Author Topic: கடவுச் சொல்-திருட்டு  (Read 3166 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கடவுச் சொல்-திருட்டு
« on: December 15, 2011, 01:46:26 AM »
ஆண்டிவைரஸ்  மென்பொருளால் Trojan போன்றவற்றைத்  தடுக்க இயலாது. அது நம்
கணினிக்கு எந்த பாதிப்பும் செய்யாது; ஆனால் நம் கடவுச் சொல்லைத்
திருடிக்  குறிப்பிட்ட நபருடைய மெயிலுக்கு அனுப்பி விடும் . கணினியில்
நாம் தட்டச்சு செய்யும் கடவுச் சொல்லின் (**) எழுத்துக்களை குகிஸ்-ல்
என்று சொல்லக்கூடிய இடத்தில் வேறு விதமாகச் சேமித்துவிடுகின்றனர்.

நாம் என்ன உலாவி பயன்படுத்தினாலும் இது அந்தந்த உலாவிக்குரிய குகிஸில்
வேறுவிதமாக சேமிக்கப்படும்.  அடுத்து நம் கணினியில்  Script Error என்று
ஒரு செய்தி வரும். இந்தச் செய்தியில் நாம் ok  கொடுக்கும் போது இணைய
இணைப்பு இருந்தால் http புரோட்டாகால் மூலம் தகவ லானது தனிப்பட்ட நபருக்கு
நம் கடவுச்சொலை எளிதாக அனுப்பி விடும்.
சில நேரங்களில்  அடிக்கடி இந்த Script Error செய்தி வரும். எந்தப்பெயரில்
வேண்டுமானாலும்  இருக்கலாம்.  திருடர்கள் இதிலும் தொழில் நுட்பத்தைக்
கையாள்கிறார்கள் - அடிக்கடி நாம் பயன்படுத்தும் மென் பொருளை ரெஸிஸ்ட்ரி
மூலம் அறிந்து அந்த  மென்பொருளில் பிழை இருப்பது போல் Script உருவாக்கி
விடுகின்றனர்.

இதைத் தடுக்கும் வழிமுறைகள்   -

* கணினியின் வேகத்தில்ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக ஆண்டிவைரஸ்
மென்பொருள் கொண்டு கணினியை சோதியுங்கள்.

* ஜீமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் பாஸ்வேர்ட்
ரெகவரியில் உங்கள் அலைபேசி எண்ணை சேமித்துவிடுங்கள்.

* அனைத்து இமெயில் Contact ஐயும் அவ்வப்போது சேமித்து
வையுங்கள்.

* இமெயில் உருவாக்கிய தேதியையும் செக்யூரிட்டி கேள்வியின்
பதிலையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

* சொந்தக்கணினி பயன்படுத்துபவராக இருந்தால் இமெயிலுக்கு
தனி உலாவியையும் , மற்ற வேலைகளுக்கு தனி உலாவியையும்
பயன்படுத்துங்கள்.

* எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் நம் கணினியில் சேமித்து
வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள்ளே
செல்லுங்கள்.

*  நம் இமெயிலுக்கு வரும் எந்த லிங்கையும் சொடுக்காதீர்கள்
அது பேஸ்புக் வாழ்த்தாக இருந்தாலும் சரி சொடுக்கவே கூடாது.

* பல இமெயில் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்
வைக்கவும்,ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.

இதைத் தவிர பிரெளசிங் சென்டர்களில் நாம் இமெயில் திறக்கும்
முன் அந்தக்  கணினியில் கீ லாக்கர் போன்ற எந்த மென்பொருளும்
இருக்கிறதா என்று சோதித்தபின் பயன்படுத்துங்கள்.

Trojan code உதவியுடன் யாருடைய இமெயில் கடவுச்சொல்லையும்
எந்த இணையதளத்தையும் கொள்ளை அடிக்கலாம் என்பது முற்றிலும்
உண்மை .என்னதான் செக்யூரிட்டி இருந்தாலும் எவ்வளவு பெரிய
இணையதளம் ஆனாலும் கணினிக் கொள்ளையர்கள் கண்ணில் இருந்து தப்ப முடியாது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: கடவுச் சொல்-திருட்டு
« Reply #1 on: December 15, 2011, 01:40:25 PM »
thanks shur
ena senchalum vidama thiruduvanga pola irukey