Author Topic: உயிர் உருகும் சத்தம்..  (Read 1407 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உயிர் உருகும் சத்தம்..
« on: August 07, 2011, 01:45:33 PM »
நீதி மன்ற வாசலில் கண்ணீரோடு செய்வது அறியாமல் கலங்கி போன மனதோடு தவித்து கொண்டு இருந்தான் ரகு..

வக்கீலின் வருகைக்காக வாசலை நோக்கி அவன் பார்வை அலை பாய்ந்து கொண்டு இருந்தது...

துரத்தில் வக்கீல் வந்து கொண்டு இருப்பதாய் பார்த்து ஓடி சென்றான்...

"சார், என்ன ஆச்சு சார்... ஐந்து வருட கஷ்டத்துக்கு இன்றைக்காவது விடுதலை கிடைக்குமா?""
ஏக்கத்தோடு கேட்டான்..

சிறு மௌனத்தை மட்டும் விடையாக்கி ஏதும் சொல்லாமல் நகர்ந்து சென்றார்..

"சார் என்ன ஆச்சு?? ஏதாவது சொல்லுங்கோ சார்" என்று பின்னாடியே ஓடினான் ரகு..

"ரகு சொல்றத கேளு... இனி சட்டத்தால ஒன்னும் செய்ய முடியாது பா... நான் ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன்...
நீ தான் கேட்கல...உன் மன ஆறுதலுக்காக தான் இந்த கேஸ்... மற்றபடி நம்ம ஊரு சட்டத்துல இதுக்கு வாய்பே இல்லை பா...இனி கடவுள் கிட்ட தான் முறை இடனும்.... சாரி ரகு”...
வக்கீலின் வார்த்தையில் நொறுங்கிப் போனான் ரகு....

இதற்கு வழியே இல்லையா??? எனக்கு ஏன் இந்த நிலைமை?? கடவுளே உனக்கு கண் இல்லையா என்று நடை பிணமாய் என்ன செய்ய போறோம் என்று ஒன்றும் அறியாமல் கோர்ட்டை விடு வெளியேற எண்ணி காரை நோக்கி நடந்தான்..

காரை திறந்து சாவியை திருகி ஒரு நிலை இல்லா மனதோடுகாரை செலுத்தினான்..

காரில் அழகாய் குறும்பாய் கண்ணடித்தவாறு சிறிது கொண்டு இருந்தது ஒரு நிழற்படம்..

புதிதாய் பூத்த ரோஜாவை போல அழகாய் சிரித்து கொண்டு இருந்தாள் ரகுவின் மனைவி சுதா...

ஒரு நிமிடம் அவள் நிழற் படத்தை பார்த்து குலுங்கி அழுதே விட்டான்...

"சுதா ஐலவ் யு டி...என்னை எப்படி டி நீ மறந்த... நான் இல்லாமல் நீ இருக்க மாட்டேனு சொன்னியேடி... நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் டி...என் வாழ்கையே சூனியம்மாக்கிட்டியேடி..."என்றவாறு நிழற் படத்துக்கு முத்தமிட்டு
தொடர்ந்து பயணித்தான்...

அவன் எண்ண அலைகள் சற்று பின்னோக்கி சென்றன..
கல்லூரி முடித்து வேலைக்காக தேடி அலைந்த காலம்...
காலையில் எழுந்தவுடன் காப்பியோடு வந்த அம்மா...
“தம்பி இந்த இன்டர்வியூலாவது வேலை கிடைச்சுடுமா” என்ற கேட்க...

“அம்மா கவலை படாதே நிச்சயம் வேலை கிடைக்கும்”...
என்று அம்மாவிடம் சொல்ல...

“தம்பி வேலை கிடச்சால் தான் பொண்ணு பார்க்க சொல்லி விட முடியும்...உன் கல்யாணத்த பார்த்த போதும் பா” என்று சொல்ல..

“இப்ப என்னமா அவசரம் பேசாம இரு”.. “நான் போயிட்டு வரேன்”..என்று அவசரமாய் நகர்ந்தான்...

எப்டியும் வேலை வாங்கியே தீரனும் என்று மனதில் தீர்க்கமான முடிவோடு ஒரு தனியார் கம்பெனியில் உள்ளே நுழைந்தான்...

இன்டர்வியூ வந்தவர்கள் எல்லோரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் புரண்டுக் கொண்டு இருக்க யாரிடமும் பேசாமல் அமைதியாய் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த அவனை ஏதோ ஒன்று திரும்ப சொல்லுவது போல மனதில் ஒரு எண்ணம் தோன்ற சட்டேன்று திரும்பி பார்த்தன்ரகு...
அழகிய தேவதையாய் அவன் பின்னாடி உட்கார்ந்து இருந்தால் சுதா...

கண்டவுடன் காதல் இது தானோ என்று தன்னை தானே கேட்டு கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்து விடு என்று சொல்லுவது போல திரும்பி பார்த்தான்...

இருக்கை காலியாய் இருக்க சுற்றி தேடினான்..

“சார் பேனா வச்சு இருக்கீங்களா?? என் பேனா எழுதல”...

திரும்பி பார்த்த ரகுவுக்கு வார்த்தை வரவில்லை...

சுதா தான் பேசினால் என்று அவன் உணர்வே நீண்ட நேரம் ஆனதை போல உணர்ந்து அவசரமாய் பேனா எடுத்து கொடுத்தான்...

முதலில் இண்டர்வியூ அழைப்பு வரவே ரகுதான் செல்ல வேண்டி இருந்தது...

“கடவுளே எனக்கும், அந்த பொண்ணுக்கும் இதே கம்பெனியில் வேலை கிடைக்கணும்" என்று முதல் முறையாக இப்படி ஒரு வேண்டுதலோடு அறையை நோக்கி சென்றான்...

அவன் எதிர் பார்த்தது போல அவனுக்கு வேலைக் கிடைக்க சந்தோசத்தோடு வந்தான்...

வெளியே வந்ததும் சுதாவையே தேடியது அவன் கண்கள்...

அடுத்த செல்ல தயாராக இருந்த சுதா...
இவனை பார்க்காமல்.. அவள் சான்றிதழ்களை சரி பார்த்து கொண்டு இவளை அழைக்கவே அவசரமாய் உள்ளே சென்றாள்..

அவளுக்காக காத்திருந்து அவளுக்கு வேலை கிடைத்ததா என்று அறிய வேண்டுமே?? என்று இவன் மனம் துடிக்க..

எதற்காக காத்திருப்பது??...
முதல் தடவையே அசடு வழிவதா என்று குழப்பத்தோடு சட்டை பாக்கட்டை தடவ..
அவனுக்கும் மிக பெரிய சந்தோசம்..
ஆஹா ...நம்ம பேனா அந்த பொண்ணுகிட்ட இருக்கே..
இதுதான் வழி.. பேனாக்காக காத்திருந்து வாங்கி சென்று விட வேண்டியது தான் என்று காத்திருந்தான்...

நீண்ட நேர காத்திருப்புக்கு பின் வெளியே வந்தால் சுதா,...

இவன் அருகில் சென்று..
“என்னங்க என் பேனா”என்று கேட்க...

“ஐயோ சாரிங்க மறந்துட்டேன்...இந்தாங்க”..என்று பேனாவை கொடுத்தாள்..

“என்ன ஆச்சுங்க இன்டர்வியூ பாஸ் பண்ணிடிங்களா”?? என்று ரகு ஆரம்பித்தான்...

“ஆமாங்க வேலை கிடைச்சிடிச்சு...உங்களுக்கு??” என்று கேட்டாள் சுதா...

பெருமூச்சு வந்தது போல அப்பாடா...என்று மனதில் சொல்லி கொண்டு
“ம்ம்ம் எனக்கும் கிடைச்சிடிச்சுங்க” என்று இருவரும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நடந்து சென்றனர்...

தினமும் ஒன்றாக வந்து, ஒன்றாக சென்று, ஒன்றாக சாப்பிடுவது, என்று இப்படியே இவர்கள் நட்பு தொடர்ந்து ஒரு கால கட்டத்துக்குமேல் சொல்லாமல் இருக்க முடியாதவனாய் சுதாவிடம் தான் காதலை சொல்ல...லேசான புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு..ஏதும் பேசாமல் மௌனம் ஆனாள்...

பதில் கிடைத்த சந்தோஷமாய் அவன் இருவீட்டாரிடமும் பேசி
அழகாய் நடந்து முடிந்தது திருமணம்...

யாருக்கும் கிடைக்காத வாழ்க்கை கிடைத்தது போல பெரிய ஆனந்தம் மனதுக்குள்...

சுதா தான் உலகம் என்று ஆசை ஆசையை அவர்கள் திருமண வாழ்க்கையை ரசித்தனர் இருவரும்...

“செல்லம் செல்லம்“ என்று ஓயாமல் சுற்றி வரும் ரகுவை பார்த்து...

“டே நான் இல்லனா என்னடா பண்ணுவ”.. என்று அடிக்கடி கேட்பாள் சுதா...

“செத்து போய்டுவேன் டி” என்று ரகு சொல்ல..

“நிஜமா??.... பொய் சொல்லாதடா அப்புறம் நான் பேயா வந்து பார்பேன் நீ என்ன செய்றனு” கண் அடித்து கட்டிபிடித்து சிரிப்பாள் சுதா...

சிறு குழந்தை போல ஓயாமல் “ரகு ஐ லவ் யூ டா” என்று சுதா கூற

“இந்த ஒரு வார்த்தை போதும் டி எனக்கு” என்று சந்தோஷத்தில் திளைப்பான்..

அழகாய் ஒரு வீடு தன் ஆசை மனைவிக்காக வாங்கினான்...
அடுத்த மாதத்தில் கார்...

ஒரு அதிர்ஷ்ட தேவதை தன்னுடன் இருப்பதாய் உணர்ந்தான்...

“டே ரகுநாம ஆபீஸ், வீடு என்ற ஒன்றா இருக்கும் உனக்கு என்னை சீக்கிரம் வெறுத்து விடும்மாடா??” என்று சுதா கேட்க...

“ஏண்டி உனக்கு மட்டும் லூசு மாதிரி இப்படி எல்லாம் எண்ணம் வருது.. உன்னை எப்படி டி நான் வெறுப்பேன் போடி லூசு” என்று சொல்லி சிரிப்பான் ரகு....

திருமணம் ஆகி ஒரு வருடம் நெருங்க

“நம்ம திருமண நாளுக்கு நாம ஊட்டி போகலாமா ரகு” என்று கேட்டாள் சுதா...

“ஓகே செல்லம் போகலாம்...நான் கோயம்புத்தூர்க்கு பிளைட் டிக்கெட் போடுறேன்டி” என்று சொல்ல...

“வேண்டாம்டா நாம நம்ம கார்லையே போகலாம்.. எட்டு மணி நேரம் ஆகும்...கோயம்புத்தூர் போயிட்டு அங்க இருந்து ஊட்டி மூன்று மணி நேரம் தான்...அதுக்கு ஏத்த மாதிரி நாம போகலாம்” என்று சுதா சொல்ல..

“சரி அப்டியே போகலாம்” என்று சொல்லி...
இரண்டு நாட்களில் போக இருப்பதால் எல்லோருக்கும் திருமண நாள் விருந்தை முன்பே கொடுத்து விடலாம் என்று இருவரும் தீர்மானித்து அதன் படியே நண்பர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தனர்..

“செல்லம் விடியற்காலை 3 மணிக்கு கார் எடுக்கலாம் இரவு நேர பயணம் வேண்டாம் தேவையான துணியை எடுத்து வை” என்று சொல்லிவிட்டு கார்-ஐ ரெடி செய்ய போனான் ரகு....

விடியற்காலை இருவரும் அப்பா அம்மாவிடம் ஆசி வாங்கி விட்டு பயணிக்க தொடங்கினர்...

இளையராஜாவின் "ராஜாராஜா சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்" என்ற பாடல் மெலிதாய் ஒலிக்க..

"செல்லம் இந்த பாடல் எனக்காக எழுதன போல இருக்குடி" என்றான் ரகு...

"ஓ..அப்படியா ராஜா சரிங்க பார்த்து ஓட்டுங்கள்" என்று கிண்டல் அடித்தாள் சுதா...

தேசிய நெடுஞ்சாலையில் எந்தவித சலனமும் இல்லாமல் காற்றாய் மிதந்து சென்று கொண்டு இருந்தது கார்...

"ரகு நான் கொஞ்ச நேரம் ஓட்றேன் டா...நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு" சுதா சொல்ல...

“வேண்டாம் செல்லம் நீ ஜாலி-யா வாடி...நான் பார்த்துக்குறேன்” என்றான் ரகு..

"போடா நான் நல்லா ஓட்டுறேன் என்று நீ சொல்லுவ... இப்போ பார்த்தியா தர மாட்ற"
என்று கோபித்து கொண்டால் சுதா....

"சரி செல்லம் நீ கொஞ்ச நேரம் ஓட்டு...பத்திரம் செல்லம்"...என்று

காரை ஓரம் நிறுத்தி சுதாவிடம் கொடுத்து விட்டு சற்று பதட்டத்தோடு இருந்தான் ரகு...

அதனை உணர்ந்த சுதா..
"ரகு டோன்ட் வொர்ரி டா...ரிலாக்சா இரு" என்று காரை வேகமாக செலுத்தினால்...

ஒரு வழியாக கொஞ்சம் நிதானம் அடைந்து சீட்டில் சிறிது ஓய்வுக்காக சரிந்து படுத்தான் ரகு..

வேகமாக பயணித்து கொண்டு இருந்த நிலையில் நான்கு வழி சந்திப்பு பாதையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வேகமாய் ஒரு லாரி இடது புறத்தில் இருந்து திரும்ப நிலை குலைந்து போன சுதா "ரகு.........." என்று தன் கடைசி வார்த்தையை உதிர்க்க என்ன நடக்கிறது என்று உணரும் முன் இவர்கள் கார் அப்பளமாய் நொறுங்கியது...

சிறிது உணர்வு வந்தவனாய் ரகு கண்விழித்து..

"செல்லம்..செல்லம்" என்று முனங்கி கால் ஒடிந்து போய் இருப்பதை மட்டும் உணர்ந்த ரகு
டிரைவர் இருக்கையில் சுதாவை தேட...
டிரைவர் இருக்கை கார் கதவு திறந்து கிடக்க...

பச்சை பசேல் புல் வெளியில் எந்த வித சலனமும்..ஒரு ரத்த கீறல் கூட இல்லாமல்..புல் மெத்தையில் அழகிய ஓவியமாய் உறங்கி கொண்டு இருந்தால் சுதா..

சிறிது நேரத்தில் கூட்டம் கூடி..கண் விழித்து பார்த்தபோது இருவரும் மருத்துவமனையில் இருந்தனர்..

டாக்டர் குழு சுதாவை பரிசோதித்து கொண்டு இருக்க..
ரகுவின் நண்பர்களும் உறவினர்களும் குமுறி அழுவதை பார்த்துக்கொண்டு ரகு கத்தினான்

"என்ன ஆச்சு டாக்டர் சொல்லுங்க"...என்றான் ரகு..

எப்படியும் இவனுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதால் வேறு வழி இல்லாமல்

"உங்க மனைவியின் கழுத்து பகுதி நல்ல நெரிக்கப்பட்டு..ரத்த நாளங்கள் உடைந்து மூளைக்கு ஆக்ஸ்சிஜன் செல்வது தடை பட்டு போச்சு...அவங்கள் இப்போ கோமாவில் இருக்காங்கள்...ஐ அம் சாரி"...என்று சொல்லி விட்டு நகர்ந்தார்...

உலகமே இருண்டு விட்டதை போல கதறி அழுதான் ரகு...

சென்னையில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சேர்த்தாவது அவளை பிழைக்க வைக்க முடியாதா என்று அங்கு சேர்த்து கவனித்து வந்தான்...

வெறும் இதயத்துடிப்பு மட்டுமே இருக்க.. ஒரு செயலும் இல்லாதவளாய் இருந்தால் சுதா..

டாக்டர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவளை காப்பாற்றும் படியே கேட்டு கொண்டு அழுதான் ரகு..

இப்படியே 5 வருடம் போனது...எல்லா உறுப்புகளும் செயல் இழந்து உருக்குலைந்து வரும் சுதாவை ஒரு நிலைக்கு மேல் பார்க்க முடியாதவனாய் துடித்தான்...

அவன் நண்பர்கள் எல்லோரும்..
"ரகு எத்தனை வருடம் டா இப்படியே இருப்ப.. சுதாவை காப்பற்றவும் முடியாது.. பேசாம டாக்டர் கிட்ட பேசி பாருடா"..
என்றனர்..

"என்ன டா பேச" என்று ரகு கேட்க..

"சொல்ல சங்கடமா இருக்குடா..வேற வழியில்லை...சுதாவை கருணை கொலை செய்ய சொல்லுடா" என்று சொல்லி அழுதான் அவன் நண்பன்...

ஒரு கணம் துடித்த ரகு..
இந்த நரகத்தில் இருந்து சுதாவுக்கு இது தான் விடுதலை என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு..

டாக்டர் அறைக்கு சென்றான்..

டாக்டரிடம் கருணை கொலை செய்துவிடும் மாறு கதறினான்..
டாக்டரோ..
"ரகு அப்படி எல்லாம் செய்ய சட்டத்துல இடம் இல்லை... மேற்கத்திய நாடுகளில் தான் இது சாத்தியம் இங்கு இல்லை பா.. மும்பையில் 36 வருடமாக அருணா என்ற பெண் கோமாவில் இருக்காங்க..உச்ச நீதிமன்றத்தில் அனுமதி தரள..
இங்க இது எல்லாம் சாத்தியம் இல்லை"..என்று சொல்லி விட்டு செல்ல...

ரகு என்ன செய்வது என்று குழம்பினான்..

நீதிமன்றத்தில் முறையிட்டு பார்க்கலாம் என்ற முயற்சியும் தோல்வி அடைய ஒன்றும் செய்ய முடியாதவனாய் இன்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்...

தன் மனைவி சுதா இருக்கும் அறையை நோக்கி நடந்தான்..
சுதாவின் கைகளை பற்றி..
அவள் காதருகே..

"செல்லம் என்ன செய்ய?? என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே..
உன் இதயம் இன்னும் எனக்காக துடிகின்றதா?...வேண்டாம்டி நிம்மதியா போய்டு.. வேண்டாம் செல்லம் இந்த நரகம் உனக்கு".. என்று கதறி அழுதான்..

அவன் பேசுவதை அவள் அறிந்தலோ தெரியவில்லை..
மருத்துவமும் சட்டமும் மரபும்
கைவிட்டுவிட
அவள் உயிர் உருகும் சத்தம் மட்டும் ரகுவிற்கு இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது....



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உயிர் உருகும் சத்தம்..
« Reply #1 on: August 08, 2011, 03:58:53 AM »
:'( :'( :'( :'( :'( :'( :'(  athmarthmaana love.... poha manasu varala pola...

unakku  mattum kedkum enathu uyer urugum sahtham.. :'(

rialy nice story :'(
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: உயிர் உருகும் சத்தம்..
« Reply #2 on: August 08, 2011, 02:53:27 PM »
Nan ezhuthiya muthal story....Oru site la E-book-a vara poguthu:P thanks for ur Reply :P

Nijamana kathala irunthal intha kathaiyil irukum Kathal purium


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உயிர் உருகும் சத்தம்..
« Reply #3 on: August 08, 2011, 04:50:31 PM »
muthal story ye rompa superb aa  eluthi erukinga vaalththukalma...  ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: உயிர் உருகும் சத்தம்..
« Reply #4 on: August 08, 2011, 04:54:45 PM »
நன்றிகள்.....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: உயிர் உருகும் சத்தம்..
« Reply #5 on: October 21, 2011, 12:39:52 PM »
Muthal kathaiya nalarukku
ithula ulla kathal very nice