Author Topic: விதி யாரை விட்டது ? எமன் ஏன் சிரித்தான்?  (Read 3391 times)

Offline Sprite

நண்பர் விதி, ஜோசியம், போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்.யார் சொன்னாலும் எதிர்த்து பேசுபவர்.விதியாவது ஒண்ணாவது? ஏன் தான் தான் ஜோச்யக்காரன் பின்னாலேயே எல்லாரும் போறாங்களோ? என்று ஜோச்யத்தை நம்புவர்களை இழிவாகப் பேசுவார்.விதியை நம்மால் மாற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

அவரிடம் ஒருநாள் இந்தக் கதையை சொன்னேன்.

"ராமசாமி சார், உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதே உங்கக்கிட்ட சொல்லாட்ட ஏன் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு சார்."" வாங்க சபேசன்.ஏன் , எதனாலே உங்க மண்டை உடையனும். விவரமாக சொல்லுங்க."
"ஒண்ணும் இல்லை, நான் வரபோது ஒருத்தர் ஒரு கதை சொன்னார். அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் உங்களிடம் சொல்லலாம் என நினைத்தேன், அதான்" என இழுத்தேன்
"அட என்னங்க சபேசன், இதெல்லாம் என்னிடம் கேட்கணுமா? சொல்லுங்க "
"ரெண்டு விஷயம் ஏன் காதுலே விழுத்தது. முதலா ஜோச்யத்தைப் பற்றியது.அவனும் உங்களமாதிரி ஜோசியம் பொய் என்று நினைப்பவன். ஒரு நாள் ஜோச்யக்காரனிடம் பொய் இன்னிக்கு எனக்கு நாள் எப்படி இருக்கும் என்று கேட்டான்? அவனும் கைரேகையப் பார்த்துட்டு இன்னிக்கு உனக்குப் பாயசம் கிடைக்கும். மகிழ்ச்சியாக இரு. அப்படின்னான்'
இவனுக்கு கோவமான கோவம். உங்க ஜோச்யத்தைப் பொய்யாக்கிறேன் பாருங்க.
நான் நாட்டுலே இருந்தாத்தானே. இப்பவே நான் காட்டுக்கு போறேன், அப்படின்னு சொல்லிட்டு காட்டுக்குக் கிளம்பிப் போய் ஒரு மரத்தின் மேல போய் உட்கார்ந்துகொண்டு எப்படி பாயசம் கிடைக்கும் பாப்போம், என்று பார்த்தான்.
அன்னிக்கு பார்த்து அஞ்சாறு திருடர்கள் யாரையாவது கொள்ளை அடிக்கலாம் என்று பார்த்து காட்டுக்குள்ள வந்துண்டிருந்தார்கள்.
மணப்பெண் நிறைய நகையோட சுற்றத்தார்கள் கூட அந்த வழியாக வராங்க.
பார்த்தார்கள் திருடர்கள். நல்ல வேட்டை.
"எல்லாத்தையும் கழட்டுங்க. உம் ஒடுங்க"
பயத்திலே எல்லாத்தையும் கழட்டிக் கொடுத்து விட்டு விட்டாப் பொறும் என்று ஓடி ஒளிஞ்சாங்க.

இதுலே நீண்ட நேரம் ஆனதாலே மணப்பெண் வீட்டார் கொண்டுவந்த சாமான்களை வைத்து, காட்டுலே உள்ள சுள்ளிகளைப் பொறுக்கி பாயசம் வைத்து சாப்பிடுவோம் என்று நினைத்து பாயசம் வைத்தார்கள்.

"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலே
" என்பாங்களே, அதுபோல பாயசத்தைச் சாப்பிட்டு விட்டு
கிளம்பலாம் என்ற சமயம் பார்த்து அந்த ஊர் ராஜா தன பரிவாரங்களோட அந்த பக்கமா வராரு. "இது ஏதடா வம்பாப் போச்சு?" என்று எல்லா நகைகளையும், பாயசத்தையும் விட்டுவிட்டு "தப்பித்தோம் பிழைத்தோம்" ன்னு சொல்லிட்டு ஓட்டம எடுத்தார்கள்.

சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த ராஜா நகை மற்றும் பாயசம் எல்லாத்தையும் பார்க்கிறர். சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்கிறார்.
நம்ம ஆளு தான் இதை எல்லாத்தையும் மரத்து மேல் இருந்து பார்த்துக்கிட்டு இருக்காரில்ல. அவரை நம்ம ராஜா பார்த்துட்டு "இதுக்கு எல்லாம் காரணம் இவன்தான்"
இவன்தான் பாயசத்திலே விஷத்தை வச்சுட்டு நம்ம சாப்பிட்டு இறந்த பிறகு எல்லாத்தையும் சுருட்டிட்டு போகலாம் " என்று நினத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான்.இவனை விடக்கூடாது என்று நினத்து " கீழே இறங்கு, இந்தப் பாயசத்தை நீ தானே செய்தாய்? நீயே சாப்பிடு." என்று அவனுக்கு ஆணையிட்டார்.
அவனும் நடந்ததையல்லாம் சொல்லியும் அரசன் கேட்காததால், அவனும் வேறு வழியின்றி சாப்பிட்டான்.
அப்போது நினைத்தான் ஜோஸ்யர் சொன்னது பலித்து விட்டதே விதி யாரை விட்டது என்று தன்னையே நொந்து கொண்டான்.
இது முதல் சம்பவம்.

இரண்டாவதில் எமனை ஏமாற்றிய கதை.

எமதர்மன் அந்த வீட்டின் ஜன்னலில் அமர்ந்து நீண்ட நேரமாக, உள்ளே நடக்கும் சம்பாஷ்னையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மனைவி கணவனிடம் "உங்களோடு இத்தனை நாள் குப்பை கொட்டி என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல புடவை உண்டா? நகை நாட்டுத் தான் உண்டா? அடுத்த வீட்டைப் பாருங்கள்? அவனுடைய மனைவி தினம் ஒரு புடவை,வைர நகைகள் என்று மினுக்கிறாள்.நீங்களும் தான்?" என்று இடிக்காத குறையாக குறைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
கணவன் மனைவியிடம் " அதெல்லாம் சரிதான். அவன் எங்க வேலை பார்க்கிறான் தெரியுமா?
அவனுடைய சம்பளம் என்ன தெரியுமா? இதெல்லாம் தெரியாம இப்படிச் சொல்கிறாயே?
நான் அதே மாதிரி சம்பாதித்தால் ஜெயிலுக்குத் தான் போகவேண்டும். பரவாயில்லையா?"
இப்படிப் சொல்லிக் கொண்டிருந்த கணவன் ஜன்னலைப் பார்த்தான். வாசலில் எமதர்மனைப் பார்த்தான்.
உடனே மனைவியிடம் "கொல்லைக் கதவைத் திற, வாசலில் எமதர்மன் எனக்காக நிற்கிறான் என நினைக்கிறேன். அவனுக்குத் தெரியாமல் ஓடி விடுகிறேன்" என்று சொல்லி விட்டு கொல்லைப் புறமாக மூச்சிரைக்க ஓடினான்.
ஓடி, ஓடி ஒரு புளிய மரத்தின் அடியில் வந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டான். எமனிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்தான்.
வாசலில் அமர்ந்து இருந்த எமன் உள்ளே சத்தம் இல்லாததால், கணவனைக் காணாமல் அவனைத தேடி புளிய மரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.
கணவனுக்கு புளிய மரத்தடியில் எமனைப் பார்த்ததும் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது.
எமன் கணவனைப் பார்த்து "ஹா! ஹா!" ஏன் வாய் விட்டு சிரித்தான்.
"எதுக்கு சிரிக்கிறாய்?"
"நல்ல வேளை, நீண்ட நேரமாக உனக்காகத் வீட்டில் காத்திருந்தேன். உன்னுடைய மரணம் இந்தப் புளியமரத்தின் அடியில் தான் ஏன் முன்னரே தீர்மானிக்கப் பட்டுள்ளது. நீயானால் வீட்டை விட்டு வெளியே வராமல் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாய்.
வருவாயா, வராமல் போய்விடுவாயா? என்று கலங்கினேன். நல்லவேளை சரியாக புளிய மரத்தின் அடிக்கு வந்தாய். உன் உயிரை எடுக்க வேண்டியது தான் பாக்கி" என்றான் எமன்.கணவனுக்கு தன்னுடைய விதியை நினைத்து, மயங்கினான்!!!

சபேசன் சொன்ன கதையைக் கேட்டு ராமசாமி பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றார்.

Offline RemO

kathai thaaana unmai ilala

neenga ena soluringa jothidam elam unmaiya

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 ::) ::) ::) aama sprite enna solla vaarenga kathaila