FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on July 15, 2018, 08:36:27 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: MysteRy on July 15, 2018, 08:36:27 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 193
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/193.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: AshiNi on July 15, 2018, 12:57:18 PM

அதுவொரு விடுமுறை தினம்...!
தெய்வக்குழந்தை அவளுக்கோ பூரித்தது மனம்...
வார நாட்களில் ஓயாது படிப்பு...
வார இறுதியில் விளையாட்டின் துடிப்பு...

பார்வையற்ற அவளின் ஞானமோ
மேதையின் அறிவுக்கு ஒப்பானது...
ஊமையான அவளின் சாதுரியமோ
வல்லவனின் நுட்பத்துக்கு சமனானது...

அம்மா செய்த அலங்காரம் கொண்டு
தோழமை நாடி விரைந்தாள் பூச்செண்டு...
காற்றில் மிதந்தன மழலை இதயங்கள்...!
வானம் விரியும் நீளமாய் பல ஆசைகள்...

எங்கிருந்தோ வந்தான் ஓர் பாதகன்!
காமவெறி கொண்டக் கிராதகன்!
வஞ்சகன் பார்வையோ இளவரசி மீது படர்ந்தது...
அவன் பாதங்கள் அவளையே பின் தொடர்ந்தது...

தந்தை போல் அரவணைக்க வேண்டிய கரங்கள்,
சிந்தை களைந்து சிறுமியை கூட சீரழிக்கத் துடித்தன...
பாசாங்கு செய்து அவளை ஏமாற்றி  அழைத்த வார்த்தைகள்,
கண்காணா இடம் தேடி அவளை கூட்டிச் சென்றன...

கபடமற்றவளாய் அமர்ந்திருக்கிறாளவள்...
கொடூரனின் வன்மம் அறியாமலிருக்கிறாளவள்...
விதியின் சதிக்கு ஆளாகப்போகிறாளா ?
அல்லது எதிர்காலத்தைக் கட்டியாளப்போகிறாளா ?

காமவெறி எனும் போர்வையை மூடி
பிஞ்சு மொட்டையே கசக்க நினைக்கும் அவனுக்கு,
காலம் கருணையுள்ளம் வழங்குமா..?
நன்னடத்தை எனும் போர்வை அணிந்து
பெண்மையை போற்றும் அளவிற்கு,
நற்பிரஜையாய் அவன் மாறுவானா..?

பதில் என்னிடமும் இல்லை...
பெண்மைக்கான மதிப்பு,     
நிகழ்காலத்திலும் இல்லை...
 
ஒரு சில இம்சை ஆண்மையின் உக்கிரத்தால்
பெண்ணினமே மனம் உடைகிறது...
அந்த ஆண்மை செய்யும் வக்கிரத்தால்
ஆண் வர்க்கமே தலை குனிகிறது...

தனிமனிதன் நினைப்பின் முடியும்...
காமப்பிடியில் வாழ்வைத் தொலைக்கும்,
பெண்மையின் இரவுகள் விடியும்...

இனி உதிக்கும் பொழுதுகள்
ஒழுக்கத்தை போதிக்கட்டும்...
ஆண்களின் நற்துணைக் கொண்டு
பெண் பிறப்புக்கள் பூமித்தாண்டி
சாதிக்கட்டும் ...!!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: JeGaTisH on July 15, 2018, 03:07:01 PM
பூமி இருளில் மூழ்கியது
என் மனம் அச்சத்தில்  திக் திக் என்றிருக்க

நித்திரையில் இருந்த என்னை  யாரோ வருடியதுபோல
கண் விழித்தேன் ஜன்னலின் ஓரமாய்
ஓர் உருவம் அசையக் கண்டேன்

என் நெஞ்சு  சிறிது நேரம்  பட படக்க
 வேர்வை துளிகல் நெற்றியில்  படரக்கண்டேன்.

அப்பொழுது பயம் என்னை ஆட்கொண்டது
என்பதை என் பதற்றம் காட்டிக்கொடுத்தது .

கண்களை இறுக்கி மூடிய வண்ணம்
தலையணையை பற்றி பிடித்துகொண்டு
வாயில் தேவாரம்  முணுமுணுக்க
தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன்

ஆர்வம் என்னை  உலுப்பியது
சிறிதாக போர்வையை திறந்து
ஒற்றைக்கண்ணால் ஜன்னலை பார்த்தேன்

ஜன்னல் தானாக திறக்கக்கண்டேன்
என் இதயம் பட படவென அடிக்க ஆரம்பித்தது
 இதயத்தில் பல பல எண்ண ஓட்டங்கள்

படத்தில் பார்த்த பேய் கதாபாத்திரங்கள்
காதில் கேட்ட பேய் கதைகள்
மனத்திரையில்   ஓடிக்கொண்டிருந்தன   

சற்றேன பக்கத்தில் ஏதோ ஒன்று இருப்பதை உணரவே
மெதுவாக திரும்பி பார்த்தேன்

ஒரு வெள்ளை ஆடை பறப்பது போல இருந்தது
என்   நினைவலைகளின்   ஓட்டங்களின் நிறுத்த முடியவில்லை
காற்று என் கழுத்தில் மெல்ல வருடியது
உரோமங்கள் மேலெழுந்து பயத்தின் உச்சியில் நிற்க
 வீல்........  என்று  அலறி  எழுந்தேன்.

பக்கத்தில் உள்ள மின்விளக்கை சட்டென்று ஏற்றினேன்
பக்கத்தில் இருந்தது என் மனதில்  ஓடிய   உருவம் அல்ல
என் அப்பாவின்  வேஷ்டி என அறிந்துகொண்டேன்

மனதின் எண்ணங்களே 
நம் செயலின் அர்த்தமாக மாறிவிடுகிறது
அதனால் என்னவாக இருதாலும் 
நம் மனதின் எண்ணம் உறுதியாக இருக்கவேண்டும்




    பயத்துடன் உங்கள் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: SaMYuKTha on July 15, 2018, 04:51:41 PM
தங்கச்சிப்பாப்பாவை பத்திரமா பாத்துக்கோ… என
எம் தாயோ எனக்கான பொறுப்பை
என் பாசமலரிடம் விட்டுச்செல்ல
விளையாட ஓடத்துடித்த
கால்களை அடக்கவழியறியாது
இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போகாதே
பேய் பிடிக்கும் என பயம்காட்டி
சத்தமில்லாமல் என்னுள் பேய்பயத்தை விதைத்து 
உன்வழி பார்த்து ஓடிமறைந்தாயே அண்ணா...

கண்ணாமூச்சி ஆட்டங்களில் எனை தேடிக்கலைத்த
நண்பர்கூட்டம் என்பயத்தின் உபயத்தால்
வாயிலேயே வாத்தியங்களை வாசித்து
எனை கலங்கடித்து கண்டுக்கொண்டனரே...

தலைநிறைய பூவுடன் மாலைவேளைகளில்
உலவச்சென்றால் மோகினி  பிடிக்குமென்றும்
முருங்கைமரத்தில் தலைகீழாக தொங்கும்
கொள்ளிவாய் பிசாசு கதைகளினாலும்
உச்சிவேளைகளில் பெண்பிள்ளைகளை கண்டால்
கன்னிப்பேய்கள் வட்டமிடுமென்றும்
வளரவளர இவ்வாறான கட்டுக்கதைகளினால்
என்பேய்பயத்திற்கு உரமிட்ட சுற்றத்தினர்…

ஒருகட்டத்தில்,
எனக்கு பேய்னாதாங்க பயம்
மத்தபடி நா ரொம்ப தைரியசாலி என
எனை நானே வரையறுக்க ...

இவையனைத்திற்கும் காரணகர்த்தாவான
என் உடன்பிறப்பே!!!
எனக்கு அன்று நீ
உரைத்த பேய்கதைகளை
இன்று உன்பிள்ளைக்கு
நான் கூறுகையில் என் தலை குட்டி
இல்லாத பொல்லாததை சொல்லி
பிள்ளை மனசை கெடுக்காதே என்கிறாயே ....

அடேய்ய்ய்!!! உனக்கு வந்தா ரத்தம்
எனக்கு வந்தா தக்காளிசட்னியா…!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: thamilan on July 16, 2018, 02:20:26 PM
சின்ன வயதிலேயே பேய்க்  கதைகள்
கேட்டுப் பழகினவன் நான்
சாப்பிட அடம்பிடித்தால்
பூச்சாண்டி வாறன் என்று சொல்லி
அம்மா சோறு ஊட்டுவாள்
இரவில் தூங்க மறுத்தால்
தூங்கு அந்தா பேய் வருது என்று பயம் காட்டி
தூங்க வைப்பாள் அக்கா
சிறிது வளர்ந்ததும் விளையாட்டுப் போகும் என்னை
வேப்பமரத்துல பேய் இருக்கு அங்க போகாத என்று
பயமுறுத்தி வைப்பார் அப்பா

வளரும் போது
முருங்கை மரத்தில் பேய் இருக்கிறது என்று
சொல்லிக் கேட்டதுண்டு
விக்கிரமாதித்தன் கதை
மோகினிப் பேய் காலை விறகாக்கி
அடுப்பு மூட்டிய கதை
இப்படி பலப் பல கதைகள் பாட்டி சொல்லக் கேட்டு
வளர்ந்தவன் நான்

வளர்ந்த பின் அறிவு வந்த பின்
உலகில் பல பேய்கள் உலவுவதை
கண்கொண்டு பார்த்தேன் நான்
பணப்பேய்கள் அதிகாரப்பேய்கள்
ஜாதிப்பேய்கள் காமப்பேய்கள் என
பலவிதமான பேய்கள் மனிதரினுள்ளே
ஒளிந்திருப்பதை அறிந்தேன்

ஆவியாய் அலையும் பேய்களை விட
உயிருடன் அலையும் மனிதப்பேய்கள்
அபாயகரமானது என உணர்ந்து கொண்டேன்
பேய்கள் இரவில் தான் வரும்
இந்தப் பேய்களோ
பகலில் மனித முகமூடியோடு அலையும்

எனக்குள்ளும் பேய்கள் இருக்கின்றன
சில நேரம் அவை வெளியே வர எத்தனிக்கும்
அதை அடக்கிஆள போராட்டமே நடக்கும்
சில வேலை நான் தோற்றுப் போவதும் உண்டு

இப்போதெல்லாம் நான்
இரவை விட  பகலைக் கண்டே பயப்படுகிறேன்
மனிதர்களை விட பேய்கள்
நல்லவை என்றே நான் நினைக்கிறேன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: பொய்கை on July 17, 2018, 01:56:36 AM
பாதகம் செய்வோரை கண்டால்
பயம்கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்த்துவிடு பாப்பா!
                                                      - பாரதியார்

குளிராத குளிருக்கு
போர்வையினால் முகம்மறைத்து
தளிர் போன்ற மேனியை
வியர்வையினால் உறையவைத்து 
மலராத மலரில்  மனம்  தேடும்
மானமில்லா    மனிதர்களை ..

பிஞ்சு குழந்தையிடம்போய்
பேயென்றுரைக்கும் மூடர்களை..   
அஞ்சு நடுங்கும் விழிகண்டு
ஆர்ப்பரிக்கும் வீணர்களை..
கொஞ்சு மொழி கேட்கா
கொடுமன அரக்கர்களை..
பச்சிளம்குழந்தையை
பதைக்க வைக்கும் பாவிகளை..

துள்ளி  திரியும்   சிறுசுகளின் சிறகில்
கொள்ளி வைக்கும்  கயவர்களை ..
பேய் போல வேடம்  போட வைப்போம்
நாய் கொண்டு நாமும்  குரைக்கவைப்போம்
நஞ்சு கொடுத்து அவ்வுயிரை
நாசூக்காய் உறங்க வைப்போம் ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: RishiKa on July 18, 2018, 02:44:10 PM

           இரவு    என்  தோழி !

          அதை நான் ஆராதிப்பதால் அதற்கும் என்னை மிகவும் பிடிக்கும்
          அதனால் இரவு என் தோழி !
         
          இரவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்!...
          ஏன் எனில்..
          பிரபஞ்சத்தின்  உண்மைகள் வெளிப்படும் நேரம் அது !
          போலிகளின் முகமூடிகளை கிழித்து எறியும் நேரம் அது !
          ஒரு யுகத்தின் நிஷப்தமும் நிதர்சனமும் தாலாட்டும் நேரம் அது!
           
          அன்றொருநாள்......
          சிறுமியாய் இருந்த பொழுது .....
          அதிசயங்களும் ஆச்சரியங்களையும் தந்த இரவு..
          பின் நாளில்  எப்படிஅச்சங்களும்   அவலங்களுமாய் ஆனது!     
         
          எங்கோ கேக்கும் நாயின் ஊளையும் ..காற்றின் ஒலியும்..
          அமானுஷ்யத்தை  தந்து திகிலட வைத்த.... ....
          திடுக்கிட்டு விழித்த  ஓர் இரவில்  ...
          திரும்பி பாக்கிறேன்!
          அருகே ஒரு உருவம் ....என் பெயர் அழைத்த படி...

         என்னவென்று பார்ப்பதற்குள் மறைந்து போனது!...
         என்னவாக இருக்கும்! யாராக இருக்கும் !
         மனதிற்குள் பட்டிமன்றம் ! பட்டியலை இட்டேன்..!

        என் இறந்து போன தாத்தாவாக இருக்குமோ ?
        அவருக்குதான்  என் மேல அலாதி பிரியம் ஆயிற்றே !
        அல்லது...
        பள்ளி தேர்வில் தோல்வியடைந்து தூக்கில் தொங்கிய தோழியாய் இருப்பாளோ ?
        அவளின் உயிர் தோழி நாந்தானே !என்னைபார்க்க வந்து இருப்பாளோ?

       அல்லது அவனை இருக்குமோ? ..
       கல்லூரியில் காதலிப்பதாய்  சொல்லி ...
       பின்னால் சுற்றி  அடி வாங்கி விலகி போனவன
       சே ..சே ..அவனுக்கு ஏது அத்தனை வீரம்
      ஓ கடவுளே ! என்ன சொல்கிறேன் நான்  !
      தற்கொலை செய்வது வீரம் என்றா?
      அதை  கோழைத்தனம் என்றல்லாவா சொல்வார்கள் ?

      எனையே நான் கோபத்துடன் திட்டி கொள்கிறேன் !
      ஓர் நடுநிசி  விழிப்பு என்னவெல்லாம் யோசிக்க வைக்கிறது !
     
     போதும் என் இரவு தோழியே ! என்னை தூங்க விடு!
     பகல்களின் உழைப்பில் மானுடத்தின் நடிப்பில் ..
     களைந்து போய் இருக்கிறேன் ...
     எனக்கு ஒரு தாலாட்டு பாடி தூங்க வைத்து விடு..!
 
       




         
     
         
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: SweeTie on July 18, 2018, 06:20:59 PM
கொள்ளிவாய்ப் பேய் குட்டிச்சாத்தான்
குரளைபேய்   மோகினி
சுடலைவைரவர்  சுடுகாட்டுவைரவர்
ரத்தக்காட்டேரி   ஆவி  சுடலம்
ஆஹா !....  எத்தனை அழகான பேர்கள்
இந்த   இரவு அமானுஷ்யங்களுக்கு.

கன்னிப்பொண்ணுங்க இருட்டுல
வெளிய போகக் கூடாதாம் 
காத்து கருப்பு  பட்டுருமாம் 
வயசு பசங்க  இரவுல சுத்தக் கூடாதாம்
மோகினி அடிச்சு கொண்டுருமாம்
நம்ம  அப்பா அம்மா சொன்னாங்க
தாத்தா பாட்டி சொன்னாங்க
முப்பாட்டன் கூட சொன்னாரு 
   
   
நாகரிகம்   வந்தாச்சு
கன்னி பொண்ணுங்க
தலைவிரி கோலமாச்சு
இரவு பகல் தெரியாம
காத்து கருப்பா சுத்துதுகள்
வயசு பசங்களுக்கு 
இரவுதான்  வசதியாப்போச்சு
வெள்ளை 'லெக்கின்ஸ் 'மோகினிகள்
கூட சேர்த்து சுத்துதுகள்

அரசியல்  சாக்கடையில்
அடிக்கிறதோ  கொள்ளை
கெஞ்சி கெஞ்சி வோட்டு வாங்கி
மக்களையும் அம்போ னு
அஞ்சுக்கும் பத்துக்கும் அலையவிட்டு
பஞ்சம் பிழைச்சு போகுதுகள்
நம்ம நாட்டு  கொள்ளி வாய்ப்பேய்கள்.

செய்றதெல்லாம் கலப்படம்
ஈட்டுறதெல்லாம்  கொள்ளை லாபம்
மக்களை  ஏமாத்துற வர்த்தகர் கூட்டம்
காசி ராமேஸ்வரம்  போனாலும்
தீராது  இந்த பாவம்
இந்த காலத்து குறளைப் பேய்கள்

கள்ளிப்பால் கொடுத்து
உயிர்   எடுத்த  காலம் போக
இப்போல்லாம்  ரத்தக்காட்டேரிகள்
ஊரெல்லாம்  மலிஞ்சுபோச்சு
பொண்ணுங்க வாழ்க்கையும்
சீரழிஞ்சுபோயாச்சு.

நாலு காசு கைல இல்லன்னா
நாய்கூட மதிக்காத காலம்
பள்ளில  பிள்ளைகள  சேர்க்க காசு
பரீடசைல  பாஸாக  காசு
படிச்சுமுடிச்சு வேலைக்கு போவம்நா 
அட  ..அதுக்கும் காசு  கேக்கிறான்   தக்காளி
சுடுகாட்டையும் விட்டுவைக்கல்ல  'சும்மா'
இந்த சுடுகாட்டுவைரவர்கள்

அந்த காலத்துல  பேய் பேய் ன்னு
சொன்னதெல்லாம் கட்டுக்கதை
பயத்தை உண்டுபண்ண வந்த கதை
இந்த காலத்துல நிஜமான பேய்கள்
நம்மகூடவே  சுத்திட்டு இருக்கு
நம்மையும்  பேயாக்க   முயற்சிக்கும்
பார்த்து நடக்கணும்  நம்ம தான்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 193
Post by: BreeZe on July 19, 2018, 01:28:45 AM
....

இந்த  இரு  பேய்களையும்   பார்த்தால்
எனக்கு  பயமே  இல்லை  .
என்  கண்ணுக்கு  இவங்க
சம்யுக்ததா டோரா  சகோதரிகள்  போல

தினமும்   சோனா  டோரா கூட பழகுவதால்,
இந்த  பேய  பார்த்தாலும் தோழிகள் போல தெரியுது

பேயும் வைப்பரும்  ரெண்டும் ஒண்ணுதான்
வைப்பர் முதலில் பார்த்த பொழுது சீறும் பாம்போ
நினைத்த  நான்  பழகிய பின்  தான்  தெரிந்தது
அது மண்புழு  என்று .,இது போலத்தான் இந்த பேயும்
 இருள் மட்டும் தான் வேறு ,ஒன்றும் இல்லை .


ஜெகா வையும்  நிலவனையும் பார்த்தால்
பயந்து ஓடிவிடும்   இந்த பேய்கள் .
இருவரையும் சுற்றி  ஜொள்ளு  ஆறு
ஓடுவதால் பேய்கள் கூட பயந்து  ஓடுது   .

இந்த பேய்கள்  இருப்பது  நரகம் என்றாலும்
எங்க ஜோ  சகோதரிக்கு
பிரியாணி   கண்ட இடம் சுவர்க்கம் தான்.

இந்த  உலகத்தில் சிறுமிகளை  வன்கொடுமை
செய்பவன்  தான்  பேய் .
இந்த பேய்களிடம் இருந்து நாம் சிறுமிகளை
தற்காத்து கொள்ள வேண்டும் .



...