FTC Forum

Entertainment => Love & Love Only => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 12:03:57 AM

Title: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: ஸ்ருதி on October 29, 2011, 12:03:57 AM
ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.

நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

சரி காதலன் செய்ய வேண்டியது :

1.உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.

2.உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.

3.எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.

4.எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.

5.அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.

6.உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.

7.உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்பது

8.எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல், உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.


காதலி செய்ய வேண்டியது :

1.தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.

2.ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.

3.உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.

4.உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்
5.உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.

6.உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.

7.உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.

8.உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது

9.உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.

இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.

காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.




இம்புட்டும் நடக்குற காரியமா  :P  :P  :-X  ???   ;) ;)
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: RemO on October 29, 2011, 03:04:03 PM
// காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.//

really true
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: Global Angel on October 31, 2011, 04:08:46 AM
Quote
4.உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்
>:( >:( >:( >:(

itha panite irupaangal loosungal



 
Quote
காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர

unmayana sathyamaana varikal ;)
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: RemO on October 31, 2011, 09:14:58 PM
apple ipavathu theriyutha nan en unai kopa paduthuren nu
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: Global Angel on November 02, 2011, 02:25:48 AM
rempo hahahaha ;D
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: RemO on November 02, 2011, 08:12:33 PM
apple ingayum rempo ;)
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: ஸ்ருதி on November 09, 2011, 08:56:35 PM
apple ingayum rempo ;)

apple pinnadi sutrathe :D apram unaku vambu
Title: Re: உண்மையிலேயே நீங்கள் காதலர்களா ?
Post by: RemO on November 09, 2011, 09:03:01 PM
engala pirika parkatha shur :D