Special Category > மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty

~ ஆடாதோடை ~

(1/1)

MysteRy:
ஆடாதோடை




மூலம் உடையவற்றை மூலி என தமிழில் கூறப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் உள்ள சுமார் 250000 மூலிகைகளும் மருத்துவகுனமுடயவைய. அனைத்து செடி கொடி மரங்களும் ஒரு பயன் உள்ளவையே . மனிதனுக்கு உபயோகமுள்ளவையே. ஆனால் சுமார் 5 0000 வகைகளுக்கே இதுவரை பயன் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நாம் பார்த்ததில் போரும்பாலவை மனிதன் விளைவிப்பது .ஆனால் பெரும் பகுதி மூலிகைகள் மனிதனின் முயற்சி இன்றி தானே மண்ணின் வளம் இருக்கும் இடத்தில் தானே வளர்வதே அதிகம் அத்தகையத்தில் ஆடா தொடை ஒவ்வரு கிராமத்தின் வெற்றிடகளில் தானாக முளைக்கும் ஒரு அரிய மூலிகை செடி .

ஆனால் இப்போது விளைவதற்கு வெற்றிடம் தான் மூலிகைகளுக்கு கிடைப்பதில்லை .எங்கும் ஜனக்கூட்டம் சிமெண்ட் கட்டுமானம். ஒவ்வரு மூலிகைகளின் பஞ்ச உறுப்புகளும் வேர் தண்டு இல்லை பூ கனி அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. ஆடத்தொடை மூன்று தோஷங்களில் முக்கியமான கபத்தை நீக்கவல்லது. கபம் இருந்தால் மூச்சு சீராக இராது .மூச்சு சரி இல்லையெனில்
செய்யும் காரியங்கள் சீராக இராது. ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால்
ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு

பெயர்: Adatoda Vasica Nees,
Botanical Name : Adhatoda vasica nees
Hindi Name : Dusa, Amsa
Kannad : Sannaadusage
Malyalam : Cheru adalotakam, Chittatalotakam
telugu : Addasaramu

Active ingredients : Alkaloids 0.5% - 2.5%

நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும்.

இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.
ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், . சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். .
ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் (மேலேதான் )வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.
Adhatoda vasica Nees is a shrub widespread throughout the tropical regions of southeast Asia. It possesses a wide spectrum of medicinal properties including positive effects on inflammatory diseases. The antiinflammatory activity of the methanol extract, the non-alkaloid fraction, the saponins and the alkaloids was evaluated by the modified hen's egg chorioallantoic membrane test. The alkaloid fraction showed potent activity at a dose of 50 µg/pellet equivalent to that of hydrocortisone while the MeOH extract and the other fractions showed less activity.
பொதுவாக ஆடத்தொடை இசிவகற்றி; கோழையகற்றி ; கிருமி நாசினி; சிறுநீர்பெருக்கி.

ஆடாதொடையின் ரசத்தை 20 துளி எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க வளி வாதம் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றங்களும் நீங்கும். முன்பெல்லாம் விளையாடப் போகும் இடமெல்லாம் ஆடத்தொடையையும் ஊமத்தையையும் எங்கும் பார்க்கலாம். இப்போது விளையாட போக இடமும் இல்லை பிள்ளைகள் இப்போது விளையாட நேரமும் இல்லை. இத்தகைய தானே விளையும் தாவரங்களும் இல்லை. இப்போது அதிகம் விற்கும் மருந்துகளில் கபம் முக்கியமானது .
மக்கள் சிறுகசிறுக ஏதாவது ஒரு வழியில் நிரந்தர நோயாளியாக மாறிவருகின்றனர்
இத்தகைய மூலிகைகள் வரும் முன் காக்கும் கவசம் போன்றவை.

Navigation

[0] Message Index

Go to full version