Author Topic: இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?  (Read 28646 times)

Offline Yousuf

எஞ்சேல் உங்கள் விவாதம் எப்படி இருக்கிறது என்றால் பழைய குருடி கதவை திறடி என்பதை போல் தான் இருக்கிறாது. எதனை முறை தலைப்பை புரிந்து விவாதம் செயுங்கள் என்று கூறினாலும் நீங்கள் அப்படி செய்வதாக தெரிய வில்லை தலைப்பை விட்டு வெளியே செல்லும் கேள்விகளுக்கு பதில் அளித்து ஏன் நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை.

செல்வம் கூறிய விடயங்களை இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.


இந்த விவாதத்தின் தலைப்பை சரியாக பார்ப்பது நன்று.
” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?”


நீங்கள் சீற்படுத்துகிறது என்று கூறினால் எப்படி சீற்படுத்துகிறது எதனை பேர் திரைப்படத்தால் சீர்பெற்று இருகிறார்கள் என்பதை பேசுங்கள். அதை விட்டுட்டு காலத்திற்கேற்றார் போல மாறும் யாரும் ஞானி அல்ல என்று எல்லாம் பேசி அதை படிப்பதில் எங்கள் நேரத்தை வினடிக்காதீர்கள்.

அதே போல் நான் தலைப்பை மீறி இது வரை பேசி இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

மீண்டும் செல்வன் கூறியதை நினவு படுத்த விரும்புகிறேன்.


10 பேரில் 4  இளைஞர்கள் கெட்டு போகிறார்கள் . 6 இளைஞர்களை சினிமா சீர்படுத்துகிறதா ?6 இளைஞர்கள் சினிமாவால் உண்டாகும் சீர்கேட்டிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டு என்ன இருக்கிறது ?.ஒட்டு மொத்தமாக பார்த்தால் இளைஞர்கள் சீர்கெட இந்த சினிமா காரணமாக இருக்கிறது. 10%கூட இளைஞர்களை சீர்படுத்த உதவியாய் சினிமா இல்லை.

தலைப்பை விட்டு விலகி செல்லும் கருத்துக்களும்,விவாதங்களும் இந்த விவாத மேடையை அர்த்தமற்றதாக ஆக்கி பலவீனமாக்கும் என்பது எனது கருத்து.

இப்பொழுது இந்த விவாதத்தை பலவீனமாகவும்  தேவை அற்றதை பேசி பார்வையாளர்களின் நேரத்தை வீணடிப்பது போலவே உள்ளது எஞ்சேல்.

சீற்படுதிகிராத இல்லையா? என்று நீங்கள் பேசாமல் பழைய கதை எல்லாம் கிளற வேண்டிய  அவசியம் இல்லை யாரிடம் கேட்டாலும் எளிமையான இரண்டு பதில்களை கூறுவார்கள் ஒன்று சீர்கேடுக்கிறது அல்லது சீற்படுத்திகிறது என்பது தான் அதை விட்டு விட்டு சினிமா பொழுது போக்கு அதை பொழுது போக்காக பாருங்கள் என்று கூறுகிறீர்கள். அது பொழுது போக்கு என்று எங்களுக்கு தெரியாத எஞ்சேல்.

தலைப்பு என்ன வென்றால் ” இன்றைய இளைஞர்களை சினிமா சீர்கேடுக்கிறதா சீர்படுத்துகிறதா?” என்பது தான். நீங்கள் கூறும் பதில் சினிமா நல்ல பொழுதுபோக்க இல்லையா என்பதிற்கு வேண்டுமானால் பொருந்து இந்த தலைப்பிற்கு பொருந்தாது எஞ்சேல்.

சினிமா என்ற வார்த்தையை வைத்து மட்டும் வாதிட கூடாது.  இளைஞர்களை சினிமாசீர்கெடுக்கவில்லை,சீர்படுத்துகிறது என்று கருத்துகளை ஆதாரத்துடன் கூறி வாதிடுங்கள் அல்லது இளைஞர்களை சினிமா சீர்படுத்தவில்லை , சீர்கெடுக்கிறது என்று வாதிடுங்கள் .

Quote
யூசுப் ஈங்கே சினிமா சீர் கெடுகிறத இல்லையா என்பதுதான் விவாதம்  கருத்துகளை தவறா கூறினால் மான நஷ்ட வழக்கு போடுவார்களா மாடார்கள என்பது இல்லை.... எனவே நீங்கள் தலைப்பினை உள்வாங்கி விவாதிப்பது நன்று ... நீங்கள் விவாதத்தை திசை திருப்ப பார்கின்றீர்கள் ....

எஞ்சேல் இதை பார்த்தல் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்ன என்று சொல்வது அவர் எனக்கு இந்த விவாதத்தில் பங்கு கொள்ள தகுதி  இல்லை என்றார் அதற்காக விளக்கத்தை நான் கொடுத்துள்ளேன். நான் விவாதிக்க தகுயற்றவன் என்றால் விபச்சாரத்தை எதிர்ப்பவர்களும் திருடுவதை எதிபவர்களும் அதை பற்றி பேச தகுதற்றவர்களா? என்று கேட்டேன் அதற்க்கு அவர் கூறியதிற்கு அவருக்கு நான் பதில் சொல்லவே மான நஷ்ட வழக்கை பற்றி பேசினேன். அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே அதை பற்றி பேசினேன்.

இதில் இருந்து வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் யார் சரியாக படித்து பார்க்காமல் விவாதம் புரிகிறார்கள் என்று. அதை வாசகர்களின் பொறுப்பில் விட்டு விடுகிறேன்.


Quote
யூசுப் உங்களுக்கு வரலாற்று பதிவுகள் படித்து பழக்கம்  இல்லையா  ... பண்டைய மன்னர்கள் சோலை வனங்களிலும் .... கடற்கரை களிலும் சந்தித்து பேசுவதாக இருகின்றதே .. அந்த காலத்தில் அந்தபுரம் என்றும .... தேவமாதர் ( விபச்சாரிகள் ) என்றும் இருந்தது ....இப்டி எல்லாம் இருந்ததுதான் இன்று பார்க் பீச் நு மாறி இருக்கு ....  அந்த காலத்தில் சினிமா இல்லையே ...

உண்மைதான் எஞ்சேல் எனக்கு வரலாற்று பதிவுகள் படிக்கும் அளவிற்கு திறமை இல்லை. அதே போல் என்னை போன்று வரலாற்று பதிவுகள் படிக்காத மக்கள் தான் இங்கு அதிகம் அப்படி இருக்கும் போது இந்த பீச், பார்க் எல்லாம் எப்படி இந்த இளைஞர்களுக்கு தெரிந்தது. ஒரு வேலை என்னை தவிர பீச் பார்க் என்று சுத்த கூடிய எல்லாம் இளைஞர்களும் வரலாற்று பதிவுகள் படித்து விட்டார்களோ என்னவோ?

அதிகாமான இளைஞர்களுக்கு வரலாற்று பதிவின் மூலம் பீச் பார்க் தெரிய வாய்ப்பில்லை சினிமாவின் மூலம் தான் தெரியும் என்பதை உறுதிபட கூருகிறேன் மறுக்க முடியுமா இனிமேல் உங்களால் எஞ்சேல்?


Quote
யூசுப் நீங்கள் ஏன் விவாதத்தை சரியாக படிபதில்லை

இதற்க்கு  பதிலை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன். நான் சரியாக படிப்பதில்லையா அல்லது நீங்களா என்பதை நடுநிலமையான வாசகர்கள் பதில் தரட்டும்.

Quote
மற்றவர் கருத்துகளை உள்வாங்கி அதன் கருத்துகளை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தை நமக்கு கடவுள் கொடுக்கட்டும் ...!!!
இதே பிராத்தனையை மீண்டும் நான் கேட்கிறேன்.

மீண்டும் செல்வன் கூறியதை சுட்டி காட்ட விரும்புகிறேன்.

கண்டிப்பாக விவாதத்தின் தலைப்பை விட்டுச்செல்லும் விவாதங்கள் இந்த விவாதத்தின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும். விவாதம் என்றால் எப்படிவேண்டுமென்றாலும் விவாதம் செய்வது மட்டுமே அல்ல. கொடுக்கப்பட்ட தலைப்புக்கு ஏற்றபடி விவாதம் செய்வதே சரி. இரண்டு முரணான கருத்துக்களில் ஒன்றை சரி என்ன சொல்ல உதாரணங்கள் வேண்டுமானால் எப்படியும் கொடுக்கலாம். ஆனால் விவாதத்தின் தலைப்பை விட்டு செல்வது முறையல்ல.

ஆகவே ஏன் இறுதி கருத்து திரைப்படங்கள் அதிகம் இளைஞர்களை சீர்கேடுக்கிறது என்பது தான். இதற்காக திரைப்படங்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை திரைப்படங்களில் இருக்க கூடிய ஆபாசமும் இரட்டை அர்த்தங்களையும் தான் எதிர்க்கிறோம். ரோசம் உள்ள யாரும் அதை விரும்ப மாட்டார்கள்.

எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம். என்பது தான் ஏன் கருத்து.


ஆகவே நிச்சயமாக சினிமா இன்றைய இளைஞர்களை வழி கெடுக்கத்தான் பயன்படுகிறது என்று கூறி நிறைவு செய்கிறேன்!

நல்லதை புரிந்து கொள்ள கூடிய மனோபாவத்தை இறைவன் நமக்கு வழங்க வேண்டும்!

செல்வன் கொடுத்த குறிப்பை இப்போது இங்கு மீண்டும் பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன்!

Quote
குறிப்பு :
முதலில் விவாத மேடையின் நியதிகளை அனைவரும் முழுமையாக தெரிந்து கொண்டு வாதிடுவது இந்த விவாதப்பகுதியை சிறப்பானதாக்கி வைக்கும் என்பது எனது கருத்து.கனிவான முறையில் கருத்துக்களை  தெரிவிக்கும் நற்பண்பு அனைவருக்கும் கிடைக்க கடவுள் அருள் புரியவேண்டும்.   மேலதிகமாக விதண்டாவாதமாக செய்யப்படும்,தலைப்புக்கு சம்பந்தமில்லாத  விவாதங்களின் தரத்தை தீர்மானம் செய்யும் பொறுப்பை இந்த விவாதப்பகுதிக்கு வந்து வாசிக்கும் வாசகர்கள் & விவாதம் என்றால் என்ன என்று முழுமையாக உணர்ந்த நண்பர்களிடமே ஒப்படைத்து நிறைவு செய்கிறேன்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சபா ..... நீங்கள் சினிமாதான் உருவாகியது என்று சொனதற்கு பண்டைய காலத்தில் இருந்ததாக சொனேன் ......

அவர் கேட்டதற்கு அப்படி இல்லை என்று பதில் சொல்லி இருக்கலாமே மன நஷ்ட வழக்கு பத்தி யார் கேட்டார்கள் ...? நீங்கள் முடிலும் தவறான பதிவினை மேற்கொண்டுவிட்டு நம் மீதே அதை திருப்பிவிடும் சாமர்த்தியம் கொண்டு பெசுகின்றேர்கள் .... விவாதம் என்பது ஆதாரங்களை மையமாக கொண்டு வாதிடுவதும் தான் .... அதற்காக சில கருத்துகளை முன் வைப்பதில் தவறு இருபதாக எனக்கு தெரியவில்லை ...

எளிமையாக சினிமா கெடுகிறது கெடுக்கவில்லை ... இப்படி கூறுவதற்கு விவாத மேடை அவசியமில்லை  ....விவாதம் என்பது கருத்தை சொல்வது அதை படி அலசுவது .. ஆதாரங்களை முன் வைப்பது ... விளக்கம் சொல்வது ...  சொல்வது.... வெறும் கருத்தை மட்டும் சொலிட்டு போக இது பட்டிமன்றமில்லை .....   உலகத்தில் ஆயிரம் நன்மைகள் நடக்குது ஆனா அதெல்லாம் வெளியே வரதில்லை 10  தீமை நடக்கிறது அது உடனே  வந்துவிடும்... அது போல் தான் .... சினிமாவால் நடக்க கூடிய நடந்திருக்க கூடிய நன்மைகள் யாரும் வெளியே  அதிகம் சொலவில்லை ... எதாவது ஒன்று அவர்கள் விளக்க கோளாறால் ஏதோ ஒன்றால் நடை பெற்றால் அது வந்துவிடும்... அது பட்டியளிடபட்டு புள்ளி விபரமாக வந்து விடும் அது நீங்கள் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சினிமா சீர்கேடுகின்றது செர்கேடுகின்றது என்று சொல்லியே காலத்தை ஓட்டுறீங்க ....

முதல் சினிமா என்றால் என்ன ...... அதை தெளிவு படுத்தி கொண்டு விவாதத்தில் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைகின்றேன் ....

மற்றவர்  கருத்துகளை புரிந்து கொள்ளும் மன வலிமையையும் அதை ஏற்றுகொள்ளும் மனோ திடத்தையும் எல்லோருக்கும் கொடுத்தருளு இறைவா ...!!!!
                    

Offline Yousuf

Quote
சபா ..... நீங்கள் சினிமாதான் உருவாகியது என்று சொனதற்கு பண்டைய காலத்தில் இருந்ததாக சொனேன் ......

சரி பண்டைய காலத்தில் இருந்தது அது எத்தனை பேருக்கு தெரியும் எஞ்சேல்? சினிமாவை பார்த்துத்தானே கற்று கொண்டார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா? அல்லது மீண்டும் என்னை வரலாற்று பதிவுகள் படிக்க சொல்ல போகிறீர்களா?

Quote
அவர் கேட்டதற்கு அப்படி இல்லை என்று பதில் சொல்லி இருக்கலாமே மன நஷ்ட வழக்கு பத்தி யார் கேட்டார்கள் ...?

அவருக்கு ஒரு வரியல் சொன்ன பதில் புரியாத காரணத்தால் தான் மீண்டும் அதை விளக்கி சொல்ல வேண்டும் என்ற நிலை உண்டாகியது. உங்களை போன்று எல்லோராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியாது அல்லவா.

Quote
விவாதம் என்பது ஆதாரங்களை மையமாக கொண்டு வாதிடுவதும் தான்

நான் சினிமாவால் கேட்டு போகிறார்கள் என்பதற்கு சில ஆதாரங்களை கொடுத்தேன். ரெமோ கூட அதரங்களை மேற்கோள் கட்டினார். ஸ்ருதியும் செல்வனும் கூட ஆதாரங்களை மேற் கொள் கட்டினார்கள். ஆனால் நீங்கள் சினிமாவால் சீற்படுகிரார்கள் என்பதற்கு ஆதராம் கொடுத்தாதாக தெரிய வில்லையே. பிறகு நீங்களே விவாதம் ஆதாரங்களை மையமாக கொண்டது என்று கூறுகிறீர்கள். உங்கள் வாதம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதே.

Quote
எளிமையாக சினிமா கெடுகிறது கெடுக்கவில்லை ... இப்படி கூறுவதற்கு விவாத மேடை அவசியமில்லை

நான் உங்களை எளிமையாக சொல்ல சொல்லவில்லை ஆனால் விவாத தலைப்பை திசை திருப்பாமல் விவாதத்தை தொடர சொன்னேன். இதை நான் மட்டும் சொல்ல வில்லை ஏற்கனவே நீங்கள் விவாத தலைபிற்கு சமந்தம் இல்லாதம் வாதம் செய்த காரணத்தால் செல்வனும் சொல்லி இருக்கிறார் அதையும் நான் மேற்கோள் கட்டியுள்ளேன்.

Quote
அது போல் தான் .... சினிமாவால் நடக்க கூடிய நடந்திருக்க கூடிய நன்மைகள் யாரும் வெளியே  அதிகம் சொலவில்லை.

யாரும் சொல்லாத காரணத்தால் எங்களுக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். நீங்கள் அதற்காக வாதிடுகிற காரணத்தால் உங்களுக்கு அதனால் ஏற்பட்ட நன்மை தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்புள்ளது. இதுவரை அந்த நமைகளை நீங்கள் குறிப்பிட வில்லை அந்த நமைகளை அறிந்துவைத்திருப்பவர் என்ற அடிப்படையில் உங்களிடம் கேட்கிறேன் அதை பட்டியலிடுங்கள் அறியாத நாங்களும் அறிந்து கொள்கிறோம்.

Quote
அது பட்டியளிடபட்டு புள்ளி விபரமாக வந்து விடும் அது நீங்கள் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சினிமா சீர்கேடுகின்றது செர்கேடுகின்றது என்று சொல்லியே காலத்தை ஓட்டுறீங்க ....

இந்த பதில் எனக்கு விந்தையாக உள்ளது அடிப்படை  ஆதரங்களுடன் உங்களுக்கு அதன் தீமையையும் அதன் வக்கிரங்களையும் எடுத்து காட்டிய பின் அதில் எவ்வளவு ஆபாசங்கள் உள்ளது இரட்டை அர்ந்தங்கள் படுக்கை அரை கட்சிகள் உள்ளது என்பதையும் தெளிவாக உங்களுக்கு சொல்லியும் அதை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா ரோசம் உள்ளவன் பார்பானா என்று கேட்ட பின்னும் நீங்கள் அதன் விபரீதத்தை புரிந்து கொள்ள வில்லை என்றால் அது எங்களின் தவறு கிடையாது உங்களுக்கு புரிதலில் உள்ள கோளறு என்று தான் சொல்ல வேண்டும் என்று தோனுகிறது.

Quote
முதல் சினிமா என்றால் என்ன ...... அதை தெளிவு படுத்தி கொண்டு விவாதத்தில் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைகின்றேன் ....

சினிமா என்பதற்கு உங்களை போல் எங்களுக்கு வரைவிலக்கணம் எல்லாம் தெரியாது இருந்தாலும் அது மக்களை குறிப்பாக இளைஞர்களை சீர்கேடுக்கிறது என்பதை மட்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும் ஏஞ்செல்.

நீங்கள் வாதிடுவதில் இருந்து ஒன்று புரிகிறது ஆபாச கட்சிகள் தவறில்லை, இரட்டை அர்த்த வசனங்கள் தவறில்லை, படுக்கை அரை காட்சிகள் தவறில்லை, வன்முறைகள் தவறில்லை எப்படி வேணுமானாலும் படம் எடுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை அதை விமர்சிக்க தேவை இல்லை விமர்சிப்பவர்கள் பழமை வாதிகள் என்று கூறுவீர்கள் என்று தோனுகிறது ஏஞ்செல்.

சமுதாயத்தில் நிலவக்கூடிய தவறுகளை ஒருவன் சுட்டி காண்பித்தால் அதை ஆதரிப்பதை விட எதிர்க்க கூடியவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என்பது தெரிந்ததே அந்த விடயத்தில் நீங்கள் வாதிட்டது ஒன்றும் எங்களுக்கு புதிய விடயம் அல்ல.

இறுதியாக ஒன்றை கூறி ஏன் வாதத்தை நிறைவு செய்கிறேன். சினிமாவால் இளைஞர்கள் சீர்கேடுகிரார்கள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்பதையும் இந்த சினிமாதான் ஏனைய தவறுகளின் தாயச்சபை என்பதிலும் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


சத்தியத்தை மட்டுமே சொல்லுவோம் அந்த சத்தியத்தின் வழியில் எங்கள் வாழ்கையை நடத்த எல்லாம் வல்ல இறைவன் எங்களுக்கு அருள்புரிய வேண்டும். இங்கு வந்து இந்த விவாதத்தை பார்வையிடும் வாசகர்களுக்கு எது சத்தியம் என்பதை அடையாளம் காணும் வாய்ப்பையும் இறைவன் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
shruthi sinnathu
Quote
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது


naan sonathu
Quote
yah suruthiyoda karuththukala naan eettrukolkiren


யோசுப் விவாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறிய கருத்தி நீங்கள் உள்வாங்கி இருக்கவில்லை ..... சுருதி சொன்ன மேற்கண்ட கருத்தை நான் ஆமோதித் திருந்தேன் .... அதாவது கேட்டு போக சினிமாவும் ஒரு காரணம் என்று ....சினிமா மட்டுமே காரணம் இல்லை என்று ..

அடுத்து வந்த விவாதங்களில் நீங்கள் சினிமா முற்று முழுதாக கெடுப்பதாக சொன்னிர்கள் ...  அதனால் எதிர் வாதம் செய்யவேண்டிய நிலைமைக்கு ஆளானேன் . விவாதத்துக்கு சமந்தமிலாமல் நான் பேசுவதாக சொல்கின்றீர்கள் .. சில விளக்கங்கள் இல்லாமல் நீங்கள் பேசுகின்றீர்கள் இத்தோ ...

சினிமா தோற்றம் - சினிமா என்பது தோற்றம் பெறுவதற்கு முன்னர் அதன் வடிவம் வேறொன்றாக இருந்தது ....  மன்னர் காலத்திலே ... மன்னர்கள் தங்கள் உடல் களைப்பையும் உள்ளத்து சங்கடங்களையும் ஆட்சி சிக்கல்களையும் சற்று நேரம் மறப்பதற்காக மாதர்களை ஆட சொல்வதும் விகடங்களை கேட்டு சிரிப்பதும் மல்யுத்தம் செய்வித்து வென்றவர்க்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார்கள் .... அதன் வழியே பினாலிலே அது மக்கள் மத்தியில் தெரு கூத்துக்கலாகவும் ... மேடை நாடகங்களாகவும் தோற்றம் பெற்றன .....அங்கேயும் நாள் முழுதும் உழைத்து களைத்த மக்கள் தங்கள் கவலைகள் உடல் வேதனை மறந்து சந்தோசமாக இருக்க அது காரணமாக இருந்தது .....

இது எல்லாம் நவீன மயபடுத்து 1917  ல   அதை திரை படமாக வெளியிடார்கள் ..... முதலில் ஊமை படம் அதன் பின்பு பேசும் படம் -.... இப்படி ஆரம்பித்து பரிணாமம் பெற்று இன்று விஸ்வ ரூபம் எடுத்து இருக்கிறது .... சினிமா தோற்றுவிக்க பட்ட காரணம் பொழுது போக்குதானே தவிர வேறு ஒன்றும் இல்லை ....

அப்டி தோற்றம் பெற்ற சினிமாவில் நல்ல கருத்துக்கள் இடம் பெற வேண்டும் என நினைத்த அதன் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள்
வரலாற்று கதைகள் சமுக சிந்தனைகளை புகுத்தினார்கள் .... வெறும் கருத்துகளை சொன்னால் அது மக்கள் மத்தியில் எடுபடாது என்று ..அதில் காட்சி மிகைபடுதலை புகுத்தி அதிசயம் ..ஆச்சர்யம் ...இன்பம் இவற்றோடு சமுக கருத்துகளையும் கொடுத்தார்கள் ....
பொழுது போக்காக ஆரம்பிக்கபட்ட சினிமாவில் கால போக்கில் இப்படிதான் கருத்துகள் உள்வாங்கபட்டு சமுகத்திற்கு எளிதில் கொண்டு செல்ல பட்டது .....

இன்று அது விஞ்ஞான வளர்ச்சியின் எடுத்துகாட்டாக விளங்குகின்றது ..... சமுதாயத்தின் மிக பெரிய பொழுது போக்கு சாதனம் இது ....
அரம்பிக்பட்ட நோக்கம் பொழுது போக்கு ..... அன்று மக்கள் அதை பொழுது போக்காக மட்டும் தான் பார்த்தார்கள் ..... இன்றும் பலர் அப்படிதான் பார்கின்றார்கள் .....

சினிமா என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக வாழ்வில் ஒன்றி விட்டது இதை தடுக்க நிறுத்தி வைக்க யாராலும் முடியாது ... அப்படி பட்ட சாதனம் பற்றிய தெளிவான விளக்கம் நம் மக்கள் மத்தியில் இல்லாமல் போனதுதான் நீங்கள் சொன்ன சினிமா சீர்கேடுகளுக்கு காரணம் ....பகுத்தறிவு வாதியென்று பேத்தி கொள்ளும் மனிதனும் 6  அறிவு என்று சொல்லி விலங்கில் இருந்து பிரித்து மனிதன் என்று சொல்லி பெருமை படும் மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயங்களில் சிந்திக்க தவருவதானல்தான் சினிமா சீர்கேடுகள் ....

நன்மைகளுகுள் தீமையும் தேமைகளுகுள் நன்மையையும் கலந்து இருப்பது வழக்கம் .... நாம்தான் அதில் நல்லவற்றை கற்று கொள்ள வேண்டும் ....

யோசுப் நீங்கள் கேட்டீர்கள்  விபரம் கொடுக்க சொல்லி .....

1 ) இயேசு காவியம்   ..... எத்தனை பேருக்கு தெரியும் .... அதை திடைபடமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தது ...?
2 ) கட்ட பொம்மன் ....... எதனை பேருக்கு தெரியும் -----அதை திடைபடமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தது ...?
3 ) கப்பல் ஒட்டிய தமிழன் ....எதனை பேருக்கு தெரியும் -----அதை திடைபடமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு வந்தது ...?
4 )நாடோடி -- தாழ்த்தபட்ட சமுதாய வெளிபாடு ....
5 )  இப்படி பல திரை படங்களை சொல்லலாம் ..

தற்போது வரும் திரை படங்கள் ---
1 ) 7m அறிவு - ஒரு தமிழன் வாழ்ந்திருகின்றான் என்ற தகவலை கொடுத்த படம்
2 ) தெய்வ திரு மகன் -  மனவளர்ச்சி குன்றிய ஒருவனது கதை   அதில் அதைப்பற்றி எவளவு தவகல்கள்
3 ) எங்கேயும் எப்போதும் -  வாகனத்தை ஓட்டும் ஒவொருவருக்கும் ஒரு பாடம்
4 ) பசங்க -  பாடசாலைகளில் ஏற்பட கூடிய மனவேறுபாடுகள் .
5 ) காதல் கோட்டை- காதலின் சக்தி காதல்ன என்ன ....
6 ) ரோபோ இந்திரன் - விஞ்ஞானத்தின் பரிணாம வளர்ச்சி
10 )சிங்கம்  - போலிஸ் எப்படி இருக்கனும்
11 ) வேலாயுதம் - ஒவோருவனுகுளும் இருக்கவேண்டிய நாட்டு பற்று
12 ) ஜெயஹிந்த் - தீவிரவாதம் அதன் தாக்கம் ,, நாட்டு பற்று
13 ) படையப்பா -- துரோகம்  ஆணவம் இவற்றுக்கு சரியான பாடம்
14 ) அண்ணாமலை - நண்பனுக்கு துரோகம் பாணின என்ன ஆகும்
15 ) சந்திரமுகி - மனதின் ஆளுமையால் ஏற்பட கூடிய விபரீதம்
16 ) வல்லவா - காதல் எப்டி இருக்கனும் --- காதல்கு வயது வேறுபாடு இல்லை
17 )தளபதி - நட்ப்பு 
18 ) மன்மதன் - பாவத்தின் சம்பளம் மரணம் ....  பாதிக்க பட்டவன் பதில் கொடுப்பான் .
19 ) அம்பா சமுத்திரத்தில் அம்பானி - முயற்சி உயர்வை கொடுக்கும் ..
20 ) திண்டுக்கல் சாரதி -  தாழ்வுணர்ச்சியின் பாதிப்பு
21 ) நாடோடிகள் - நண்பர்களின் உழைப்பு நட்பின் வலிமை உரிமை
22 ) கோவா -  அமைவதுதான் வாழ்க்கை .
23 ) மங்காத்தா -  தீய வழியில் சேர்க்கும் பணம் களவு போகும் ...
24 ) வியாபாரி - பணம் அல்ல வாழ்க்கை
25 ) காதல் - காதல் காதல் தோல்வி அதன் விளைவு

இப்படி ஒவொரு திரைப்படமும் தனக்குள்ளே நல்ல தெளிவான கருத்தை கொண்டு 2 .30  மணி நேரம் கதையாக கொடுக்க படுகின்றது ... அதில நீங்க சொல்ல கூடிய ஆபாச கட்சிகளோ மித மிஞ்சிய சண்டை காட்சிகளோ எவளவு நிமிடம் வருகின்றது -.... அதை கூட கதை அமைப்பின் உணர்ச்சி வேகத்தை குறைத்து ஒரு மிதமான மன நிலையில் வைபதர்காகதான் கொடுக்க படுகின்றது ....  கதையில் ஒன்றி போனவர்கள் இதை எல்லாம் கவனிப்பது அரிது ... அந்த நீரம் அதை ரசித்து பார்த்துவிட்டு வெளியே வருகின்றார்கள் ... வரும் ஒவோருவரிடமும் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டல் .. படம் சூப்பர் ... தல டக்கரா நடிசிருகாறு.-.. ஸ்டோரி சூப்பர் .... அழுதுட்டேன் ... என்ன  கதை .. என்ன கிளைமாக்ஸ் .... இப்டித்தான் சொளுகின்றார்கள் யாரும் என்ன பிகூர்...  சாங் எல்லாம் செம செக்ஸ்சி.... rape பண்ற ஸ்கின் சூப்பர் .... இப்டி ஏதும் சொல்றாங்களா .....? எங்கயோ ஒருவர் அந்த நிழலை நியம என நினைத்து கற்பனைகளை வளர்க்க போய்தான் அது வன்முறைகளில் முடிந்து விடுகிறது ...

திரைப்படங்களை பார்த்து மனம் திருந்தியவர்கள் மனங்கள் வந்து நான் திருந்திவிடேன் பத்திரிகையில் போடு என்று சொல்லாது ..
மாற்றம் என்பது சிறிதாக தான் தன் இலக்கை அடையும் .... ஆனால் தீமை என்பது தீ போல .அதனால் பாதிப்பு இருக்கும் எனப்டியால் அது மக்களை சென்றடைகிறது ... சினிமாவால் கொலை  சினிமாவால் கற்பழிப்பு சினிமாவால் கொள்ளை ... இப்படி எல்லாம் சினிமா சினிமா வாக வந்துவிடும் ஆராய்ந்து பார்த்தல் அவனுக்கு வீர ப்ரோப்ளேமாக இருக்கும் ...

நான் சொல்வதெல்லாம் 2 .30  மணி நேரம் காட்டப்படும் திரைபடத்தில் அங்கங்கே 1  நிமிடம்    கூட இடம் பெறாத கடி பதிவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மீதம் வரும் கதை என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா சீர்கேடு வர வாய்ப்பு இலது போய்விடும் ....

விமர்சனம் செய்கின்றேன் பேர்வழி என்று அந்த திரை படத்தில் வர கூடிய காட்சிகளை திரித்து இன்னும் ஆபாசத்தை தனது பேச்சில் கூட்டி பத்திரிகையில் வர கூடிய செய்திகளை பதிபவர்கள் .. அட நாம் நீற்று அதை பர்கவில்லையே .... அப்டி ஒன்று இருகிறதா என்று மறுபடியும் அந்தபடதிற்கு சென்று அந்த காட்சிக்காக காத்து கிடப்பார்கள் ..... எனவே சினிமாவை வெறும் பொழுது போக்ககா பாருங்கள் ..
அது நிழல் .... என்பதை புரிந்து கொண்டால் எந்த விதமான செர்கேடுக்கும் மனது இடம் கொடுக்காது .....

(திரைப்படத்தை பார்க்காமல் விடுவதனால் யாரும் யோகி ஆகிவிட முடியாது .... 100  பெண்கள் நிர்வாணமாக சூழ நினாலும் எவன் ஒருவன் சிந்தை பிறழாமல் இருகின்றானோ அவன்தான் யோகி.... எனவே மனோ திடம் எதிர் நீச்சல்  இவைதான் நம்மை சீர்கேடில் இருந்து பாதுகாக்கும் ... அது எதுவாக இருந்தாலும்  நம் மனோ திடத்தை வளர்த்து கொள்வோம்<<< இது என் கருத்து ) .


என் கருத்தை நான்  தெளிவாக கூறி விட்டேன் ....   இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..

இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!
« Last Edit: November 22, 2011, 12:03:04 AM by Global Angel »
                    

Offline thamilan

முதலில் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நான் சீர்படுதுகிறது என்று வாதாடவில்லை என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.விவாதத்தில் அது சீரழிக்கவில்லை என வாதாடுவதன் அர்த்தம் அது சீரழிக்கவில்லை என்பது தான்.
சினிமா சீர்படுத்துகிறதா இல்லை சீரழிக்கிறதா என்பது தான் கேள்வி. சீரழிக்கவில்லை என்று வாதடினால் அதன் பொருள் உங்களுக்கு புரியாவிட்டால் நான் என்ன பண்ண?


ரெமோ மச்சி,
குறை காண்பவன் எதிலும் காண்பான் என்பதுக்கு நீங்கள் சரியான உதாரணம். தெய்வத்திருமகனில் குறை சொல்ல உங்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை. உடனே அதில் நல்வழிப்படுத்த என்ன இருக்கிறது என்று கேட்டுவிட்டீர்கள்.

முதலில் ஒரு படத்தில் நல்வழிப்படுத்த என்ன என்ன இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு லிஸ்ட் போடுங்கள். அதன் பிறகு அதற்கு ஏற்றாப்போல படங்கள் இருக்கிறதா என்று யோசிக்கிறேன்.
அந்த படத்தில் என்ன சீர்திருத்தம் இருக்கிறது என்று கேட்டீர்கள். ஒரு ஊனமுற்றவன் என்றாலும் தன் பிள்ளை மேல் இருக்கும் பாசத்தையும்,பாசத்தை விட தன் பிள்ளையின் எதிர்காலம் முக்கியம் என்பதையும் அது உணர்த்தியது. உங்களுக்கு புரியாவிட்டாலும் ஒரு தகப்பன்னான எனக்கு அது புரிந்தது.

வாகை சூடவா இதில் தவறான விசயம் எதும் இல்லை என்று சொன்ன நீங்கள் அது கற்பனைக்கு எட்டாத விசயம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு படித்த இளைஞன் பட்டிக்காட்டில் போய் வேலை பார்ப்பது கற்பனைக்கு எட்டாத விசயமா? சரி இது கற்பனைக்கு எட்டாத விசயம் என்றே வைத்துக் கொள்வோம். சிகரட் பிடிப்பது மது அருந்துவது, காதலிப்பது எல்லாவற்ரையும் சினிமா எனும் கற்பனைக்கு எட்டாத இடத்தில் இருந்து தானே கற்றுக் கொண்டதாக சொல்கிறீர்கள். அப்போ இது போன்ற நல்ல விசயங்களையும் கற்றுக் கொள்ளத்தானே அந்த படம் சொல்கிறது? ஏன் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?

பேராண்மை படம் காட்டுவாசிகள் போன்ற ஒரு இனத்தினரை பற்றியது. அந்த ஜனங்கள் பேசுவது போல அல்லாமல் நகரத்தில் பேசுவது போல சுத்த தமிழும் ஆங்கிலம் பேசினால் இதே வாயால் நீங்கள் தான் குறை சொல்வீர்கள். அதையும் கற்பனைக்கு அப்பாட்பட்டது என்று சொல்வீர்கள்.


7ம் அறிவுக்கு யாரோ சொன்ன விமரிசனத்தை தந்து இருக்கிறீர்கள். அதை நான் வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தனிமனிதன் ஒருவனுடைய கருத்து.
சரி உங்கள் வாதப்படி நீங்கள் சிமரிசனத்தை சரி என்று சொல்வதாக இருந்தால் எங்கேயும் எப்போதும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமரிசனக் குழு முதன் முறையாக 50க்கும் அதிகமான மார்க் கொடுத்திருந்தது. எந்த படத்துக்கும் இல்லாத விதமாக 2 பக்கங்கள் அந்த படத்தை ஒரு குறையும் சொல்லாமல் பாராட்டி எழுதி இருந்தது. அதற்கு என்ன சொல்கிறீர்கள்.

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். பாரதியார், காமராஜர் போன்ற ந்ல்ல படங்களை எடுத்தார்கள். அது ஓடவில்லை. அதற்கு யார் காரணம். படத்தின் குற்றமா இல்லை மக்களின் குற்றமா?
நீங்கள் ஒரு பொருளை தயாரித்து விற்கிறீர்கள் அது தரமான பொருளாய் இருந்தும் அது விற்கவில்லை என்றால் என்ன பண்ணூவீர்கள். தரமான பொருள், நான் நஸ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று அதையே தொடர்ந்தும் தயாரிப்பீர்களா? இல்லை அதை மக்களுக்கு ஏற்றபடி மாற்றுவீர்களா? சினிமாவும் அப்படித்தான். நல்ல படங்கள் எடுத்தாலும் பார்க்க மாட்டீர்கள். மசாலா கலந்தாலும் குறை சொல்வீர்கள்.
மசாலா உடம்புக்கு கேடா.அப்போ கெடுதல் என்று மசாலா சேர்க்காமல் மீன் இறைச்சி எல்லாம் சும்மா அவிச்சி தான் சாப்பிடுகிறீர்களா ரெமோ மச்சி? கெடுதல் என்று நினைத்து எந்த ஒரு வீட்டில் சரி மசாலா பாவிக்காமல் இருக்கிறார்களா? உங்கள் பேச்சி வெறும் வாததுக்கு தான் சரி.

உங்களுக்கு இன்னும் பதில் சொல்வேன். எனக்கு தான் நேரம் போதாது.

யூசுப் மச்சி
நீங்கள் தான் ஒன்றுக்கு ஒன்று பொருத்தமில்லாமல் பேசுகிறீர்கள்.



கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்!இது நீங்கள் சொன்ன வார்த்தைகள்.

அதற்கு தான் நான்
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?

என்று கேட்டேன். அதற்கு நீங்கள்


இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்

இங்கு நான் கேட்டது சினிமாவை பற்றி அல்ல.சட்டத்தை நாம் கையில் எடுபது நியாயமா? அரசாங்கம் காவல் துறை எல்லாம் எதற்கு இருக்கிறது என்று கேட்ட நீங்களே இப்போது உங்ளுக்கோ உங்கள் உடன்பிறப்புகளுக்கோ ஏதும் நடந்த்தால் அரசாங்கத்தையோ காவல்துறையையோ எதிபார்க்காமல் சமாளிபீர்கள்.அப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போல சட்டதை கையில் நீங்கள் எடுக்கலாமா? அப்போதும் நீங்கள் காவல்துறையை தானே நாட வேண்டும்.
உங்கள் பேச்சு உங்களுக்கே ஒன்னுக்கொண்று முரண்பாடாக தெரியவில்லையா? உங்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் சட்டத்தை எதிர்பார்க்காமல் சமாளிப்பீர்கள். சினிமாவில் அபடி காட்டினால் அது தப்பு. அப்படித்தானே உங்கள் வாதம்
.

அடுத்தது நான் உங்களை 7ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நினைக்கவில்லை. நான் சொன்னது ஒரு உவமை. அதன் பொருள் உங்களுக்கு விளங்காவிடால் அது என் தப்பில்லை.
நாம் எதை பற்றி பேசுவதாக இருந்தாலும் அதை பற்றிய அடிப்படை அறிவு கொஞ்சம் சரி இருக்க வேண்டும். இல்லமல் பேசினால் எப்படி இருக்கும் என்பதற்கே அந்த உதாரணம். உதாரணத்துக்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் அதை உங்களுக்கு சொன்னதாக நினைக்கிறீர்கள்.வாதங்களுகெல்லாம் வழக்கு தொடங்குவார்கள் என்றால் முதலில் உங்களை தான் தூக்கில் தொங்கவிடுவார்கள்.



அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை திரைப்படங்களில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது நீங்கள் சொன்னது தானே மச்சி, இதற்குத்தான் நான் பதில் சொன்னேன்,

தலைப்பை விட்டு நீங்கள் வெளியே வரவில்லையா மச்சி? தேவை இல்லாமல் சகோதரியை உள்ளே கொண்டு வந்தீர்கள். அப்புறம் மானநஸ்ட வழக்கை கொண்டு வந்தீர்கள். நீங்கள் சொல்வதற்கு நாங்கள் பதில் சொன்னால் நாங்கள் தலைப்பை விட்டு வெளியே போகிறோம். அப்படித்தானே?

கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்

இதை நீங்கள் சொன்னதா நான் எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா? நான் மற்ற‌வர்கள் சொன்னதற்கு சொன்ன பதிலை உங்களுக்கு என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.

நிச்சயம் மறுக்கமுடியும். சினிமாவை எடுப்பது வேற்றுகிரகவாசிகள் அல்ல. மனிதன் தான். அவன் உலகில் நடப்பதை வைத்துதான் படம் எடுக்கிறான்.மனிதனுடைய வக்கிரமங்கள் அவன் மனதில் இருந்து எழுபவை. அதற்கு சினிமாவை காரணம் காட்டாதீர்கள்.ஆதாம் ஏவாள் காலம் தொடக்கம் காதல் இருந்தது. சினிமா என்ற ஒன்று வருமுன்னரே
ஆட்டங்கள் களியாடங்கள் இருந்தன. ரோம் சாம்ராட்சியமே இன்பபுரியாக விழங்கியது. மதுவும் மாதும் சர்வசாதாரணம் அங்கே, இதை நீங்கள் சரித்திரத்திலேயே படித்திருப்பீர்கள். ஒருவன் மனைவியை இன்னொருவன் கவர்வது, தனது மனம் கவர்ந்த பெண்ணை கவர்ந்து சொல்ல்வது இது நம் சரித்திரத்திலும் இருக்கிறது. ஏதோ சினிமா வந்த பிறகு தான் எல்லம் வந்ததாக கதை சொல்லாதீர்கள் யூசுப். நீங்கள் அடிக்கடி துணைக்கு கூப்பிடும் வாசகர்களுக்கும் சரித்திரம் தெரியும்.ஏன் சரித்திரத்திற்க்குப் போக வேண்டும்.
சவூதியில் சினிமா தியேட்டர் இல்லை. சவூதி அரசர் படம் பார்ப்பதில்லை. அவருக்கு ஒவ்வொரு நகரத்திலும் பெலஸ் இருக்கிறது. பெலஸ் அந்த காலத்தில் அந்தபுரம்.அங்கே அவருக்கு என்று 100 மேற்பட்ட பணிப்பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்காக தேர்ந்தெடுத்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர் சினிமா பார்த்தா அந்தபுரம் வைத்திருக்கிறார்? சினிமா பார்த்தா பெண்களுடன் சல்லாபிக்கிறார்?


பெற்றோருக்கு முன்னால் எந்த படத்தில் முத்தம் கொடுத்தார்கள் என்று கேட்டது உங்களை அல்ல. நீங்கள் வீணாக அடிக்கடி குழம்பிப் போகிறீர்கள்.

சினிமா என்பது உலகத்தை திருந்துவதற்காகவோ போதிப்பதற்காகவோ உண்டாக்கப்பட்டதல்ல. அது பொழுதுபோக்குக்காக உண்டாக்கப்பட்டது.உங்களைப்போல ஒரு சிலரை திருப்தி படுத்துவதற்காக படம் எடுத்தால் சினிமாதுறையே அழிந்த்திருக்கும். ஆபாசமில்லாமல், ஆடை குறைப்பு இல்லாமல் படம் எடுத்தால் இது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்பவர்கள் எதிலும் திருப்தி பட போவதில்லை.
« Last Edit: November 22, 2011, 01:44:32 AM by thamilan »

Offline Yousuf

Quote
யோசுப் விவாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறிய கருத்தி நீங்கள் உள்வாங்கி இருக்கவில்லை ..... சுருதி சொன்ன மேற்கண்ட கருத்தை நான் ஆமோதித் திருந்தேன் .... அதாவது கேட்டு போக சினிமாவும் ஒரு காரணம் என்று ....சினிமா மட்டுமே காரணம் இல்லை என்று ..

ஏஞ்செல் நீங்களே ஆரம்பத்தில் சினிமாவும் கேட்டு போக ஒரு காரணம் என்று கூறிவிட்டு இப்பொழுது அதையே மாற்றி பேசுகிறீர்களே இதை எப்படி ஏற்று கொள்வது. உங்கள் வாதம் மீண்டும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இதில் இருந்து நீங்கள் சினிமாவினால் கேட்டுபோவது ஒரு காரணம் என்று வாசகர்களுக்கு புரிய வைத்து விட்டீர்கள் ஏஞ்செல்.

அடுத்து சினிமா மட்டும் ஒரு காரணம் இல்லை என்று கூறி இருக்கிறீர்கள் ஏஞ்செல். இங்கு விவாதிக்க படுவது சினிமாவை பற்றி மட்டும் தான் ஏஞ்செல். மற்ற வழிகேடுகளை பற்றி இல்லை ஏஞ்செல். இதை மனதில் வைத்து பதிவை பதிவு செய்திருக்கலாம். இதுவே நீங்கள் தலைப்பை விட்டு தடம் புரண்டதர்க்கு தகுந்த சான்று. அதை நீங்களே ஒப்பு கொண்டுவிட்டீர்கள்.

ஆரம்பத்திலேயே எனக்கு சிரமம் இல்லாமல் நீங்களே ஒப்பு கொண்டதற்கு நன்றி ஏஞ்செல்.

சினிமாவை பற்றிய ஒரு வலற்று குறிப்பை கொடுத்துளீர்கள் ஏஞ்செல். நான் உங்களிடம் சினிமா எப்படி தோன்றியது என்ற வரலாற்றை எல்லாம் கேட்க்க வில்லை. சினிமா சீர்கேடுக்கிறதா இல்லையா? என்பதை தான் ஆதாரத்தோடு விளக்கும்படி கேட்டேன். நீங்கள் தேவை இல்லாமல் வரலாறை  பதிவு செய்து உங்கள் நேரத்தை வீனடித்துளீர்கள் ஏஞ்செல்.


Quote
சமுதாயத்தின் மிக பெரிய பொழுது போக்கு சாதனம் இது ....
அரம்பிக்பட்ட நோக்கம் பொழுது போக்கு ..... அன்று மக்கள் அதை பொழுது போக்காக மட்டும் தான் பார்த்தார்கள் ..... இன்றும் பலர் அப்படிதான் பார்கின்றார்கள்

இதில் நீங்கள் சினிமாவை பொழுதுபோக்காக கூறியுள்ளீர்கள் இன்றைய இளைஞர்களிடம் இந்த பொழுது போக்கு எப்படி இருக்கிறது தெரியுமா ஏஞ்செல். பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு கல்லூரி மற்றும் அலுவலகத்தை கட் அடித்து விட்டு இன்றைய இளைஞர்கள் சினிமாவிற்கு செல்வதை நாம் அன்றாடம் பார்த்து கொண்டிருக்கிறோம். ஒரு பொழுதுபோக்கை பொழுதுபோக்க வேண்டிய நேரத்தில் தான் செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு படிப்பை கெடுத்து கொண்டு வீட்டுக்கு தெரியாமல் பொய் சொல்லி விட்டு இன்றைக்கு எத்தனை இளைஞர்கள் திரை அரங்கிற்கு செல்கிரார்கள் இது தான் நீங்கள் சொன்ன சீற்படுத்துவதா? இதனால் யாருடைய படிப்பு பாதிக்க படுகிறது ஏஞ்செல்?

இப்பொழுது சொல்லுங்கள் இந்த திரைப்படங்கள் சீர்கெடுகிறத இல்லை சீர்படுத்துகிறதா என்று. மாணவர்கள் கட் அடித்து விட்டு திரை அரங்கு செல்வது நல்லதா? இது தான் நீங்கள் சொல்லும் பொழுது போக்கா? என்பதை இதை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் ஏஞ்செல்.


Quote
பகுத்தறிவு வாதியென்று பேத்தி கொள்ளும் மனிதனும் 6  அறிவு என்று சொல்லி விலங்கில் இருந்து பிரித்து மனிதன் என்று சொல்லி பெருமை படும் மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயங்களில் சிந்திக்க தவருவதானல்தான் சினிமா சீர்கேடுகள் ...

இந்த சீர்கேடுகளை தடுக்க கூடிய சிறந்த ஆயுதத்தை கையில் வைத்திருக்க கூடிய சினிமா துறை ஏன் இதை தடுக்க வில்லை ஏஞ்செல்? இதற்க்கு பெயர் தான் சுயநலமா? அல்லது சினிமா துறையில் இருப்பவர்கள் சிந்திக்க தவரிவிடார்களா? என்ன காரணம்.

நீங்கள் ஒரு பெரிய பட்டியலை போட்டு திரைப்படத்தின் கருத்தை சொல்லி இருகிறீர்கள் ஏஞ்செல் நான் இதை உங்களிடம் கேட்க வில்லை.
சீர்பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை தான் கேட்டேன் அதற்க்கு உங்களிடம் பதில் இல்லை என்பது தெரிகிறது. இருந்திருந்தால் பதிலை பதிவு செய்திருப்பீர்கள். இதையும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

நாம் பேசி கொண்டிருப்பது இன்றைய இளைஞர்களை பற்றி தான். பழைய திரைப்படங்களை பற்றி அல்ல அதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது. இன்றைய கால கட்டத்தில் உள்ள திரைப்படங்களை பற்றி  பேசுவதே தலைப்பிற்கு சரியானது.

நான்  பழைய படங்களை பற்றி எந்த குறையும் கூற வில்லை. ஆகவே இன்றைய திரைப்படங்களை பற்றிய கருத்தை மட்டுமே பதிவு செய்கிறேன்.

நீங்கள் பட்டியலிட்ட படங்களில் ஆபாசங்கள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்று உங்களால் கூற முடியுமா? இதையும் வாசகர்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.


Quote
(திரைப்படத்தை பார்க்காமல் விடுவதனால் யாரும் யோகி ஆகிவிட முடியாது .... 100  பெண்கள் நிர்வாணமாக சூழ நினாலும் எவன் ஒருவன் சிந்தை பிறழாமல் இருகின்றானோ அவன்தான் யோகி.... எனவே மனோ திடம் எதிர் நீச்சல்  இவைதான் நம்மை சீர்கேடில் இருந்து பாதுகாக்கும் ... அது எதுவாக இருந்தாலும்  நம் மனோ திடத்தை வளர்த்து கொள்வோம்<<< இது என் கருத்து ) .

 ஏஞ்செல் உங்கள் கவனத்திற்கு நான் எந்த இடத்திலும் என்னை யோகி என்று கூறிக்கொள்ள வில்லை என்பதை நினைவு படுத்துகிறேன்.  நான் ஒரு ஆசா பாசம் உள்ள உணர்ச்சிகள் உள்ள மனிதன் என்னை போன்று தான் பெரும்பான்மையான மனிதர்கள் இருப்பார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை ஏஞ்செல்.

நீங்கள் யோகி என்று நினைக்கிறேன் அதனால் தான் உங்களால் மட்டும் திரைப்படங்களில் உள்ள தவறான காட்சிகளை பார்த்து விட்டும், இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு விட்டும் வழிதவராமல் இருக்க முடிகிறது. இதே போன்று என்னாளோ அல்லது மற்ற மனிதர்களாலோ உங்களை போன்று யோகியாக இருக்க முடியாது ஏஞ்செல்.

இப்படி பட்ட கட்சிகளை பார்க்கும் போது மனம் தவறை நோக்கித்தான் செல்லும் இது தான் மனித மனம். இதை யாரும் மறுக்க முடியாது யோகிகளை தவிர. ஆகவே இந்த யோகி என்ற வார்த்தை உங்கள்ளுக்கு மட்டும் தான் பொருந்தும் எல்லா மனிதர்களாலும் தங்கள் இச்சைகளை கட்டுபடுத்த முடியாது. இது தான் நிதர்சனமான உண்மை. இதை வாசகர்கள் அறிவார்கள் என்பதை நம்புகிறேன்.

இப்படிப்பட்ட பலவீனம் உள்ள மனிதன் தவறான கட்சிகளை பார்க்கும் போது வழி பிறழ்வது இயல்பு. என் உட்பட நான் யோகி அல்ல உங்களை போன்று. ஆகவே இப்படி பட்ட கட்சிகளை பார்த்து வழி தவறுவதை விட இந்த கட்சிகளை பார்க்காமல் இருப்பதால் தேவையற்ற மன சஞ்சலங்களில் இருந்து தவிர்க்கலாம்.

உங்கள் கருத்துக்கான என் பதிலை கூறி விட்டேன் ஏஞ்செல்!


அடுத்து தமிழன் அவர்களின் விவாதத்திற்கு வருவோம்!

Quote
முதலில் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நான் சீர்படுதுகிறது என்று வாதாடவில்லை என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.விவாதத்தில் அது சீரழிக்கவில்லை என வாதாடுவதன் அர்த்தம் அது சீரழிக்கவில்லை என்பது தான்.

தமிழன் உங்கள் தமிழ் கற்றலில் கோளறு உள்ளது என்று நினைக்கிறன். இரண்டு வெவ்வேறான வார்த்தைகளின் அர்த்தத்தையே நீங்கள் மாற்றி சொல்கிறீர்களே. ''சீரளிக்கவில்லை" "சீற்படுத்துகிறது" என்ற இந்த வார்த்தைகள் எப்படி ஒரே அர்த்தம் உள்ள வார்க்த்தைகள் ஆகும்?

 சீரளிக்கவில்லை என்றால் அது கெடுக்கவில்லை தவறு செய்ய தூண்ட வில்லை என்ற பொருளைத்தான் கொள்ளலாம்.

சீற்படுத்துகிறது என்றால் வாழ்க்கையை நெறி படுத்த சத்திய பாதையில் செல்ல உதவி இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

இந்த வெவ்வேறான  இரண்டு வார்த்தைகளும் எப்படி ஒரே வார்த்தையாக முடியும். இதில் இருந்து எனக்கு ஒன்று தெரிகிறது தமிழன் உங்கள் தமிழில் கோளாறு உள்ளது  என்று புரிகிறது. இதை வாசகர்களின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.


Quote
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை உள்ளது தமிழன். அதில் சட்டத்தில் இடமும் உள்ளது அவர்களை பாதுகாக்க தற்காப்பிற்காக கொலை செய்வது தவறல்ல என்பது சட்டம். உங்களுக்கு சட்டம் தெரியவில்லை தமிழன் அதற்க்கு பதிலாக நிறைய படங்களை தெரிந்து வைத்துளீர்கள் ஆனால் அதன் பயன் ஒன்றும் இல்லை போல தெரிகிறது  இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கேள்வி உங்கள்ளுக்கு எழும்பி இருக்காது.

படங்களை பார்த்து தெரியாத இதை நீங்கள் நல்ல புத்தகங்களின் மூலமாக தெரிந்து வைத்திர்க்கலாம். இப்போது உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். அடுத்த முறை முயற்சி செய்யுங்கள் தமிழன்.


Quote
அடுத்தது நான் உங்களை 7ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நினைக்கவில்லை. நான் சொன்னது ஒரு உவமை. அதன் பொருள் உங்களுக்கு விளங்காவிடால் அது என் தப்பில்லை

நீங்கள் கொடுத்த உவமை எனக்கு பொருந்தாது என்பது வாசகர்கள் அறிந்த ஒன்று தான் என்று நினைக்கிறேன். இனி மேலாவது உவமை கொடுக்கும் பொழுது எனக்கு பொருந்தகூடிய உவமையாக கொடுக்க முயற்சி செய்யுங்கள் தமிழன்.


Quote
வாதங்களுகெல்லாம் வழக்கு தொடங்குவார்கள் என்றால் முதலில் உங்களை தான் தூக்கில் தொங்கவிடுவார்கள்.

இந்த பதிலை பார்த்து விட்டு நான் சிரிக்கத்தான் செய்தேன். இதை என்னவென்று சொல்வது. சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு விடயத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க நினைத்த எனக்கு தூக்கு தண்டனை என்றால். சமுதாயத்தை சிந்திக்க விடமால் தவறை சரி என்று வாதிடக்கூடிய உங்கள்ளுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்?

சத்தியத்தை கூறுவதற்கு தூக்கு என்றால் அந்த தூக்கு கயிறை வரவேற்கிறேன்!!!

சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்.


Quote
சவூதியில் சினிமா தியேட்டர் இல்லை. சவூதி அரசர் படம் பார்ப்பதில்லை. அவருக்கு ஒவ்வொரு நகரத்திலும் பெலஸ் இருக்கிறது. பெலஸ் அந்த காலத்தில் அந்தபுரம்.அங்கே அவருக்கு என்று 100 மேற்பட்ட பணிப்பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்காக தேர்ந்தெடுத்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர் சினிமா பார்த்தா அந்தபுரம் வைத்திருக்கிறார்? சினிமா பார்த்தா பெண்களுடன் சல்லாபிக்கிறார்?

இது எப்படி இருக்கிறது என்றால் சவுதியை பற்றி நீங்கள் மட்டும் தான் அறிந்தவர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது போல் உள்ளது.
ஒரு பல மொழி சொல்வார்கள் "கேட்பவன் கேனயனாக இருந்தால் கேப்பையில்  நெய் வடிகிறது என்று சொல்வான்" என்பதாக. நீங்கள் எங்களை எல்லாம் ___________ ஆகா நினைத்து கொண்டீர்கள் போல தமிழன். அதனால் தான் இப்படி ஒரு செய்தியை இட்டு கட்டுகிறீர்கள்.

இதை போன்று சவுதியில் ஒன்றும் நடக்க வில்லை என்பது எனக்கும் தெரியும் சவுதியை பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும்.

சவுதியில் சட்டங்கள் கடுமையாக உள்ளதால் தவறுகள் குறைவு இந்தியாவை ஒப்பிடும் பொது என்று நான் கூறியதற்கும் நீங்கள் சொன்ன இந்த விளக்கத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. இதை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்பிகிறேன். ஏனென்றால் உங்கள் விளக்கத்தை படித்த வாசகர்கள் தான் இதை கூட எனக்கு சொன்னார்கள்.


Quote
சினிமா என்பது உலகத்தை திருந்துவதற்காகவோ போதிப்பதற்காகவோ உண்டாக்கப்பட்டதல்ல. அது பொழுதுபோக்குக்காக உண்டாக்கப்பட்டது.

நான் ஏற்கனவே கூறியது போன்று பொழுதுபோக்கு என்பது நம்முடைய கடமைகள் போக மீதம் இருக்க கூடிய நேரத்தில் செய்வது. இன்றைய இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் கல்லூரிகளையும் பள்ளி கூடங்களையும் கட் அடித்து விட்டு நீங்கள் சொல்ல கூடிய பொழுதுபோக்கிற்கு செல்கிறார்கள் இதற்க்கு பெயர்தான் பொழுதுபோக்கா?

தங்கள் வாழ்கையை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் தலைவா என்ற கோசத்துடன் படிப்பை கவனிக்காமல் தாய் தந்தையை ஏமாற்றி விட்டு சினிமாவிற்கு சென்று படிப்பிற்கு காசு வங்கியாதாக சொல்லி அந்த பணத்தை சினிமாவில் சீரழிக்கும் இளைஞர்களுக்கு இது தான் பொழுதுபோக்கா?

இதைதான் நீங்கள் சொல்லும் சினிமா இளைஞர்களுக்கு கற்றுகொடுத்து சீற்படுத்துகிறது என்று வாதாடுகிறீர்களா?

கடைசியாக ஒன்றை சொல்கிறேன் தமிழன் நீங்கள் வாதாடும் இந்த தீமையை சரி என்று யாரவது பார்த்து தங்கள் வாழ்கையை கெடுத்து கொண்டார்கள் என்றால் நிச்சயம் அந்த பாவத்தின் பங்கில் உங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை சொல்ல கடமை பட்டுள்ளேன்.


ஆகவே நீங்கள் அறிந்துகொண்டே சத்தியத்தை அசத்தியத்தொடு கலக்காதீர்கள். நிச்சயாமாக அசத்தியம் அழியக்கூடியது. அசத்தியம் அழிந்தே தீரும்.

சத்தியம் நிச்சயமாக என்றும் வெல்ல கூடியது!!!
« Last Edit: November 23, 2011, 02:53:18 PM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ini naan ingu vaathiduvathaaga illai..... mukkiyamaa naan onru solla virumbukiren... thayavu seithu thangal sontha karuthukalai pakirnthu kolungal..... aduthavar karuththai pathivu seivathai thavirthu kolungal....

ADUTHAVARKKU KARUTHTHU SOLBAVARKAL THANKAL SONTHA NICK IL PATHIVINAI MERKOLVATHU NALAM. MATARAVARKALAI SONTHAMA SINTHIKA VIDAVUM  :)
                    

Offline Yousuf

ஏஞ்செல் நான் யாருடைய கருத்தை சொல்கிறேன் என்று சொல்கிறீர்கள். எனக்கு சொந்தமாக மூளை இல்லை என்று நினைத்து கொண்டீர்களா ? அடுத்தவரின் கருத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன். உங்களுக்கு உண்மையை ஏற்றுகொள்ள கசக்கிறது என்றால் அதற்காக இது அடுத்தவரின் சிந்தனை என்று சொல்வீர்களா?

அடுத்தவரின் கருத்து இது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? உண்மையை ஏற்றுகொள்ள முடியவில்லை என்றால் இப்படித்தான் சொல்வீர்களா?

ஏதோ எனக்கு சுயமாக மூளை இல்லாதது போல் அடுத்தவர்கள் சொன்னதை நான் பதிவு செய்தது போல் கருத்து சொல்லி இருகிறீர்கள்.

விவாதத்தை தொடர இயலவில்லை என்பதற்காக இப்படி தேவையல்லாத கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள் ஏஞ்செல்.

எது சத்தியமோ அதை எற்றோகொள்ள உங்கள் மனம் விரும்பவில்லை என்பதற்காக அடுத்தவர்கள் மேல் பழி சுமத்தாதீர்கள்.

சத்தியத்தை ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவத்தை உங்களுக்கும் எனக்கும் இதை பார்வையிடும் அனைவருக்கும் இறைவன் வழங்க வேண்டும்!!!
« Last Edit: November 23, 2011, 02:55:09 PM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 :)   yousuf ungal sontha karuththu alla ithu enave ungal sontha karuththai pathivu seiyungal<<<<<< ipadi naan kooravilaye yousuf...

as a mod aa pothuva solli irukinren ... eni varum pathivukal sirapaaga amaya vendum enbatharkaaga puthithaaga kalam irangubavarkum... iranga pobavarkum arivuruthal thats all...

muthalla naan onnu sonna athu unkalukka enru Uruthip paduththikkondu  unkal karuthukalai pathivu seivathu ... aduthavargalai manaulaichal padavaikamal irukkum  :)

Quote
என் கருத்தை நான்  தெளிவாக கூறி விட்டேன் ....   இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..

இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!

en pathivai naan anre niraivu seithuvidden.... :)
« Last Edit: November 23, 2011, 03:10:01 PM by Global Angel »
                    

Offline Yousuf

நீங்கள் இந்த பதிவை முதலிலேயே மேற்கொண்டு இருக்கலாமே இப்படி நான் என்னுடைய பதிவை மேற்கொண்ட பிறகு இப்படி ஒரு பதிவை மேற்கொண்டால்  என்னை சொல்கிறீர்கள் என்றுதான் கருத வைக்கும் ஏஞ்செல்.இதுவரை என்னமோ பதிவுகள் சிறப்பாக அமையாதது போலவும் இனிமே வரக்கூடிய பதிவுகள் சிறப்பாக அமைய போகிறது என்பது போலவும் இருக்கிறது உங்கள் பேச்சு ஏஞ்செல்.

என்னுடைய பதிவிற்கு பின்னல் உங்கள் சொந்த கருத்தை பதிவு செய்யுங்கள்  என்று கூறினால் என்னமோ நான் மூளை அற்றவன் அடுத்தவர்களின் பேச்சை கேட்டு பதிவு செய்கிறேன் என்பது போலல்லவா இருக்கிறது உங்கள் பேச்சு. அடுத்தவர்கள் கருத்தை ஏதோ மற்றவர்கள் கொண்டு வந்து பதிவு செய்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது.

அப்படி பார்த்தால் நீங்கள் சினிமா தோன்றியதற்கு ஒரு வரலாறு கொடுத்து உள்ளீர்களே  அது உங்கள் கருத்துதான அல்லது மற்றவர்கள் கருத்தை எடுத்து பதிவு செய்து இருக்கிறீர்களா என்பதை பார்க்க கூடியோய ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்.

உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதை முதலில் விடுங்கள்.

உண்மையை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

இப்படி இலைமறைகாயாக பேசுவதால் நீங்கள் சொன்னது சரி என்று ஆகாது ஏஞ்செல். இதையும் வாசகர்கள் பார்க்கட்டும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 :) yosuf

Quote
ini naan ingu vaathiduvathaaga illai.....


 
naan ipothuthan vanthen forumku ..... vanthathum pottuleen.... netru irave naan poduvathaaga irunthen ..... enathu pc yai naan clean seithu kondu irunthathaal naan forum post panna mudiyatha nilai apadiye vitutu thunki enthirichu vanthathum poten...


Quote
உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதை முதலில் விடுங்கள்

Quote
Quote
என் கருத்தை நான்  தெளிவாக கூறி விட்டேன் ....   இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..

இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!
en pathivai naan anre niraivu seithuvidden....


yosuf naan yar peyarum kuripidamal pottu ullen.... neengal yen unkalai eduthhu kolkinreerkal... neeththu oruvar thaan ithil pathivu seiya povathaga enakku koori irunthaar  avar nanbarudan athai patri pesi karuththu pathivu seivathaga sonaa... atharkuthan naan ithai pathivu seithen .... (intha vilakam naan unkalukku koora vemdiya avasiyamillai irunthum koori ullen... unkalukku avalavu santhegam enral adminidam kettu therinthu kolungal avar mesage paarthu solluvaar unmaya poiya enbathu:) )

Quote
உண்மையை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

muthalil neengal thelivu paduthikondu pesa katru kolungal... ithu neenkal matume post panra idamillai palarum post panra idam... nenkal thaniyaga pathivu seiyum idathil potu irunthaal athu unkalai saaduvathu polaagum.... inku poduvathu appadiyaagathu....

ipo unkal pathivuku pin remo pottu naan atharku aduthu pottu irunthaal removai sonen unkalai solla villai enru etru kolverkal pola.

MOD AAGA NAAN SOLLI IRUKINREN YAAR PEYARUM KUPRIPIDAAMAL.

muthalil unkalaithan elaarum ellam solkiraarkal enru paarpathai niruththi kollungal.

ithai patri melathikamaaga vivaathika eni naan virumbavilai...


                    

Offline thamilan

இதை நான் யாருக்கு பதிலாகவும் எழுதவில்லை.இது இந்த விவாதத்தை வாசிப்பவர்களுக்கு எங்களின் வாதத்தின் அடிபடை நோக்கத்தை தெளிவு படுத்தவே எழுதுகிறேன்.எங்கள் எதிரணியில் உள்ளவர்கள் (ஒரு திருத்தம் எல்லோரும் அல்ல.)
நான் பிடித்த முயலுக்கு ஒன்றரை கால் என்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தெளிவு படுத்துவதில் அர்த்தம் இல்லை. அதனால் வாசகர்களாகிய உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

முதலில் இந்த தலைப்பே ஒரு தவறான தலைப்பு. சினிமா என்பது முழுக்க ழுழுக்க ஒரு பொழுதுபோக்குக்காக ஆரம்பிகப்பட்டது.
மதம் இளைஞர்களை சீராக்குகிறதா இல்லை சீரழிக்கிறதா என்று கேட்டிருந்தால் அது அர்த்தம் உள்ள கேள்வி.அல்லது பத்திரிக்கைகள் சீரழிக்கிறதா சீர்படுத்டுகிறதா என்று கேட்டால் அதும் பொருந்தும். இவை மனிதர்களை நல்வழிப்படுத்த உண்டானவை.
இந்த கேள்விக்கே சம்மந்தம் இல்லாத ஒரு கருவை எடுத்து அது சீர்படுத்டுகின்றதா சீரழிக்கிறதா என்று கேட்டால் என்ன சொல்வது.
சினிமாவினால் தான் இன்றைய இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள், சண்டை போடுகிறார்கள்
என்று சொல்வது தவறு என்று தான் நாங்கள் வாதிடுகிறோம்.

சினிமாவை எடுப்பவன் சாதாரண மனிதன் தான். அவன் உலகில் நடப்பதை. கண்ணால் பார்ப்பதை பத்திரிகைகளில். செய்திகளில் வருவதை வைத்து தான் திரைக்கதையை அமைக்கிறான். படங்களில் நடப்பது மனித வாழ்வில் நடப்பது.அரைகுறை ஆடைகள் ஆபாச பேச்சிகள் எல்லாம் எங்கிருந்து வந்தது? படங்கள் இன்று தோன்றியதல்ல. 50, 60 களில் வந்த படங்களில் தொட்டு பேசாமல் காதல் காட்ட்சிகள் வந்தன. ஒரு ஆபாசமான வார்த்தைகள் இல்லாமல் படங்கள் வந்த்தன.
அந்த‌ கால‌த்திலும் ஒரு வ‌ருட‌ம் ஓடிய‌ ப‌ட‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌. அதை போல‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்தால் இப்போது எத்தனை பேர் பார்ப்பார்க‌ள்? ப‌ழைய‌ பாட‌ல்க‌ள் FMஇல் போனால் கூட‌ ரேடியோவை நிறுத்தும் கால‌ம் இது. கால‌த்துக்கு ஏற்றாற்போல‌ ப‌ட‌ம் எடுக்க‌ த‌யாரிப்பாள‌ர்க‌ளை தூண்டிய‌து இன்றைய‌ ச‌முதாய‌ம் தான்.
எல்லாவ‌ற்றிலும் நல்ல‌தும் இருக்கிற‌து கெட்ட‌தும் இருக்கிற‌து. 100% ந‌ல்ல‌து என்று எதும் இல்லை.ஒரு ம‌னித‌னுக்குள்ளேயே ந‌ல்ல குண‌மும் இருக்கிற‌து, கெட்ட‌ குண‌மும் இருக்கிற‌து.
இப்ப‌டிப்பட்ட‌ நிலையில் சினிமா சீர‌ழிக‌வே செய்கிற‌து.அதை பார்த்து தான் உல‌க‌த்தில் எல்லாமே ந‌ட‌க்கிற‌து.அதை பார்த்து தான் எல்லாம் கெட்டுப் போகிறார்க‌ள் என்று சொல்வ‌து ம‌ட‌மையாக‌ தெரிய‌வில்லையா?
சினிமா எத‌ற்காக‌ உண்டாக்க‌ப்பட்ட‌து என்று உதார‌ண‌ங்க‌ளுட‌ன் ரோஸ் விள‌க்கியும்.அதை புரிந்து கொள்ளாம‌ல் பேசுப‌வ‌ர்க‌ளுட‌ன் எதை விவாதிப்ப‌து?


"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
ஒருவனுடைய நல்ல குணத்தை ஆராய்ந்து அவனுடைய கெட்ட குணத்தையும் ஆராய்ந்து அவற்றுள் எது அதிகம் என்பதை அறிந்து எது அதிகமோ அதைக்கொண்டு நல்லவன் , கெட்டவன் என தீர்மானிக்க வேண்டும்.  இது வள்ளுவனின் வாய்மொழி


இது எதிர் அணியில் வாதாடிய‌ ந‌ண்ப‌ர் செல்வ‌ன் கொடுத்த‌ வாக்குமூல‌ம்.
எது அதிக‌மோ அதை கொண்டே ந‌ல்ல‌து தீய‌தை தீர்மானிக்க‌ வேண்டிய‌து. இது அவ‌ரே சொன்ன‌து.இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ஓடும் ஒரு திரைப‌ட‌த்தில் ஒரு கிள‌ப் டான்ஸ் ஒரு 5 நிமிட‌ம் வ‌ரும். ஒரு ச‌ண்டை காட்சி 10 நிமிட‌ம் வ‌ரும். ஆபாச‌ பேச்சுக‌ள் ஒரு சில‌ நிமிட‌ம் வ‌ரும். இந்த‌ ஒரு சில‌ நிமிட‌ம் போக‌ மிகுதி நேர‌ம் எல்லாம்?
செல்வ‌ன் சொன்ன‌ப‌டி பார்த்தால் தீமை குறைவும் ந‌ன்மை அதிக‌மும் தானே சினிமாவில் இருக்கிற‌து? அப்ப‌டி ப‌ட‌ம் முழுவ‌தும் ஆபாச‌மும் மோச‌மான‌ காட்சிக‌ளூம் இருக்கும் ப‌ட‌ம் என்றால் அவ‌ர்க‌ள் பார்த்த‌து வேறு மாதிரியான‌ ப‌ட‌ங்க‌ளாக‌த்தான் இருக்கும்.

நாங்க‌ள் சீர்ப‌டுகிற‌து என்று எந்த‌ புள்ளிக‌ளையும் கொடுக்க‌வில்லை தான். எங்க‌ள் வாத‌ம் வேறுவித‌ம். ஒருவ‌ன் கொலை செய்தான் என்று கோர்ட்டில் வ‌ழ‌க்கு தொட‌ர்கிறார்க‌ள். அந்த‌ குற்ற‌வாளி தான் கொலை செய்ய‌வில்லை என்று நிருபிக்க‌ தேவை இல்லை. அத‌ற்கு மாறாக‌ த‌ன் மேல் சாட்ட‌ப்ப‌ட்ட‌ கொலைக்கான‌ சாட்சிய‌ங்கள் த‌வ‌றென்று நிறுபித்தால் போதும். த‌குந்த சாட்டிய‌ங்க‌ள் இல்லாத‌தால் குற்ற்வாளியை நிர‌ப‌ராதி என்று நீதிப‌தி விடுத‌லை செய்வார். இது நீங்க‌ள் அனைவ‌ரும் அறிந்த‌தே.அதையே நாங்க‌ளும் ப‌ண்ணுகிறோம்.சினிமாவினால் ஒரு சில‌ர் சீர‌ழிந்திருக்க‌லாம். அது ஒரு சில‌ரே.
சினிமா பொழுது போக்குக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்டாலும் அதிலும் நிறைய‌ நல்ல‌ விச‌ய‌ங்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌.
ஒரு நல்ல‌தை சொல்லும் போது கெட்ட‌தை சொல்லி ந‌ல்ல‌தை சொன்னால் தான் அது எத‌னால் ந்ல்ல‌து என்ப‌து புரியும்.
ஒரு எய்ட்ஸ் ப‌த்திய‌ ப‌ட‌ம் எடுக்கும் போது அது எத‌னால் உண்டாகிகிற‌து? த‌டுக்க‌ என்ன‌ செய்ய‌லாம் என்று சொல்ல‌த்தானே வேண்டும்.அதை எல்லாம் காட்டாம‌ல் ப‌ட‌ம் எடுக்க‌னும் என்றால், எய்ட்ஸ் கேடு விளைவிக்கும் என்று எழுதித்தான் காட்ட‌ணும்.

சினிமா ம‌னித‌ர்க‌ள் இடையே விழிப்புண‌ர்ச்சியை தேற்றுவித்திருக்கிற‌து.
இது பொதுவா சினிமாவை ப‌ற்றிய‌து. த‌மிழ் சினிமா, ஆங்கில‌ச் சினிமா என‌ த‌ர‌ம் பிரிக்க‌ப்ப‌ட‌வில்லை. அத‌னால் ஆங்கில‌ப்ப‌ட‌ங்க‌லையும் உதார‌ணமா சொல்ல‌ல்லாம் என்று ந‌ம்புகிறேன்.

 எல்லோரும் Philadelphia என்றொரு அற்புதமான படத்தை மறந்து இருக்க முடியாது. AIDS அப்போதுதான் ஆரம்பித்த தருணம்.
அதைபற்றிய ஒரு அறிவும் இல்லாத காலத்தில் வந்த படம். அந்த படத்தை பார்த்து எவ்வளவு பேர் தங்கள் குறுகிய எண்ணங்களை மாற்றிக்கொண்டனர்?
ஜுராஸிப் பார்க் எனற‌ ப‌ட‌ம் வ‌ராவிட்டால் எத்த‌னை பேருக்கு அதை ப‌ற்றி தெரியும்?
ரோஸ் சொன்ன‌து போல‌, வீர‌பாண்டிய‌ க‌ட்ட‌பொம்ம‌ன்னின் வீர‌ம் ப‌டித்தை விட‌ ப‌ட‌த்தால் தானே நம் ம‌ன‌தில் நின்ற‌து.
காந்தியைப் ப‌ற்றி ஒரு ப‌ட‌ம் வ‌ந்த‌தால் தானே உல‌க‌மே அவ‌ர‌து வ‌ர‌லாறை அறிந்து கொண்டது?
பார‌தியார் பாட‌ல்க‌ளை நாம் பாட‌சாலைக‌ளில் ப‌டித்து ம‌ன‌தில் நிற்காத‌து அது ப‌ட‌த்தில் பாட‌லாய் வ‌ந்த‌தும் ம‌ன‌தில் நின்ற‌தே
.
ஆட்டோகிராப் ப‌ட‌த்தில் வ‌ந்த‌ "ஒவ்வொரு பூக்க‌ளுமே சொல்கிற‌தே" என்ற‌ பாட‌ல் கேட்டும் போதெல்லாம் ம‌ன‌தில் புத்துண‌ர்ச்சி ஊட்டுகிற‌தே! வாழ‌ விரும்பாத‌வ‌னுக்கும் வாழ‌ வேண்டும் என்ற‌ த‌ன்ன‌ம்மிக்கையை ஊட்டும் பாட‌லாயிற்றே அது.

க‌ல்யாண‌ம் க‌ட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற‌ பாட‌லை ம‌ட்டும் கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ல்ல‌ பாட‌ல்க‌ளை காது கேட்க‌ ம‌றுத்திருக்கும்.

போதிவ‌ர்ம‌ன் என்றொரு ம‌ன்ன‌ன் இருந்தான் என்ப‌து 7ம் அறிவு என்றொரு ப‌ட‌ம் வ‌ராம‌ல் இருந்திருந்தால் எத்த‌னை பேருக்கு தெரிந்திருக்கும்? அங்கே சீன‌ ம‌க்க‌ளுக்கு தெரிந்த‌ ந‌ம் நாட்டும‌ன்ன‌னைப் ப‌ற்றி ந‌ம‌க்கு தெரியாம‌ல் இருப்ப‌து கேவ‌ல‌மான‌ விச‌ய‌ம‌ல்ல‌வா?

ந‌ண்ப‌ர் செல்வ‌ன் சொன்ன‌து போல‌ கிள‌ப் டான்ஸ், துகில் உரியும் நட‌ன‌ம், எல்லாம் இருந்த‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ந்த‌ன‌. இல்லை என்று நாங்க‌ள் சொல்ல‌வில்லை. அது 70க‌ளில் வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் இருந்த‌ன‌.ஆனால் இன்று நில‌மையே வேறு.
அப்ப‌டிப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள் எடுத்தால் ஓடாது என்று த‌யாரிப்பார்க‌ள் தெரிந்து கொண்டார்க‌ள்.இப்போது வ‌ரும் ப‌ட‌ங்க‌ளில் க‌தைக்கே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கிறார்க‌ள்.
சில‌ர் எப்போதோ வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டு, ப‌ட‌ம் பார்ப்ப‌தையே நிருத்திவிட்டு இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளை ப‌ற்றி பேசுவ‌து வேடிக்கையாய் தெரிய‌வில்லை?



ச‌ரி இப்போது யூசுப், உங்க‌ளின் வாத‌ங்க‌ளுக்கு என‌து நிறைவான‌ ப‌திலை சொல்லி இத்துட‌ன் முடிக்கிறேன்.

முத‌லில் நீங்க‌ள் முன்னுக்கு பின் முர‌ணாக‌ பேசுவ‌து உங்க‌ளுக்கே தெரிய‌வில்லை.

கெட்டவர்களோடு கதா நாயகன் சண்டை போடுவது நல்லது என்று நீங்கள் கூறுகிறீர்கள் இப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் பிறகு எதற்கு ஒரு அரசாங்கம் காவல் துறை எல்லாம்? நீங்கள் கூறுவது நன்றாக இருக்கிறது ஆனால் நடை முறை சாத்தியம்மில்லை தமிழன்

இது நீங்க‌ள் சொன்ன‌து. அத‌ற்கு நான் சொன்ன‌ ப‌தில்:

உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?


இத‌ற்கு உங்க‌ள் ப‌தில் இதோ

இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு  பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.

நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை



அத‌ற்கு நான் உங்க‌ளிட‌ம் கேட்ட‌து,

இங்கு நான் கேட்டது சினிமாவை பற்றி அல்ல.சட்டத்தை நாம் கையில் எடுபது நியாயமா? அரசாங்கம் காவல் துறை எல்லாம் எதற்கு இருக்கிறது என்று கேட்ட நீங்களே இப்போது உங்ளுக்கோ உங்கள் உடன்பிறப்புகளுக்கோ ஏதும் நடந்த்தால் அரசாங்கத்தையோ காவல்துறையையோ எதிபார்க்காமல் சமாளிபீர்கள்.அப்போது நீங்கள் என்னிடம் கேட்டது போல சட்டதை கையில் நீங்கள் எடுக்கலாமா? அப்போதும் நீங்கள் காவல்துறையை தானே நாட வேண்டும்.
உங்கள் பேச்சு உங்களுக்கே ஒன்னுக்கொண்று முரண்பாடாக தெரியவில்லையா? உங்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் சட்டத்தை எதிர்பார்க்காமல் சமாளிப்பீர்கள். சினிமாவில் அபடி காட்டினால் அது தப்பு. அப்படித்தானே உங்கள் வாதம்



இதற்கு நீங்க‌ள் என்ன‌ சொல்லியிருக்கிறீர்க‌ள் என‌ பாருங்க‌ள்

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமை உள்ளது தமிழன். அதில் சட்டத்தில் இடமும் உள்ளது அவர்களை பாதுகாக்க தற்காப்பிற்காக கொலை செய்வது தவறல்ல என்பது சட்டம். உங்களுக்கு சட்டம் தெரியவில்லை தமிழன் அதற்க்கு பதிலாக நிறைய படங்களை தெரிந்து வைத்துளீர்கள் ஆனால் அதன் பயன் ஒன்றும் இல்லை போல தெரிகிறது  இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கேள்வி உங்கள்ளுக்கு எழும்பி இருக்காது

ப‌ட‌த்தில் ச‌ண்டை போடுவ‌து பிழை ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ல‌மா என்று கேட்ட‌ நீங்க‌ளே, த‌ன் குடும்ப‌தை காப்பாற்ற‌ கொலையும் செய்ய‌லாம் அத‌ற்கு ச‌ட்ட‌த்தில் இட‌மும் உண்டு என்றும் கூறுகிறீர்க‌ள், உங்க‌ள் வாத‌ம் உங்க‌ளுக்கே வேடிக்கையாக‌ தெரிய‌வில்லையா? நீங்க‌ள் ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ ச‌ட்ட‌த்தையும் துணைக்கு கூப்பிடுகிறீர்க‌ள். அதையே ப‌ட‌த்தில் காட்டினால் ம‌ட்டும் த‌வ‌று. அருமையான‌ வாத‌ம் யூசுப்.

உங்க‌ள் ஒரு சில‌ வாத‌ங்க‌ளை பார்க்கும் போது உங்க‌ளை நீங்க‌ள் நினைத்த‌து போல‌ 7ம் வ‌குப்பு மாணவ‌னுக்கு ச‌ம‌மாக‌ நினைத்த‌து கூட‌ த‌வ‌று போல‌ தான் தேன்றுகிற‌து.



சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்.


இது சினிமாவின் த‌வ‌ற‌ல்ல‌. ப‌டிக்கும் போது ப‌டிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய‌ உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ரின் குற்ற‌ம். நாங்க‌ளும் ப‌டித்தோம் பாட‌சாலைக்கு க‌ட் அடித்து விட்டு ஒரு நாள் கூட‌ எங்கும் போன‌தில்லை. ஒரு த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிழையை எதுக்கு சினிமா மேல் சும‌த்துகிறீர்க‌ள்?
போனாலும் நல்ல‌ ப‌ட‌த்துக்கு போவ‌தில்லை. எங்கு மோச‌மான‌ ப‌ட‌ம் ஓடுகிற‌தோ அங்கு தேடி போவார்க‌ள். இது சினிமாவின் குற்ற‌மில்லை.அது அவ‌ர்க‌ள் ம‌ன‌வ‌க்கிர‌ம‌ம்.



 நாம் பேசி கொண்டிருப்பது இன்றைய இளைஞர்களை பற்றி தான். பழைய திரைப்படங்களை பற்றி அல்ல அதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று தோனுகிறது. இன்றைய கால கட்டத்தில் உள்ள திரைப்படங்களை பற்றி  பேசுவதே தலைப்பிற்கு சரியானது


இப்ப‌டி சொல்லும் நீங்க‌ள் இந்த‌ விவாத‌த்தில் ப‌ங்கேற்கும் த‌குதி இல்லாத‌வ‌ர் அல்ல‌வா? ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி பேச‌க்கூடாது. இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளை ப‌ற்றித்தான் பேச்சி. ச‌ரி. நீங்க‌ள் தான் இன்றைய‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தில்லையே. அப்புற‌ம் அதை ப‌ற்றி பேச‌ உங்க‌ளுக்கு என்ன‌ த‌குதி இருக்கிற‌து?
நான் கூறிய‌ ஒரு ப‌ட‌ங்க‌ளை கூட‌ நீங்க‌ள் பார்க்க‌வில்லை. ரேமோ அந்த‌ ப‌ட‌ங‌க‌ளை ப‌ற்றி கூறியிருப்ப‌து ச‌ரியா த‌வ‌றா என்று கூட‌ தெரியாது.அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கி பேசி இருக்கிறீர்க‌ள். ரெமோ, சொல்வ‌ன் பேசுவ‌து கூட‌ த‌ப்பில்லை. அவ‌ர்க‌ள் ப‌ட‌ம் பார்த்து விட்டு அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌ட்ட‌தை சொல்கிறார்க‌ள். அந்த‌ த‌குதி கூட‌ உங்க‌ளுக்கு இல்லையே?
உட‌னே விப‌சார‌ம் ப‌ண்ணுப‌வனா விப‌சார‌த்தை ப‌ற்றி பேச‌ணும் என்று ஒரு அப‌த்த‌மான‌ கேள்வியை கேட்பீர்க‌ள்.



இது எப்படி இருக்கிறது என்றால் சவுதியை பற்றி நீங்கள் மட்டும் தான் அறிந்தவர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைப்பது போல் உள்ளது.
ஒரு பல மொழி சொல்வார்கள் "கேட்பவன் கேனயனாக இருந்தால் கேப்பையில்  நெய் வடிகிறது என்று சொல்வான்" என்பதாக. நீங்கள் எங்களை எல்லாம் ___________ ஆகா நினைத்து கொண்டீர்கள் போல தமிழன். அதனால் தான் இப்படி ஒரு செய்தியை இட்டு கட்டுகிறீர்கள்




அதை வாசித்த‌ உங்க‌ளை நான் கேன‌ய‌னாக‌ ச‌த்திய‌மாக‌ நினைக்க‌வில்லை. அப்ப‌டி உங்க‌ளை ப‌ற்றி உங்களுக்கு ஒரு அபிப்பிராய‌ம் இரு ந்தால் அது என் த‌வ‌ற‌ல்ல‌. யூசுப் நீங்க‌ள் எல்லாம் அறி ந்த‌வ‌ர், உல‌கில் உங்க‌ளுக்கு தெரியாத‌ எதுவும் இல்லை என‌ என‌க்குத் தெரியும். ஆனால் ச‌வூதியில் தேவால‌ய‌ம் இருப்ப‌து நான் சொல்லித்தானே உங்க‌ளுக்குத் தெரியும். ச‌வூதியை ப‌ற்றி உங்க‌ளுக்கு சொன்ன‌ ந‌ண்ப‌ர்க‌ளில் எத்த‌னை பேருக்கு இது தெரியும்? உங்க‌ளுக்கு தெரியாத‌ விச‌ய‌ங்க‌ளும் இங்கு இருக்கிற‌து. சில‌ விச‌ய‌ங்க‌ளை நான் இங்கே பேச‌ விரும்ப‌வில்லை. சில‌ விச‌ய‌ங்க‌ளுக்கு தெரி ந்தாலும் ஆதார‌ங்களை சொல்ல‌முடியாது.
நாம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ பேசும் போது உங்க‌ளுக்கு விள‌க்கி கூறுகிறேன்.
இங்கே குற்ற‌ங்க‌ள் ந‌ட‌க்கிற‌து.ஆனால் அது வெளியில் வ‌ருவ‌தில்லை.அது தான் உண்மை


உங்க‌ளை நினைத்தால் பாவ‌மாக‌ இருக்கிற‌து. முத‌லில் வ‌ழ‌க்குப் போடுவ‌தாக‌ ப‌ய‌முறுத்தினீர்க‌ள். இப்போது பாவ‌ம் எல்லாம் என‌கு வ‌ந்து சேரும் என‌ ப‌ய‌முறுத்துகிறீர்க‌ள்.உங்க‌ள் வாத‌த்தில் உங்க‌ளுக்கே ந‌ம்பிக்கை இல்லை போல‌ தோன்றுகிற‌து. அப்ப‌டி என‌து வாத‌த்தை கேட்டு சினிமா பார்ப்ப‌து த‌வ‌றில்லை என‌ இளைஞ‌ர்க‌ள் நினைத்தால் அது எங்க‌ள் வாத‌த்துக்கு கிடைத்த‌ வெற்றி தானே.

க‌டைசியாக‌ ஒன்று கேட்கிறேன். சினிமாவினால் சீர்கேடு என்று நினைப்ப‌வ‌ர்க‌ளில் எத்த‌னை பேர் சினிமாவை பார்ப்ப‌தை விட்டு விட்டார்க‌ள். அதிச‌ய‌ பிற‌வியான‌ நீங்க‌ள் ம‌ட்டும் தானாக‌ இருக்கும்.
அப்ப‌டி பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு உங்க‌ளை போல‌ விப‌ர‌ம் தெரியாது, சிந்திக்க‌த் தெரியாது என்று சொல்ல‌ப்போகிறீர்க‌ளா? அப்ப‌டிச் சொன்னால் அது உங்க‌ள் அணியில் பேசுப‌ர்க‌ளையும் தாக்க‌ப் போகிற‌து க‌வ‌ன‌ம்.உங்க‌ளைத் த‌விர‌ மற்றவ‌ர்க‌ள் எல்லோரும் ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் தான். ப‌ட‌ம் பார்ப்ப‌து த‌வ‌றில்லை. ந‌ம‌க்கு ஆற‌றிவு ஏன் இறைவ‌ன் ப‌டைத்தான்? ந‌ல்ல‌தையும் கெட்ட‌தையும் பிரித்து அறிய‌த்தான். நாங்க‌ள் அதை தான் செய்கிறோம். ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொள்கிறோம். கெட்ட‌தை விட்டு விடுகிறோம்.எங்க‌ள் க‌ண்ணுக்கு ந‌ல்ல‌து ம‌ட்டும் தெரிகிற‌து. உங்க‌ள் க‌ண்ணுக்கு கெட்ட‌து ம‌ட்டும் தெரிகிற‌து. இது பார்வையின் பிழை. சினிமாவின் பிழை அல்ல‌.



சினிமாவினால் தான் இளைஞ‌ர்க‌ள் எல்லாம் அறிந்து கொள்கிறார்க‌ள் என்பது தானே உங்க‌ள் வாத‌ம்? புகை பிடிப்ப‌து, ம‌து அருந்துவ‌து, விப‌ச்சார‌ம் எல்லாம் சினிமா தான் சொல்லிக் கொடுக்கிற‌து. இது தானே உங்க‌ள் விவாத‌ம்.
உல‌க‌த்தில் ந‌க‌ர‌ங்க‌ளை விட‌ கிராம‌ங்க‌ளே அதிக‌ம். இ ந்தியாவை ம‌ட்டும் எடுத்துக் கொள்வோம். ந‌க‌ர‌ங்க‌ளை விட‌ கிராம‌ங்க‌ள் தானே அதிக‌ம். திரைஅர‌ங்குக‌ள் இல்லாத‌ கிராம‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஒரு நேர‌ உண‌வுக்கே அல்லாடும் ஏழைக‌ள் நிறைய‌ நிறைய‌ இருக்கிறார்க‌ள். அந்த‌ கிராம‌ங்க‌ளில் குடி இல்லையா? புகைப்ப‌து இல்லையா? விப‌ச்சார‌ம் இல்லையா? கூத்தியாள் வைத்திருப்ப‌தை பெருமையாக‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் கிராம‌ங்க‌ளில் நிறைய‌ இருக்கிகிறார்க‌ள். அதிக‌மான‌ வியாதிக‌ள் ப‌ர‌வுவ‌து கிராம‌ங்க‌ளில் தான்.
சினிமா இல்லாம‌ல் இதெல்லாம் அங்கே எப்ப‌டி ந‌ட‌க்கிற‌து? உங்க‌ள் வாத‌ம் சறுக்குகிற‌து இங்கே.
சினிமா எப்ப‌டி உற‌வு கொள்ள வேண்டும் என‌ ப‌டிப்பிக்கிற‌து, ந‌க‌ர‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் த‌வ‌று செய்தாலும் பாதுகாப்புட‌ன் செய்கிறார்க‌ள். அத‌னால் போச‌மான‌ வியாதிக‌ளில் இரு ந்து த‌ப்புகிறார்க‌ள். அத‌ற்காக‌ த‌வ‌று செய்ய‌ சினிமா தான் சொல்லிக் கொடுக்கிற‌து என்று சொல்லாதீர்க‌ள். அது அவ‌ர‌வ‌ர் உட‌ல் தேவை . அது ப‌ட‌ம் பார்க்காவிட்டாலும் எடுக்கும். அத‌னால் என்ன வினை வ‌ரும்? வ‌ராம‌ல் எப்ப‌டி பாதுகாப்ப‌து எனும் விழிப்புண‌ர்வை சினிமா தானே உண்டாக்குகிற‌து?



க‌டைசியாக‌ ஒன்று சொல்கிறேன்.சினிமாவில் கெட்ட‌து இல்லை என்று நாங்கள் சொல்ல‌வ‌ர‌வில்லை. சினிமாவால் ம‌னித‌ரிட‌ம் விழிப்புண‌ர்ச்சி உண்டாகி இருக்கிற‌து.சினிமாவால் ந‌ம‌து அறிவுக்கு எட்டாத‌ நிறைய‌ விச‌ய‌ங்க‌ளை தெரிந்து கொள்கிறோம். சினிமாவை பார்த்து விட்டு அதில் உள்ள‌தையே நினைத்துக் கொண்டிருப்ப‌து உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ர் தான். ம‌ற்றப‌டி வேக‌மாக‌ சுழ‌லும் இந்த‌ உல‌கில் நிற்ப‌த‌ற்கு நேர‌மில்லாம‌ல் ஓடிக் கொண்டிருக்கும் கால‌மிது. சினிமாவை நினைத்துக் கொண்டிருக்க‌ எவ‌ருக்கும் நேர‌மில்லை.ஒவ்வொருவ‌ரும் முன்னேற‌ முண்டிய‌டித்துக் கொண்டு ஓடுகிறார்க‌ள்,

யூசுப் ம‌ச்சி, உங்க‌ளிட‌ம் ஒரு தாழ்மையான‌ வேண்டுகோள். நீங்க‌ள் நிறைய‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளை கொடுத்திருந்தீர்க‌ள். அந்த‌ தின‌ம‌ணி ப‌த்திரிகை ஆதார‌த்தை த‌விர‌ வேறு இத‌ற்கும் ஆதார‌ங்க‌ளை கொடுக்க‌வில்லை.
அத‌ற்கு த‌குந்த‌ ஆதார‌ங்க‌ளை கொடுத்தால் நாங்க‌ளும் வாசித்து ப‌ய‌னடைவோம்



க‌டைசியாக‌ ஒரு வேண்டுகோள்.
இன்த‌ விவாத‌த்தை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் ஒரு 10 பேர் சினிமா பார்த்து நாங்க‌ள் சீர‌ழிந்தோம் என‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் சொல்லுங்க‌ள். என‌து வாத‌ம் பிழை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ ஒத்துக் கொள்கிறேன்,
« Last Edit: November 28, 2011, 01:16:15 AM by Global Angel »

Offline Yousuf

இதை படிக்க கூடிய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதில் உங்களுக்கு  எது சரி என்று தோன்றுகிறதோ அதை எடுத்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எனது பதிலை தர விரும்புகிறேன்.



   
Quote
இப்ப‌டிப்பட்ட‌ நிலையில் சினிமா சீர‌ழிக‌வே செய்கிற‌து.அதை பார்த்து தான் உல‌க‌த்தில் எல்லாமே ந‌ட‌க்கிற‌து.அதை பார்த்து தான் எல்லாம் கெட்டுப் போகிறார்க‌ள் என்று சொல்வ‌து ம‌ட‌மையாக‌ தெரிய‌வில்லையா?


தமிழன் ஒரு திருத்தம் நான் சினிமாவை பார்த்திவிட்டு தான் உலகில் எல்லாம் நடக்கிறது என்று ஒரு இடத்திலும் கூறவில்லை. அப்படி நான் கூறி இருந்தால் சுட்டி காண்பித்திருக்கலாம் ஆனால் அப்படி நீங்கள் சுட்டி காண்பிக்க இயலாது ஏனென்றால் நான் அப்படி கூற வில்லை. சினிமா பார்க்க கூடிய இளைஞர்களில் அநேகர் சினிமாவினால் சீர்படுத்த படுவதை விட  சீரழிக்க படுகிறார்கள் என்று தான் நான் கூறினேன் எல்லோரும் கேட்டு போகிறார்கள் என்று கூற வில்லை. எனது பதிலை புரிந்து கொள்ள முடியாமல் நீங்கள் தான் மடமையாக பேசுவது போன்று தோன்றுகிறது தமிழன்.



   
Quote
சினிமா எத‌ற்காக‌ உண்டாக்க‌ப்பட்ட‌து என்று உதார‌ண‌ங்க‌ளுட‌ன் ரோஸ் விள‌க்கியும்.அதை புரிந்து கொள்ளாம‌ல் பேசுப‌வ‌ர்க‌ளுட‌ன் எதை விவாதிப்ப‌து?

விவாதம் சினிமா எதற்காக உண்டக்கபட்டதுன்னு இல்லை.  நான் சினிமா சீரளிபதற்குத்தான் உருவாகபடதுன்னு கூறவும் இல்லை. உங்கள் கருத்துபடியே பொழுதுபோக்க உண்டாக்கப்பட்ட  சினிமா  சீரழிக்கவே  செய்கிறது என்று தான் கூறுகிறேன்.

சரி சினிமா பொழுதுபோக்குக்காக உண்டாக்க பட்டது என்று கூறுகிறீர்கள். அந்த சினிமாவை ஓய்வு நேரத்தில் பார்ப்பது தானே பொழுது போக்குக்கான வரைவிலக்கமாக இருக்க முடியும் அதை விட்டுவிட்டு பள்ளிகளை கட் அடித்து விட்டும் கல்லூரிகளை கட் அடித்து விட்டும் அலுவலகத்தை கட் அடித்து விட்டும் அதிக விலை கொடுத்து வரிசையில் நிறு டிக்கெட் வாங்கி பார்பதற்கு பெயர்தான் பொழுதுபோக்கா?

இந்த கேள்வியை நான் முந்தய பதிவில் கேட்டிருந்தும் அதற்க்கு நீங்கள் பத்தி தரவில்லை. ஏன் உங்களிடம் இதற்க்கு பதில் இல்லையா இல்லை பதில் சொல்ல தெரிய வில்லையா?

இல்லை இது தவறு என்று உங்களுக்கு புரிந்து விட்டதால் அதை மறைபதர்காக முயற்சி செய்கிறீர்களா தமிழன்?




 
Quote
  இர‌ண்ட‌ரை ம‌ணி நேர‌ம் ஓடும் ஒரு திரைப‌ட‌த்தில் ஒரு கிள‌ப் டான்ஸ் ஒரு 5 நிமிட‌ம் வ‌ரும். ஒரு ச‌ண்டை காட்சி 10 நிமிட‌ம் வ‌ரும். ஆபாச‌ பேச்சுக‌ள் ஒரு சில‌ நிமிட‌ம் வ‌ரும். இந்த‌ ஒரு சில‌ நிமிட‌ம் போக‌ மிகுதி நேர‌ம் எல்லாம்?


ஆபாச கட்சிகளையும் இரட்டை அர்த்தன்கையும் பார்த்து பார்த்து பழகிப்போன உங்களுக்கு அதன் கேடு தெரிய விட்டால் உங்களை போல நாங்களும் அப்படி பட்ட காட்சிகளை 5 நிமிடம் தானே சில நிமிடங்கள் தானே என்று அதை சீரணித்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள் போல தமிழன். தனி மனித ஒழுக்கத்தோடு வாழ விரும்பும் யாரும் அதை சீரணித்து கொண்டு பார்க்க மாட்டார்கள். அது உங்களுக்கு தெரிய விட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.



   
Quote
நாங்க‌ள் சீர்ப‌டுகிற‌து என்று எந்த‌ புள்ளிக‌ளையும் கொடுக்க‌வில்லை தான்.


உங்களால் சீற்படுத்துகிறது என்று புள்ளிகளை கொடுக்க முடியவில்லை என்றால் உங்களிடம் அதற்க்கு புள்ளி விவரம் இல்லை என்பது தான் உண்மை. அதை விட்டு விட்டு அதற்க்கு கீழ் ஒரு கதையை சொல்லி இருக்கிறீர்கள் அதற்கெல்லாம் பதில் அளித்து என் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

அதரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் விவாதம்  எங்களுடைய ஆதரங்களை சமர்பித்தோம் உங்கள் அதரத்தை நீங்க சமர்பிக்காமல் வாதாடினால் அதற்க்கு பெயர் விவாதம் அல்ல வீண்வாதம்.

இதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்களின் வாதத்தில் அர்த்தமே இல்லை என்பதை உங்கள் கவனித்திற்கு கொண்டு செல்கிறேன்.




   
Quote
ப‌ட‌த்தில் ச‌ண்டை போடுவ‌து பிழை ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ல‌மா என்று கேட்ட‌ நீங்க‌ளே, த‌ன் குடும்ப‌தை காப்பாற்ற‌ கொலையும் செய்ய‌லாம் அத‌ற்கு ச‌ட்ட‌த்தில் இட‌மும் உண்டு என்றும் கூறுகிறீர்க‌ள், உங்க‌ள் வாத‌ம் உங்க‌ளுக்கே வேடிக்கையாக‌ தெரிய‌வில்லையா? நீங்க‌ள் ச‌ட்ட‌த்தை கையில் எடுக்க‌ ச‌ட்ட‌த்தையும் துணைக்கு கூப்பிடுகிறீர்க‌ள். அதையே ப‌ட‌த்தில் காட்டினால் ம‌ட்டும் த‌வ‌று. அருமையான‌ வாத‌ம் யூசுப்.

    நம் வீடு பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரிடமும் ஊறி போன ஒன்று தமிழன் இதற்க்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் சொன்னது கதாநாயகன் காவல் துறையால் சாதிக்க முடியாததை கூட சாதிப்பதாக கூறி கொண்டு சமுதாயத்தில் மாற்றம்  கொண்டு வருவேன் என்று கூறும் நடைமுறைக்கு சத்தியம் இல்லாமல் ரவுடிகள் போன்றோர்களை ஒழிக்கப்போவதாக கூறி கொண்டு  சட்டத்தை கையில் எடுப்பது போன்ற கட்சிகளை தான் தமிழன். நீங்கள் என்னுடைய வாதத்தை சரியாக புரிந்து கொள்ள வில்லை. இதற்க்கு நான் பொறுப்பல்ல.


தமிழன் உங்களுக்கு குடும்ப பிரச்சனைகளுக்கும் சமுதாய பிரச்சனைகளுக்கும் வேறு பாடு தெரிய வில்லை என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. குடும்பத்தை காத்து கொள்ளத்தான் சட்டத்தில் இடமிருக்கிறதே தவிர சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த சாதாரண விடயம் கூட புரிய வில்லை என்றால் யார் 7 அம் வகுப்பு சிறவனை போன்று ஒன்றும் விளங்காதவர்களாக உள்ளார்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும்.





   
Quote
இது சினிமாவின் த‌வ‌ற‌ல்ல‌. ப‌டிக்கும் போது ப‌டிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய‌ உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ரின் குற்ற‌ம். நாங்க‌ளும் ப‌டித்தோம் பாட‌சாலைக்கு க‌ட் அடித்து விட்டு ஒரு நாள் கூட‌ எங்கும் போன‌தில்லை. ஒரு த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிழையை எதுக்கு சினிமா மேல் சும‌த்துகிறீர்க‌ள்?

தமிழன் நான் எந்த இடத்திலும் ஊரு சுத்தியதாக இருந்தேன் என்று குறிப்பிட வில்லையே என்னை பற்றி  என் வாழ்கையை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறீர்கள் போல இருக்கிறது உங்கள் வாதங்கள் அனைத்தும்.

தமிழன் நீங்க படிச்சது கிராமமாக இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் கட் அடிக்காமல் இருந்திருக்கலாம். நகரத்தில் கட் அடிப்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ரசிகர் மன்றம் பெயரில்  பள்ளி கல்லூரிகள்  ..அலுவலகங்களை ..கட்  அடித்துவிட்டு கஷ்டப்பட்டு  மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்று டிக்கெட்  அதிக விலை கொடுத்து வாங்கி படம் பார்கிறார்கள் இது தான் பொழுதுபோக்கா?

நீங்கள் பாடசாலைக்கு தவறாமல் சென்றதாக சொன்னீர்கள் அங்குதானே கேட்டதை பார்க்காதே கேட்டதை பேசாதே கேட்டதை கேட்காதே என்று மூன்று குரங்குகளை காட்டி சொல்லி தந்தார்கள் அது உங்களுக்கு நினைவில்லையா. மறந்து விட்டீர்களா? பாடசாலையில் ஒழுக்கத்தை கற்று கொடுக்க வில்லையா தமிழன் உங்களுக்கு. கற்று கொடுத்திருந்தால் நீங்க இந்த விவாதத்தில் இப்படி பேசி இருக்க மாட்டீர்கள்.

அல்லது ஒழுக்கத்தை நீங்கள் விரும்பாதவராக இருந்தால் தான் உங்களால் இப்படி எல்லாம் பேச முடியும் ஆபாசம் 5 நிமிடம் தானே என்றெல்லாம்.

ஒழுக்கத்தை விரும்பக்கூடிய யாரும் இப்படி பேச மாட்டார்கள்.





   
Quote
இப்ப‌டி சொல்லும் நீங்க‌ள் இந்த‌ விவாத‌த்தில் ப‌ங்கேற்கும் த‌குதி இல்லாத‌வ‌ர் அல்ல‌வா? ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி பேச‌க்கூடாது. இன்றைய‌ இளைஞ‌ர்க‌ளை ப‌ற்றித்தான் பேச்சி. ச‌ரி. நீங்க‌ள் தான் இன்றைய‌ ப‌ட‌ங்க‌ளை பார்ப்ப‌தில்லையே. அப்புற‌ம் அதை ப‌ற்றி பேச‌ உங்க‌ளுக்கு என்ன‌ த‌குதி இருக்கிற‌து?


நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிலும் நகைசுவாயகத்தான் இருக்கிறது தமிழன். என்னை நீங்க கிழவன் என்று நினைத்துவிடீர்கள் போல. நான் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி 40 வருடங்கள் ஒன்றும் ஆகா வில்லை 3 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது அதற்க்கு காரணம் நான் தனிமனித ஒழுக்கத்தோடு முழுமையாக நடந்துகொள்ள இயலாவிட்டாலும் முடிந்தவரை நடந்து கொள்ள வேண்டும் என்பதால். அது தவறு என்று எனக்கு புரிந்ததால் நான் அதை நிறுத்தி விட்டேன். உங்களுக்கு தவறு எது சரி எது என்று சிந்திக்கும் திறன் இல்லாத காரணத்தால் அனைவரயும் அவ்வண்ணமே நினைத்து விட கூடாது தமிழன்.



   
Quote
நான் கூறிய‌ ஒரு ப‌ட‌ங்க‌ளை கூட‌ நீங்க‌ள் பார்க்க‌வில்லை. ரேமோ அந்த‌ படங்களை ப‌ற்றி கூறியிருப்ப‌து ச‌ரியா த‌வ‌றா என்று கூட‌ தெரியாது.அவ‌ருக்கு வ‌க்கால‌த்து வாங்கி பேசி இருக்கிறீர்க‌ள். ரெமோ, சொல்வ‌ன் பேசுவ‌து கூட‌ த‌ப்பில்லை. அவ‌ர்க‌ள் ப‌ட‌ம் பார்த்து விட்டு அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் ப‌ட்ட‌தை சொல்கிறார்க‌ள். அந்த‌ த‌குதி கூட‌ உங்க‌ளுக்கு இல்லையே?
    உட‌னே விப‌சார‌ம் ப‌ண்ணுப‌வனா விப‌சார‌த்தை ப‌ற்றி பேச‌ணும் என்று ஒரு அப‌த்த‌மான‌ கேள்வியை கேட்பீர்க‌ள்.


தமிழன் சரி இப்பொழுது விபச்சாரத்தை பற்றிய கேள்வியை உவமையாக காண்பிக்க வில்லை. வேறு ஒரு கேள்வியை கேட்கிறேன். விசத்தை பருகினால் தான் நீங்கள் விஷம் என்று ஏற்றுகொள்வீர்களா தமிழன்?. அது போல் தான் நீங்கள் சொல்லும் உதாரணம் எல்லாம் இருக்கிறது. சினிமா பார்த்தால் தான் சினிமா பற்றி பேச வேண்டும் என்றால் விசத்தை பருகினால் தான் அது விஷம் என்று சொல்ல வேண்டுமா?

நீங்கள் சொல்வது தான் சிறுபிள்ளை தனமாகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது தமிழன். நீங்கள் இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுவதிலிருந்தே நீங்கள் விவாதம் செய்ய வரவில்லை வீண்வாதம் செய்யத்தான் வந்துள்ளீர்கள் என்று தெரிகிறது.




   
Quote
இங்கே குற்ற‌ங்க‌ள் ந‌ட‌க்கிற‌து.ஆனால் அது வெளியில் வ‌ருவ‌தில்லை.அது தான் உண்மை


தவறுகளையே  தேடி கொண்டிருக்கும்  உங்களை போல சிலருக்கு தவறுகள் தெரிகிறது போல் நினைகிறேன் தமிழன். நான் ஒன்றும் சவுதியில் குற்றம் நடக்கவே இல்லை என்று கூற வில்லை இந்தியாவை ஒப்பிடும் பொது நூறில் ஒரு சதவிதம் தான் சவுதியில் குற்றங்கள் நடக்கிறது என்று கூறினேன். நீங்க எனது பதிலை ஒழுங்காக படித்து விட்டு பதில் கொடுத்திருக்கலாம். அப்படி என்ன அவசரம் என்று தெரிய வில்லை இப்படி அவசரமாக பதில் கொடுக்க தமிழன்.



 
Quote
ந‌ம‌க்கு ஆற‌றிவு ஏன் இறைவ‌ன் ப‌டைத்தான்? ந‌ல்ல‌தையும் கெட்ட‌தையும் பிரித்து அறிய‌த்தான். நாங்க‌ள் அதை தான் செய்கிறோம். ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொள்கிறோம். கெட்ட‌தை விட்டு விடுகிறோம்.எங்க‌ள் க‌ண்ணுக்கு ந‌ல்ல‌து ம‌ட்டும் தெரிகிற‌து. உங்க‌ள் க‌ண்ணுக்கு கெட்ட‌து ம‌ட்டும் தெரிகிற‌து. இது பார்வையின் பிழை. சினிமாவின் பிழை அல்ல‌.


நீங்கள் சொன்ன அதே இறைவன் தான் எங்களுக்கு அந்த கேட்டதை பார்க்காதே என்று சொல்லி இருக்கிறான் தமிழன். இது உங்களுக்கு தெரியாது என்று என்னை ஏமாற்ற முடியாது இறைவன் ஆபாசமாக பார்ப்பதை தடை செய்துள்ளான் என்பது உங்களுக்கு நன்றாக  தெரிந்ததே அது உங்களுக்கும் உங்களுக்கு ஆறு அறிவை கொடுத்த இறைவனுக்கும் தெரியும் தமிழன்.

நாங்கள் நீங்கள்  சொல்வது போல் ஆறு அறிவை பயன்படுத்தி நல்லதை பிரித்தறிந்து அதை பார்ப்பது தவறு என்று கூறுகிறோம். ஆனால் நீங்கள் அந்த அறிவை பயன்படுத்தவில்லை அதை பயன் படுத்த விருப்பம் இல்லாமல் வீண்வாதம் செய்கிறீர்கள் என்பது புரிகிறது தமிழன்.

இதில் இருந்து உங்களுக்கு பார்வையிலும் சிந்திக்கும் அறிவிலும் பிழை இருக்குறது என்பது தெட்ட தெளிவாக புரிகிறது.

மது, புகை அனைத்தையும் சினிமா சொல்லி கொடுகிறது என்று கூறினேன் நீங்கள்  என்ன செய்திருக்க வேண்டும் அதை இல்லை சினிமா கற்றுகொடுக்க வில்லை என்று கூறி இருக்க வேண்டும் அதை விட்டுட்டு கிராமங்களை உதாரணமாக எடுகிரீர்கள் தலைப்பை விட்டு வெளியே செல்கிறீர்கள்  தமிழன் இது தலைப்பல்ல. கிராமவாசிகள் தவறு செய்கிறார்களா இல்லையா? என்பது. உங்கள் வாதம் இங்கு சறுக்கி தலைப்பை திசை திருப்புகிறீர்கள். என் வாதம் இங்கு சருக்கிகிராதா இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும்.




   
Quote
சினிமா எப்ப‌டி உற‌வு கொள்ள வேண்டும் என‌ ப‌டிப்பிக்கிற‌து, ந‌க‌ர‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் த‌வ‌று செய்தாலும் பாதுகாப்புட‌ன் செய்கிறார்க‌ள். அத‌னால் போச‌மான‌ வியாதிக‌ளில் இரு ந்து த‌ப்புகிறார்க‌ள். அத‌ற்காக‌ த‌வ‌று செய்ய‌ சினிமா தான் சொல்லிக் கொடுக்கிற‌து என்று சொல்லாதீர்க‌ள். அது அவ‌ர‌வ‌ர் உட‌ல் தேவை . அது ப‌ட‌ம் பார்க்காவிட்டாலும் எடுக்கும். அத‌னால் என்ன வினை வ‌ரும்? வ‌ராம‌ல் எப்ப‌டி பாதுகாப்ப‌து எனும் விழிப்புண‌ர்வை சினிமா தானே உண்டாக்குகிற‌து?


எந்த சினிமா உங்களுக்கு உறவு கொள்ள படிப்பிகிறது தமிழன்? நீங்க வேறு ஏதோ சினிமாவை பற்றியும் அதில் எப்படி பாதுகாப்பாக உறவு கொள்வது என்பதை பற்றியும் சொல்லி கொடுப்பதாக சொல்கிறீர்கள்  போல. இதை நான் விரிவாக பேச விரும்ப வில்லை.

நீங்கள் சொல்வதை பார்த்தால் அப்படி தவறான உறவு கொள்வது சரி என்று சொல்வீர்கள் போல. இப்பொழுது புரிகிறது  தமிழன் உங்களை இந்த சினிமா எந்த அளவிற்கு சீர்படுத்தி இருக்கிறது என்பது. வாசகர்களும் புரிந்து கொல்வார்கள் என்பதை நம்புகிறேன்.




   
Quote
சினிமாவை பார்த்து விட்டு அதில் உள்ள‌தையே நினைத்துக் கொண்டிருப்ப‌து உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ர் தான்.


மீண்டும் என்னை விட நீங்கள் என்னை அதிகம் புரிந்தவர் போல் பேசி இருக்கிறீர்கள் தமிழன். நான் ஒரு போதும் அதை நினைத்து கொடிருக்கவில்லை தமிழன் அது தவறு என்பதை புரிந்து கொண்டதால் தான் இங்கு வாதிட்டு கொண்டிருக்கிறேன். ஒருவேளை நீங்கள் அதையே நினைத்து கொடிருப்ப்பதால் தான் அதை விட்டு பிரிய மனம் இல்லாமல் சரி என்று வாதிடுகிறீர்கள் போல. அது உங்கள் சிந்தனையின் தவறு.



   
Quote
யூசுப் ம‌ச்சி, உங்க‌ளிட‌ம் ஒரு தாழ்மையான‌ வேண்டுகோள். நீங்க‌ள் நிறைய‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளை கொடுத்திருந்தீர்க‌ள். அந்த‌ தின‌ம‌ணி ப‌த்திரிகை ஆதார‌த்தை த‌விர‌ வேறு இத‌ற்கும் ஆதார‌ங்க‌ளை கொடுக்க‌வில்லை.
    அத‌ற்கு த‌குந்த‌ ஆதார‌ங்க‌ளை கொடுத்தால் நாங்க‌ளும் வாசித்து ப‌ய‌னடைவோம்


தமிழன் மச்சி நான் உங்கள் தமிழிலும், சிந்தனையிலும் தான் கோளறு சொன்னேன் இப்பொழுது தான் புரிகிறது உங்கள் கண்ணிலும் கோளறு உள்ளது என்பது. நான் தினமணி செய்தியை மட்டும் குறிப்பிட வில்லை மேலதிகமாக குமுதம் மற்றும் ஒற்றுமை போன்ற இதழ்களில் இருந்தும் அதரங்களை மேற்கோள் கட்டினேன். நீங்கள் அதை பார்க்க வில்லை என்றால் முதலில் கண் மருத்துவர் உங்கள் கண்ணை பார்க்கட்டும் பிறகு நீங்க ஆதாரங்களை பாருங்கள் தமிழன் மச்சி.



   
Quote
இன்த‌ விவாத‌த்தை வாசிப்ப‌வ‌ர்க‌ளில் ஒரு 10 பேர் சினிமா பார்த்து நாங்க‌ள் சீர‌ழிந்தோம் என‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் சொல்லுங்க‌ள். என‌து வாத‌ம் பிழை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ ஒத்துக் கொள்கிறேன்.


நன்றாக நகைச்சுவை செய்கிறீர்கள் தமிழன் யாரவது கேட்டு போனவர்கள் பகிரங்கமாக தான் கேட்டு போய்விட்டேன் என்று கூறுவார்களா? கொலை செய்தவன் தப்பு செய்தவன் எப்படி தான் தப்பு செய்துவிட்டேன் என்பதை ஒத்துகொள்வான். இப்படி கேள்வி கேட்பதால்  உங்கள் விவாதம் (வீண்வாதங்கள்) அனைத்தும் சரி என்று ஆகி விடுமா தமிழன்.

நீங்கள் ஒத்து கொண்டாலும் ஒத்து கொள்ள விட்டாலும் சிந்திக்க கூடியவர்கள் அறிவுள்ளவர்கள்  ஒழுக்கம் உள்ளவர்கள் சினிமா இளைஞர்களை சீற்படுத்துவதை விட சீரழிக்கத்தான்  செய்கிறது என்று கூறுவார்கள் தமிழன்.

மீண்டும் நினவு படுத்துகிறேன் தமிழன்!

நீங்கள் கேட்ட விடயத்தை நல்ல விடயமாக மாற்றுவதற்கு முயற்சிசெய்கிரீர்கள் ஆனால் இதை படிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்வார்கள் எது நல்லது எது கேட்டது என்பதை என்று நம்புகிறேன்.

ஆகவே, நீங்கள் பொழுதுபோக்கு என்று கூறும் இந்த சினிமா இளைஞர்களை சீற்படுத்துவதை விட சீரழிப்பது தான் அதிகம் என்று மீண்டும் உங்களுக்கும் இதை படிக்கும் வாசகர்களுக்கும் கூறிகொள்கிறேன் தமிழன்.
« Last Edit: November 29, 2011, 02:36:34 PM by Yousuf »

Offline thamilan

சரித்திரத்தில் சினிமாவில் நடக்க கூடிய தவறுகளை படித்திருப்பீர்கள் என்று கேட்கிறீர்கள். சரித்திரம் படிக்கும் அளவிற்கு நான் உங்களை போன்று புத்திசாலி இல்லை தமிழன். என்னை போன்று சரித்திரம் அறியாத இளைஞர்கள் தான் அதிகம். அவர்களுக்கு இந்த தவறுகள் எல்லாம் வெளிச்சம் போட்டு கட்டியது எது இந்த சினிமா தானே. நாங்கள் எல்லாம் சரித்திரத்தை படித்து இந்த தவறுகளை அறிந்து கொள்ள வில்லை கல்லூரி பருவத்தில் சினிமாவை பார்த்து தான் அறிந்துகொண்டோம்

இது நீங்க‌ள் சொன்ன‌து தானே. இதில் நாங்க‌ள் என்று ப‌ன்மையாக உங்க‌ளையும் சேர்த்து தான் சொல்லி இருக்கிறீர்க‌ள்.அத‌ற்குத்தான்

இது சினிமாவின் த‌வ‌ற‌ல்ல‌. ப‌டிக்கும் போது ப‌டிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய‌ உங்க‌ளைப் போல‌ ஒரு சில‌ரின் குற்ற‌ம். நாங்க‌ளும் ப‌டித்தோம் பாட‌சாலைக்கு க‌ட் அடித்து விட்டு ஒரு நாள் கூட‌ எங்கும் போன‌தில்லை. ஒரு த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் பிழையை எதுக்கு சினிமா மேல் சும‌த்துகிறீர்க‌ள்? என்று கேட்டேன்,

தமிழன் நான் எந்த இடத்திலும் ஊரு சுத்தியதாக இருந்தேன் என்று குறிப்பிட வில்லையே என்னை பற்றி  என் வாழ்கையை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறீர்கள் போல இருக்கிறது உங்கள் வாதங்கள் அனைத்தும்.

இதில் எங்காவ‌து நீங்க‌ள் ஊர் சுற்றிய‌தாக‌ சொன்னேனா? யார் க‌ண்ணில் கோளாறு என்று இதை வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு புரியும்.


தமிழன் நீங்க படிச்சது கிராமமாக இருந்திருக்கலாம். அதனால் நீங்கள் கட் அடிக்காமல் இருந்திருக்கலாம். நகரத்தில் கட் அடிப்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ரசிகர் மன்றம் பெயரில்  பள்ளி கல்லூரிகள்  ..அலுவலகங்களை ..கட்  அடித்துவிட்டு கஷ்டப்பட்டு  மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்று டிக்கெட்  அதிக விலை கொடுத்து வாங்கி படம் பார்கிறார்கள் இது தான் பொழுதுபோக்கா?

என்னை பற்றி  என் வாழ்கையை பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்தது. பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறீர்கள் போல இருக்கிறது உங்கள் வாதங்கள் அனைத்தும்

இப்ப‌டி என்னிட‌ம் கேட்ட‌ அதை தானே நீங்க‌ளும் செய்திருக்கிறீர்க‌ள்? நான் அதையே திருப்பி கேட்க‌வா? என்னை ப‌ற்றி உங்க‌ளுக்கு என்ன‌ தெரியும்? ச‌ரி உங்க‌ள் ம‌ன‌சாந்திக்காக‌ நான் கிராம‌த்தில் தான் ப‌டித்தேன், என்றே வைத்துக்கொள்ளுங்க‌ளேன்.அத‌னால் உங்க‌ளுக்கு ஏற்ப‌டும் ச‌ந்தோஷ‌த்தை ஏன் கெடுக்க‌ வேண்டும்?


தவறுகளையே  தேடி கொண்டிருக்கும்  உங்களை போல சிலருக்கு தவறுகள் தெரிகிறது போல் நினைகிறேன் தமிழன்

இதையே நீங்க‌ள் உங்க‌ளுக்கு சொன்ன‌தாக‌ எடுத்துக் கொள்ளுங்க‌ள் யூசுப். சினிமாவாப் பொருத்த‌ம‌ட்டும் அது உங்க‌ளுக்கே பொருந்தும்.இங்கு விவாத‌ம் சினிமாவைப் ப‌ற்றிய‌து. அங்கே த‌வ‌றுக‌ளை ம‌ட்டுமே தேடுவ‌து நீங்க‌ள் தானே.
ந‌ன்றி யூசுப்.


என் சிந்த‌னையில் கோளாறு, என் த‌மிழ் க‌ற்ற‌லில் கோளாறு, என் க‌ண்க‌ளில் கேளாறு எல்லா கோளாறுக‌ளும் எனக்கு தான். ஒரு குறையும் இல்லாம‌ல் உங்க‌ளை ப‌டைத்த‌த‌ற்கு நானும் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்கிறேன்.

 விவாத‌ம் விப‌ரீத போக்கில் போகாம‌ல் இருக்க‌ இத்துட‌ன் என‌து வாத‌ங்க‌ளை நிறைவு செய்கிறேன். நன்றி
.
« Last Edit: November 29, 2011, 10:00:30 PM by thamilan »

Offline Yousuf

அனைவரும் அவரவர் கருத்தினை நிறைவு செய்து விட்ட காரணத்தால் நானும் எனது நிறைவான கருத்தினை சொல்லி நிறைவு செய்கிறேன்.

நான் ஆரம்பத்தில் இருந்து வாதாடியது போல சினிமா இளைஞர்களை சீற்படுத்துவதை விட அதிகம் சீரழிக்கத்தான் செய்கிறது என்று முதலும் முடிவுமாக கூறி எனது இந்த கருத்தை பதிவு செய்கிறேன்!

விவாதத்தின் வரைவிலக்கனப்படி ஒரு தலைப்பை ஆதாரத்தின் அடிப்படையில் விவாதித்து அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து காண்பித்து இறுதியாக தீர்ப்பை பார்வையாலர்களிடமோ அல்லது வாசகர்களிடமோ விட்டு விட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தலைப்பின் தீர்ப்பை வாசகர்களிடம் ஒப்படைக்கிறேன்!

இந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இந்த விவாதத்தை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இந்த விவாதத்தில் பங்கு பெற்ற நண்பர்கள் ஏஞ்செல், ரெமோ, தமிழன், ஸ்ருதி, செல்வன், சாறு, தாமரை, சாம் ஆகிய உங்களில் யாரையாவது விவாதத்தின் பொது மனம் புன்படும்படி பேசி இருந்தாலோ, கஷ்டம்ப்ப்படும்படியான வார்த்தைகளை உபயோகித்திருந்தாலோ மன்னிக்கவும்.

யாருடைய மனதையும் வேண்டும் என்று புண்படுத்த வேண்டிய நோக்கத்தோடு நான் விவாதம் செய்ய வில்லை மாறாக என் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறவே விவாதத்தில் பங்கு கொண்டேன்.

இந்த விவாதத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இந்த விவாதத்தை பார்வையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி!

இத்துடன் என் விவாதத்தை நிறைவு செய்கிறேன்!!!


என்றும் அன்புடன் தோழன்!

யூசுப்!