Author Topic: மணி (மேகலை)  (Read 4569 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணி (மேகலை)
« on: October 20, 2011, 10:51:01 PM »
"டேய், உனக்கு என்ன ஆச்சு??? ஏன்டா இப்படி நினைக்குற?? ஐயோ உன் அண்ணா, அண்ணிக்கு எல்லாம் தெரிஞ்சா உன்னை இந்த வீட்டுல இருக்க விட மாட்டளே?? நான் என்ன பண்ணுவேன் பெருமாளே??" என்று கதறி அழுதாள் அம்புஜம்.

"அம்மா நான் என்ன பண்ணுவேன்?? இதுல என் மேல என்னமா தப்பு இருக்கு, எனக்கே வாழ பிடிக்கல" என்று கண் கலங்கி நின்றான் மணி.

"சின்னதுல அக்கா துணியெல்லாம் எடுத்து உடுத்துவ, நானே உனக்கு போட்டு விட்டு அழகு பார்பேனே இப்பவும் அது மாதிரி போட்டு அழகு பர்க்குறியே, இது என்ன கொடுமை" ஓயாமல் அழுதாள் பங்கஜம்.

சிறு வயதில் மணி விளையாட்டாக தான் ஆரம்பித்து கால போக்கில் அவனுக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தான்.

யாரும் இல்லாத சில நேரங்களில் அவனையே அறியாமல் பெண்களை போல உடை அணிந்து கண்ணாடி முன் நிற்பான். அவனால் அதை ரசிக்க முடியாமல் அழுவான்.

"ஏன் என்னால் எல்லா பையன்கள் மாதிரி இருக்க முடியல" என்று தனக்குள் கேட்டு அழுவான்.
யாருக்கும் தெரியாது என்று நினைத்து அவன் இருந்தாலும் அவன் நண்பர்களுக்கு இவனில் இருக்கும் மாற்றத்தைக் கண்டு இவனை கேலியாய் பேசத் தொடங்கியது மேலும் இவனுக்கு வாழ விருப்பம் இல்லாத நிலைக்கு கொண்டு செல்ல முற்பட்டது.

தன் நிலையை யாருக்கேனும் சொல்லி தீர்வு வேண்டும் என்று மனம் துடித்தது. தன்னை போல இருப்பவரால் தான் தன் நிலை உணர முடியும் என்று எண்ணினான். பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ஒரு நாள் பேருந்தில் ஒரு அரவாணியை சந்தித்தான் மணி.

அவரிடம் எப்படி சென்று பேசுவது என்று தயங்கி பிறகு பேசி தனக்கு இருக்கும் பிரச்சினையை கூறினான்.
"நாம் என்ன பாவம் செய்தோம் நமக்கு ஏன் இந்த நிலை. கவலை படாதே, என்னை எங்கள் வீட்டில் இருப்பவர்களே அடித்து துரத்தி விட்டார்கள். நான் படிக்காமல் விட்டதால் என் நிலையே மாறி போச்சு. நீ அப்படி இருக்காதே. படிப்புதான் முக்கியம். உனக்கு ஏதாவது உதவி தேவை பட்டால் எனக்கு போன் பண்ணு என் பேரு தேவி" என்று
அறிவுரை கூறியது. ஒரு தன்னம்பிகை பிறந்ததை போல உணர்ந்தான்.

ஒரு தீர்க்கமான முடிவோடு அரவாணிகள் பற்றி விவரம் சேகரிக்க தொடங்கினான். பாரத நாட்டியத்தில் மிளிரும் நார்தகி நடராஜ், பிரியா பாபு, ஆஷா பாரதி, கல்கி, போன்றவர்களையும் அவர்களின் சாதனைகளையும் அவனை வியக்க வைத்தது.

வீட்டுக்கு விஷயம் தெரிந்ததால் அண்ணி, அண்ணன் எல்லோரும் வெறுத்து ஒதுக்குவதை அவனால் சகிக்க முடியாமல் வீட்டை விடு வெளியேறினான்.
வீடு கிடைக்க கூட வழி இல்லாத நிலையில், தேவி நினைவுக்கு வர போன் செய்து விலாசம் வாங்கி நேரில் சென்றான். தேவி இட்லி வியாபாரம் செய்து வந்தாள்.

அவன் தன்னை முழுவதுமாக பெண்ணாகவே உணர்ந்தான். தேவியின் அறிவுரத்தலின் படி முழுவதும் பெண்ணாகவே மாற்றினான்.
தேவி இவனை மணிமேகலை என்று பெயர் மாற்றி மேகலா என்றே அழைத்தது இவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

"தேவி, அரவாணி என்றாலே பாலியல் தொழில் தான் பண்ணனுமா என்ன? நாமும் கௌவுரமா வாழனும்" என்று கூறினான்.
"மேகலா, ஆமாம். நான் வேலை தேடி அலையாத இடம் இல்லை. யாரும் வேலை தராததால் நானும் தவறான வழிக்கு போய்டேன். ஒரு வேலை சோறுக்காக செய்யாத வேலை இல்லை. இப்போ தான் எல்லாம் வெறுத்து போய்ட்டு இட்லி வியாபாரம் செய்றேன். முதல்ல யாருமே வாங்க மாட்டங்கள். இட்லி அவிச்சி குப்பைல பல நாட்கள் கண்ணீரோடு கொட்டி இருக்கேன். இட்லி வாங்க சொல்லி எல்லோர் காலிலும் விழாத குறை தான். இப்போ தான் எல்லோரும் என்னை புரிந்து கொண்டு வாங்குறாங்கள்" என்று சொல்லும் போது கண்கலங்கினான் மணி..
மணிக்கு அவன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியதால், அவன் தன் அம்மாவை சந்திக்க சென்றான். அம்மாவை கோவிலுக்கு வர சொல்லி அங்கு வைத்து அம்மாவை பார்த்தான்.

முழுதாய் பெண்ணாக மாறிய தன் மகனை கண்டதும் கதறி அழுதால் அம்புஜம்.
"இது என்னடா கோலம்???" என்று அழுதாள்..

"அம்மா விடுமா நான் நல்லா இருக்கேன். எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்கு ஒரு உதவி மட்டும் செய்ங்கமா" என்றான்.

"என்னப்பா சொல்லு உனக்கு செய்யாம யாருக்குபா செய்ய போறேன்" என்றாள் அம்புஜம்...

"அம்மா நான் சிறு தொழில் பண்ண போறேன். அரைத்த இட்லி மாவு விற்க போறேன்மா. வேற
எங்கும் எனக்கு வேலை கிடைக்காது. எனக்கு எதாச்சும் பண உதவி பண்ணுமா" என்று கேட்டான்.

"மணி பணமா இல்லைபா அம்மாக்கிட்ட. உனக்கே தெரியும் தானே எல்லாமே அண்ணாகிட்ட தானே இருக்கு. இந்தா என் நகை தரேன் வச்சுகோ" என்று கையில் போட்டு இருந்த வளையலையும், ஒரு செயினையும் கழட்டி கொடுத்தாள்.

"ஐயோ வேண்டாம்..பணம் இல்லன விடுமா" என்று வாங்க மறுத்தான் மணி.

"மணி அப்டி சொல்லாதபா, நீ என் பிள்ளை, உனக்கு ஒரு நல்லது பண்ணதான் என்னால முடியாம போச்சு. உன் வாழ்க்கைகாவது ஒரு வழி பண்ண கடவுள் என்னை வச்சு இருக்கானே. வேறு யாருப்பா உனக்கு உதவி பண்ணுவா வாங்கிக்கோபா" என்று கண்ணீர் மல்க கொடுத்தாள்.
பெற்ற தாயே வெறுத்து ஒதுக்கும் நிலை இருக்கும் போது தன் அம்மாவை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான்.

மனதுக்குள் "அம்மா கவலை படாதே உன் பிள்ளை நான் ஒரு நாளும் தவறான வழிக்கு போக மாட்டேன்" என்று சொல்லி கொண்டான்.

"சரி அம்மா நீ பார்த்து போம்மா. இது தான் என்னோட போன் நம்பர். உனக்கு என்னை பார்க்க தோணுச்சினா வருவியமா" என்று சிறு குழந்தையை போல கேட்க அம்புஜம் துடித்து அழுதாள்.
"நிச்சயம் வருவேன் பா" என்றாள்.

"அம்மா, உன் கையாள வாங்கின இந்த முதலை கொண்டு நான் பெரிய ஆளா வருவேம்மா. உன்னை ராணி போல வட்சுபேன் பாரு" என்று சொல்ல அம்புஜம் கண்ணீரோடு சிரித்தாள்..
சற்று சிந்தித்து..

"அம்மா அப்போ நான் கூப்பிட நீ என்னோட வருவியா???" என்று கேட்டான்.
"கண்டிப்பா வருவேன்பா. கவலை படாமல் போ நீ பெரிய ஆளாய் வருவ" என்று சொல்லி அனுப்பினாள் அம்புஜம்.

வீடு வந்து தேவியிடம் சொன்னான். ஈரமாவு அரைத்து விற்பது பற்றியும் அம்மா கொடுத்த நகையை கொடுத்து தேவையானவற்றை வாங்கி தொழில் ஆரம்பிக்கலாம் என்றான். ஏற்கனவே இட்லி வியாபாரம் செய்வதால் இந்த தொழிலுக்காய் புதிதாய் ஏதும் செய்ய வேண்டிது இல்லை என்று நம்பிக்கையோடு தொழில் ஆரம்பித்தனர்.

"தன்னம்பிக்கையே எங்கள் மூலதனம்" என்ற வாசகம் அவர்கள் கடையை அலங்கரித்து.
நிச்சயம் மணி (மேகலை) பெரிய ஆளாய் வருவான். :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: மணி (மேகலை)
« Reply #1 on: October 20, 2011, 11:36:35 PM »
Nice

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மணி (மேகலை)
« Reply #2 on: October 21, 2011, 04:21:32 AM »
kaanchanaa part 2? kekeke :D