தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

மரம்

(1/1)

Mr.BeaN:
குடை போல கிளை விரித்து
நிழல் தன்னில் நமை புதைத்து
சாமரமாய் இலை அசைத்து
சந்தனம்போல் வளி பரப்பி
சிந்தனையில் அமைதி தந்து
சொந்தமென நெடுநாட்கள்
சந்ததிகள் பயன்பெறவே
சந்திகளில் மரம் நடுவீர்..

(இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)

Navigation

[0] Message Index

Go to full version