Author Topic: Torrent பற்றிய தகவல்கள்  (Read 3161 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Torrent பற்றிய தகவல்கள்
« on: December 17, 2011, 04:49:56 PM »
டொர்ரேண்ட்[Torrent]
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த யுடோரண்ட் (utorrent). இது என்ன பதம் அதன் அர்த்தம் என்ன (torrent) என்றால் பாயும் நீரோட்டம் என்று அர்த்தம் இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent
extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற
மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

டோரண்ட் கோப்பு

டவுண் லோடு செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.


டோரண்ட் பயன்பாடு

எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.


டோரண்ட் பயனாளிகளின் வகைகள்

சீடர்ஸ்(seeders): என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள் கோப்புகளை அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.

லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால்அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.

பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும்.
அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கபடும்.



ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி

முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும் அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று தேர்வு செய்யவும்


அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.


டோரன்ட் தரவிறக்கல் என்றால் என்ன??

இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு.



டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது
எப்படி?

டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உன்லகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.

ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப் பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.

இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.


பிரபலமானUTorrent செயலி
பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி?

டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச்
சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது. இதனை யுடோரன்ட் தளத்திற்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின் யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில் அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட் கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம் ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload) கொண்டிருக்கும்.


முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம் Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள்
இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள் யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.

சிலசாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம் பதிவேற்றியி ருப்பார்கள்.அதை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்தால் Download This Torrent என நமக்குவிண்டோ ஒன்று வரும். நம்மிடம் அதேபோல் யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக டவுண்லோடு செய்யமுடியும். அதை பதிவிறக்கி எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.
இப்போது நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில் பதிவேற்றிய படத்தை பதிவிறக்கவும். இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து (சி-டிரைவை தவிர வேறு டிரைவில் சேமித்தல் நல்லது)ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய Symbol இருக்கும் .

இதில் உள்ள u சிம்பலை நீங்கள் கிளிக் செய்தால் இதில் உள்ள Hide/Show u Torrent கிளிக் செய்தால் யுடோரண்ட் விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த டவுண்லோடினை நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும் டவுண்லோடு செய்யலாம். அதேப்போல் அவசரவேலையாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில் உள்ள Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம்.

அதேப்போல் நிறைய பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம் நாம் டவுண்லோடுசெய்யலாம். இதில் உள்ள டவுண்லோடு முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த பைலானது Completed Folder ku சென்றுவிடும்.

நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது அப்லோடு ஆகி கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்திவையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ் செய்துவிடுங்கள். இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு செய்த
பைலானது அமர்ந்திருக்கும்.

பயன்படுத்திபாருங்கள்.......



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: Torrent பற்றிய தகவல்கள்
« Reply #1 on: December 18, 2011, 01:41:12 AM »
thanks shur
nan padam elam ipadi than download panuren
ana itha pathi ethum theriyathu  ipa nan therunchukiten

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Torrent பற்றிய தகவல்கள்
« Reply #2 on: December 18, 2011, 06:18:40 AM »
nanum ithai use panren..but fulla enakum ipo than therium Remo


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்