சரித்திரம் படைத்த சந்திராயன்-3
நிலவு ஆய்விற்காக சந்திரயான் என இஸ்ரோ பெயர் வைத்ததற்கு காரணம் சமஸ்கிருதத்தில் சந்திரயான்-3 என்ற பெயருக்கு நிலவுக்களம் என அர்த்தம். மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாரா பாய் நினைவாக இதன் லேண்டருக்கு விக்ரம் என பெயர் வைத்துள்ளனர். இதன் ரோவருக்கு பிரக்யான் என பெயர் வைத்துள்ளனர் இந்தப் பிரக்யான் என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தை இருந்து வந்தது, இதன் அர்த்தம் ஞானம் ஆகும்
இதுவரை நிலவில் மொத்தம் மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கியுள்ளன அமெரிக்கா, பழைய சோவியத் யூனியன், அடுத்ததாக சீனா இந்த மூன்று நாடுகளை தொடர்ந்து இந்தியா வெற்றிகரமாக தனது ரோவரை நிலவில் தரையிறக்கி ஆய்வுகளை செய்து விட்டால் இந்த சாதனையை செய்த நான்காவது நாடாக இந்தியா இடம் பெறும்.
. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கனவு நினைவாகப்போகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளாக இந்த கனவிற்காக கடும் உழைப்பை செய்துள்ளனர்.