Author Topic: ஜல்ஜல் கொலுசு ஒலியும்...  (Read 2179 times)

Offline vedhalam

தனது உறவுகளுக்கு நேரும் இயற்க்கையான மரணத்தையே எவரும் விரும்புவதில்லை,அடுத்தவருக்கு என்றால் மரணத்தை தண்டனையாக தரலாமா..?

உலகத்திலேயே ரொம்ப கோபகாரங்க நம்மூரு கவர்மென்ட் பஸ் கன்டக்டருங்க தான்! #அனுபவம்

தமிழர்களை கிண்டல் செய்பவர்கள் அதை தமிழ்லேயே செய்வதுதான் கொடுமை!

குடிக்கிறவங்க எல்லாரையுமே குடிகாரன்னு சொல்றதில்ல இந்த ஒலகம்!#ஏழையை மட்டும் தான்

எப்போதெல்லாம் கோபித்துகொள்கிறோமோ அப்போதெல்லாம் அன்னை நமக்குப்பிடித்ததை சமையல்செய்து கவிழ்த்துவிடுகிறாள் #கோபம்வரும் போகும். ஆனா பூரி..?

எத்துறை பயின்றாற்கும் உய்வுண்டாம்.... உய்வில்லை கணினித்துறையில் கால்வைத்த மகற்கு.... #கண்ணெல்லாம் நோவுது மைலார்ட்...

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு! ஒரு சரக்கிருக்குது... முறுக்கிருக்குதுமெட்டுப்போடு! # சரக்கும் முறுக்கும் இருந்தா எதைவேணுன்னாலும் போடலாம்...

ஹைவே புளியமரத்தடி மறைவில் நின்று பெண் லாரிய நிறுத்துனா மேட்டர்; லாரிய ஹைவேல நிறுத்திட்டு டிரைவர் புளியமரத்தடி போனா வாட்டர்...

திருட்டுத்தனமா காதலிக்கிறவனும், திருட்டுத்தனமா தண்ணியடிக்கிறவனும்... திருப்தியா இருந்தோம்னு சொல்லவே முடியாது...

உயிர்களுக்கே மதிப்பில்லா இடத்தில், உணர்வுகளுக்கு மட்டும் எப்படி மதிப்பளிப்பார்கள்...

ரிங்டேன் ஒலி அளவை வைத்தே எந்த கம்பனி செல்போன் என்று கண்டுபிடிக்கிறார்கள் நான்கு வயது குழந்தைகள்... # கலிகாலம்...

ஆபிஸ் கணிணிக்கு சொந்தசெலவில் கீபோர்ட் வாங்கிவைக்கும் கொடுமையை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? # கம்பேனியும் டப்பா! கம்பியூட்டரும் டப்பா!

தேதிகாலண்டரை கிழித்துவிட்டு வேர் இஸ் ரீசைக்கில் பின்? என்று கேட்கிறான் சகஊழியன் #வரவர நாட்ல இந்த கம்ப்யூட்டர்படிச்சவனுங்க தொல்ல தாங்கமுடியல...

ஜல்ஜல் கொலுசு ஒலியும்... சலசல நீர் ஒலியும் சலித்துப்போவதே இல்லை... குடத்துடன் செல்லும் குமரிகள் இருக்கும்வரை...

எத்தனைமுறை நம் தலையில் கொட்டினாலும் வலிக்காதது… மழையும், சகோதரியின் கரங்களும்...

மனிதன் பிட்டுக்கு மண்சுமக்கும் பொழுது அவன் ஃபிகர் மடிக்கும் திறமையை இழக்கிறான்...

I WORK FOR MONEY; IF YOU WANT LOYALTY, HIRE A DOG... இத்த பிரிண்ட் எடுத்து கம்பியூட்டர் டேபிள்ல ஒட்டி வைக்கணும்...

சப்பிப் போட்ட மாங்கொட்டை போன்ற மண்டையைக் கொண்ட அங்கிள்கள் தொல்லை தாங்க முடியவில்லை! யூத்தென காட்ட ரொம்பவும் பிரயத்தனப்படுகிறாரகள் (1/2)

நான்.. நீ.. என்றால் உதடுகள் ஒட்டாது... நாம் என்று இருந்தால்தான் ப்பச்சக் என்று ஒட்டும்... # தோழியிடம் போட்ட பிட்டு...

நாளை என்பது நமக்கானது அல்ல என்ற நினைவு இருந்தால்... இன்று நலமாக இருக்கும்... # சரியாத்தான்
சொல்றேனா...

எத்தனைமுறை பேசித்தீர்த்தாலும் ஏதோ மிச்சமிருப்பதைப்போன்றது காதல்! எத்தனைமுறை குடித்துத்தீர்த்தாலும் ஏதோ மிச்சமிருப்பதைப்போன்றது சரக்கு...

இந்த "படங்காட்டுவது..." "சீன் போடுவது..." போன்ற ஸ்லாங்குகள் விஜய் நடிப்பினைப் பார்த்து டெவலப் செய்யப்பட்டனவா...

ரியல்எஸ்டேட்: பத்து நிமிஷ ட்ராவலிங்ல 100 அடி ரோடு சார்...

மேனேஜரிடம் ஜீனியர்: சார்... அந்த ****மேம்பாலம் (or அந்த ரோடு) தாண்டி வந்துட்டு இருக்கேன் சார்...

சிம்கார்டு விக்கிறவன்: இந்த ஆஃபர் இன்னிக்குத்தான் கடைசி சார்...

கண்டக்டர்: வழில எங்கியும் நிக்காது... பாயிண்ட் டூ பாயிண்ட்...

டீ மாஸ்டர் : இப்போ போட்ட வடை சார்...

ரொமான்டிக் லுக்விட்டால் தரைபார்த்து குறுஞ்சிரிப்பு சிரிப்பவள் காதலி... "இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல" என்று பல்பு கொடுப்பவள் மனைவி...

பாஸ்பரசும், சல்பரும் அவள் உதடுகளில் இருக்க வேண்டும்... சிறிதாய் உரசினாலே பற்றிக்கொள்கிறது காதல் தீ...

மனைவியும் அவள் அம்மாவும் உருவத்தில் வேறுபட்டிருக்கலாம் ஆனால் குணத்தில் ஒன்றுதான் என நினைக்கிறேன் #மாமனார் என்னைப் பார்க்கும் பார்வை அப்படி!

டிவிக்கு மியூட் பட்டன் இருப்பது போல மனைவிக்கும் ஒரு மியூட் பட்டன் இருந்து, அவள் திட்டும்போது மியூட் செய்து பார்த்தால் எப்படியிருக்கும்...

விளம்பரங்களில் ஷேவிங் செய்து பளபளக்கும் ஆணின் கன்னங்களில் பெண்கள் முத்தமிடுகிறார்கள்,பெண்களின் கன்னங்களில் ஆண்கள் அப்பளமா சுடுகிறார்கள்?

இது பக்கத்து வீட்டு கதவு, சொம்ப பாத்து தெரிஞ்சிகிட்டது...

''நீயில்லாமல் உயிர்வாழ முடியாது'' என்பதை ஆண்கள் குழப்பத்திலும், பெண்கள் குழப்புவதற்கும் பயன்படுத்துகிறார்கள்

நங்-கென வைத்ததால் ஒடுங்கியிருக்கும் சொம்பும், படார் என சாத்தியதால் கிரீச்சிடும் கதவும் உங்கள் வீட்டில் இருக்குமானால் நீ திருமணமானவன்...

காதலின் வேல்யூ எவ்வளவென்று தெரிய வேண்டுமா... அபிராமி மாலில் காதலியை நிறுத்தி "என்ன செல்லம் வேணும்?" என்று கேட்டுப்பாருங்கள்...

தோழி போன் செய்யும்போது உங்கள் வீட்டு பெருசு அட்டன் செய்து 'அவன் கக்கூஸ்ல இருக்கான்ம்மா" என்று சொல்லியிருக்கிறார்களா? #  yes Same Blood

அலுவலகத்திலிருந்து போன் செய்யும் சகஊழியரிடம் 'அவரு துணி தொவச்சிட்டு இருக்காருங்க' என்றுஉங்கள் மனைவி சொல்லியிருக்கிறாரா? # yes Same Blood

சிவாஜி இறந்தபோது எல்லாசானல்களும் அவரது திரைப்படங்களை தொடர்ந்து போட்டுவந்தனர் #இப்போது எனது கேள்விஎன்னவென்றால் 'ஷகிலா எப்ப சார் சாவாங்க?'

எனது கேரியரில் இது முக்கியமானதாக இருக்கும். அது வேறொன்றுமில்லை.... தயிர்சாதம்....

நெருப்பை அடுத்து மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு இந்த முத்தம்தான்...

சிலநேரங்களில் சில வலிகளைத் தாங்கித்தான் ஆகவேண்டும்... #கால்வலிக்க பஸ் ஸ்டாப்பில் நின்று சைட் அடித்தபோது தோன்றியது

நாங்கல்லாம் பங்சனுக்கு போறதே அதுக்குத்தான்... ட்யூட்டி பர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்...

மேனேஜரின் இன்டர்காம் வயர்களை கொத்துக்கறி போட்டுவிட்டு சொன்னான் சகஊழியன்... நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல #என் இனமடா நீ...

ஒரு பெண் தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பது போல தோன்றினால் உற்றுக் கவனியுங்கள்! கம்மல் வடிவத்தில் ப்ளூடூத் வைத்திருப்பாள் #இன்று ஒரு பல்பு

அறிவுரை சொல்றதுக்கு தலாய் லாமா-வாத்தான் இருக்கணும்னு இல்லை... தாய் மாமா-வா இருந்தா போதும் #காதில் ரத்தம் வர இன்றைக்குத் தெரிந்து கொண்டது...

அவனுக்கு அவ்வப்போது அவள் நினைவு வரும்... அப்போதெல்லாம் எங்களுக்கு சரக்கும் வரும்...So Sad

வாந்தியெடுத்து வயிறு காலியானதும்... மட்டையாகாமல் இன்னொரு குவாட்டர் சொல்லும் குடிமகனைக் காணும்போதெல்லாம் எனக்கு இறங்கி விடுகிறது போதை... # குடி மகனே பெருங்குடி மகனே...

ராக்கி கட்ட மாட்டியா என்ற என் கேள்விக்கு தோழியின் பதில்... "நாம என்ன நார்த் இண்டியாலயா இருக்கோம்... " # வாவ்...

இங்கிலீஸ் படம் புரியலன்னாக் கூட பரவாயில்ல பாக்கலாம்! ஆனால இனிமே ஆங்கிலதமிழ் டப்பிங் படங்களப் பாக்கக்கூடாது... #ங்கொய்யாலஒரு பிட்டு கூட இல்ல...

வளையோசை... கலகலகலவென கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது #வெள்ளிக்கிழமை மட்டும் ஆபிசிற்கு பஸ்ஸில் செல்லலாம் என இருக்கிறேன்.# குளிக்க மாட்றாங்க...

முதலிரவில் மனைவி துறந்திடும் வெட்க ஆடையை அவள் வளைக்காப்பில் அணிந்து நிற்கிறான் கணவன்.!!!

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு, பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது..?

உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன்... என்னை நீ பிரிந்தால்... குவார்ட்டர் வுட்டுப்படுப்பேன்! கண்மணியேய்ய்ய்ய்ய்ய்....

வரப்போகும் கணவன் உடம்பெல்லாம் முடியோடிருக்க வேண்டுமாம். அலுவலகத்தோழியின் ஆசை # சின்னவயசுல டெட்டிபியரெல்லாம் வாங்கிக்கொடுத்தா இப்படித்தான்

எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் எப்போதும் சுகம்தான். அது எதிர்த்த வீட்டு LKG-யா இருந்தாலும் சரி! பக்கத்து வீட்டு B.Sc.-யா இருந்தாலும் சரி!

வீடுதிரும்பிய தம்பதிகள் கதவை திறக்க திறவுகோல் இல்லை என அறிந்தனர். இதத்தான் சங்ககாலத்துல அண்ணலும் 'நோ கீ'னார்! அவளும் 'நோ கீ'னார்! என்றனர்...

மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? அழகான முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!! கணவன் : "உன்னோட இந்த காமெடிதான்"

மைக்கேல் சாக்சனே மறுபெறப்பு எடுத்து வந்தாலும், சாமியாடுறவங்க மாதிரியும், சாவுக்கு முன்னாடி சரக்கடிச்சிட்டு ஆடுறவங்க மாதிரியும் ஆட முடியாது!!

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்... என் காதலை அவள் தங்கையிடம் மறைத்து விட்டேன்... # கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா...


Arya

  • Guest
Re: ஜல்ஜல் கொலுசு ஒலியும்...
« Reply #1 on: August 30, 2011, 10:12:37 PM »
good collection

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஜல்ஜல் கொலுசு ஒலியும்...
« Reply #2 on: August 31, 2011, 02:52:02 AM »
hahahaha ..... mudiyalapa unga ravusu... nice ;)