Author Topic: பட்ஜெட் போட்டு உங்களை சிக்கனப்படுத்தி கொள்ள உதவும் ஓர் இணையதளம்!  (Read 3176 times)

Offline Yousuf

ஒரு நாட்டு வரவு செலவுக்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒருவர் வீட்டிற்கும் பட்ஜெட் என்பது முக்கியமான ஒன்று, எவ்வளவு பணம் வருகிறது  எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அனைத்து விபரங்களையும் கொண்ட இந்த பட்ஜெட்-ஐ நம் குடும்பத்துக்கும் போட்டு பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிறது என்று சொல்லும் நபர்கள் கூட  ஒரு மாதம் மட்டும் பட்ஜெட் போட்டு செலவழித்து பார்த்தால் அதன் நன்மை புரியும். ஆன்லைன் மூலம் நமக்கு பட்ஜெட் உருவாக்க உதவுகிறது ஒரு தளம்.

    இணையதள முகவரி : http://www.spendful.com

இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி  கொண்டு உள்நுழையலாம்.

அடுத்து வரும் திரையில் உங்கள் பெயரும் ஆரம்ப கையிருப்பு (Starting balance) எவ்வளவு என்று கேட்கிறது.

    இதைக்கொடுத்து உள்நுழைந்து அடுத்து வரும் திரையில் Income , Expense கொடுத்து விட்டு Income -ல் Add item என்பதை சொடுக்கு எதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று கொடுத்து கொண்டே வரவேண்டியது தான்.

சராசரியாக இரண்டு மாதம் இப்படி நாம் பட்ஜெட் போட்டு கணக்கு பார்த்தால்  மூன்றாவது மாதம் செலவு நம் வரவுக்குள் அடங்கும்.
பணத்தை தண்ணிராய் செலவழிக்கும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்று எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் கொடுக்கும் இலவச சேவையைப் பயன்படுத்தி பார்க்கலாம்.

    பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Offline செல்வன்

ஒவ்வொரு செலவும் உணர்ந்து செலவு செய்தால் இதற்கு அவசியமே இருக்காது .அவசியமான செலவு , எதிர்பாராத செலவு என இது போன்ற அட்டவணையில் அடங்காத  நிறைய செலவினங்கள் ஒவ்வொரு மாதமும் வருகிறபடியால் நம் மனம் கொண்டு செலவினங்களை முறைபடுதுவதே சிறந்ததாகும் . தகவலுக்கு நன்றி யூசுப்.

Offline Yousuf

நீங்கள் சொல்லிய கருத்து நல்ல கருத்து செல்வன் அதை நான் ஏற்று கொளிகிறேன்.

நம் மனம் கொண்டு செலவினங்களை ஒழுங்கு படுத்துவதே சிறந்தது!

உங்கள் கருத்துக்கு நன்றி செல்வன்!