FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 27, 2012, 07:44:14 PM

Title: நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?
Post by: Global Angel on July 27, 2012, 07:44:14 PM

மேஷ லக்னக்காரர்களுக்கு 4இல் சனி (பாதகாதிபதி) இருந்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். சிறுவயதில் தாயை இழக்க நேரிடலாம். ஒழுக்கத்தில் சில பாதிப்பு, கூடாப் பழக்க வழக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

ரிஷப லக்னத்திற்கு 4இல் சனி இருந்து அவர் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ராஜயோகம் கொடுக்கும். மிதுன லக்னத்திற்கும் 4இல் சனி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம், சிம்மம் லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது பெரிய சிக்கல்களை உண்டாக்கும். கல்வித்தடை, தாய் பாதை மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கன்னி, துலாம் லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது பெரிய விஷேசம்.

விருச்சிக லக்னத்திற்கு 4இல் சனி இருந்தால், சனி தசையின் போது 50% நல்ல பலன்களும், 50% கெட்ட பலன்களும் கிடைக்கும்.

தனுசு லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும். மகரத்திற்கு 4இல் சனி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தாய்ப்பாசமே இருக்காது. பரணி நட்சத்திரத்தில் அமர்ந்திருந்து, செவ்வாயும் நல்ல கதியில் இருந்தால் மட்டுமே 4ஆம் இடத்து சனி நல்ல பலன்களை கொடுக்கும். கும்ப லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது நல்ல பலனைத் தரும்.