Author Topic: ***மறந்து போவாயோ***  (Read 721 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
***மறந்து போவாயோ***
« on: December 14, 2011, 06:14:53 AM »

வாசித்து   பார்க்கிறேன்
உனக்காக நான்  வரைந்த
கவிதையை

வாசித்து பார்க்கிறேன்
எனக்காக  நீ வரைந்த
கவிதையை

வாசம்  செய்தேன்
உன்னுள் நான்  கவிதையாய்
என்னுள் நீ கவிதையாய்

மனதில் சிறு சலனம் இன்று
ஏன் இந்த இடைவெளி
தூரத்தில் இருந்தாலும்
நினைக்க வைத்தாய்
சில நொடிகள் துடிக்க வைத்தாய்

உன்னை நினைத்தே
என் நினைவுகள் சுழல
என்னை நினைக்காமல்
உன்னால் எப்படி இருக்கமுடிகிறது

உன் குரல் ஒலி
கேட்காத நாட்கள்
கூடிகொண்டே போக
மனதில் பாரம்
அதிகரிக்க
உன்னை நினைக்கும் பொழுதினில்
தானாக ஒலிக்கும்
என்றோ நீ பேசிய வார்த்தைகளின்
ஒலிப்பதிவு என் இதயத்தில்

உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....

மறந்து போவாயோ
மறப்பதாய்  இருந்தால் சொல்லிவிடு
மறைந்து போகிறேன்
உன்னை மறந்து அல்ல
உன் கண்ணைவிட்டு
மறைந்து போகிறேன் ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***மறந்து போவாயோ***
« Reply #1 on: December 14, 2011, 06:14:32 PM »
உன் கொஞ்சல் வார்த்தைகளில்
வாழ்ந்து விட்டேன் உன்னோடு
கொஞ்சம் நீ மௌனித்திருந்தால்
தாளாத துன்பம் என்னோடு....


இனிய கவிதை
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***மறந்து போவாயோ***
« Reply #2 on: December 14, 2011, 08:11:33 PM »
மறந்து போவாயோ ?
அடப்பாவமே !
விருந்து வைப்பதாய் நினைத்தோ
இப்படி ஒரு கேள்வி கேட்டாய் ?
விருந்து இல்லையடி  எரிச்சல் கூட்டும் மருந்து
 நினைவில், துக்கம் சேர்ந்து தூக்கம் துறந்து ,
தனிமையை சேர்ந்து இனிமையை    துறந்து
.கவிதையை சேர்ந்து  என் கண்ணீர்   துறந்து
இப்படி பல சேர்ந்து சில சில துறந்திருக்கிறேன்
எத்துனை துறந்தாலும் நினைக்க மறந்ததில்லை
மனதால் கூட மறக்க  நினைத்ததில்லை
 
பொறு பொறு, மறக்காமல் இருப்பேன்
என  மார்தட்டி சொல்லவில்லை
மறப்பேன், நிச்சயம் உன்னை மறப்பேன்
ஒரு நாள் நிச்சயம் நான் இறப்பேன்
(உனக்காக), அப்புறம் வேண்டுமானால் மறப்பேன் .
இறந்த பிறகு லேசாய் வருந்துவாய் .
கொஞ்சம் மருங்குவாய், அறுசுவை விருந்தே !
மறந்தும் நான் இறந்த பின்பு என்னை   விரும்பிவிடாதே
உனக்காக, மீண்டும் ஒரு ஜென்மம் பிறந்தாலும்  பிறப்பேன்.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***மறந்து போவாயோ***
« Reply #3 on: December 17, 2011, 08:28:54 AM »
என்னவனுக்கு வரைந்த கவிதை
என்னவன் மறந்தபோதும்
இன்னும் இவள் மறக்க முடியாமல்
தவித்து எழுதுவது
உனக்காக எழுதிய கவிதையில்
உன் காலடி தடம் மட்டும்
பதியாமல் இருப்பது ஏனோ
எல்லோரும்  தடம் பதித்து
சிலர் புரிந்தும்
சிலர் புரியாமலும்
கருத்து தெரிவிக்க
உன் மௌனத்தை
என்னவென்று நான் உணர  :'( :'( :'( :'(



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: ***மறந்து போவாயோ***
« Reply #4 on: December 17, 2011, 12:05:35 PM »
oru velai nan reply podalanu feel panuralo :D
vera yaru inga iruka :D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***மறந்து போவாயோ***
« Reply #5 on: December 17, 2011, 08:19:11 PM »
யார் உன் கவிதையில் தடம் பதிக்கவில்லை
வழக்கமாய் தடம் பாதிக்கும் யாவரும் பதித்துவிட்டோமே
இன்னும் யாரை எதிர் பார்க்கிறாய்
தெரிந்தால் இழுத்து வந்து
உன் இதயத்தில் தடம் வைக்க
முயற்சி செய்கிறேன்
                    

Offline RemO

Re: ***மறந்து போவாயோ***
« Reply #6 on: December 18, 2011, 02:38:48 AM »
angel :D
athan yosichen :D nan than reply podama irunthen :D

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***மறந்து போவாயோ***
« Reply #7 on: December 18, 2011, 11:24:05 PM »
adapaavingala nan yethuku Divert pannrenu puriyama inga vanthu Gummi adikuthunga (rose& emo) : @ :@:@:@


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: ***மறந்து போவாயோ***
« Reply #8 on: December 19, 2011, 12:31:03 AM »
shur nan therunchu than gummi adikuren :D rose ku theriyathunu nenaikuren