Author Topic: முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்  (Read 3007 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்
நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக்கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..

பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.

நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும்.

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...



இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா சாப்ட்வேர் நம்ம computer - இல் இன்ஸ்டால் ஆகும்..




Ninite Easy PC Setup... தேவைக்கு http://ninite.com/ கிளிக்கவும்...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Nalla thagaval shur
payanulatha irukum elorukum