Author Topic: கம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது நமக்கு பிடித்த பாடல் ஒலிக்க  (Read 3223 times)

Offline gab

கம்ப்யூட்டரை ஆன் செய்யும் பொழுதே நமக்கு பிடித்தமான பாடல் ஒலித்தால் அது மனதுக்கு  ஒரு சந்தோஸமே... (அல்லது உங்கள் குரலையே கூட வரவேற்கும் விதமாக பேசி அதனை கம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது ஒலிக்குமாறு செய்யலாம்... )
முதலில் உங்களுக்கு தேவையான பாடல் அல்லது நீங்கள் பேசி ரெக்கார்ட் செய்த பைலை Wav பார்மெட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்... நான் டெக்ஸ்ட்டாப்பில் music என்ற பெயரில் வேவ் பார்மட்டில் மாற்றிய பைலை வைத்திருக்கிறேன்.



 பின் டெக்ஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து அதில் Personalize என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்...


பின் வரும் விண்டோவில் sounds என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்.

பின்வரும்  விண்டோவில் 1 என்று நான் குறிப்பிட்டுள்ள sound என்ற ஆப்சனை க்ளிக் செய்து Program Events  என்பதில் Windows  Logon (நான் 2 என்று க்ளிக் செய்துள்ள இடம்) என்ற ஆப்சனை தேடி க்ளிக் செய்து கொள்ளுங்கள். பின் கீழே Browse (3) என்ற ஆப்சனை க்ளிக் செய்து உங்கள் பாடல் உள்ள பைலை open செய்து கொள்ளுங்கள். பின் test (4) என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் உங்கள் பாடல் ஒலிப்பதை கேட்கலாம்.
பின் மேலே Save As (5) என்ற ஆப்சனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரில் சேவ் செய்து கொள்ளுங்கள். இப்போது sound scheme (6) என்ற ஆப்சனில் நீங்கள் சேவ் செய்த பெயர் வந்திருப்பதை பார்க்கலாம். பின் Apply என்ற ஆப்சனை க்ளிக் செய்து ok க்ளிக் செய்து கொள்ளுங்கள்....



இனி ஒவ்வொரு முறை உங்கள் கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போதும் உங்களுக்கு விருப்பமான பாடல் ஒலிக்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
puriura mathiri iruku :S but puriyala...

Try seithu parkanum ...thanks....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

nala idea gab :D
enga yarathu ponuga sing pani :D file anupnuga pa

Offline Charu

ஒரு சின்ன correction gab..நன் try panni partha but switch on pannum bothu sound  varala  ..but log on panum bothu music varuthu ma... bcoz neenga windowlogon dhan  select panni irukinga ....log out log on panum bothu varudhu so window restart r start pannum bothu eppadi music varum nu sollunga ma....




Offline AdMiN

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 177
  • Total likes: 225
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~~!!Always Think Different !!~~
    • Friends Tamil ChaT
For WINDOWS STARTUP TONE USE OPTION "START WINDOWS"AND use option "EXIT WINDOWS"for switchoff tone

நண்பர்கள் இணையதளத்தின் அறிவு களஞ்கியம் !! படைப்பாளிகளுக்கு  ஒரு  அங்கீகாரம் !!என்றுமே புதுமை பொங்கும் இளமை !! நமது நண்பர்கள் இணையதள பொதுமன்றம்!!

Offline Charu

there is no such options in sound settings gab... can u tell me wr is the option ....