read 1598 times)

Offline vedhalam

நாட்டு நடப்பு...
« on: August 10, 2011, 04:34:00 PM »
அதென்னமோ அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் விஜயை தான் கிண்டல் பண்றாங்க #அவன் எவ்வளோ பெரிய அடிமை!

மரணத்தை விடக் கொடுமையானது... அது மருத்துவமனையில் நிகழ்வது!

வெற்றி நம் நிழல் போன்றது. அதை கைப்பற்ற நினைத்தால் அகப்படாது. பொருட்படுத்தாமல் நம் பாதையில் முன்னேறினால் தொடர்ந்து வரும்.

நல்லவன் என்பதை பழகிப்பாருங்கள். கேட்டுப்பார்க்காதீர்கள். பதில்கள் பொறாமை கொண்ட நண்பர்களிடமிருந்து கூட வர்லாம்...

இன்னும் எத்தனைநாள் பெண்களின் ஆடை பற்றியும் நடையைப் பற்றியும் கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.அதை தாண்டிச் சென்றுவிட்டார்கள் பெண்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள பெண் காதலியாகவும், நகைச்சுமை அதிகமுள்ள பெண் மனைவியாகவும் அமைய விரும்புகின்றனர் சில ஆண்கள்!

வெற்றுப்புன்னகைகளின் பின்னால் ஒளிந்திருக்கிறது நமக்கான மதிப்பெண்கள்!

பசிக்குது... நானே தான் போய் தோசை வார்த்து சாப்பிடனும். #என்ன வாழ்க்கைடா இது. #தோசையை கிழியாமல் சுட்டு சாப்பிட தெரிஞ்சவன் நல்ல பேச்சிலர்ர்

ஹோட்டல்களில் பில்லுடன் சீரகம் தருவது பில் செரிப்பதற்காக...

ஆண்களுக்கு தேவை போதை.! பெண்களுக்கு தேவையே போதை.!

சரிக்கும், தவறுக்குமான இடைவெளியில் அல்லாடும் மனம்... சரியாய் 'தவறை' தேர்ந்தெடுக்கிறது!

முன்முடிவுகளுடன் இருப்பவர்களுடனான விவாதம் விதண்டாவாதமே!

அழகு வண்ண மலர்கள் கொண்டு மிக நேர்த்தியாய் அலங்கரிக்கப்பட்டும் ரசித்து பார்க்க இயலவில்லை # பிண ஊர்தி

தன் மகன் சிகரெட் பிடிப்பதை ஒரு தந்தை பார்ப்பதை விட ஆபத்தானது, தந்தை சிகரெட் பிடிப்பதை ஒரு சின்னஞ்சிறு மகன் பார்ப்பது

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு..... நரகத்தில் நடத்தப்படும் திருமணங்கள் # விவாகரத்து

'என் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு நானே முழுப்பொறுப்பு' என்று உணரும் நாளே வாழ்நாளின் சிறந்த நாள்!

போதை வேண்டாம். போதைக்கான தேவையை என்ன செய்வது?

உண்மையான லாஸ்ட் ட்ரிங்க் என்பதற்கான அர்த்தம் , மீதி ட்ரிங்க் இருக்கும் போதுதான்.

சுதந்திரம் என்பது பொருளாதாரம் சம்மந்தப்பட்டது என்பதே வசதியானபின் தான் தெரியும்.

இரவில் தூங்காமலிருக்க ஆயிரம் காரணங்கள்.பகலில் தூங்க காரணமேயில்லை.

இந்த மெமரி கார்டு,பென் டிரைவ் இதல்லாம் உருவாக்குறது கவர்மென்ட்'டா? # 8GB கார்டு வாங்கினா 7.5 GB தான் காட்டுது.

ஓரளவுக்கு ஒத்த கருத்துள்ள பெண்கள் ஒன்று சேரும்போது அந்த இடத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது.

பொண்ணு பாக்க போகும்போதே பொண்ணு 'மகாலட்சுமி' மாதிரி இருக்கான்னு சொல்றதிலயே வரதட்சணையை வேணும்னு சிம்பாலிக்க உணர்த்திடறாங்களோ!?

எவ்வளவு ஆயில் புட் சாப்பிட்டும் சிக்ஸ் பேக்கில் ஆஞ்சேநேயர், துக்களியூண்டு கொலுக்கட்டைக்கே தொப்பை போட்டு விட்டார் பிள்ளையார்.

பாரம் சுமக்க முடியாமல் மூச்சு திணறி, நடக்க இயலாமல் வண்டியிழுக்கும் மாடுகளை பார்க்கையில் ஏனோ கலைஞர் ஞாபகம் வருகிறது

வில்லனை பேசியே திருத்திய திருமலை வாழ்க.. # முடியல யுவர ஆனர்.

ஒரு விஷயத்தை பிரபலமாக்க ரகசியம் என பெயர் வைத்துவிடுங்கள்

உறவுகளில் நட்புகள் அரிது! நட்பில் உறவுகள் எளிது! # மச்சி, மாமு, மாப்ளை...

2 வரி SMS ஆனாலும் எந்த கட்டுரையாலும் விளக்க முடியாத நட்பை நண்பர்களின் குறுஞ்செய்தி உணர வைக்கிறது !

சில பெண்களின் நட்புகள் திருமணத்திற்கு பிறகு நினைவாக மட்டுமே மாறி விடுகிறது.... # வருத்தம்

காக்கா கடியும், போடி வாடியும், அளவேயில்லாத விளையாட்டுகளும், எதிர்பார்ப்பே இல்லாத தூய அன்புமாய் இருந்த பள்ளி நட்புகள் பசுமையாய் மனதில்....

அன்பெனும் எரிபொருளால் பிரகாசமாய் ஒளிவிடும் அணையா விளக்கு நட்பு!

மனம் அமைதியாக இருந்தாலும் பயமாக இருக்கிறது.புயலுக்கு முன் அமைதியோ என்று..

நகரம் நகங்கள் கூர்மையான பருந்துகளுக்கானது,சிறுபறவைகளுக்கு இரையும் இல்லை இடமும்மில்லை !

இறந்து போவதாய் கனவு... இறந்த பின்னான பகுதி மறந்து(இறந்து)போய் விட்டது !

உங்களோட சுயசிந்தனையை மத்தவங்க மண்டைல,அவங்க விருப்பமில்லாம நட்டு வைக்குறது தான்#அறிவுரை அதாவது அட்வைஸ்

சிலருக்கு எப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிற ஒரே விஷயம் மறதி!

ரசிகன் என்பவன் கொடுக்கும் அனைத்தையும் ரசிப்பவன் அல்ல.

எல்லோருக்கும் பொதுவானவன் காமன்(common)

எல்லா பெண்களுக்கும் பெண் என்னும் ஆழமான நினைப்புண்டு...தன்னிலை மறப்பதில்லை எங்கும் எப்பொழுதும்...

மெயில், SMS, கடிதம் எவற்றையும் விட வேகமாக... சில நேரங்களில் தகவல் அளித்து விடுகிறது உள்ளுணர்வு!

ஆபீசில் யாராவது "காதுகுத்துக்கு" போறேன் என்று லீவ் கேட்டால், யாருக்கு என கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. # ஒருவேளை நமக்கும் இருக்கலாம்.

இணை பிரியாதவைகளுக்கான உதாரணங்கள் சிலவுண்டு..! எதுவும் திருப்தியளிக்கவில்லை..... என்னைப் பிரியாத உன்னைப் போல!

உதய சூரியனின் 'ஒளி'யில் துயில் எழுந்தாலும்... என் இதய சூரியன், உனது குறுஞ்செய்தி 'ஒலி'யில்தான் என் பொழுது விடிகிறது!

உலகமெல்லாம் மனிதர்களை படைத்த கடவுள் சைனா ஜப்பான்ல மட்டும் காப்பி பேஸ்ட் ஆப்சனை யூஸ் பண்ணிட்டாரா.? #ஒரே மாதிரி இருக்கானுவ

சமீபமாக என் வாழ்வில் தோல்விகள் எதுவும் இல்லை. இதுவே பெரும் பயமாய் இருக்கிறது.

தமிழன் நல்ல தமிழில் பேசுவது பெருமையல்ல..... தமிழனின் கடமை! # தாய்மொழி

வாழ்க்கைப்பாதையில் பல நட்புகள் பிரிவில் முடியலாம். பிரிந்த நட்புகளை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் பயணத்தை தொடரலாம்.

எந்த மாற்றுக்கருத்தையும் மலர்ந்த புன்னகையுடன் கூற முடிகிறது FTC CHAT # ஸ்மைலி:-)

ஆண்களுக்கு "கதை,கவிதை,மொக்கை,தமாசு,கிரிக்கெட்.." என பலது இருக்கு. பெண்களுக்கு "ஆண்கள், பெண்ணியம்,.." அப்புறம் தான் எல்லாமே!

ஆண்களை அடிக்க வார்த்தைகள் கூட இல்லை # கண்ணீரே போதும்.

விளம்பரங்களைப் பார்த்தால் ஆயிலில் தான் நம் ஆயுள் உள்ளது போல. # ரீஃபைண்டு சன் ஃப்ளவர் ஆயில் இதயத்துக்கு நல்லதாம்..

ஏழாம் அறிவு ஆங்கிலத்தில் செவன்த் சென்ஸ் # நான்-சென்ஸ்

அசீத் பேஸ்மாட்டார். விசய் பேசறத அவரே கேக்க மாட்டார். #நாமதான் இவங்களுக்காக கீச்சிகிட்டு சாகணும்

அஜீத்தோட ஒரு படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள இங்க விஜய்யோட பல படங்கள் (பீதி கிளப்பும் ஸ்டில்ஸ்) ரிலீஸ் பண்ணிடறாங்கப்பா மக்கள்!

எதேச்சையாக சில பாடல்களை யுட்யூபில் பார்க்கும்போது தான் தெரிகிறது ஆடியோ ப்ளேயரின் மகிமை.. #  இப்போ தாஜ்மகால்...


Offline Yousuf

Re: நாட்டு நடப்பு...
« Reply #1 on: August 10, 2011, 04:59:48 PM »
Quote
தன் மகன் சிகரெட் பிடிப்பதை ஒரு தந்தை பார்ப்பதை விட ஆபத்தானது, தந்தை சிகரெட் பிடிப்பதை ஒரு சின்னஞ்சிறு மகன் பார்ப்பது.

வெற்றுப்புன்னகைகளின் பின்னால் ஒளிந்திருக்கிறது நமக்கான மதிப்பெண்கள்!

ஓரிரு வரிகளில் சிந்திக்க கூடிய செய்திகளை தருகிறீர்கள் வேதாளம் மச்சி தொடரட்டும் உங்கள் பதிவுகள்...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நாட்டு நடப்பு...
« Reply #2 on: August 10, 2011, 09:08:05 PM »
Quote
வாழ்க்கைப்பாதையில் பல நட்புகள் பிரிவில் முடியலாம். பிரிந்த நட்புகளை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் பயணத்தை தொடரலாம்.

எந்த மாற்றுக்கருத்தையும் மலர்ந்த புன்னகையுடன் கூற முடிகிறது FTC CHAT # ஸ்மைலி:-)

nice ;)
                    

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
Re: நாட்டு நடப்பு...
« Reply #3 on: August 24, 2011, 09:02:14 PM »
wow..  super  thodaraddum ....