Author Topic: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?  (Read 28627 times)

Offline Yousuf

தமிழன் உங்கள் கருத்தை சிறப்பாகவும் தெளிவ்கவும் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்!

தமிழன் நீங்க எந்த அடிப்படையில் சினிமா இளைஞர்களை சீற்படுத்துகிறது என்று கூறுகிறீர்கள்? சீர்பெற்றவர்களின் புள்ளி விவரத்தை நீங்கள் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

நல்ல படங்கள் வரத்தான் செய்கிறது தமிழன் நான் இல்லை என்று ஒரு போதும் மறுக்க வில்லை. ஆனால் நல்ல படங்களை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்பதுதான் என் கேள்வி? உதரனத்திற்க்கு தமிழில் நிறைய நல்ல படங்களை சொல்லலாம் ஆனால் அந்த படங்களை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்?

Quote
நான் ஒன்று கேட்கிறேன்,
இப்போ இங்கே யூசுப், ரெமோ,செல்வ‌ன், நான் த‌மிழ‌ன், ரோஸ், சாரு எல்லோரும் ப‌ட‌ம் பார்க்கிற‌வ‌ர்க‌ள் தான். இதில் யாராவ‌து ப‌ட‌த்தை பார்த்து சீர‌ழிந்த‌வ‌ர்க‌ள் இருக்கிறீர்க‌ளா? இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம்.

இந்த இடத்தில் ஒரு திருத்தம் தமிழன். நான் படம் பார்கிறேன் என்று என்றாவது உங்களிடம் சொன்னேனா? நீங்கலாக  ஒரு அனுமானம் செய்ய கூடாது தமிழன். எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன். அதே போன்று நீங்கள் எடுத்த உடன் எல்லாரும் படம் பார்க்க கூடியவர்கள் தான் என்று கூற கூடாது அது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

Quote
இப்போது வ‌ரும் ப‌ட‌ங‌ளில் 10ல் 1 ப‌ட‌ம் தான் நீங்க‌ள் கூறுவ‌து போல‌ ஆபாச‌ ந‌ட‌ன‌ங்க‌ளும் ஆபாச‌க் காட்சிக‌ளும் நிறைந்த‌ ப‌ட‌மாக‌ இருக்கும்.

நீங்கள் கூறுவது போல் உங்களால் இதை ஆதரபூரவமாக நிரூபிக்க இல்யளுமா! ஆபாசம் இல்லாத ஆபாச பேச்சு இல்லாத 9 படங்களை உங்களால் சொல்ல முடியுமா அதாவது 10 -இல் 9 படங்களை கூற இயலுமா?

Quote
இதில் இருந்து மோச‌மான‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தை ம‌க்கள் விரும்ப‌வில்லை என்று புரிய‌வில்ல‌யா?

இப்படி நீங்கள் சொல்வதால் உண்மை ஆகிவிடுமா? நீங்கள் எந்த படத்தை மோசமான படம் என்று கூறுகிறீர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.

Quote
ம‌ற்ற‌து, இந்த‌ சினிமாவால் இன்னும் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. ப‌ட‌த்தில் ந‌டிக்கும் ந‌டிக‌ர்க‌ளின் ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளால் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. நிறைய‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌த்த‌தான‌ம் செய்கிறார்க‌ள். இது சீர‌ழிவா?

இது எங்கு நடக்கிறது என்று எனக்கு தெளிவாக கூறுங்கள். ரத்த தானம் நடக்கிறதா இல்லை அவர்களின் பெயரால் கூத்துகள் நடக்கிறதா என்று ஆதர பூர்வமாக நிருபியிங்கள்.

Quote
ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ள‌ல் கிராம‌ங்க‌ளில் சிர‌ம‌தான‌ வேலைக‌ள் ந‌டாத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.இது நல்ல‌ விச‌ய‌ம் தானே.

இப்படி சொல்வதால் நீங்க சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிட முடியாது தமிழன். எந்த கிராமத்தில் ரசிகர் மன்றங்கள் நல்ல செயல்களை செய்கிறார்கள் எனக்கு தெரிய வில்லை நானோ அல்லது என்னை சுற்றி இருபாவர்களோ அறியாத ஒன்றாக உள்ளது நீங்கள் கூறுவது.

Quote
ரெமோ, நீங்க‌ள் சொல்வ‌து போல‌ க‌தாநாய‌க‌ன் ச‌ண்டை போடுவ‌து யாரோடு? கெட்ட‌வ‌ர்க‌ளோடு தானே. கெட்ட‌வ‌ர்க‌ளை எதிர்க்க‌ வேண்டும் என்ப‌தை தானே அது உண‌ர்த்துகிற‌து.

கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்!

நீங்கள் சொல்லும் அணைத்து கருத்தும் நடை முறை சாத்தியம் இல்லாததாகவும் இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தாதாகவும் உள்ளது தமிழன். உங்கள் கருத்துகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உங்கள் பதிலை தொடர்ந்தது என் விவாதத்தை நான் மீண்டும் இறைவன் நாடினால் தொடர்கிறேன்!
« Last Edit: November 19, 2011, 07:39:38 AM by Yousuf »

Offline thamilan

தமிழன் நீங்க எந்த அடிப்படையில் சினிமா இளைஞர்களை சீற்படுத்துகிறது என்று கூறுகிறீர்கள்? சீர்பெற்றவர்களின் புள்ளி விவரத்தை நீங்கள் எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

யுசூப்
இதையே நான் உங்க‌ கிட்ட திருப்பி கேட்கிறேன். சீர்கெட்டவவர்களின் பெயர்களை புள்ளி விபரத்துடன் அவர்கள் பெயர் விலாசம் எல்லாம் உங்களால் தர முடியுமா?
நம்ப க்கு வரவங்க‌ கிட்டயே கேட்டுப்பாருங்க,எத்தனை பேர் சீரழிந்து போனாங்க என்று. பதில் பூச்சியமாக தான் இருக்கும்.

 ப‌ட‌ம் என்ப‌து ஒரு பொழுதுபோக்கு சாத‌ன‌ம்.அதால‌ திருந்திர‌வ‌ங்க‌ள‌ விட‌ கெட்டுப் போர‌வ‌ங்க‌ குறைவு.
எந்த‌ ப‌ட‌த்தை பார்த்துவிடாவ‌து அதை பார்த்த‌ ப‌ச‌ங்க‌ அதில் வ‌ர‌து போல‌ வீதியில‌ ச‌ண்டை போடுறாங்க‌ளா?
கொள்ளை அடிப்ப‌வ‌ர்க‌ள். அடாவ‌டித்த‌ன‌ம் ப‌ண்ணுவ‌வ‌ர்க‌ள், க‌ற்ப‌ழிப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் ப‌ட‌த்தை பார்த்து விட்டு தானா ப‌ண்ணுகிறார்க‌ள்?

இந்த இடத்தில் ஒரு திருத்தம் தமிழன். நான் படம் பார்கிறேன் என்று என்றாவது உங்களிடம் சொன்னேனா? நீங்கலாக  ஒரு அனுமானம் செய்ய கூடாது தமிழன். எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன். அதே போன்று நீங்கள் எடுத்த உடன் எல்லாரும் படம் பார்க்க கூடியவர்கள் தான் என்று கூற கூடாது

படமே பார்க்காம அது சரி இல்லை அதால இளைஞர்கள் கெட்டுப் போராங்க என்று எப்படி சொல்லுறீங்க யூசுப்?
முதலில் உங்களுக்கு இந்த விவாதத்துல பங்கேற்கும் அடிப்படை தகுதியே இல்ல.ஒன்றை பார்க்காம‌ல் அனுப‌விக்காம‌ல் அது ச‌ரியில்லை என்று எப்ப‌டி உங்களால‌ சொல்ல‌ முடியும்?

நீங்கள் கூறுவது போல் உங்களால் இதை ஆதரபூரவமாக நிரூபிக்க இல்யளுமா! ஆபாசம் இல்லாத ஆபாச பேச்சு இல்லாத 9 படங்களை உங்களால் சொல்ல முடியுமா அதாவது 10 -இல் 9 படங்களை கூற இயலுமா?

யூசுப் உங்க‌ கேள்வி வேடிக்கையா இருக்கு.ப‌ட‌மே பார்க்காத‌ உங்க‌ளுக்கு நான் ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை சொல்லி என்ன‌ ப‌ய‌ன்?இருந்தாலும் சொல்கிறேன்.

1) தெய்வ‌த்திரும‌க‌ன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடிய‌ட்ஸ்
5) வாகை சூட‌ வா
6) ச‌துர‌ங்க‌ம்
7) ப‌ச‌ங்க‌
8)பேராண்மை
9)சிங்க‌ம்

நான் 9 ப‌ட‌ங்க‌ளை சொல்லிவிட்டேன். நீங்க‌ மோச‌மான‌ ப‌ட‌ங்க‌ள் என்று ஒரு 8 ப‌ட‌ங்க‌ளை சொல்லுங்க‌. ப‌ட‌மே பார்க்காம‌ல் எப்ப‌டி சொல்ல‌ப் போறீங்க‌ யூசுப்? ம‌த்த‌வ‌ங்க‌ கிட்ட‌ கேட்டா?

யூசுப் மச்சி இ ந்த‌ ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை கூட‌ நான் மிக‌வும் யோசிச்சி தான் எழுதினேன். ப‌ட‌த்தை பார்த்து விட்டு அதை யாரும் ம‌ன‌தில் வைத்திருப்ப‌தில்லை. ஒவ்வொருத்த‌னுக்கும் ஆயிர‌ம் பிர‌ச்ச‌னை இருக்கு, அதை ம‌ற‌ப்ப‌த‌ற்காக‌த்தான் பொழுதுபோக்கா ப‌ட‌ம் பார்க்கிறார்க‌ள். அடுத்த‌ நாள் அதை ம‌ற‌ந்து விடுவார்க‌ள்.

இப்படி சொல்வதால் நீங்க சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிட முடியாது தமிழன். எந்த கிராமத்தில் ரசிகர் மன்றங்கள் நல்ல செயல்களை செய்கிறார்கள் எனக்கு தெரிய வில்லை நானோ அல்லது என்னை சுற்றி இருபாவர்களோ அறியாத ஒன்றாக உள்ளது நீங்கள் கூறுவது.

யூசுப் ம‌ச்சி நீங்க‌ ப‌ட‌ம் தான் பார்க்கிற‌தில்ல‌ என்று சொன்னீங்க‌. ப‌த்திரிகைக‌ள் செய்திக‌ள் கூட‌ பார்க்கிற‌தில்லை போல‌ தெரிகிற‌து.
இப்போ ச‌மீப‌த்தில் கூட‌ அஜித் ர‌சிக‌ர் ம‌ன்ற‌த்தாலும் க‌ம‌ல் ர‌சிக‌ர் ம‌ன்ற‌த்தாலும் ர‌த்த‌தான‌ முகாம்க‌ள் ந‌ட‌த்தினார்க‌ள். நான் நெட் நெந்ச்ல‌ பார்த்தேன். இப்ப‌டி புள்ளி விப‌ர‌த்துட‌ன் கேட்பீர்க‌ள் என்று தெரிஞ்சிரு ந்தா நான் அதை நோட் ப‌ண்ணி வ‌ச்சிருப்பேன்.
முடிஞ்சா அடுத்த‌ ப‌திலில் அதை தாரேன்

உங்க‌ எல்லா கேள்விக‌ளுக்கும் ப‌தில் சொல்வேன். ஆனால் நேர‌ம் போதாது. அடுத்த‌ த‌ட‌வை எதிஉக்கும் சேர்த்து சொல்கிறேன்

Offline Yousuf

உங்கள் வாதம் நன்று தமிழன்!

சினிமாவால் சீர் கட்டவர்களின் புள்ளி விவரம் கேட்டீர்கள் இதோ தருகிறேன்!

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் நல்லொழுக்கங்களும் கற்பிக்கப்பட்டு ஒழுக்கமுடயவராய் திகழவேண்டியவர்கள் திரைப்படங்களில் சிக்கி சின்ன பின்னமாக உருமாறுகிறார்கள். கல்வி பயிலச் செல்லும் சிறார்கள் புத்தகப் பையிலும், நோட்டுகளின் அட்டைகளிலும் நடிகர், நடிகைகளின் கவர்ச்சி படங்களை காண முடிகிறது. சிறு குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டிய பெற்றோர்கள் கூட வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.

இந்த கட்டத்தில் "குமுதம்" வாசகி விஜயலட்சுமி என்பவரின் செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் கூறுகிறார், "சன் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட "இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.
(நன்றி : குமுதம்

இது படிப்பதற்கு சாதாரண செய்தியாக இருந்தாலும் எந்த அளவுக்கு இந்த தொலைக்காட்சித் தொடர்கள் பச்சிளங் குழந்தைகளின் நெஞ்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது ஓர் சாட்சி!

சமீப காலமாக சிறுவர்கள் ஓடிப்போகும் காட்சிகள் நடந்தேறுகின்றதே இதற்குக் காரணம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் பாதிப்புகள். பள்ளியில் பயின்று கல்லூரி கடந்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக வேண்டிய பாலகர்கள் சினிமா மாயையில் சிக்கி நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி திக்கற்றவர்களாக திரியும் காட்சிகள் எதைக் காட்டுகிறது? இதிலிருந்து இந்த ஊடகங்கள் நம் குழந்தைகளை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

"தினமணி" நாளிதழின் வாசகர் கடிதம் ஒன்றினை இங்கு மேற்கோள் காட்டினால் பொருத்தமானதாக இருக்கும். "வளர் இளம் பருவத்திடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வண்ணத்திரைகளும் தான் காரணம். பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போகும் நிகழ்வு நடைபெறுகிறது. வறுமையும், பண்பாட்டுச் சீரழிவும் காணாமல் போனால்தான் இந்த சமுதாயத்தில் ஓடிப்போகும் கலாச்சாரம் இல்லாத நிலை உருவாகும்.
"சோம நடராசன் (கரூர்) " நன்றி : தினமணி (28-05-2004)

சினிமாவில் வருவதைப் போன்று உயர்மட்ட வாழ்க்கை வேண்டும் என்ற போலி ஆசையில் தனது வாழ்வையே சூனியமாகும் அவல நிலை உருவாகுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வெள்ளித்திரைகளும் அதிக அளவிற்கு காரணமாக இருக்கின்றன.

குழந்தைப் பருவம் பாழ்பட இந்த தொலைக்காட்சி தொடர்களின் வியாபகம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை இன்னும் விரிவாக நோக்க "ஒற்றுமை" இதழில் வெளிவந்த "தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் எதிர்கால சமுதாயம்" என்ற ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

 ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் ஒரு குழந்தை திரைப்படங்கள் பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன் பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களை குறித்துப் பேச 38.5 நிமிடங்கள் மட்டுமே ஒரு குழந்தை பயன்படுத்துகிறது. என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வயதுக் குழந்தை திரைப்படங்கள் முன் தினமும் 6 மணி நேரத்தைக் கழிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் திரைப்படங்கள் பார்க்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1023 மணி நேரங்கள். உயர்நிலைப பள்ளியை முடிக்கும் மாணவன் ஒருவன் 19,000 மணி நேரம் தொலைக்காட்சியை பார்த்த அனுபவம் உடையவனாய் அப்பருவத்தை அடைகிறான். இதனால்தான் நாம் தொலைக்காட்சியை நேரத்தை கொல்லும் இரத்தக் காட்டேறி என வர்ணிக்கிறோம்.

18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் திரைப்படங்கள் வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் இன்னும் 10,000 வன்முறைகளையும் ஒரு சராசரி குழந்தை பார்த்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை திரைப்படங்களில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படங்களை சிறுவர்கள் எவ்வித உணர்வும் இல்லாமல் பார்ப்பதில்லை என்றும் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், திரைப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திரைப்படங்களுக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் திரைப்படங்கள் போதைப் பொருள்களை விட கொடூரமானது. அது மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ள வைத்து தனி மனிதரையும், நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது. திரைப்படங்கள் வளர்ந்து வரும் தலைமுறையின் மனநிலை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமாக திரைப்படங்கள் பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவுகூட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை.

   பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் திரைப்படங்கள் விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் திரைப்படங்களில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.

பசுமரத்து ஆணி போல திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக்க பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் இவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அபாயத்தை உணராமல் செயற்கைக் கோள் அலைவரிசைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி மனித வாழ்வின் நிலையை பெரும் அபாயத்திற்கு அழைத்துச் செல்கிறது. (நன்றி : ஒற்றுமை, ஜுன்-2001)

தமிழன் ஒரு பானை சொத்திற்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் இதை சாட்சிகள் போதும் என்று நினைக்கிறன்!

இந்த அளவிற்கு இளைஞர்களை சிறுவர்களையும் சீர்கெடுக்கும் திரைப்படங்களை எப்படி சரி என்று கூற முடியும்?

உங்களுடைய முதலாவது கேள்விக்கு இந்த பதிலே போதுமானது என்று கருதுகிறேன்!

Quote
படமே பார்க்காம அது சரி இல்லை அதால இளைஞர்கள் கெட்டுப் போராங்க என்று எப்படி சொல்லுறீங்க யூசுப்?
முதலில் உங்களுக்கு இந்த விவாதத்துல பங்கேற்கும் அடிப்படை தகுதியே இல்ல.ஒன்றை பார்க்காம‌ல் அனுப‌விக்காம‌ல் அது ச‌ரியில்லை என்று எப்ப‌டி உங்களால‌ சொல்ல‌ முடியும்?

தமிழன் நான் இது வரை படமே பார்த்தது இல்லை என்று கூற வில்லையே நீங்க நான் கூறியதை சரியாக பாருங்கள்!

எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன்.

இந்த இடத்தில் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து நிறுத்தி விட்டேன் என்று தான் கூறி இருக்கிறேன் திரைப்படமே பார்கவில்லை என்று கூற வில்லை தமிழன்!

என்னுடைய கல்லூரி பருவத்தின் மூன்றாம் ஆண்டு வரை நான் திரைப்படங்கள் பார்த்துள்ளேன். இந்த ஒன்று போதாதா நான் இதை பற்றி விவாதிக்க?

நீங்கள் சொல்வதை பார்த்தல் விபச்சாரம் செய்தவன் தான் விபச்சராம் பற்றி பேச வேண்டும் எனபது போலவும் திருடியவன் தான் திருட்டை பற்றி பேச வேண்டும் என்பதை போலவும் அல்லவே உள்ளது இது எப்படி சரியான உதரணாமாக ஆகா முடியும்?

Quote
1) தெய்வ‌த்திரும‌க‌ன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடிய‌ட்ஸ்
5) வாகை சூட‌ வா
6) ச‌துர‌ங்க‌ம்
8)பேராண்மை
9)சிங்க‌ம்

நீங்கள் சொல்லி இருக்க கூடிய படங்களை பார்த்தால் வியப்பாக உள்ளது!

இந்த படங்களில் எல்லாம் ஆபாச நடனங்கள் இல்லை என்று சொல்ல வருகிறீர்கள? அல்லது அது கொஞ்ச நேரம் தானே வருகிறது அதனால் ஒன்றும் இல்லை என்று சொல்ல வருகிறீர்கள?

அப்படி நீங்கள் அதை சரி கண்டால் அந்த நடிகைகளை அரைகுறை ஆடையோடு பார்ப்பது கூடும் என்றால் நாம் நம் சகோதரிகளை அப்படி பார்ப்பது போல் பார்போமா? பார்க்கத்தான் நினைப்போமா? அல்லது மற்றவன் தவறான எண்ணத்தோடு பார்க்கத்தான் விட்டு விடுவோமா?

அப்படி என்றால் நம் சகோதரிகளுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?

இதுதான் நீங்கள் கூறும் பொழுதுபோக்கா?

இதே போன்று நமது சகோதரிகளை மற்றவன் பொழுதுபோக்கிற்காக பார்கிறேன் என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?

இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? இப்படி இளைஞர்களை வழிகெடுக்க கூடிய ஊடகத்தை எப்படி சரி என்று கூற முடியும்?

ஒரு பெண்ணை எப்படி கவரலாம் என்று சினிமாவில் கட்டுவதை பார்த்து எத்தனை இளைஞர்கள் இதை செய்கிறார்கள் இதெல்லாம் உங்களுக்கு தெரிய வில்லை என்றால் நீங்கள் மிக குறிகிய வட்டத்திற்குள் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை தமிழன்.

இதற்க்கு மேலும் உதரணங்களை கூற முடியும் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறன்.
 
ஆகவே இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கூறி உங்கள் பதிலை எதிர்பார்த்து நிறைவு செய்கிறேன்!

மீண்டும் விவாதத்தை தொடர்வோம் இறைவன் நாடினால்!

« Last Edit: November 19, 2011, 03:25:42 PM by Yousuf »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இந்த விவாதத்தில் என் கருத்துகளை கூற விரும்புகிறேன்  :)

நான் ஆரம்பத்தில் சொன்னது போல இன்றைய சினிமா நிச்சயம் நம் இளைய சமுதாயத்தை கெடுத்து கொண்டு தான் இருக்கிறது.

இல்லை என்று சொல்லுவது சரியானதாக எனக்கு தோன்ற வில்லை...

நல்ல படம் என்று உதாரண காட்டிய படங்களில் எல்லாம் மசாலா  கலவை இல்லாத படம் என்று சொல்ல முடியுமா?? அன்றாட  வாழ்க்கைக்கு ஒத்து வராத காட்சிகளை வைத்து படம் எடுப்பதே தவறு அதிலும் கதாநாயகன் நான்கு பேரு கூட சண்டை போட்டு அநியாயத்தை  தட்டி கேட்பதால் அந்த படம் நல்லது என்று ஆகிவிடுமா??
வன்முறை வேண்டாம் என்று சொல்லும் நாம் சினிமாவில் வன்முறையை ரசிப்பதே தவறு தானே..

ஆடை குறைப்பு, ஆபாசம் ,  வக்கிர காட்சிகள், குற்றத்தை செய்ய தூண்டும் வகையில் வரும் எல்லா காட்சிகளும் இல்லாத ஒரு படம் இருந்தால் அது நிச்சயம் 100  நாள் ஓடி இருக்க வாய்ப்பே இல்லை. பாரதியார் , காமராஜர், பெரியார்.. காஞ்சிபுரம், இப்படி வந்த மிக சிறந்த படங்களை எதனை பேரு திரை அரங்கத்தில் சென்று பார்த்து இருப்பாங்க??
தேசிய விருது கிடைக்கும் போது தான் சிலருக்கு இந்த படங்களை பற்றியே தெரிந்து இருக்கும்..நல்ல தரமான படங்களின் ஆயுள் நாள் என்று சொல்லபோனால 50 நாள் கூட வராது ..திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்று தொலை காட்சியில் போட்டால் வேற வழி இல்லாமல் பார்த்தல் மட்டுமே உண்டு.

ஒரு படத்தின்   நகைச்சுவை காட்சி:-

Tea கடையில் வேலை செய்யும் ஒரு சிறுவன் ஆபாச போஸ்டர்-அ கருப்பு மையிட்டு அழிப்பது போல காண்பித்து அருகில் இருக்கும் இளைஞர் . அந்த சிறுவனை பார்த்து நீ ஒரு குட்டி விவேகனந்தர்....அப்டின்னு பாராட்டுவாங்க...உடனே அந்த பையன்,,, சொல்லுவான் நேத்து தான் இந்த படம் பார்த்தேன் ஒரு bit  சீன் கூட இல்லை..என்னை போல யாரும் போஸ்டர் பார்த்து ஏமாற கூடாதுன்னு தான் அதை அழிகிறேனு என்று சொல்லுவான்....

இதை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்காங்களா???

இது வேதனை பட வேண்டிய விஷயம் இல்லையா??

படிக்கிற பையன tea கடையில வேலை செய்வது போல காண்பித்து அவன் வயதுக்கு தேவை இல்லாத காட்சியை நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தை புகுத்தி அதை எல்லோரும் அன்றாடம்  பார்க்கும் தொலைகாட்சியில்  அடிகடி ஒளிபரப்பி வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளும் கெட்டு போற  வகையில் தானே  இந்த சினிமா நகைச்சுவை காட்சிகள் இருகின்றது

இன்னொரு படத்தில் பெண் வேடம் போட்டு ஒரு நடிகர் குளத்தில் குளிக்க அவரை பலவந்தமாக கெடுக்க முயலுவது போல காட்சி இருக்கும்..
அதை சொல்லவே அருவருப்பாக இருக்கு....இவை எல்லாம் நகைச்சுவைகளா??

இன்றைய மக்களை மனமாற்றம் ஆகிட்டாங்க நல்லா படத்தை தான் ரசிபாங்கனு சொல்லுறீங்க இத்தகைய காட்சிகளை எல்லாம் இந்த மக்களும் ரசித்தவர்கள தானே...

எல்லா மக்களிடமும் நல்ல மனமாற்றம் வந்ததை சொல்வதை வாதமாக  கொண்டால்...கிராமப்புறத்து மக்களுக்கு இன்றைய படங்கள் ஆன ரோபோ, ஹேராம் இவைகள் எல்லாம் புரிய வாய்ப்பே  இல்லை...

முத்த காட்சி என்றால் அபோது எல்லாம் கிளிகளும் பூக்களும் தான் காண்பிபாங்க... இப்பொது குடும்பத்தோடு படம் பார்க்க சென்றால் நாயகன் நாயகி வரும் காட்சிகளில் எப்போது என்ன நடக்கும்னு தெரியாம தான் படம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம்...

வன்முறை காட்சிகளை பார்த்து, கொள்ளை அடிக்கும் காட்சிகளை பார்த்து. குற்றம் செய்தேன் என்று சொன்னா எத்தனையோ படிப்பு அறிவு இல்லாத குற்றவாளிகளை உருவாக்கி தந்த இன்றைய சினிமா போற்ற பட வேண்டியதா???

சினிமா சீர் அழிக்கவில்லை என்று சொல்லுபவர்களால் இத்தகைய படங்களை குடும்பத்தோடு சென்று பார்த்து வர முடியுமா??

பாய்ஸ் என்ற ஒரு படத்தை குடும்ப படம் என்று சொல்லலாமா??
 
அம்மா அப்பா இல்லாத அப்போ விலைமாதுவை வீட்டுக்கு கூட்டிட்டு வர போல காட்சி இருக்கும் இது சரியான விஷயமோ?? இந்த காட்சியை ஒரு அப்பாவும் பையனும் சேர்ந்து பார்க்க முடியுமா??

நல்ல விஷயங்கள் மக்களை சென்றடைவது என்பது அரிதான விஷயம் இல்லை. மீடியா என்பது காட்டு தீ போன்றது,, நல்ல விடயமாக இருந்தாலும்
கெட்ட விடயங்களும் சுலபமாக பற்றிக் கொள்ளும்.

இன்றைய இளைய சமுதாயம் கெட்டு போவதற்கு சினிமாவும் ஒரு காரணம் தான்.. :) :)
« Last Edit: November 19, 2011, 06:53:01 PM by ShRuThi »

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.

யூசுப் உங்கள் வாதம் நன்று .... அனால் திரை பட பாடல் பாடுவதில் தவறு இருகின்றதா ? ... காலத்துக்கு ஏற்ற மாற்றம் வேண்டும் சினிமா பாடல்களை படுவதில் என்ன தவறு இருக்க முடியும் .... ?

Quote
"இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.
(நன்றி : குமுதம்

ஏன் திரைப்படங்களில் மட்டும் தன அப்படி பார்த்து கேட்டு போகின்றார்கள...பழைய வரலாற்று நாடகங்களில் கூட மேடையில் வாழ் சண்டை போட்டார்களே ... அப்போது யாரும் கத்தியை தொக்கவில்லையா ?

Quote
பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் திரைப்படங்கள் விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் திரைப்படங்களில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.

இதை காட்டுவதன் மூலம் குடும்பம்  என்றால் என்ன ... அது எப்படி இருக்க வேண்டும் தவறான நடத்தைகளால் ஏற்படும் தாகங்கள் என்ன என்பதை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது ....  மைக் வச்சு  சொல்லி பாருங்க யாருமே அதை கேட்க மாடார்கள் ...அனால் இப்படி சொனால் புரிந்து கொள்வது எளிது ....

Quote
அப்படி என்றால் நம் சகோதரிகளுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?

இதுதான் நீங்கள் கூறும் பொழுதுபோக்கா?

இதே போன்று நமது சகோதரிகளை மற்றவன் பொழுதுபோக்கிற்காக பார்கிறேன் என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?

இங்கே எதற்கு சகோதரிகளை இழுக்க வேண்டும் ...அங்கே நடிபவர்களை யாரும் கட்டாய படுத்தி நடிக்க வைக்க வில்லை அவர்கள் உடன்பட்டுத்தான் நடிகின்றார்கள் ... அவர்களை எப்டி ஒப்பிடலாம் நீங்கள் யோசுப் ...

Quote
இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?

திரைப்படம் தோன்றுவதற்கு முனரே மதுபானமும் புகயிலையும் வந்துவிட்டது .... திரைப்படங்கள்தான் உற்பத்தியாக்கி விநியோகம் செய்ததாக கூறுவர்கள் போல் இருக்கே ...

திரை படம் சமூகத்தில நடப்பதைத்தான் வெளி கொண்டு வருது அப்டி பார்த்தல் சமுகம் கெட்டு போனதைத்தான் திரைப்படம் சுட்டி காட்டுகின்றது ....

திரைப்படம் என்று ஒன்று வருவதற்கு முனரே...  திருவிழாக்களில் கவர்ச்சி ஆடை அணிந்து யாரும் ஆடவில்லையா ... இல்லை 4 பெண்டிரை முகரவில்லையா .... இருந்ததைத்தான் வெளி கொண்டு வந்து அதன் விகாரத்தை எடுத்து காட்டுகிறது திரைப்படம் ....இல்லாததை கொண்டு வரவில்லை புதிதாக ஒன்றை உருவாகவும் இல்லை ...
-------------------------------------------------------------------------------

Quote
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது

Quote
Remo

cinema-vum oru Kaaranam endru than sollalam...

cinema matume kaaranam illai enbathu enoda karuthu

Quote
கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.

Quote
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே

என்ன பார்கிறீங்க ஸ்ருதி இதெல்லாம் யார் சொனது அப்டினா ....? சந்தேகம் வேண்டாம் முந்தய பதிவுகளில் நீங்கள் சொனதுதான் ... ஆனா இப்போ ...

Quote
இன்றைய இளைய சமுதாயம் கெட்டு போவதற்கு சினிமாவும் ஒரு காரணம் தான்..

அந்த பதிவுகள் பதியப் படும்போது உங்களுக்கு திரைப்படங்கள் கெடுக்கவில்லை அப்டி என்று தோன்றி இருக்கு ....இப்போ இப்டி சொல்றிங்க .... முதல்ல தெளிவு படுதோங்கணும் உங்கள்ளுக்கு தோன்றாத சொல்லவேணும் ..... முன்னுக்கு பின் முரணான கருத்தை சொல்றிங்க ...  உங்களுக்கு தெளிவு இல்லை இந்த கருத்தில் .... முதலில் தெளிவு படுத்திகொண்டு பதிவினை மேற்கொள்வது நன்றாக இருக்கும்

Quote
வன்முறை காட்சிகளை பார்த்து, கொள்ளை அடிக்கும் காட்சிகளை பார்த்து. குற்றம் செய்தேன் என்று சொன்னா எத்தனையோ படிப்பு அறிவு இல்லாத குற்றவாளிகளை உருவாக்கி தந்த இன்றைய சினிமா போற்ற பட வேண்டியதா???

வன்முறை வன்முறை என்று சொல்கின்றீர்களே ... நம் பழைய தலைவர்கள் அவர்கள் சமந்தமான கதைகளில் வன்முறை நடந்த காட்சிகள் இணைக்கப் பட்ட போது அந்த கட்சிகளை அகற்ற சொல்லி யாராவது குரல் கொடுத்திங்களா ..?   வன்முறை நடை பெற்றது என்று சொல்றதுக்கும் அதன் கட்சி பதிவை பார்பதற்கும் எவளவு வித்தியாசம் இருகிறது ....  வன்முறை என்பது இப்டி கொடூரமாய இருக்கும் அதற்கு எதிராக குரல் கொடுக்கணும்னு தோணும் அபோதுதான் ....வெறும் வார்த்தைகள் பதிப்பை ஏற்படுத்துவது குறைவு சமுகத்தில் .....

Quote
முத்த காட்சி என்றால் அபோது எல்லாம் கிளிகளும் பூக்களும் தான் காண்பிபாங்க... இப்பொது குடும்பத்தோடு படம் பார்க்க சென்றால் நாயகன் நாயகி வரும் காட்சிகளில் எப்போது என்ன நடக்கும்னு தெரியாம தான் படம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம்...

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா ..? நம் சமுக அமைப்பு .... வெளி நாடுகளில் கற்பழிப்பு வான் முறைகள் நம் நாட்டை விட குறைவு  ஏன் தெரியுமா .... அங்க எல்லாம் முத்தம் என்பது உணர்ச்சி வெளிபாடு ... எதையும் அடக்கி வைக்கும் போதுதான் அது வெளிப்படும் போது பிரளயமாகும் என்பது அவர்கள் கருத்து ..... இதுல எவளவு உண்மை இருக்கிறது என்பது நாமக்கு தெரியும் ....

பாலியல் கல்வி என்பது முக்கியம் ....  அந்த அறிவில்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளை காடினால் அதை ஏன் நீங்கள் செக்ஸ் என்ற கோணத்தில் பார்கிறிங்க .... ஒரு அறிவு .... விலை மாது கிட்ட போறதால வர கூடிய விளைவுகளை காட்ட்வதாக  எடுக்கலாமே ...
செக்ஸ் சமந்தமான கட்சிகளுக்கு அப்புறம் வரக்கூடிய கதை கருத்து என்ன என்றதையும் பார்க்கணும் .... நாம் ஒன்றும் பழைய கர்க்கலத்தில் இல்லை 21m  நூடண்டில இருக்கிறம் ... அதை கருத்தில வச்சு பார்க்கலாம் .

Quote
எல்லா மக்களிடமும் நல்ல மனமாற்றம் வந்ததை சொல்வதை வாதமாக  கொண்டால்...கிராமப்புறத்து மக்களுக்கு இன்றைய படங்கள் ஆன ரோபோ, ஹேராம் இவைகள் எல்லாம் புரிய வாய்ப்பே  இல்லை...

முதல் முதல் வந்தது ஊமை படம்தான் .. அதையே புரிந்து கொண்ட அந்தகாலத்து மக்கள் .... இபோ வந்த இந்த படத்தி புரிந்து கொள்ளவில்லை என்று எப்டி சொல்றிங்க ...?  இபோவும் சொல்றம் திரை படம் பொழுது போக்கு என்று ....அதை பார்த்ததும் கிராமத்து மகளே சொல்வார்கள் இயந்திரம் எல்லாம் வருது சின்ன பசங்க பார்குற படம் எண்டு .... அவர்கள் தெளிவா இருக்கிறார்கள் ... நீங்கள் தன தெளிவில்லை ... எல்லா திரைப்படமும் கருத்தை சொல்ல வேண்டும் என்று எப்டி எதிர் பார்க்கலாம் நீங்கள் ...?

Quote
நல்ல படம் என்று உதாரண காட்டிய படங்களில் எல்லாம் மசாலா  கலவை இல்லாத படம் என்று சொல்ல முடியுமா?? அன்றாட  வாழ்க்கைக்கு ஒத்து வராத காட்சிகளை வைத்து படம் எடுப்பதே தவறு அதிலும் கதாநாயகன் நான்கு பேரு கூட சண்டை போட்டு அநியாயத்தை  தட்டி கேட்பதால் அந்த படம் நல்லது என்று ஆகிவிடுமா??

ஆரம்பத்துல சோறு மட்டும் சாப்ட மனிதன் அப்புறம் கறி வகை வகையா சமைத்து சுவைக்கு ஏற்ற படி சாப்டலையா .... அந்த உணவிலயும்தன் கொழுப்பு இருக்கு நச்சு தன்மை இருக்கு அது இருக்கு இது இருக்குனு சொன்னாங்க ... யாரவது அத கருத்தில வச்சு பத்திய சாபாட  கேழ்வரகும் வெங்காயமும்  சாப்டுறேங்க .... ? இல்லை தானே .....  அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல  படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ... இது திரை படங்களின் தப்பா ... இல்லை வழி வழியாய் வந்த நம் பரம்பரை தப்பா ...? அதுதான் கதா நாயகன் அப்டி 4 பேரோட சண்டை போடுறான் என்றது தெரிதுதனே ... அது உண்மை இல்லை வெறும் காட்சி பதிவு பொழுது போக்குனு ..... அப்புறம் எதற்கு வீண் வாதம் ....

சிறுவர்களை கெடுப்பதாக சொல்றதவிட்டு .... சிருவர்களுகேன்று அனுமதிக்க பட்ட திரைப்படங்கள் பார்க்க அவங்களுக்கு அனுமதி வழங்கலாமே .... இந்த சிறுவர்களை கூடி போறது யார் தப்பு ....?  நீங்க பார்க்கணும் என்றதுக்காக பிள்ளைகளையும் கூட கூட்டி போய் அவர்கள் கெட்டு போகின்றார்கள் என்று நீங்கள் குத்தம் சொல்வது எந்த வகையில் சரி ....?  சிறுவன் தப்பு செய்வதாக காட்ட படுகிறதாக சொல்றிங்க .... அது எதற்காக அப்டின்னு பார்க்குரதிலையா ....?

இப்போ நமீதா அபாசமா நடிச்சத நீங்க நினைகுரிங்க ..... அந்த படத்தி நீங்க போய் பார்கிறிங்க ..... அப்போ தெரிது... அப்புறம் மற்றைய நமீதா நடித்த படத்துக்கு நீங்கள் பிள்ளையை வீடில் விட்டு விட்டா போறிங்க .... இலையே .....  இது யார் குற்றம் ... படம் எடுகுரவங்க குத்தமா இல்ல பிழைகளை கூட்டி போறவங்க குற்றமா ..?

பாலோடு நீரும் கலந்து இருக்கும்போது ....நீரை தவிர்த்து பாலை உண்ணும் அன்ன பறவை போல் ..... கேட்டதை தவிர்த்து நல்ல விடயங்களை நாம் எடுத்துகொண்டு அதை நம் சந்ததியினற்கும் பழக்கலாம் ....
« Last Edit: November 20, 2011, 01:08:02 AM by Global Angel »
                    
Offline thamilan

youuf machi naan ungal ella kelvigalukum latea pathil soluren :) :)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ரோஸ் நீங்க சொல்றது என்ன எனக்கு இந்த தலைப்பு புரியவில்லை என்றா??

நான் அப்பவும் சொல்றேன் இப்பவும் சொல்றேன் சினிமாவும் காரணம் தான்.
சினிமாவ பார்த்து கேட்டு போ என்று சொல்லல என்று சொன்னேன் ஆனால் உங்கள் எலோரிடைய வாதமும் சினிமா வந்து கெட்டு போக கூடியதாக இல்லை என்று இருக்கும் போது நான் முன்வைக்க நினைத்த கருத்துகளை கூற வேண்டும் தானே...
சினிமா பொழுதுபோக்கு தான்....ஆனால் இப்பொது யார் அதை பொழுது போக்காக நினைக்குறாங்க....உங்கள் கருத்துக்கு ஒத்து சொல்ல வேண்டும் என்று எல்லாம் என்னால் சொல்ல முடியாது. சினிமாவும் ஒரு காரணமே ...ஒரு வாதம் பாதை மாறி செல்லும் போதுதான் நமக்கே தெளிவு வரும்....நான் இந்த தலைப்பை புரிந்து கொண்டுதான் பதிவை தொடர வந்தேன், தான் பேசுவது தான் சரி என்ற மனப்பான்மை வாதத்திற்கு ஒத்து வராது..ஒரு வேளை நீங்கள் சொல்லுவது போல எனக்கு தெளிவு இல்லாமல் இருந்தாலும் செல்வன் அவர்கள் கருத்து மட்டுமே நிஜம் ....அவர் தெள்ள தெளிவாக கூறி நீங்கள் நினைப்பது போல எனக்கும் கூட தெளிவை கொடுத்ததாக நினைத்து சந்தோசம் அடைகிறேன்....வாழ்த்துக்கள் செல்வன் உங்கள் கருத்துகள் மிக மிக பொருத்தம் இந்த தலைப்புக்கு ஏற்ற கருத்துகள்

இருபதாம் நூற்றாண்டில் இருந்தாலும் நாம நம்ம பெற்றவர்கள் முன்னுக்கு யாரையும் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முடியாது...
எந்த நூற்றாண்டில் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்துக்கு ஏற்றார் போல தான் இருக்க முடியும்...ஒரு வேளை வெளிநாட்டு கலாச்சார பங்கோடு நீங்கள் சொலுறீங்கள் போல...அது எனக்கு  புரிய வாய்ப்பில்லை தான்...

ரோஸ் பாய்ஸ் படம் செக்ஸ் கல்விக்காக எடுதபடமா?? விலைமாதுவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இப்படி இருந்த இப்படி நோய் வரும்னு படம் எடுத்த அதை பார்த்து நாம தெரிஞ்சுக்கலாம் அது தவறு இல்லைன்னு சொல்றீங்களா??

சிறுவர்களுக்கான அனுமதிக்க பட்ட படங்களையா தினமும் நகைச்சுவை சேனலில் போட்டு இருக்காங்க??? என்ன ரோஸ் இது எல்லாம்...சினிமா வ பார்ப்பதை வேண்டுமானால் தேர்வு செய்யலாம்....இப்படியான நிகழுவுகள் தினமும் எல்லா சிறுவர்களும் வீட்டில் காண்பது தான்...அடுத்து சொளுவீங்க சேனல் மாத்திருங்க என்று :த

நமீதா நடிச்சு இருக்கா என்று படம் பார்த்து கெட்டு போறவங்களுக்கு உங்கள் வாதம் சரி வரும் என்று நினைக்கின்றேன். என் வாதம் நமீதா பற்றி அல்ல...நமீதா படத்துக்கு பிள்ளைகளை கூட்டி செல்லும் அறிவிலிகளுக்கும் சொல்லுங்கள்,,,

எதனை நூற்றாண்டை கடந்தாலும் ஒரு சில விஷயங்கள் மறைமுகமாக இருபதுதான் நலம். அதை தான் அந்தரங்கம் தாம்பத்யம் என்று சொல்கிறோம்...வெளிபடைய இருப்பதால் எல்லாம் சரி ஆகும் என்றால் அதை எல்லாம் அறிந்து கொள்ள நாம் சினிமா அரங்கத்தினுள் தான் குடும்பம் நடத்த வேண்டும்....செக்ஸ் கல்வி சொல்லி தரான்,, பின்விளைவுகள் சொல்லி தாரன் என்று... :o :o

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சுருதி நீங்க முதல்ல சொனதுக்கு இபோ சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு .... அத நீங்க முதல்ல சொல்லி இருக்கனும் செல்வன் உங்கள் கண்ணை திறந்தார் எண்டு ... இபோ நான் கேட்டதும் நீங்க சொல்லி இருகிங்க ....

இத்தன நாம சொல்றம் சிறுவர்களை எதுக்கு கூட்டிட்டு போறிங்கனு ..... அவர்களுகேண்டு ஒதுக்கப்பட்ட பிலிம்  கூட்டி போங்க....
ஸ்ருதி தாம்பத்ய உறவை காட்ட வில்லையே ... நீங்கள் வேற படத்தை பத்தி பேசுறேன்னு நினைக்குறேன் .....நான் அந்த படங்களை மையமாக வைத்து கருத்தி சொல்ல வில்லை .... சுருதி நீங்க 24  மணி நேரம் சேலைய அணிரிங்க .... வேலை தலத்தில் ஆண்களுடன் தலை நிமிர்ந்து பெசுவதிலையா .... சிறிது பெசுவதிலைய ..... இல்லை சில விஷயங்கள் விவாதிக்குரதிலையா ...

நான் ஒன்றும் பெற்றவர் முன் கட்டி பிடிகுறது குற்றம் இல்லை என்று சொல்லவிலையே ..... குற்றம்  ... இல்லை ... இரண்டுக்கும் நடுவில் ஒரு நிலைமை இருக்கிறது ... சமயோசிதம்  அதன்படி நடக்கலாம் ..

நகைச்சுவை பார்க்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு தேவை இருக்கா ....?   அப்படி பார்க்க வேண்டும் எண்டால்... சிறுவர் நகை சுவை நிகழ்வுகள் நிறைய இருக்குதே .... உங்கள் தேவைக்கு அவர்களை டிவி முன்னால் உகரத்தி வைத்தது யார் குற்றம் ...?

பாய்ஸ் படத்துல விலை மதுகிட போனதா கேள்விபட்டு அப்புறம் நடந்தவை என்னனு பற்களைய சுருதி ... நங்கள் அதையும் பார்க்க சொல்லிதானே சொல்றம்...

நாகல் சொல்லுவது எல்லாம் சினிமா ஒன்றும் போதி மரம் இல்லை ஞானத்தை மட்டும் கொடுக்க ... அது சாதாரண பொழுது போக்கு .. அதை பொழுது போக்கு அம்சமா பாருங்கள்  குறை இல்லாமல் எதுவும் இல்லை ... அதை தவிர்த்து நல்ல கருத்தி எடுக்கலாம் ....இதுதான் எனுடைய வாதம் .

கட்டி பிடிகுரத பார்த்தா அதையே பார்கமா ........ அதை பார்த்தா அவங்க குடும்பத்துல என்ன நடக்குது என்றத பாருங்க ... அத்தான் சொல்றம்
ஒரு கட்சிக்கு பிறகு வரக்கூடிய நிகழ்வுகளை பாருங்க .... பகுத்தறிந்து நடந்துகொளுங்க
  ;)
                    
Offline Yousuf

Quote
யூசுப் உங்கள் வாதம் நன்று .... அனால் திரை பட பாடல் பாடுவதில் தவறு இருகின்றதா ? ... காலத்துக்கு ஏற்ற மாற்றம் வேண்டும் சினிமா பாடல்களை படுவதில் என்ன தவறு இருக்க முடியும் .... ?

நான் சினிமா பாடல்கள் பாடுவது தவறு என்றும் கூற வில்லை சரி என்று கூற வில்லை. எப்படி பட்ட பாடல்களை இன்று பிள்ளைகள் பாடிக்கொண்டு இருகிறார்கள் என்று பாருங்கள் ஏஞ்செல்.  கல்யாண்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு ஓடிபோலாமா இதெல்லாம் சிறுவர்கள் பாட கூடிய பாடலா ஏஞ்செல் இப்படி பட்ட பாடல்களை தான் நீங்க நியாய படுத்துகிறீர்களா? இதை விட கேவலமான பாடல்களையும் உதரணமாக காட்ட முடியும் இதில் இருந்து சிறுவர்களுக்கு இப்படி பட்ட இழிசெயலை தானே சினிமா கற்று கொடுகிறது. இன்று பார்க்கிறோம் பள்ளி பருவத்திலேயே எப்படி பட்ட ஒழுங்கீன்கங்கள் நடக்கிறது என்பதை... இதெல்லாம் இளைய சமுதாயத்தை சீர்கெடுக்க கூடியவை இல்லையா?

Quote
ஏன் திரைப்படங்களில் மட்டும் தன அப்படி பார்த்து கேட்டு போகின்றார்கள...பழைய வரலாற்று நாடகங்களில் கூட மேடையில் வாழ் சண்டை போட்டார்களே ... அப்போது யாரும் கத்தியை தொக்கவில்லையா ?

நீங்கள் மீண்டும் தலைப்பை விட்டு வெளியே செல்கிறீர்கள் ஏஞ்செல். இங்கு கொடுக்க பட்டிருக்க கூடிய தலைப்பு சினிமா இளைஞர்களை சீர்கேடுக்கிறதா இல்லையா என்பது தானே தவிர மற்ற ஊடகங்கள் கெடுக்கிறதா இல்லையா என்பது பற்றி இல்லை தலைப்புக்கு பொருத்தாமாக பேசினால் பதில் தர நன்றாக இருக்கும் ஏஞ்செல். நீங்கள் கூறும் இந்த விடயம் பொது மன்றத்தை பார்வை இடுபவர்கள் கூட அறிந்து கொள்வார்கள் இது தலைப்புக்கு ஏற்ற கேள்வி அல்ல என்று. தலைப்பை திசை திருப்ப வேண்டாம்.

Quote
இதை காட்டுவதன் மூலம் குடும்பம்  என்றால் என்ன ... அது எப்படி இருக்க வேண்டும் தவறான நடத்தைகளால் ஏற்படும் தாகங்கள் என்ன என்பதை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது ....  மைக் வச்சு  சொல்லி பாருங்க யாருமே அதை கேட்க மாடார்கள் ...அனால் இப்படி சொனால் புரிந்து கொள்வது எளிது ....

மீண்டும் சம்பந்தமே இல்லமால் பதில் கூறுகிறீர்கள் ஏஞ்செல். குழந்தைகளுக்கு இந்த தவற கட்சிகளை கண்ம்பிப்பதன் மூலம் அவர்களுக்கு குடும்பம் என்றால் என்ன என்று விளங்கும் என்று கூறுகிறீர்களே இது மிகவும் ஒரு வேடிக்கையான பதில். எந்த குழந்தையும் இந்த கட்சிகளை பார்த்தல் அந்த காட்சிகளில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமே உள்வங்கிகொல்லுமே தவிர அது எல்லாம் குடும்பத்தில் நடக்க கூடியது தான் என்று புரிந்துகொள்ளது ஏஞ்செல். அப்படி புரிந்து கொள்ள கூடிய திறன் சிறு குழந்தைகளுக்கு கிடையாது ஏஞ்செல். நீங்கள் புரிந்து கொண்டீர்களோ என்னவோ எனக்கு தெரிய வில்லை ஏஞ்செல்.

ஒலிபெருக்கி வைத்து நல்லதை சொன்னால் கேட்காத மக்களை இந்த திரைத்துறையின் மூலம் திருத்துவதை விட்டு விட்டு மேலும் அவர்களை சிந்திக்க விடாமல் ஆபாசத்துக்கு அடிமையாக்கும் இந்த சினிமா மக்களுக்கு கருத்துக்களை ஆபாசத்தின் மூலமாகவும் இரட்டை அர்த்த வசனங்களின் மூலமாகவும் கொண்டுபோய்  சேர்க்கிறது. இது சரி என்று கூற வருகிறீர்களா? உங்களுடைய பதில் வியப்பாக உள்ளது வாசகர்கள் எது உண்மை என்பதை அவர்களே புரிந்து கொள்வார்கள்.

Quote
இங்கே எதற்கு சகோதரிகளை இழுக்க வேண்டும் ...அங்கே நடிபவர்களை யாரும் கட்டாய படுத்தி நடிக்க வைக்க வில்லை அவர்கள் உடன்பட்டுத்தான் நடிகின்றார்கள் ... அவர்களை எப்டி ஒப்பிடலாம் நீங்கள் யோசுப் ...

நடிகைகள் உடுத்துவது போன்று இன்று ஆடைகள் உடுத்தும் பெண்கள் அதிகரிப்பதற்கு காராணம் என்ன ஏஞ்செல்? சினிமாவை பார்த்து அப்படியே தான் வாழ்கையில் கொண்டுவருவது தானே இதன் விளைவு என்ன அவர்கள் இரண்டு பீஸ் ஆடைகள் உடுத்துவத்தின் மூலம் கற்பழிப்புகள் அதிகமாகிறது. இப்படி பட்ட உடைகளை மற்ற பெண்கள் பொது இடங்களில் அணியும் பொது தான் தவறுகள் ஏற்படுகிறது. இதற்க்கு ஏன் நாம் இடங்கொடுக்க வேண்டும். நம் சகோதரிகளுக்கு ஒரு நீதி மற்ற பெண்களுக்கு இந்த விடயத்தில் ஒரு நீதியா? அப்படி செய்தால் அது அநீதி.

நீங்கள் ஏற்று கொண்டாலும் எடுகொள்ள விட்டாலும் இதுத்தான் உண்மை ஏஞ்செல். சிந்திக்க கூடிய வாசகர்கள் இதையும் புரிந்து கொள்வார்கள்.

Quote
திரைப்படம் தோன்றுவதற்கு முனரே மதுபானமும் புகயிலையும் வந்துவிட்டது .... திரைப்படங்கள்தான் உற்பத்தியாக்கி விநியோகம் செய்ததாக கூறுவர்கள் போல் இருக்கே ...

இந்த புகை, மது எல்லாம் இருக்கத்தான் செய்தது இல்லை என்று நான் கூற வில்லை ஆனால் இந்த தீய பழக்கங்களை சுட்டிக்காட்டி மக்களை திருத்த வேண்டிய இந்த திரைப்பட துறையே இதை நல்ல செயல் போல் காண்பிக்கிறதே அதை தான் தவறு என்று சொல்கிறேன். இதை பார்க்க கூடிய சிறுவர்கள் கூட சினிமாவில் வரும் கதாநாயகன் புகை பிடிப்பது போல பிடிப்பதை நம் கண்களால் பார்க்கிறோம். இதை இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?

Quote
திரைப்படம் என்று ஒன்று வருவதற்கு முனரே...  திருவிழாக்களில் கவர்ச்சி ஆடை அணிந்து யாரும் ஆடவில்லையா ... இல்லை 4 பெண்டிரை முகரவில்லையா .... இருந்ததைத்தான் வெளி கொண்டு வந்து அதன் விகாரத்தை எடுத்து காட்டுகிறது திரைப்படம் ....இல்லாததை கொண்டு வரவில்லை புதிதாக ஒன்றை உருவாகவும் இல்லை

நீங்கள் மீண்டும் தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுகிறீர்கள் ஏஞ்செல். இங்கு கொடுக்க பட்டுள்ள தலைப்பு இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா? என்பது தானே தவிர மற்றவைகள் சீர் கேடுக்கதானே செய்கிறது என்பது அல்ல. அப்படி தவறு வெளியில் நடக்கிறது என்றால் அதை சுட்டி காண்பித்து இப்படி செய்வது தவறு என்று கூறக்கூடிய படமாக இருந்தால் அது பாராட்டுக்குரியதுதான். ஆனால் அதை சினிமாக்கள் செய்வதில்லையே ஏன்?

நீங்கள் கூறும் கருத்து தலைப்பிற்குள் இருக்கிறாத என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள் ஏஞ்செல் இல்லை என்றால் இந்த விவாதத்தை படிக்கும் வாசகர்கள் அதை பார்த்து கொள்வார்கள். தலைப்பை விட்டு தவறி செல்வது விவாதத்தை திசை திருப்புவது போன்றாகிவிடும்.

Quote
இதற்க்கு காரணம் என்ன தெரியுமா ..? நம் சமுக அமைப்பு .... வெளி நாடுகளில் கற்பழிப்பு வன் முறைகள் நம் நாட்டை விட குறைவு  ஏன் தெரியுமா .... அங்க எல்லாம் முத்தம் என்பது உணர்ச்சி வெளிபாடு ... எதையும் அடக்கி வைக்கும் போதுதான் அது வெளிப்படும் போது பிரளயமாகும் என்பது அவர்கள் கருத்து ..... இதுல எவளவு உண்மை இருக்கிறது என்பது நாமக்கு தெரியும் ....

நீங்கள் சொல்வதை பார்த்தால் உணர்சிகளை அடக்கி வைக்காமல் வெளிப்படுத்தி விட வேடும் என்று சொல்வது போல் இருக்கிறது ஏஞ்செல். இந்த திரைப்படங்களை எல்லாம் பார்த்து விட்டு உணர்ச்சியை ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நாடு தாங்காது.  எதையும் அடக்கி வைக்காமல் யார் வேடுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் வெளிப்படுதால் என்று சொல்வது போல் தெரிகிறது. இது அறிவார்ந்த வாதம் இல்லை. அப்படி செய்தால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு இல்லை ஏஞ்செல்.

இங்கு கற்பழிப்பு வன் முறைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் இங்குள்ள சட்ட திட்டங்களில் ஓட்டை உடைசல் உள்ளது தானே தவிர வேறு காரணம் கிடையாது. நீங்கள் சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் இந்தியாவை ஒப்பிடும் பொது இங்குள்ள கற்பழிப்பு வழக்குகளை விட  அங்கு கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 1 %  தான் காரணம் அங்கு உள்ள கடுமையான சட்ட திட்டங்கள் தான் இதன் காரணாமாக அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு கிடைகிறது. மேலும் அங்கு பெண்கள் அரை குறை அடியோடு வெளியே செல்ல முடியாது இதன் காரணமாக மற்றவர்கள் பெண்களை தவறான எண்ணத்தில் பார்க்க வைப்பும் இல்லை தவறு நடக்கவும் வாய்ப்பில்லை.

நீங்கள் குறை கூற வேண்டும் என்றால் இந்த விடயத்தில் நாட்டின் சட்டத்தை தான் குறை கூற வேண்டும் ஏஞ்செல்.

Quote
பாலியல் கல்வி என்பது முக்கியம் ....  அந்த அறிவில்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளை காடினால் அதை ஏன் நீங்கள் செக்ஸ் என்ற கோணத்தில் பார்கிறிங்க .... ஒரு அறிவு .... விலை மாது கிட்ட போறதால வர கூடிய விளைவுகளை காட்ட்வதாக  எடுக்கலாமே ...

நீங்கள் எதை பாலியல் கல்வி என்று குறிப்பிடுகிறீர்கள்? கூடமாக சேர்ந்து அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடுவது தான் பாலியல் கல்வியா?
உங்களுடைய அடுத்த பதிவில் பாலியல் கல்விக்கான வரைவிலக்கணத்தை கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

Quote
செக்ஸ் சமந்தமான கட்சிகளுக்கு அப்புறம் வரக்கூடிய கதை கருத்து என்ன என்றதையும் பார்க்கணும் .... நாம் ஒன்றும் பழைய கர்க்கலத்தில் இல்லை 21m  நூடண்டில இருக்கிறம் ... அதை கருத்தில வச்சு பார்க்கலாம் .

செக்ஸ் காட்சிகளுக்கு பின்னால் தற்பொழுது வரக்கூடிய படங்களில் என்ன கருத்து இருக்கிறது ஏஞ்செல். அதை கூடாது என்று சொல்வாதாக தெரிய வில்லையே மாறாக எப்படி ஒரு பெண்ணை ஏமாற்றலாம் எப்படி தவறு செய்யலாம் என்று காண்பிப்பதாக அல்லவா தெரிகிறது. இது தான் நீங்கள் சொல்லும் பாலியல் கல்வியோ?

Quote
முதல் முதல் வந்தது ஊமை படம்தான் .. அதையே புரிந்து கொண்ட அந்தகாலத்து மக்கள் .... இபோ வந்த இந்த படத்தி புரிந்து கொள்ளவில்லை என்று எப்டி சொல்றிங்க ...?

நன்றாக புரிந்து கொள்கிறார்கள் ஏஞ்செல் எப்படி தவறு செய்வதை எளிமையாக கற்று கொள்வது என்பதை எளிமையாக கற்று கொள்கிறார்கள்!
மன்மதன் வல்லவன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இதற்க்கு உதாரணம்.

இந்த உதாரணம்  போத வில்லை என்றால் அடுத்த பதிவில் இன்னும் அதிகாமாக உதாரணம் தருகிறேன்.

Quote
அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல  படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ...

நீங்கள் சொல்வது விபரீதமாக உள்ளது ஏஞ்செல் இன்று இதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவர்கள் நாளை ஆடை அணியாமல் நடித்தாலும் தவறில்லை என்றால் அதையும் நீங்கள் தப்பில்லை என்று கூறுவீர்கள் போல. இது மிக பெரிய விபரீதமான பதில் ஏஞ்செல். ஒரு கருத்தை சொல்வதற்கும் முன் யோசித்து சொல்லுங்கள் ஏஞ்செல்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் இத்தனை பதில்களும் கேள்விகளும் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறன் ஏஞ்செல். அடுத்து உங்களது பதிவை தலைப்புக்கு உள்ளே தர்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்

மீண்டும் அடுத்த பதிவில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் இறைவன் நாடினால்!!!
« Last Edit: November 20, 2011, 11:11:08 AM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல  படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ...
நீங்கள் சொல்வது விபரீதமாக உள்ளது ஏஞ்செல் இன்று இதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவர்கள் நாளை ஆடை அணியாமல் நடித்தாலும் தவறில்லை என்றால் அதையும் நீங்கள் தப்பில்லை என்று கூறுவீர்கள் போல. இது மிக பெரிய விபரீதமான பதில் ஏஞ்செல். ஒரு கருத்தை சொல்வதற்கும் முன் யோசித்து சொல்லுங்கள் ஏஞ்செல்.

யூசுப்  உங்கள் பார்வையில் நிறைய தவறு இருக்கிறது ஒரு விடயம் கூடாது நல்லது என்ற திற்கும் இடையில் இரண்டும் கலந்து ஒன்று இருக்கிறது அந்த
கருத்தை நீங்கள் உணர மாட்டேன்  என்று இருகின்றீர்கள் .... நான் ஒன்றும் திரைப்படம் எல்லாம் போதி மரம் என்று சொல்ல விலையே வடிவ்வாக ப்ருங்கள்  நன்மை
 தீமை
கலந்து இருக்கிறது  .... நாம்தான் பகுத்தறிய வேண்டும் ..... குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள். 

நாம் எதை பார்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம் .... நல்லதை பாருங்கள் நல்லவராக இருபிர்கள் ... திரைப்படங்களில் நல்லதை மட்டும் பாருங்கள் நல்லதை கற்றுக்கொள்வீர்கள் ..

நவ நாகரீகம் மிகுந்து காணப்படும் வெளிநாட்டு தேசங்களில் கூட ஆடை இல்லாத பற்றி சிந்தை கொள்வதில்லை ... நீங்கள் ஏன் ஆடை இலாததை பற்றி அதிகமாக சிந்திகிண்றீர்கள்  நீங்கள் அதை எதிர் பார்கின்றீர்களா என்ன ?..... அப்படி கேவலமாக நம் திரைப்படம் அமையாது ....  இபவும் சொல்கிறேன் சிறுவர்களை திரை படத்திற்கு அழைத்து செல்வது பெற்றவர்கள் தவறு .....

யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு  காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....

இங்கே திரைப்படம் கெடுக்கின்றது என்று வாதிடுபவர்கள் அவ்வாறு சொலிக்க்கொண்டே அதை பார்வை இடுகின்றார்கள் ... அப்படி பார்வை இடுவதை தவிர்த்திருந்தால் திரை படங்களில் வரக்கூடிய ஆபாச கட்சிகளையும் ஆடை குறைபுகளையும் என்றோ கைவிட்டிருபார்கள் ....

விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...
யோசுப் சரி அப்படி நீங்கள் ஆபாச காட்சிகளின் பின் கதி ஏதும் இல்லை என்று கூற கூடிய படங்களை சொல்ல முடியுமா ...`

சினிமா சமுகத்தை தழுவித்தான் எடுக்க படுகிறது ... எனவே சமுகத்தை சுட்டி காட்டி பேசாமல் வேற எதை சுட்டி காட்டி பேச முடியும் ... சும்மா விவாதத்துக்கு சமந்தம் இல்லாமல் நான் பேசுவதை  நிறுத்தி விட்டு முதல் நான் சொன்ன கருத்துகளை ஊன்றி கனவித்து உணர முயற்சி செய்யுங்கள் ... சிறுவர் வயது வந்தோர் எல்லாம் சமுகம் தானே ... அதை நான் சுட்டி காட்டுவதில் என்ன தப்பு ... சமுகத்தில் நடப்பதைத்தான் சினிமா காட்டுகிறது அதன் விகாரம் உங்களை அதிர்சிக்கு உள்ளாகிறது ..... எனினும் அவை எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற ஒரு நிகழ்வுதானே ....

திரை படங்கள் இல்ல விட்டால் கட்ட பொம்மன் . பாரதியார் ,, பெரியார் ... போன்ற நம் முன்னோர் வீர தீர வரலாறு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் .... இல்லை எத்தை பேருக்கு புரிந்திருக்கும் ...?

இன்று ஏழாம் அறிவு ஒன்றுதான் ....போதி தர்மன் என்பவரை பற்றி வெளி கொண்டு வந்திருகிறது ...இதை பத்திரிகையில் போடட்டு இருந்தால் எதனை பேரை அது சென்றடைந்திருக்கும் ...?  இப்படி எத்தனையோ ....

இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள் ....  உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள் ...
                    
Offline thamilan

எனக்கு விவரம் தெரிந்து சிந்திக்க ஆரம்பித்ததில் இருந்து நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் தமிழன்

யூசுப் மச்சி நீங்க விபரம் தெரிஞ்சி சிந்திக்க ஆரம்பிச்ச பிறகு படம் பார்க்கிறத நிறுத்திட்டதா சொல்லுறீங்க. இது உங்க வாக்குமூலம். நீங்க விபரம் தெரிகிற‌துக்கு முன்னால சிந்திக்க தொடங்குறதுக்கு முன்னால படம் பார்த்து இருக்கலாம். இது நல்லதா கெட்டதா என்று விபரம் தெரியாத பருவத்தில் சரியா பிழையா என்று சிந்திக்க ஆரம்பிக்கு முன்னர் படம் பார்த்துட்டு அது சரியில்லை என்று எப்படி சொல்ல முடியும்?
விபரம் தெரிஞ்ச பின்னால சிந்திக்க ஆரம்பிச்சதில இருந்து படம் பார்க்கிறத நிறுத்திட்டிங்க. அப்புறம் எதை வைத்து சினிமா சரியில்லை என்று சொல்லுறீங்க? உங்களுக்கு விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு தான் நீங்க சினிமா பார்க்கவில்லையே.
மறுபடி நான் விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு படங்கள் பார்த்துட்டு தான் பார்க்கிறதை நிறுத்தினேன் என்று சொல்லப் போறீங்க.

அடுத்தது நான் சொன்ன படங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க தான் படம் பார்க்கிறதில்லையே? அதுல ஆபாச நடனங்களோ, ஆபாச வார்த்தைகளோ இருக்கிறது என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்.முதலில் நான் சொன்ன படங்களை பாருங்கள். இல்லாமல் வெறும் யூகங்களாலும் மற்றவர் சொல்வதை கேட்டோ நீங்கள் வைக்கும் வாதம் எந்த கோர்ட்டிலும் எடுபடாது மச்சி.
மசாலா கலவை இல்லாத படம்.
ஆபாச நடனம், ஆபாச பேச்சுகள் போய் இப்போது மசாலா கலவைக்கு வந்த்தாச்சி.
அதும் இல்லை என்று வந்தா அடுத்ததா என்ன குறை சொல்ல போறாங்களோ?

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட மசாலா கலவை கொஞ்சம் குறைந்தால் கூட இது சாப்பாடா என்று குறை கூறுகிறோம்.
சினிமா என்பதை உண்டாக்கியதே பொழுது போகத்தான். அதில் மசாலா கலவை இருப்பதில் தப்பு என்ன? ஒரு பொருள் சுவையாக‌ வரவேண்டுமானால் அதன் மூலப்பொருளுடன் வேறு பொருட்களையும் சேர்த்தால் தான் அந்த பதார்த்தம் சுவையாக வரும்.ஒரு BREAD தயாரிக்க மாவுடன் ஈஸ்ட், உப்பு,எல்லாம் சேர்த்து கலந்து செய்தால் தான் அது BREADஆக இருக்கும். வெறும் மாவை தண்ணீரில் குழைத்து வேக வைத்து கொடுத்தால் அதை தயாரித்தவன் முகத்தில் வீசி எறிவார்கள். சினிமாவும் அப்படிதான்.
மனித வாழ்க்கையே ஒரு மசாலா கலவை தானே.

நீங்கள் சொல்வதை பார்த்தல் விபச்சாரம் செய்தவன் தான் விபச்சராம் பற்றி பேச வேண்டும் எனபது போலவும் திருடியவன் தான் திருட்டை பற்றி பேச வேண்டும் என்பதை போலவும் அல்லவே உள்ளது இது எப்படி சரியான உதரணாமாக ஆகா முடியும்?

விபச்சாரம் என்றால் என்ன? திருட்டு என்றால் என்ன என்று தெரியாத விபரம் அறியாதவர்கள் அதை பற்றி பேசினால் அது சரிவருமா யூசுப் மச்சி?அதை பற்றி அடிப்படை அறிவு சரி வேண்டாமா அதைப் பற்றி பேச.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது கிளாஸ் டீச்சருடைய மகனும் எங்கள் வகுப்பில் படித்தான். டீச்சருடைய மகனிடம் ஒரு பையன் கற்ழிப்பது என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு வாத்தியாருடைய பையன் 'ரோட்டில் நாயும் நாயும் பண்ணுகிறதே அது தான் கற்பழிப்பு' என்றான்.
இப்படித்தான் இருக்கும் அடிபடை அறிவில்லாதவர்கள் பேசுவது.

அப்படி நீங்கள் அதை சரி கண்டால் அந்த நடிகைகளை அரைகுறை ஆடையோடு பார்ப்பது கூடும் என்றால் நாம் நம் சகோதரிகளை அப்படி பார்ப்பது போல் பார்போமா? பார்க்கத்தான் நினைப்போமா? அல்லது மற்றவன் தவறான எண்ணத்தோடு பார்க்கத்தான் விட்டு விடுவோமா?

இந்த அரைகுறை ஆடைகள் படத்தில் மட்டும் தானா யூசுப் மச்சி?
ந்ம் அண்டாட வாழ்க்கையில் தினம் தினம் தெருவில் இதை தானே பார்க்கிறோம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டா ரோட்டில் நடக்கிறோம்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா போவீர்கள்?
அப்படி போவதென்றால் நான் பரலோகத்தில் தான் இருப்போம்.
மினி ஸ்கேட் என்ன, டைட் ஜீன்ஸ் என்ன, நீண்ட ஸ்கேட்டிலும் நடப்பதற்கு வசதியாக பாதியை கிழித்து விட்டு நடக்கும் போது முக்கால் வாசி கால் வெளியே தெரியும்.
அது மட்டுமா சாரி உடுத்துபவர்கள் கூட லோ ஹிப் என்ற பெயரில் வயிற்றின் அடியில் பயங்கர வளைவுகள் வரை இறக்கி கட்டுகிறார்கள்.
ஆடை இல்லாமல் இருப்பதை விட இப்படி இருப்பது தான் ஆபாசம் மச்சி. இதை எல்லாம் பார்த்து விட்டு யாரும் கண்ணை மூடிக்கொண்டு போவதில்லை. அதற்காக அதையே நினத்து கொண்டும் இருப்பதில்லை. சினிமாவும் அப்படித்தான்.

இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும்  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?

உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.

சினிமா என்பது மனிதனுடய சிந்தனையில் உருவாவது. அவன் மனித செயல்களை வைத்துத் தான் சிந்த்தித்து சினிமாவை தயாரிக்கிறான்.அதை வேண்டுமானால் கொஞ்சம் நவீனமயப்படுத்துகிறான். மொத்ததில் மனிதன் எதை செய்கிறார்களோ அது தான் சினிமாவாக வெளியே வருகிறது.
சினிமா முழுவதும் புகை பிடிப்பதில்லை. சினிமா முழுவதும் மது அருந்துவது இல்லை. ஆனால் வீடுகளில் தன் மகனிடமே பணம் கொடுத்த்து சிகரெட் வாங்கிவரச் சொல்லி  மகன் முன்னால் நாள் முழுக்க ஊதித்தள்ளும் தந்தைகள் ஏராளம் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னால் மது அருந்தும் பெற்றோர் வீதிக்கு வீதி இருக்கிறார்கள். குடிப்பதும் புகைப்பதும் எல்ல படங்களிலும் வருவதில்லை. வீட்டில் தினமும் இதை பார்த்து கெடாத பிள்ளைகள் மாதத்தில் ஒரு படத்தில் ஒரு சில காட்சிகளில் வருவதை பார்த்து விட்டு கொட்டுப் போகிறார்கள் என்பது வேடிக்கையாக இல்லை?

யூசுப் மச்சி எனது அப்பா பெரிய குடிகாரர்.அவர் குடித்த்து விட்டு வந்து வீட்டையே இரண்டு பண்ணுவார். அம்மாவை எங்கள் கண்முன்னால் சித்திரவதை பண்ணுவார், தினமும் இதை பார்த்து பார்த்து, எனக்கும் எனது அண்ணாக்களுக்கும் குடிக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லை. மாறாக வாழ்வில் என்றும் அதை தொடக்கூடாது என்ற வைராக்கியமே வந்த்தது. இன்று வரை நானும் எனடு அண்ணன்மார்களும் புகைத்ததும் இல்லை, குடித்ததும் இல்லை.
நீங்கள் சொல்லது போல பார்த்தால் நான் தான் பெரிய குடிகாரனாக இருந்திருக்க வேண்டும்.

சினிமா என்பது ஒரு வியாபாரம்.  மற்றவரை மகிழ்வித்து தானும் சம்பாதிக்கும் நோக்குடனேயே சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. இதில் காந்தியார், பெரியார், வள்ளுவர் கதைகளை மட்டும் படமாக எடுத்தால் இந்த மூவரும் உயிரோடு இருந்தால் கூட போய் பார்க்க மாட்டார்கள். அவர்கள் கதைகளை
நாம் பாடசாலைகளில் வேண்டிய மட்டும் படித்திருக்கிறோம். எத்தனையோ புத்தகங்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.இதை சினிமாவிலும் பார்கணுமா என்ன?

ஏதோ ஒரு படத்தில் வரும் ஒரு ஆபாசம் என்று சொல்லும் நகைசுவையை ரசித்தவர்கள் படங்களில் நகைச்சுவை வாயிலாக நல்ல கருத்துக்களை சொன்ன கலைவாணர் கிருஸ்ணன் நினைவுக்கு வரவில்லையா. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைசுவைகள் அவைகள்.
திரைபடங்கள் வெறும் சிந்தை ஊட்டுவதாகவும், வெறும் போதனைகள் நிறைத்ததாகவும் மட்டும் இருந்தால் படம் எடுத்தவன் தலையில் துண்டை போட வேண்டியது தான்.
வேலைத்தளங்களில் பிரச்சனை, வீட்டில் பிரச்சனை இப்படி ஆயிரம் பிரச்சனை உள்ள மனிதன் படம் பார்க்க வருவது, தன் கவலைகளை மறந்து மனதை மகிழ்வூட்டத்தான்.
அங்கும் வந்து வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் படமாக பார்த்தால் என்ன நடக்கும்?

ஒரு நல்ல படமோ கெட்ட படமோ ஓடுவதும் ஓடாததும் அந்த படத்தில் இல்லை. அதை பார்ப்பவர்களிடம் இருக்கிறது. ஒரு நல்ல தேசிய விருது பெற்ற படத்தை தியேட்டரில் ஓடிய 50 நாளும் பார்காமல் இருந்து விட்டு டிவியில் போடும் போது ஓசியில் பார்ப்பது சினிமாவின் பிழையா?

தான் பேசுவது தான் சரி என்ற மனப்பான்மை வாதத்திற்கு ஒத்து வராது

இங்கே வாதாடும் அனைவரும் அந்த மனப்பாங்குடன் தான் வாதாடுகிறார்கள்.இதை சொன்னவர்கள் உட்பட. அதுகு பேர் தான் விவாதம்.எதிரான கருத்தை சொல்வவர்கள் கருத்தை சரி என்று சொன்னால் அதுக்கு பெயர் விவாதமா?

கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்

உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.

உங புள்ளி விபரங்களின் அடிபடையில் பார்த்தால் நம் நாட்டுல நல்ல இளைஞர்களே இருந்திருக்க மாட்டாங்க யூசுப்.
அமெரிக்கா கலாசாரம் வேற நம் கலாச்சாரம் வேற. அதை வைத்து நம் சினிமாவையும் எடை போடாதிங்க‌

கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்

யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
ஒரு சில மோசமான படங்கள் வரத்தான் செய்கின்றன, ஆனா நீங்க படம் பார்த்த காலத்துக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இப்போ வார படங்களில் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. இந்த ஆடை அவிழ்ப்பு, கிளப் டான்ஸ் எல்லாம் இப்போ எடுபடுறதில்ல என்று தயாரிப்பார்கள் அறிந்து கொண்டார்கள். இப்போ வார படங்களில் கதாநாயகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல.
நான் சொன்ன தெய்வத்திருமகன் படத்தை எடுத்துப் பாருங்கள். அந்த படத்தை பார்த்துடு வெளியில வந்த ஆண்கள் கூட கண்ணை துடைத்துக் கொண்டு தான் வெளியில வந்ததா விமர்சனதில் கூட வாசித்தேன்.அந்த படமும் 100 நாள் ஓடினது சிலருக்கு தெரியாது போல.
போதும் என்று நினைக்கிறேன்.
« Last Edit: November 20, 2011, 10:44:58 PM by thamilan »

Offline RemO

ஏஞ்சல்:
// நான் ஒன்றும் திரைப்படம் எல்லாம் போதி மரம் என்று சொல்ல விலையே வடிவ்வாக ப்ருங்கள்  நன்மை
 தீமை
கலந்து இருக்கிறது  .... நாம்தான் பகுத்தறிய வேண்டும் ..... குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள்.  //

// இபவும் சொல்கிறேன் சிறுவர்களை திரை படத்திற்கு அழைத்து செல்வது பெற்றவர்கள் தவறு //

// இங்கே திரைப்படம் கெடுக்கின்றது என்று வாதிடுபவர்கள் அவ்வாறு சொலிக்க்கொண்டே அதை பார்வை இடுகின்றார்கள் ... அப்படி பார்வை இடுவதை தவிர்த்திருந்தால் திரை படங்களில் வரக்கூடிய ஆபாச கட்சிகளையும் ஆடை குறைபுகளையும் என்றோ கைவிட்டிருபார்கள் ....//

// இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள் ....  உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள் ...//

ஏஞ்சல், சினிமாவில் சீர்கேடுக்கும் விஷயங்கள் உள்ளன , நாம் தான் அதை தவிர்க்கவேண்டும் என்பது தானே உங்கள் கருத்து?? இதை நீங்கள் தெளிவு படுத்தவேண்டும். நீங்கள் கூறிய அனைத்தும் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

சீர்கேடுக்கும் விஷயங்கள் உள்ளது என்றால் அவை கெடுக்க முயற்சிக்கிறது என்று தானே பொருள்.

நீங்கள் உரைத்தது போல் பாலிலிருந்து தண்ணீரை பிரித்து பருக அனைத்து பறவைகளும் அன்னப்பறவை அல்ல, அனைத்தும் அவ்வாறு பிரிக்க வேண்டும் என பாலில் நீர் கலப்பது போல் தான் உங்கள் கருத்து உள்ளது

தீயவற்றை காட்டி அதை ஊக்குவிப்பது சினிமாவும் என்பது என கருத்து.

எந்தவொரு குற்றத்தையும் செய்யத்தூண்டுவது செய்வதை விட குற்றம் அல்லவா??

நீங்களே அதில் தீயவை உள்ளன என்று கூறும் பொது அதை ஆதரிப்பது ஏன்??

தவறு இருக்கிறது, தவறு நடக்கிறது என தெரிந்தும் அதை நாம் விலகி தான் செல்ல வேண்டும் என வாதாடுவது சரியா??

//திரை படங்கள் இல்ல விட்டால் கட்ட பொம்மன் . பாரதியார் ,, பெரியார் ... போன்ற நம் முன்னோர் வீர தீர வரலாறு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் .... இல்லை எத்தை பேருக்கு புரிந்திருக்கும் ...? //

கட்ட பொம்மன்,பாரதியார்,பெரியார் பற்றி எல்லாம் திரைப்படங்கள் தான் மக்களுக்கு சொல்லியது என்றா நினைகிறீர்கள்?? அந்த திரைப்படங்களை நீங்கள் பார்த்தது உண்டா??
பெரியார் படத்தில் கூட அவரை பற்றி தவறாக எண்ணும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது என செய்திதாளில் நான் படித்தேன். இவ்வாறு உயர்ந்த மனிதர் ஒருவரை பற்றி கூட தவறாக எண்ணத்தோன்றும் சினிமா சரிதானா???

// இன்று ஏழாம் அறிவு ஒன்றுதான் ....போதி தர்மன் என்பவரை பற்றி வெளி கொண்டு வந்திருகிறது ...இதை பத்திரிகையில் போடட்டு இருந்தால் எதனை பேரை அது சென்றடைந்திருக்கும் ...?  இப்படி எத்தனையோ ...//

இந்த படத்தின் விமர்சனத்தை நீங்கள் பதிவு செய்ததை நினைவு படுத்தவிரும்புகிறேன், http://www.friendstamilchat.com/forum/index.php/topic,1664.0.html.

//இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள் ....  உங்களை நீங்களே குழப்பி கொள்ளாதீர்கள் ...//

தவறான பாதைக்கு கொண்டு செல்லும் பொழுதுபோக்கு ஆரோக்கியமான விசயமா சமுதாயத்திற்கு ??
-------------------------------------------------------------------------------------------------------
தமிழன் :
// அடுத்தது நான் சொன்ன படங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?//

1) தெய்வ‌த்திரும‌க‌ன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடிய‌ட்ஸ்
5) வாகை சூட‌ வா
6) ச‌துர‌ங்க‌ம்
7) ப‌ச‌ங்க‌
8)பேராண்மை
9)சிங்க‌ம்

இவைகள் தானே நீங்கள் கூறிய படங்கள் இவை அனைத்தையும் பார்த்தவன் என்ற முறையில் நான் என் கருத்துகளை கூறுகிறேன்
1) தெய்வ‌த்திரும‌க‌ன்:
நான் ரசித்த திரைப்படம், ஆனால் இந்த படத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் என்ன?? இதில் சமுதாயத்தை நல்வழி படுத்த எவ்வகையில் உதவியது??
நீங்கள் மிக நல்ல படம் என்று கூறும் இந்த திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாதா?? குழந்தைகளுடன் பார்க்க சிறந்த படம் என எண்ணி படம் பார்க்கையில் அந்த இரட்டை அர்த்த வசனங்கள் வரும் போது புரியாமல் கேள்வி கேட்க்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லமுடியும் பெற்றோர்களால்???

2) இப்போதும் எப்போதும் ( எங்கேயும் எப்போதும்)

இத்திரைப்படத்தில் சில நல்ல விசயங்களும் சில தவறான கருத்துகளும் உள்ளன. ஆனால் தவறான கருத்துகளை விட நல்ல விஷயங்கள் அதிகம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

3) 7ம் அறிவு
மேலேயே இந்த படத்தை பற்றிய தோழி ஏஞ்சல் பதிவிட்டுள்ள பதிவை பார்த்திருப்பீர் என நம்புகிறேன், அதனால் இங்கு மீண்டும் அதை பற்றி நான் கூற விரும்பவில்லை.

4) 3 இடிய‌ட்ஸ்

இந்த படத்தில் கவர்ச்சி இல்லையா?? இதில் முத்தம் கொடுப்பதில் உள்ள பிரச்னை பற்றி விவரிக்கவில்லையா? இந்த படம் பார்த்த பின்பு அதிகமானவர்கள் யோசித்தது அந்த முத்தத்தை பற்றிதான். :D கல்லூரியில் எப்படி ஒழுக்கமின்றி நடக்கலாம் என்பதை கூட இந்த படம் கூறுகிறது தானே?? நாயகன் ஒழுக்கமின்றி நடந்து படித்து முதல் மதிப்பெண் பெற்றால் அது சரியாகி விடுமா??
நள்ளிரவில் குடித்து விட்டு கல்லூரி முதல்வரின் வீட்டுக்கு காதல் சொல்ல செல்வது சரி என்று கூறும் இந்த திரைபடம் சரிதானா??

5) வாகை சூட‌ வா

 இந்த திரைப்படத்தில் தவறான விஷயம் ஏதும் இல்லை என நான் நினைக்கிறன். ஆனால் இதில் உள்ளது வெறும் கற்பனைக்கு மட்டும் சாத்தியம், இக்கால வாழ்க்கை இல்லை என்பாதல் இது மக்கள் மனதில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது என கருத்து

6) ச‌துர‌ங்க‌ம்
இந்த படத்தில் தேவை இல்லாத அந்த கவர்ச்சி எதற்கு என்பதை தெரிவிக்க முடியுமா தமிழன் ??

7) ப‌ச‌ங்க‌
ஆபாசமில்லாத சில நல்ல விசயங்களை காட்டிய படம்.

8)பேராண்மை
இந்த படத்தில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்கள் உண்டா என கேட்கும் அளவிற்கு இந்த படத்தில் உள்ளன. அதுவும் பெண்கள் பேசுவது போல் வருவது சரியா?? அதற்காக பெண்கள் பேசுவதில்லை என்று சமுதாயத்தில் இல்லாத ஒன்றை காட்டியதாகவோ நான் கூறவில்லை.
சமுதாயத்தில் இலைமறை காயாக இருப்பதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டி அருவருக்கத்தக்க வகையில் காட்ட வேண்டிய அவசியம் இல்லையே?? கல்லூரி வளாகத்தில் பெண் நிர்வாணமாக செல்வது, பிறந்தநாளை கொண்டாட கல்லூரி மாணவிகள் ஆணுறைகள் வாங்குவது போன்றவை சமுதாயத்தில் நடக்கிறதா என எனக்கு தெரியவில்லை

9)சிங்க‌ம்

இந்த படத்தில் நல்ல விஷயம் என அதுவும் எனக்கு தோன்ற வில்லை, உங்களுக்கு அப்படி எதாவது தோன்றினாள் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்வேன். இதில் கூட ஆபாசம் உள்ளதே. சில பாடல் காட்சிகளை மறைக்க முயற்சிதுள்ளனரே, ஆனாலும் முயற்சி முழுமையடையவில்லை.

நீங்கள் வந்த பல படங்களில் நல்ல படங்கள் என கூறியது வெறும் 9  படங்கள் தான் அதில் வெறும் மூன்று படங்கள் தான் சொல்ல தகுந்தவை என்பதை கூறியுள்ளேன்.அவற்றில் குறைகளை விட நிறைகள் அதிகமாக எனக்கு தெரிந்ததால்.

// நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட மசாலா கலவை கொஞ்சம் குறைந்தால் கூட இது சாப்பாடா என்று குறை கூறுகிறோம்.//
சுவைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தான் உடல் நலத்தை கெடுக்கிறது, அது போல் பொழுதுபோக்க மட்டும் உருவாக்க பட்ட சினிமா சமுதாயத்தை கெடுக்கிறதே ??

// ந்ம் அண்டாட வாழ்க்கையில் தினம் தினம் தெருவில் இதை தானே பார்க்கிறோம். அதற்காக கண்ணை மூடிக்கொண்டா ரோட்டில் நடக்கிறோம்.உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா போவீர்கள்?
அப்படி போவதென்றால் நான் பரலோகத்தில் தான் இருப்போம்.
மினி ஸ்கேட் என்ன, டைட் ஜீன்ஸ் என்ன, நீண்ட ஸ்கேட்டிலும் நடப்பதற்கு வசதியாக பாதியை கிழித்து விட்டு நடக்கும் போது முக்கால் வாசி கால் வெளியே தெரியும்.
அது மட்டுமா சாரி உடுத்துபவர்கள் கூட லோ ஹிப் என்ற பெயரில் வயிற்றின் அடியில் பயங்கர வளைவுகள் வரை இறக்கி கட்டுகிறார்கள்.//

நன்றாக இருந்த நம் கலாச்சாரம் இவ்வாறு கலங்கி நிற்க சினிமாவும் ஒரு காரணம்தானே ! இதற்க்கு சினிமா காரணமே இல்லை என்று நினைத்தால் இவ்வாறு கலாச்சார சீர்கேடு ஏற்பட காரணிகள் என்பதை தெரியபடுத்தவும், நானும் தெரிந்து கொள்வேன்

//உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.//

சினிமா புகை பிடிக்க தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணம், பள்ளிகளில் சிறு குழந்தைகள் கூட பென்சிலை வாயில் style ஆக வைத்து புகைப்பது போல் பாவனை செய்வதை நிறைய பார்க்கலாம்
இதற்க்கு காரணம் சினிமா மட்டும் தான் , ஒரு கதாநாயகன் படத்தில் style ஆகா புகைப்பதை தான் முயற்சிக்கிறது அந்த குழந்தைகள். பள்ளி குழந்தைகள் என்பதால் பென்சிலை வைத்து முயர்த்திகிரார்கள் ஆனால் இளைஞர்களும், சில சிறார்களும் திருட்டுத்தனமாக கதாநாயகனை போல் புகைக்க முயற்சிப்பதை நான் பார்த்துள்ளேன். அங்கு சினிமா தானே சீர்கேடுக்கிறது

//சினிமா என்பது ஒரு வியாபாரம்.  மற்றவரை மகிழ்வித்து தானும் சம்பாதிக்கும் நோக்குடனேயே சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. இதில் காந்தியார், பெரியார், வள்ளுவர் கதைகளை மட்டும் படமாக எடுத்தால் இந்த மூவரும் உயிரோடு இருந்தால் கூட போய் பார்க்க மாட்டார்கள். //
//திரைபடங்கள் வெறும் சிந்தை ஊட்டுவதாகவும், வெறும் போதனைகள் நிறைத்ததாகவும் மட்டும் இருந்தால் படம் எடுத்தவன் தலையில் துண்டை போட வேண்டியது தான்.
வேலைத்தளங்களில் பிரச்சனை, வீட்டில் பிரச்சனை இப்படி ஆயிரம் பிரச்சனை உள்ள மனிதன் படம் பார்க்க வருவது, தன் கவலைகளை மறந்து மனதை மகிழ்வூட்டத்தான்.
அங்கும் வந்து வாழ்க்கை வரலாற்றையும் போதனைகளையும் படமாக பார்த்தால் என்ன நடக்கும்?//

இங்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா சினிமாவில் சமுதாயத்தை கெடுக்கும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது என

// யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா? //

அங்கு அவ்வாறு நடக்க தூண்டுவது சினிமா தான்
-------------------------------------------------------------------------------------------------------

சினிமாவிற்கு இணையான தொலைக்காட்சி தொடரான சக்திமான் தொடரை பார்த்து உயிரை விட்ட குழந்தைகள் ஏராளம்

சினிமாவில் நல்ல கருத்துக்கள் இல்லை என நான் கூறவில்லை, நல்ல கருத்துகளை விட சமுதாயத்தை கெடுக்கும் விஷயங்கள் அதிகம் என்பது தான் என கருத்து. அதிகம் என்றால் மிக மிக அதிகம் நல்ல கருத்து சிறு கல் அளவில் இருக்கும் போது தீயவையோ பெரும் மலை போல் அசைக்கமுடியா அளவு உள்ளது.
நல்ல விஷயங்கள் எப்போதும் நத்தை போல செல்லும் போது தீயவை காட்டுத்தீயாய் முன்னேறும் என்பதால் தினையளவு மட்டும் நல்ல விஷயங்கள் கொண்ட சினிமா சமுதாயத்தை குறிப்பாக இளைஞர் சமுதாயத்தை கெடுகிறது

இது என் கருத்து தான், இதற்கான உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ரெமோ ... நான் சொல்ல வந்தது ... நீங்கள் அப்படி ஆபாசம் இருபதாக கருதினால் அதை ஏன் ஆரம்பத்திலேயே தவிர்க்க முற்படவில்லை என்பதுதான் ..... சிறுவர்களை எதுக்கு படம் பார்க்க கூட்டி போகின்றீர்கள்

இதுதான் என் விவாதம்  தப்பு அவர்களை கூட்டி போகும் பெற்றவர்கள்தான் .... போதி தர்மன் பற்றி அறிந்து கொள்ள கூடியத்சக இருந்ததா கூறினேனே தவிர 7m  அறிவு திரைப்படமெடுத்த விதம் பற்றி நான் கூற வரவில்லை .... விவ்வதிபதர்க்கு முன் சரியாக புரிந்து கொள்வது அவசியம்

பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?

ரெமோ இபவும் சொல்றேன் பொழுது போக்காக இருபத்தி அப்படியே பாருங்கள் ..... அதை வாழ்க்கையுடன் சமந்த படுத்த வேண்டாம் ...
அது சரி நீங்கள் எப்படி திரைப்படம் எல்லாம் பார்பீர்களா ...?
                    
Offline Yousuf

அனைவரின் விவாதமும் நன்று உங்களுடைய பல கேள்விகளுக்கு ரெமோ பதில் கொடுத்துள்ளதால் அதை தவிர்த்து முக்கியாமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறேன்!

Quote
குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள்.

எஞ்சேல் உங்கள் போக்கு எப்போதும் தலைப்பை மீறியதாகவே உள்ளது. இங்கு தலைப்பு சினிமா இளைஞர்களை வழிகேடுக்கிறதா இல்லையா? என்பது  தானே தவிர சிறவர்கள் தவறான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் தான் காரணாமா இல்லையா? என்பது  அல்ல. வேண்டுமானால் இதை தனி ஒரு தலைப்பாக நாம் விவாதிக்கலாம். அதனால் இளைஞர்கள் வழிகேடுகிரார்களா இல்லையா என்பதை பற்றி மட்டும் பேசுங்கள் எஞ்சேல்.

திரைப்படங்களில் தவறுகள் சிறுவர்களை வழிகேடுக்க கூடிய விடயங்கள் உள்ளன என்பதை உங்களின் இந்த கருத்தின் மூலம் எற்று கொள்கிறீர்கள்  என்பது உறுதி.

மீண்டும் கூறுகிறேன் தலைப்பை திசை திருப்புவது விவாதத்தின் ஆரோக்கியத்தை கேடுப்பதாக கருதப்படும். இந்த தவறை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து செய்து வருகிறீர்கள்.

Quote
யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு  காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....

இங்கு நாம் திரைப்படத்தை மட்டும் தான் விவாதத்திற்கு எடுத்துள்ளோம் அதன் முன்னோடிகளை பற்றி பேச வர வில்லை எஞ்சேல். ஆகவே மீண்டும் தலைப்பை மீறி விவாதத்தை தொடர்ந்துள்ளீர்கள் எஞ்சேல்.

Quote
விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...

இதை உங்களுக்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் விவாதத்தின் தலைப்பை உணர்ந்து விவாதம் செயுங்கள் தலைப்பை மீறி விவாத்திப்பது விவாதத்தை திசை திருப்புவதாகும்!

Quote
சும்மா விவாதத்துக்கு சமந்தம் இல்லாமல் நான் பேசுவதை  நிறுத்தி விட்டு முதல் நான் சொன்ன கருத்துகளை ஊன்றி கனவித்து உணர முயற்சி செய்யுங்கள்

இதையும் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்பிகிறேன் விவாத தலைப்பிற்கு சம்பந்தம் இல்லமால் பேசுவது நீங்களா நானா என்பதை சிந்தியுங்கள் ஏஞ்செல். நீங்கள் சிந்திக்க தவறினால் இந்த தலைப்பை பார்வையிட கூடிய வாசகர்களிடம் அந்த பொறுப்பை கொடுத்து விடுகிறேன். அவர்கள் நல்ல ஒரு தீர்ப்பை தரட்டும்.

நீங்கள் சொல்ல வரும் செய்திகளில் கருத்து உள்ளதாக எனக்கு தோன்ற வில்லை. அப்படி அதில் கருத்து உள்ளதென்றால் அதையும் வாசகர்களின் தீர்ப்பிற்கே விட்டு விடுகிறேன்.

Quote
இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள்

இந்த கருத்தில் இருந்து அது நல்லதை சொல்லவில்லை என்பதை எற்று கொள்கிறீர்கள் போல தோன்றுகிறது ஏஞ்செல். பொழுதுபோக்காக செய்வதற்கு எத்தனையோ நல்ல விடயங்கள் இருக்கும் பொழுது வழிகேடுக்க  கூடிய இதை ஏன் நாம் கண்டு கழிக்க வேண்டும் எஞ்சேல்.

உங்களுடைய பெரும்பான்மையான கேள்விகளுக்கு இது தான் என் பதில் மீதி கேள்விகளுக்கு நண்பர் ரெமோ பதில் கொடுத்து விட்டார்.

நான் முந்தய பதிவில் கேட்ட பல கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதில் ஏதும் இல்லை என்று நினைக்கிறன் இருந்து இருந்தால் இந்த பதிவில் பதிவு செய்திருப்பீர்கள்.

நீங்கள் வாதிடுவதில் இருந்து ஒரு கருத்து புரியவில்லை ஏஞ்செல். நீங்கள் இளைஞர்கள் சினிமாவால் சீற்படுத்தபடுகிரார்கள் என்று வாதிடுவது போல் எனக்கு எங்கும் தோன்ற வில்லை. இதில் இருந்தே நீங்கள் தலைப்பை திசை திருப்புகிறீர்கள் என்பது வாசகர்களுக்கு விளங்கும்.

இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா? இந்த தலைப்பில் நான் ரெமோ ஸ்ருதி மற்றும் செல்வன் ஆகியோர் சீர்கேடுக்கிறது என்று வாதிடுகிறோம் ஆனால் நீங்கள் மற்றும் தமிழன் சீற்படுத்துகிறது என்று தானே வாதிட வேண்டும் அதை விட்டு விட்டு தலைப்பிற்கு சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.

உதாரணத்திற்கு சினிமா ஒன்றும் போதி மரம் அல்ல என்று நீங்கள் தான் கூறினீர்கள் இதில் இருந்து விளங்குவது என்னவென்றால் சினிமா இளைஞர்களை சீற்படுத்தவில்லை என்று கூறிவிடீர்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

உங்கள் வாதமே புரியாத புதிராக உங்களையே நீங்கள் குழப்பி கொள்கிறீர்கள். முதலில் ஒரு நிலையை எடுங்கள் சீற்படுதுகிறது என்று வாதிட வருகிறீர்கள இல்லை சீர்கேடுக்கிறது என்று பேச வருகிறீர்கள என்பதை நீங்கள் சிந்தித்து விட்டு பிறகு உங்கள் பதிவுகளை தலைப்பிற்கு உட்பட்டு பேசுங்கள்.

ஆகவே இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறது என்ற எனது நிலையில் நான் உறுதியுடன் இருக்கிறேன்!

அடுத்ததாக தமிழன் அவர்களின் விவாதத்திற்கு வருவோம்.

Quote
யூசுப் மச்சி நீங்க விபரம் தெரிஞ்சி சிந்திக்க ஆரம்பிச்ச பிறகு படம் பார்க்கிறத நிறுத்திட்டதா சொல்லுறீங்க. இது உங்க வாக்குமூலம். நீங்க விபரம் தெரிகிற‌துக்கு முன்னால சிந்திக்க தொடங்குறதுக்கு முன்னால படம் பார்த்து இருக்கலாம். இது நல்லதா கெட்டதா என்று விபரம் தெரியாத பருவத்தில் சரியா பிழையா என்று சிந்திக்க ஆரம்பிக்கு முன்னர் படம் பார்த்துட்டு அது சரியில்லை என்று எப்படி சொல்ல முடியும்?
விபரம் தெரிஞ்ச பின்னால சிந்திக்க ஆரம்பிச்சதில இருந்து படம் பார்க்கிறத நிறுத்திட்டிங்க. அப்புறம் எதை வைத்து சினிமா சரியில்லை என்று சொல்லுறீங்க? உங்களுக்கு விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு தான் நீங்க சினிமா பார்க்கவில்லையே.
மறுபடி நான் விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு படங்கள் பார்த்துட்டு தான் பார்க்கிறதை நிறுத்தினேன் என்று சொல்லப் போறீங்க.

தமிழன் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்பது எனக்கு நன்றாக விளங்குகிறது. நான் விவரம் தெரிந்து சிந்திக்க தெரிந்ததில் இருந்து சினிமா பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்பது தான் இதன் பொருள் நான் சிந்திக்க தொடங்கி இந்த சினிமா இப்படி மக்களை சீரளிக்கிரதே என்பதை புரிந்து நல்லதுக்கு பயன்பட வேண்டிய சினிமா இப்படி வழிகேடுக்க பயன் படுகிறதே என்பதை புரிந்து தான் அதை பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்பது தான் பொருள். நீங்கள் கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள்  என்று நினைக்கிறன்.

சிந்திப்பது என்பதன் பொருள் அதில் இருக்க கூடிய தவறுகளை பற்றி சிந்திப்பது தான். நல்லதா கேட்டதா என்பதை பற்றி சிந்திப்பது தான். ஒரு வேலை உங்களுக்கு சிந்திப்பதின் பொருள் தெரியவில்லை என்று கருத வைக்கிறது தமிழன்.

Quote
விபச்சாரம் என்றால் என்ன? திருட்டு என்றால் என்ன என்று தெரியாத விபரம் அறியாதவர்கள் அதை பற்றி பேசினால் அது சரிவருமா யூசுப் மச்சி?அதை பற்றி அடிப்படை அறிவு சரி வேண்டாமா அதைப் பற்றி பேச.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது கிளாஸ் டீச்சருடைய மகனும் எங்கள் வகுப்பில் படித்தான். டீச்சருடைய மகனிடம் ஒரு பையன் கற்ழிப்பது என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு வாத்தியாருடைய பையன் 'ரோட்டில் நாயும் நாயும் பண்ணுகிறதே அது தான் கற்பழிப்பு' என்றான்.
இப்படித்தான் இருக்கும் அடிபடை அறிவில்லாதவர்கள் பேசுவது.

நீங்கள் கொடுத்து இருக்க கூடிய உதாரணம் நகைச்சுவையாக உள்ளது தமிழன். நீங்கள் என்னை 7 ம் வகுப்பு சிறுவனாக கருதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதன் காரணத்தால் தான் இப்படி பட்ட ஒரு உதாரனத்தை கொடுத்துளீர்கள். நீங்கள் சொல்லும் கருத்தில் இருந்து இன்று விபசாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் திருட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும் இதற்க்கு முன் விபச்சாரம் செய்தவர்கள் தான் திருடியவர்கள் தான் என்று கூறுவது போல் உள்ளது.

இதை அவர்கள் பார்த்தால் உங்கள் மீது மான நஷ்ட்ட வழக்கு போட்டாலும் போடுவர்கள் தமிழன் கருத்து கூறுவதற்கு முன் இந்த கருத்து நாம் கூறும் நபருக்கு பொருந்துமா என்பதை சிந்தித்து கூறவேண்டும் தமிழன்.

இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியா அவசியம் இல்லை ஏனென்றால் உங்களுக்கு விவாதம் அல்வா சாப்பிடுவது போன்றது தமிழன். இதை நீங்கள் தான் கூறினீர்கள்.

Quote
இந்த அரைகுறை ஆடைகள் படத்தில் மட்டும் தானா யூசுப் மச்சி?

இந்த கேள்விக்கு ரெமோ பதில் தந்து விட்டார் மறுபடியும் நான் பதில் தர விரும்புகிறேன். இப்படி அரை குறை ஆடை அணிவதற்கு பெண்களை தூண்டியதே இந்த சினிமா தானே. இந்த சினிமா வருவதற்கு முன் பெண்கள் அரைகுறை ஆடை உடுத்தினார்களா? தமிழன் நீங்கள் சொல்லும் எல்ல கருத்துக்களுமே இப்படி தான் முரணானவையாகவே உள்ளது.

நான் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலாக இதை நான் கருத வில்லை தமிழன். நான் கேட்டது சினிமாவில் வருவதை போன்று நம் சகோதரிகளை பார்க்க விரும்புவீர்களா என்று தான். நிச்சயாமாக சுயமரியாதையும் உணர்ச்சியும் ரோஷமும் உள்ள ஒருவன் அவ்வாறு பார்க்க விரும்ப மாட்டான் நம் சகோதரிகளை.

Quote
உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.

நீங்கள் இப்படி ஒரு பதில் தந்திருப்பது எனக்குத்தான் வேடிக்கையாய் இருக்கிராது தமிழன். இந்த கேள்விக்கு ரெமோ அற்புதமான ஒரு பதிலை பதிவி செய்து விட்டார். நான் சினிமா இல்லாவிட்டால் மதுவும் புகையும் இருந்திருக்கவே செய்யாது என்று எந்த இடத்திலும் கூற வில்லை. இளைஞர்கள் அதிகமாக வழி கேடுவதர்க்கு இதுவும் ஒரு காரணம் என்று தான் கூறினேன்.

சொல்லும் கருத்துக்களை தெளிவாக புரிந்து உங்கள் பதிலை அமையுங்கள் தமிழன். அவசரத்தில் பதில் கொடுத்தால் இப்படி தான் இடையில் மாட்டி கொள்ள வேண்டியது வரும்.

Quote
நாம் பாடசாலைகளில் வேண்டிய மட்டும் படித்திருக்கிறோம். எத்தனையோ புத்தகங்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.இதை சினிமாவிலும் பார்கணுமா என்ன?

இதே பாட சாலையில் தானே நாம் கேட்டதை பார்க்க கூடாது கேட்டதை கேட்க்க கூடாது கேட்டதை பேச கூடாது என்று போதிக்கிறார்கள் அதை நீங்கள் மறந்து விடீர்கள் என்று நினைக்கிறன். மூன்று குரங்குகளை காட்டி இதை சொல்லி தந்திருப்பார்கள் ஆசிரியர்கள். நினைவு படுத்திப்பாருங்கள். பாடசாலையில் சொன்னதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடீர்களா தமிழன் மச்சி.

அதை உங்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தி இருந்தால் நீங்கள் இப்பொழுது இப்படி பேச முன்வதிருக்க மாட்டீர்கள் தமிழன்.

Quote
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.

இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.

நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை.

Quote
உங புள்ளி விபரங்களின் அடிபடையில் பார்த்தால் நம் நாட்டுல நல்ல இளைஞர்களே இருந்திருக்க மாட்டாங்க யூசுப்.
அமெரிக்கா கலாசாரம் வேற நம் கலாச்சாரம் வேற. அதை வைத்து நம் சினிமாவையும் எடை போடாதிங்க‌

இங்கு நான் அமெரிக்காவில் நடந்த விடயங்களை மட்டும் குறிப்பிட வில்லை இந்தியாவில் நடந்த விவரங்களையும் தான் குறிப்பிட்டு இருந்தேன் மீண்டும் ஒரு முறை நன்றாக படித்து பாருங்கள் தமிழன்.

Quote
கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்

நீங்கள் என் பதிலை சரியாக வாசித்தீர்கள என்று கூட எனக்கு தெரிய வில்லை. நான் சினிமாவில் பெற்றோர்களுக்கு முன் முத்தம் கொடுகிறார்கள் என்று சொல்ல வில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்க்கும் பொது இப்படி பட்ட முத்த கட்சிகளும் படுக்கை அரை கட்சிகளும் வருகிறதே அதை தான் சொன்னேன். ரோசம் உள்ள யாரும் குடும்பத்தோடு அமர்ந்து இதை பார்க்க மாட்டார்கள் தமிழன். நமக்கு ரோசம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து கொள்வோம்.

Quote
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?

இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.

கடைசியாக ஒன்று கேட்கிறேன் தலைப்பிற்கு ஏற்ப நீங்கள் சினிமா சீற்படுதிகிறது என்று வாதிடுவது போல எனக்கு தோன்ற வில்லை நேநேகளும் தலைப்பை திசை திருப்புவது போல் உள்ளது தலைப்பிற்கு உட்பட்டு அடுத்த பதிவை அமைப்பீர்கள் என்று கருதுகிறேன்.

 ஆகா சினிமாதான் தீமையின் தாய்ச்சபை என்பதை நடுநிலையோடு இந்த விவாதத்தை படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

உங்கள் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை தந்திருப்பேன் என்று நினைகிறேன். அப்படி உங்களுக்கு இதில் திருப்பதி இல்லை என்றால் அடுத்தமுறை இதை விட சிறப்பாக பதில் தர என்னை படைத்த இறைவன் எனக்கு அருள் புரிய வேண்டும்.

எஞ்சேல் உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

Quote
பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?

பத்திரிக்கையில் எழுதும் எல்லாம் சரி என்று ஒரு போதும் நான் சொல்லவே மாட்டேன். அனால் அது தெரிந்த நீங்கள் ஏன் 7 ம் அறிவு படத்தின் விமர்சனத்தை ஏன் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சரி இல்லாத ஒன்றை என் நீங்கள் பதிவு செய்தீர்கள்.

நீங்கள் கொடுத்திருக்கும் பலவீனமான கருத்தில் இருந்தும் தலைப்புக்கு பொருந்தாத கருத்தில் இருந்தும் என் நிலை இன்னும் உறுதியாக ஆகிறது அதற்க்கு வழிவகை செய்துதந்த உங்களுக்கு நன்றி எஞ்சேல்.

மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக கூறுகிறேன் இளைஞர்களை சீர்க்டுக்கத்தான் இந்த சினிமா பயன் படுகிறது என்பதை கூறி கொண்டு அடுத்த பதிவில் இறைவன் நாடினால் சிந்திப்போம்.

நல்ல விடயங்களை மனக்கசப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இறைவன் நமக்கு தர வேண்டும்!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம்  சொல்லுங்கள்.
எஞ்சேல் உங்கள் போக்கு எப்போதும் தலைப்பை மீறியதாகவே உள்ளது. இங்கு தலைப்பு சினிமா இளைஞர்களை வழிகேடுக்கிறதா இல்லையா? என்பது  தானே தவிர சிறவர்கள் தவறான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் தான் காரணாமா இல்லையா? என்பது  அல்ல. வேண்டுமானால் இதை தனி ஒரு தலைப்பாக நாம் விவாதிக்கலாம். அதனால் இளைஞர்கள் வழிகேடுகிரார்களா இல்லையா என்பதை பற்றி மட்டும் பேசுங்கள் எஞ்சேல்.

யோசுப் சிறுவர்களை சினிமா சீர் கெடுப்பதாக நீங்கள் சொல்லும் பொது அதற்கான கரணம் பெற்றோர் சினிமாக்கு அழைத்து செல்வது என்று சொனால் அது எப்படி தலைப்புக்கு சமந்தமிலாமல் போகும் ...முதல் ஒழுங்காக விளங்கி கொண்டு நீங்கள் வாதிட்டால் நன்று ... எதிர் வாதம் செய்யவேண்டும் என்றும் வாதிப்பவர் மூக்கை உடைக்க வேண்டும் என்றும் முயற்சி செய்து உங்கள் வாத திறமையை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள் ....சிறுவர்களை சினிமாக்கு அழைத்து செல்வது தவறு இல்லை அப்படி என்று சொல்ல வருகின்றீர்கள்
போலும் .  யோசுப் சினிமா சீர் கெடுக்கவில்லை என்று வாதிடும் போது நாம் சினிமா சமுகம் சமந்தமான கருத்துகளை முன்வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது .... அதை நீங்கள் எப்படி வேறு ஒன்றை விவாதிபதாக சொல்லாம் ....? சினிமா சமுகத்தில் ஒன்று ...அதை சமூகத்தோடு ஒப்பிட்டுதான் பேச முடியும் ... சும்மா சும்மா உங்களுக்கு கருத்து தெரிவிக்கவோ நான் சொனதை ஏற்கவோ மனது ஒப்பாமல்  வீர விடயம்தான் விவாதிப்பதாக சொல்கிறீர்கள் ...

Quote
யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு  காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....
இங்கு நாம் திரைப்படத்தை மட்டும் தான் விவாதத்திற்கு எடுத்துள்ளோம் அதன் முன்னோடிகளை பற்றி பேச வர வில்லை எஞ்சேல். ஆகவே மீண்டும் தலைப்பை மீறி விவாதத்தை தொடர்ந்துள்ளீர்கள் எஞ்சேல்.

யூசுப் முதல் நாங்கள் சொல்ல வாரத்தை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் சினிமா கெடுப்பதாக சொன்னால் ... நாங்கள் சினிமா எப்படி கெடுக்கும் அது எப்போ தோன்றியது .. அப்போது இது இருந்ததா அதற்கு முன் இல்லையா ... இப்படியான கருத்துகளை சொல்ல கடமை பட்டு இருக்கின்றோம் ... சும்மா குதிரைக்கு கடிவாளத்தை பூட்டியது போல நேர பாரகம ....நாங்க சொல்றதையும் பாருங்க .... சினிமா கெடுகின்றது சமுகத்தை  என்று நீங்கள் சொல்லி விட்டு போகலாம் .... நாங்கள்  கெடுக்கவில்லை என்று வாதிடும் போது .... சினிமா கெடுக்கவில்லை என்றால் அப்போ வேறு என்ன என்பதை சுட்டி காட்ட வேண்டும் .... சும்மா கெடுக்கவில்லை கெடுக்கவில்லை என்றால் அது வாதத்துக்கு ஒவ்வாத வாதம் .

Quote
விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...
இதை உங்களுக்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் விவாதத்தின் தலைப்பை உணர்ந்து விவாதம் செயுங்கள் தலைப்பை மீறி விவாத்திப்பது விவாதத்தை திசை திருப்புவதாகும்!

நீங்கள் தான் நீங்கள் சொல்வது சரி என்ற ரீதியில் விவாதித்துகொண்டு இருகின்றீர்கள் .. எதிர் வாதம் சேயும் நாம் முட்டாள்கள் என்ற ர்தியில் கருத்து சொல்கிறீர்கள் .....நான் விவாதத்தின் தலைப்பில் இருந்தது பிறழவில்லை .... நீங்கள் புரிந்தலில் தவறை வைத்துக்கொண்டு ... எனது வாதத்திற்கு பதில் சொல்ல முடியாத நிலைமையில் அதை தலைபிற்கு ஒவ்வாத விவாதம் என்று சொல்கின்றீர்கள் .

தமிழன் தேவையான பதிலை உங்களுக்கு கொடுத்திருக்கும் போது நான் திரும்பவும் அதை சொல்வதில் என்ன பயன் இருக்கும்... எனவேதான் நான் உங்கள் கருத்துகளுக்கு மறு வாதம் செய்து கொண்டு இருகின்றேன் .... எங்கயோ கிடைத்த சினிமா பற்றிய புள்ளி விபரங்களை எடுத்து வைத்து கொண்டு வாதத்தில் நீங்கள் தன சிறப்பாக வாதிடிவதாக நினைத்து கொண்டால் அது எப்படி சரியாக முடியும் ...  தமிழன் சொன்ன கருத்தை நான் திரும்ப கோப்பி பேஸ்ட் பண்ணவா வேண்டும்...? நாம் தரப்பில் ஒருவர் சினிமா எப்படி சீர் கெடுகின்றது என்று சொன்னால் போதாதா ...? நீங்கள் எதையும்  ஒருவர் ஒருக்கால் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்கள் போல் தெரிகிறது .... அதற்க்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ....

நீங்கள் சினிமா 100 % நல்லதை சொல்ல வேண்டும் என்று சொல்கின்றீர்கள் அதைத்தான் சொல்ல வந்தேன் சினிமா ஒன்றும் போதி மரம் இல்லை என்று ....சினிமா என்பது பொழுது போக்கு சாதனம் .... நாள் முழுக்க உடல் வருத்தி வேலை செயும் மனிதன் தன மன உடல் களைப்பை போக்குவதற்காக  ஒரு 21 /2  அணி நேரம் செலவு செய்கிறான் ... அதில் அவன் தன் கவலைகளை மறந்து சந்தோசத்தை எதிர் பார்ப்பனா ... இல்லை அவளவு நேரமும் போதனையை எதிர் பார்பானா .....? உங்களுக்கு போதனை வேண்டும் என்றால் அதற்கென்று உள்ள இடங்களுக்கு செல்லலாமே ....(இதை கூட சொல்லுவீர்கள் வாதத்திற்கு வெளியே போவதாக ஹஹஹா )

பொழுது போக்கு அம்சங்களில் போதனையை எதிர் பார்காதிர்கள் அதே போல போதனை செய்யும் இடத்தில பொழுது போக்கினை எதிர் பார்காதிர்கள் ....பொழுது போக்கு பொழு போக்காகவே இருக்கட்டும் இருக்க விடுங்கள் ...  எங்கு எதிலும் போதனை போதனை போதனை என்றால் ..... எலோரும் சந்நியாசிகள் ஆகத்தான் போக வேண்டும் ... அதற்க்கு மக்கள் தயாரில்லை ....  மக்கள் விருபதிற்குதன் சினிமா ...
சினிமாவில் சொல்ல வேண்டிய அளவுக்கு தந்தை தாய் சகோதர நட்பு உறவு பசங்கள் .... சமுக சிந்தனைகள் தேச பற்று எல்லாமே சொல்ல பட்டு இருக்கிறது .... அதை மீறினால் வரக்கூடிய விளைவுகள் எல்லாம் சொல்ல பட்டு இருக்கிறது ....நீங்கள் கேட்கும் தனியான வழிகாட்டல் மற்றைய தொலைகாட்சி நிகழ்வுகளில் உள்ளது ... ஆன்மிகம் .... போதனை ..... வயலும் வாழ்வும் ... சமையல் ...இப்படி ஒவோன்ருக்கும் தனி தனியாக பிரித்து தினம் தினம் போடுகின்றார்கள் சேனலில் .... அது போதாது என்று .... சந்தோசமாக போய் உக்கார்ந்து படம் பார்க்கும் இடத்திலும் நீங்கள் இதை எதிர் பார்த்தால் எப்படி .... தினம் தினம் காட்டப்படும் வழக்கமான தொலைகாட்சி நிகழ்வுகளில் போதனையை கருத்துகளை ஏற்காத மக்கள் திரை படத்தில்தான் .. அதில் போதித்தால்தன் ஏற்று கொள்வார்கள் எனவே அதில் போதனையை மட்டும் கொடுங்கள் என்று சொல்வது .... நம் மக்களை நீங்கள் மந்தைஆடுகள் போல் என்று சொல்லாமல் சொல்வதாக இருக்கிறது .....

உங்களுக்கு தேவையானதை மறைய தொலைகாட்சி நிகழ்வுகள் தினம் கொடுகின்ற போது அதை சினிமாவிலும் 2.30  மணி நேரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது ஞாயம் இல்லை ....

யோசுப் இபோகூட சொல்லுவீர்கள் நான் விவாதத்தை திசை திருப்புவதாக ....நன்றாக படியுங்கள் விவாதம் திசை திருப்ப படவில்லை .... நான் விவாததுகேல்லேதான் நிகின்றேன் ....சினிமா என்றால் என்ன அதற்குள் எதை எதிர் பார்க்கலாம் பார்க்க கூடாது ..... என்ன உள்வாங்கலாம் வாங்க கூடாது ..... சினிமாவில் ஏன் அதை எதிர் பார்கின்றீர்கள் அது வேறு வடிவில் கிடைக்கும்போது ...... இப்டியான கேள்விகளை உள்வாங்கியே எனது பதில் அமைந்துள்ளது ..... எனவே நான் சொனதை சினிமா கண்ணோட்டத்தோடு பாருங்கள் .... தெள்ள தெளிவாக புரியும் .

Quote
இதை அவர்கள் பார்த்தால் உங்கள் மீது மான நஷ்ட்ட வழக்கு போட்டாலும் போடுவர்கள் தமிழன் கருத்து கூறுவதற்கு முன் இந்த கருத்து நாம் கூறும் நபருக்கு பொருந்துமா என்பதை சிந்தித்து கூறவேண்டும் தமிழன்.

யூசுப் ஈங்கே சினிமா சீர் கெடுகிறத இல்லையா என்பதுதான் விவாதம்  கருத்துகளை தவறா கூறினால் மான நஷ்ட வழக்கு போடுவார்களா மாடார்கள என்பது இல்லை.... எனவே நீங்கள் தலைப்பினை உள்வாங்கி விவாதிப்பது நன்று ... நீங்கள் விவாதத்தை திசை திருப்ப பார்கின்றீர்கள் ....

Quote
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.
இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.

நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை.

இதைத்தானே நாமும் சொல்றம் .... இதெல்லாம் சமுகத்தில நடக்குற ஒன்று அதைத்தான் சினிமா வெளிக்கொண்டு வருது ..... அதை ரசிபதர்காக கொஞ்சம் மிகை படுத்தி 10  பேருகூட சண்ட போடுற போல பண்றாங்கன்னு ....இப்போ நீங்கலவே எத்துகிடீங்க அதை ...
(படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.) நீங்கள் தமிழன் சொன்ன இந்த முடிவை கவனிக்கவில்லை ... இப்படிதான் நீங்கள் எல்லாவற்றிலும் .. அயோ அடிசுகுரங்க புடிசுகுரனணு கத்துறது ... அதுக்கு பின்னால என்ன சொல்றாங்க ... என்ன வருது என்று பார்கிறதே இல்லை .... உங்களுக்கு சாதகமா எதயாவது எடுத்து அதுக்கு வீண்வாதம் நாங்கள் சொல்லாத  அர்த்தம் கற்பித்து விவாதிகுரிங்க ....

Quote
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.

யூசுப் உங்களுக்கு வரலாற்று பதிவுகள் படித்து பழக்கம்  இல்லையா  ... பண்டைய மன்னர்கள் சோலை வனங்களிலும் .... கடற்கரை களிலும் சந்தித்து பேசுவதாக இருகின்றதே .. அந்த காலத்தில் அந்தபுரம் என்றும .... தேவமாதர் ( விபச்சாரிகள் ) என்றும் இருந்தது ....இப்டி எல்லாம் இருந்ததுதான் இன்று பார்க் பீச் நு மாறி இருக்கு ....  அந்த காலத்தில் சினிமா இல்லையே ...

Quote
பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?
பத்திரிக்கையில் எழுதும் எல்லாம் சரி என்று ஒரு போதும் நான் சொல்லவே மாட்டேன். அனால் அது தெரிந்த நீங்கள் ஏன் 7 ம் அறிவு படத்தின் விமர்சனத்தை ஏன் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சரி இல்லாத ஒன்றை என் நீங்கள் பதிவு செய்தீர்கள்.

யூசுப் நீங்கள் ஏன் விவாதத்தை சரியாக படிபதில்லை ... அங்கே நான் சொல்லி இருகின்றேன் போதி தர்மன்  என்று ஒருதமிழன் இருந்தார்  என்பதை நம் மத்தியில் கொண்டு வந்திருகின்றார்கள் என்றுதானே ஒழிய... முருகத்ஸ் சூப்பர் பிலிம் எடுத்தார் .... சூர்யா நல்லா நடித்தார் உதயநிதி நிறைய காசு செலவு பணினார்  இப்டிய சொனேன் ......

பத்திரிகையில் வருவது எல்லாம் உண்மையான்னு பொதுவா கேட்டேன்  ...? யப்பா சாமி உங்களுக்கு வேனும்ன எதுக்கு எதுக்கு வேணும்னாலும் லிங்க் பண்ணுவிங்க போல .....

மற்றவர் கருத்துகளை உள்வாங்கி அதன் கருத்துகளை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தை நமக்கு கடவுள் கொடுக்கட்டும் ...!!!
« Last Edit: November 21, 2011, 02:54:39 PM by Global Angel »