FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 01, 2018, 11:36:49 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: Forum on September 01, 2018, 11:36:49 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 198
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/198.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: AshiNi on September 02, 2018, 12:55:36 AM
பறவைகள் மட்டுமா பலவிதம்...?
மனிதர்களும் பலவிதமே...

மனிதர்கள் மட்டுமா பலவிதம்...?
அவர்கள் சிரிப்பும் பலவிதமே...

நீ மழலையாய் பிறக்கையிலே
வஞ்சகமற்ற மனதின் வெள்ளை சிரிப்பு...!

நீ சிறுவராய் வளர்கையிலே
விளையாட்டு ததும்பும் குறும்பு சிரிப்பு...!

நீ வாலிபமாய்  வளர்கையிலே
வயது கோளாறால் காதல் சிரிப்பு...!

நீ பொறுப்பை உணர்கையிலே
சாதிக்கலாம் என நம்பிக்கை சிரிப்பு...!

நீ குடும்பமாய் இணைகையிலே
துணையின் கைப்பற்றிய இன்ப சிரிப்பு...!

உன் சேய் உதிக்கையிலே
உன் இரத்தமென ஆனந்த சிரிப்பு...!

உன் மழலை வளர்கையிலே
உன் நகலென பெருமித சிரிப்பு...!

உன் வாரிசு திருமணம் காண்கையிலே
உள்ளம் பூரித்து கண்ணீர் சிரிப்பு...!

உன் பேரன் பேத்தியை சுமக்கையிலே
வம்சம் தழைக்குமென வீர சிரிப்பு...!

உன் முடி நரைத்து முதிர்ச்சி அடைகையிலே
மலரும் நினைவுகளால் மென்மை சிரிப்பு...!

உன் துணையின் உயிர் பிரிந்த பின்
வெளியுலகுக்கு மட்டும் பகட்டு சிரிப்பு...!

எத்தனை எத்தனை வகையாய்
நீ கொள்கிறாய் சிரிப்பு...
புன்னகை ஓயாது தவழும்
வாழ்க்கையே என்றும் சிறப்பு...

சிரித்து சிரித்தே
ஓடிச்செல்லும் உன் வாழ்க்கை,
சிரிப்பை நிறுத்த
ஓர் நாள் கொள்ளும் வேட்கை...

அன்று...
வகையாய் சிரித்த நீயோ
ஆடி அடங்கி இருப்பாய்!
உலக வாழ்வின் மோகம் துளைத்து
மண்ணுள் கிடப்பாய்!

நீ மண்ணில் வாழ்கையிலே
உன்னோடு சிரித்தவன்,
நீ மண்ணாய் போகையிலே
உனக்காய் அழ வேண்டும்...
உன்னோடு மகிழ்ந்தவன்,
உன் பிரிவை எண்ணி
மனதால் வருந்த வேண்டும்...

வாழும் நாட்களில்
உன் அன்பை சிரிப்பால் எல்லோரிடமும்
உண்மையாய் பரவச்செய்...
நீ இல்லா காலத்தில்
உன் பாசத்தின் மகிமையை மற்றோர்
உள்ளத்தால் உணரச்செய்...

அத்தனை ஆண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு
அது மட்டுமே அர்த்தம்...
அதுவே நீ செத்து மடிந்த பின்
உன்னை காண வைக்கும் சொர்க்கம்...!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: thamilan on September 02, 2018, 05:54:02 AM
சிரிப்புகள்  பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
 
குழந்தையின் சிரிப்பு
குமரியின் சிரிப்பு
பல்லு போன பாட்டியின் சிரிப்பு
பதவியில் இருக்கும் அதிகாரிகளின் சிரிப்பு
வஞ்சகர்களின் சிரிப்பு
வஞ்சனை இல்லா தாயின் சிரிப்பு

செடியில்  பூக்கும்
மலரை விட
நொடியில் பூக்கும்
மழலையின் சிரிப்பு அழகு

இருண்ட வானில்
பளிச்சிடும் மின்னலாய்
மேலிருந்து கீழே விழுந்து
தெறித்திடும் நீரத் துளிகளாய்
உரசியதும் பற்றிக்கொள்ளும்
தீக்குச்சி ஜுவாலையாய்
இதயத்தை வசீகரிப்பது
மங்கையின் சிரிப்பு

சிரிப்பவர்கள் எல்லோருமே
கவலைகளை இன்றி வாழ்பவர்களா என்றால்
இல்லை கவலையை ம(றை)றக்க
கற்றுக் கொண்டவர்கள்

கண்ணீரும் புன்னைகையும்
நெருங்கிய  நண்பர்கள்
க‌ண்ணீரில் புன்ன‌கையும்
புன்ன‌கையில் க‌ண்ணீரும்
க‌ல‌ந்திருப்ப‌தை நாம் அறியோமோ


சிரித்தாலும் கண்ணீர் வரும்
அழுகையிலும் சிரிப்பு வரும்
உண்மையை சொல்ல‌தென்றால்
க‌ண்ணீர் க‌ண்க‌ளின் புன்ன‌கை
புன்ன‌கை இத‌ழ்க‌ளின் க‌ண்ணீர்
ந‌ம் இத‌ழ்க‌ள் சோக‌மாக‌ சிரிப்ப‌தில்லையா


புன்ன‌கை த‌ன்னை
க‌ண்ணீரால் அழ‌ங்க‌ரித்துக் கொள்ளும்
அற்புத‌ம‌ல்ல‌வா ஆன‌ந்த‌க் க‌ண்ணீர்
ம‌ழைமேக‌ங்க‌ளில்
மின்ன‌ல் உதிப்ப‌தில்லையா
அதே அழ‌கு தானே
க‌ண்ணீரினிட‌யே உதிக்கும் சிரிப்பும்







Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: JeGaTisH on September 02, 2018, 02:07:31 PM
சிரிப்பு வாழ்க்கைக்கு நல்ல மருந்து
ஆனால் வாழ்கிறோம் அதை மறந்து

உலகின் மிக கடினம் பிறரை சிரிக்க வைப்பது
அதை நமக்குள்  பூட்டிவைத்து சிரிப்பை தேடுகிறோம்

உன் மனம் வருந்தும் பொது சிரி
பிறர் மனம் வருந்தும் பொது
சிரிக்கவை !

எல்லா மனிதரும் பேசும்
ஒரே மொழி சிரிப்பு !

ஒரு நிமிட முகபூரிப்பால்
உன் அகம் ஆனது சுத்தமாகும்
வருக்காலத்தில் சிரிப்பை காசு கொடுத்து
வாங்கும் நிலை வராமல் வழி உண்டாக்கு   

பிறக்கும் பொது அழுகிறோம்
இறக்கும் போதும் அழுகிறோம்
வாழும் நிமிடமாவது நாம் சிரித்து
பிறரையும் சிரிப்பில்  ஆற்றுவோமே !



அன்புடன் உங்கள் சொக்லேட்  தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: VipurThi on September 03, 2018, 08:16:29 PM
உன்னையும் மனிதனாய்
மாற்றியது புன்னகை
ஆறறிவு அடையாளத்தின்
காரணமான அடிப்படை

விலங்கிற்கு தெரியுமோ சிரிக்க
விலங்காய் மாறியவனால்
முடிந்தது அதை மறக்க

அன்பினால் சிரித்தவன்
விஷமமாய் வெறிக்கிறான்
உவகையில் பூத்தவன்
எள்ளலில் துவள்கிறான்

சிரிப்பதற்கு கூலி கேட்கும்
சிந்தைமிகு உலகம் இது
பொன் நகைக்காய்
புன்னகை தொலைத்த
விந்தைமிகு உலகம் இது

இடுக்கண் வருங்கால் நகுந்துவிட்டால்
அங்கே வெற்றி சூடிடும் புகழ்ச்சி
நல்ல நல்ல எண்ணங்களிலே
விதை விதைத்தால் அங்கே
திண்ணமாகிடும் மகிழ்ச்சி

                  **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: RishiKa on September 03, 2018, 09:00:04 PM
                                      சிரிப்பின் சிறப்பு!

புல்லின்   விரிப்பில் பனியின் சிரிப்பு!
பூவின் பிறப்பில் தேனின் சிரிப்பு !

மரத்தின் வழியில் கனியின் சிரிப்பு!
மனதின் மொழியில்  மௌனம் சிரிப்பு !

வனத்தின் செழுமையில் வளங்கள் சிரிப்பு !
வானத்தின் அழுகையில் பூமியின் சிரிப்பு !

மண்ணின் சிறப்பில் பயிர்கள் சிரிப்பு !
பொன்னின் உருக்கில் அணிகலன் சிரிப்பு!

மழலையின் பேச்சில்  தெய்வத்தின் சிரிப்பு !
மங்கையின் மனத்திலோ இதயத்தின் சிரிப்பு !

கண்ணீரின் துளிகளில் நம்பிக்கை  சிரிப்பு !
கனவின் துயில்களில் காத்திருப்பின்   சிரிப்பு !

இளமையின் வேகத்தில்  காதல் சிரிப்பு!
முதுமையின் புரிதலில்  இறைவன் சிரிப்பு!

மனிதர்கள் பலநேரம் முகமூடி சிரிப்பு!
மானுடம் வெல்வதோ மாண்பு சிரிப்பு!

ஏழ்மையின் கந்தலில் வறுமை சிரிப்பு!
கற்றலில் பெற்றதால் வசந்த சிரிப்பு!

உள்ளத்தில் உறையும் உண்மையின்  சிரிப்பு!
உணர்வுகளில்  வாழும்  ஊமையின் சிரிப்பு!

புதுமையின் படைப்பில் புரட்சி சிரிப்பு !
பிரபஞ்சத்தில் உலாவும் ஆன்மாவின் சிரிப்பு!

கயவர்களின் நெஞ்சில் வஞ்சக சிரிப்பு!
காலத்தின் கையில் கடவுளின் சிரிப்பு !


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: Guest on September 05, 2018, 02:23:32 AM
முகங்கள்...

**********

முன்னால் இல்லையென்று
தலையசைத்துவிட்டு
பின்னால் திரும்பாமல்
ஆம் என்று இரகசியமாய்
சிமிட்டும் பிடரிக்கண்கள்
உறுத்தாமல் படுத்துகிறது....


சாத்தியமில்லாத ஒன்றில்
சாத்தியங்களை தேடும்
சகட்டுத்தனம் முன்கூட்டியே
தீர்மானித்து தவறிழைத்து
தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும்
முகங்களின் அநீதம்....

காதறுந்த துலாசில்
எடைக்கான கற்கள்
காலூன்றி நிற்பதில்லை
அநீதமும் அப்படித்தான்

நீதத்தை கொன்று சேர்த்த
சிரிப்பில் புன்னகையின்
வெளிப்பாடிருப்பதில்லை
அழிவின் எக்காளம்
அறை முழுக்க எதிரொலிக்கும்...

சுருட்டிய உன் பாய்களில்
சோதனைகள் தொடர்கிறது - நீ
எல்லா பகல்களிலும் பாயை
மறந்துபோவதுபோல்
பாவத்தையும் மறந்துபோகிறாய்
இரவுகளில் பாயைவிரிப்பதுபோல்
மீண்டும் பாவமோட்சம் தேடுகிறாய்...

கண் திறந்து பார்
உன் கண்ணெதிரே
கண்களே தெரியும் - நீ
கண்ணாடியில் பார்த்தால்

உன் முகம் பார்த்து
முகம்சுழிக்கவே இயலும்...

வெளிச்சத்தில்
முகங்களை மூடாதீர்கள்
இருண்ட அகங்களை
அது வெளிப்படுத்தும்.....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 198
Post by: SweeTie on September 05, 2018, 08:17:38 AM
பிரமனின் படைப்பில் பல பல வினோதம்
அகத்தை படைத்தவன்  உள்ளதை வெளிக்கொணர
முகத்தையும் படைத்தான்
சிந்தனையால் அழகூட்டி  அகம் குளிரவைத்து
முகம் மலர  சிரிப்பை  தவள விட்டான்

;பொன்னையும் பொருளையும்  அள்ளிக் கொடுத்தாலும்
மாறாது ஒருபோதும்  நம் அன்னையின் அன்பு முகம்
சீராட்டி   பாலூட்டி  தாலாட்டி  வளர்த்த அவள்
முகம் கோணாது  பாருங்கள்  வேறில்லை
கைம்மாறு  செய்வதற்கு

ஏழை  எளியவர்  முகம் பசியில் துவழுகையில்
எள்ளி நகையாடாமல்  கிள்ளி கொஞ்சம் போடுங்கள்
கதிரவனைக்  கண்ட தாமரைபோல்
அவர் முகம் மலர்ந்து சிரிக்கட்டும் 
உங்கள்  அகம் குளிர வாழ்த்தட்டும்

உள்ளொன்று வைத்து  புறமொன்று பேசுபவர்
வஞ்சகம் பாதி  வறட்டு கெளரவம்  மீதி
முகத்திரைபோட்ட  முகமூடி மனிதர்கள்
சிரித்து  மழுப்பும்  சந்தர்ப்ப வாதிகள்
இறைவனின் படைப்பில் இவர்களும் மனிதர்கள்.

மருத்துவர் செலவும் வேண்டாம்  மாத்திரை செலவும் வேண்டாம்
நோயற்ற  வாழ்வே போதும்  குறைவற்ற  செல்வம் வேண்டும்
இனிதாக வாழவேண்டும்   இன்புற்றிருக்கவேண்டும்
வாய் விட்டு சிரித்து வாழ்வோம்  நோய்விட்டு பறந்தே போகும்