FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 10, 2023, 01:39:39 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: Forum on December 10, 2023, 01:39:39 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 331

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/331.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: அனோத் on December 10, 2023, 05:16:43 PM

 அநீதி  வாழ்வதும் நீதி வீழ்வதும்
நம் கண் முன்னால் நடக்குது.....
நியாயம் கேட்டு கூடி வந்தால்
அரசே அதை தடுக்குது........

நியாய தர்மங்கள்
முழுதாய் மறைக்கப்படுகுது
நீ யாரென  கேள்வி கேட்டு
அநியாய அதர்மங்கள்
அதிகாரம் காணுது.........

குற்றம் செய்தவன்
குபேரன் என்றால்
அரசே பாதுகாப்பு
கொடுக்குமாம்

குற்றமற்றவன் குலோத்துங்க
பேரன் ஆகினும் ஊழல் குடின்
சிறை வாசமாம்.......

ஆட்சியர்கள் சாட்சியங்களை
மறைக்க பாதுகாப்பா ?
ஆதாரத்   தடயங்களைத் 
தேட பாதுகாப்பா ?

போலித்  துறையாய்
உதவும் போலீசுக்களா ?
அல்லது தர்மம் காக்க வந்த
காவல்துறையா?

கேள்விகள் பல உண்டு
அதை  கேட்கத்  தான் அனுமதி இல்லை
கேடு பிடித்த அரசாங்கம்
போடச்  சொல்லும் தடை உத்தரவுகள்

பாடாய் படும் நீதியின்
உண்மைகளை மறைக்கவே
அதிகார நாடகங்களின்
அரங்கேற்றம்  தடை போடுகிறது ......

காத்திருப்பதும்  தடையதை உடைப்பதும்
சாமானிய மக்கள் நாம் உணரவேண்டிய
காலம் இது ..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: Mr.BeaN on December 10, 2023, 05:56:11 PM
காக்கி சட்டை வெறப்பாக
கண்ணு ரெண்டும் மொறப்பாக
குற்றம் ஒன்னும் நடக்காம
காவல் தானே காப்பாக
 
நீதி காக்க நாளெல்லாம்
நமக்காக உழைப்பாக
மக்கள் உசுரு காக்க தான்
செத்து செத்து பிழைப்பாக

குற்றங்கள் நடக்காம
முடிஞ்சவரை தடுப்பாக
எல்லா மக்களுக்கும்
பாதுகாப்பு கொடுப்பாக

அதையும் மீறி சில குற்றம்
ஊரிலே நடந்தாக்க
யாருமே போகாம
பாதுகாப்பா தடுப்பாக

புலனாய்வு செஞ்சுதான்
குற்றவாளி பிடிப்பாக
ஊர்மக்கள் அவர்களையோ
தெய்வமா மதிப்பாக

வயல்காட்டில் பயிர் வளர
களையும் கூட.வளருமாம்
 காவல் துறை உள்ள கூட
களைகள் பல இருக்குமாம்

வேலி பயிரை மேயும் கதை
நிஜத்தில் நடக்குமே
சில கயவர் கூட்டமித
காவல் உடையில் நிகழ்த்துமே

 எத்தனையோ இன்னல்களை
அவர்கள் தந்த போதிலும்
பத்திரமாய் நாம்.வாழ
அவர்கள் இங்கு வேண்டுமே

இந்த மண்ணில் காவலர்கள்
இல்லை என்று நீங்கினால்
கயவர் கூட்டம் கயமையுடன்
நம்மை வந்து தீண்டுமே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: Vijis on December 11, 2023, 04:07:19 PM
காவல்துறை நமது நண்பன்

சுடும் வெயிலிலும் கடுமையான மழையிலும்
மக்களுக்காக உழைக்கின்றவர்கள்
காடுகளிலும் கரடுமுரடான
பாதைகளிலும் பணிபுரிபவர்கள்

 நாட்டில் ஒவ்வொரு தவுறுகளையும் களை எடுத்து
சுத்தம் செய்யும் உண்ணதமான நண்பர்கள்

 நாட்டில் ஒவ்வொரு பெண்களும் இரவில்
 பயமின்றி நடமாட செய்யும் காவல்தெய்வங்கள்

 தன் மக்களுக்கு சேவை புரிவதற்கு
தன் பெற்றோர் மனைவி குழந்தைகள் உறவினர்கள்
 என்று பலரை விட்டு தன் விருப்பு வெறுப்புகளை கடந்து
 சந்தோஷமாக வேலை செய்யும் நண்பர்கள்

சில நேரங்களில் சாலையோரம் இருக்கும் பள்ளங்களுக்கும்
 கொலை வழக்குகளுக்கும் தடுப்பு பதாகைகளை
வைத்துஇருப்பார்கள் அதை மீறி நாம் செல்லக்கூடாது

காவலர் போடும் சட்டத்தை மதிப்பதும்
அதன்மூலம் நம் உயிர் காப்பதும்
நாம் காவல்துறைக்கு செய்யும் பேருதவி.

வாகனங்களை மெதுவாக ஒட்டவும்
கட்டயமாக தலை கவசம் அணிந்து
சாலை விதிகளை மதிப்போம்
இதுவே நாம் நாட்டுக்கு செய்யும் உதவியாகும்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: Vethanisha on December 11, 2023, 11:42:58 PM
படம் பார்த்தும் பழைய நினைவுகள்
 வந்து வந்து போகுதுங்க
நேர்மை தவறா என் போலீஸ் அப்பாவிற்கு
 இந்த கவிதை சமர்பணங்க

மூவினம் வாழும் நாடு என் நாடுங்க
இங்க
மொழி இனம் மதம் பேதம் இன்றி
நேர்மையாய் உழைத்த   மனுஷனுங்க

துரைசிங்கம் போல மீசையும்
ராகவன் போல கம்பீரமும்
ஜோசப் குருவிலா போல குசும்பும்
தனக்கே கொண்டவருங்க
சுகுமாறன்னு பேரு கொண்ட அவரு
எங்க அப்பாவுக்கே அண்ணனுங்கே

கரு நீல சீருடை அணிந்து
நேர்கொண்ட பார்வையோடு
 மெடுக்காய் அவரு  வருகையில
 தூர நிக்கும் காலி பசங்க கூட
 தலை தெறிக்க  ஓடுவாங்க

நாடோடி வாழ்க்கை அது
அடிக்கடி posting  மாற்றுவாங்க
பக்கமே வீடு இருந்தும் பண்டிகைக்கும்   
 அவருக்கு  வேலைதாங்க

எத்தனை மணிக்கு phone வந்தாலுமே
உடனே எழுந்து ஓடுவாருங்க
 கை சுத்தம் வாய் சுத்தம் இதுவே
காவலனுக்கு போதுனாருங்க

காவலர்கள்

அவர்கள் விழித்திருப்பது
நாம நிம்மதியா தூங்கத்தாங்க
அவர்கள் கண்டிப்பாய் இருப்பது
நாம பாத்துக்கப்பா இருக்கதாங்க
அவர்கள் போடும் தடுப்பு
குற்றத்தை  தடுக்கத்தாங்க   
நெறியோடு நாம்  நடந்து அவர்கள்
பணிச்சுமையை குறைபோமுங்க

காவலர்கள் நம் நண்பனா
அது சரியாய் தெரியலைங்க
ஆனா
கடமை தவறா என் போலீஸ் அப்பா மாதிரி
 இருக்கும் ஒவ்வொருத்தரும்
 என் மனதில் ஒசத்தி தாங்க


 VethaNisha.M





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: Sun FloweR on December 12, 2023, 11:59:21 PM
சடுதியில் நிகழ்ந்திட்ட
சாலை விபத்து...
சல்லி சல்லியான
வாகனங்களும் அதன் பாகங்களும்...
கூழாகிப் போன மனித உடல்களும் அதன் அங்கங்களும்..

யார் மீது குற்றமென
ஆராய்ச்சியும்,
எவர் மீது தவறென்ற விசாரணையும் இங்கே பொருளற்றவை...
ஏனெனில் அக்கறையற்ற அரசாங்கத்தின் பொறுப்பற்ற
அதிகாரிகள் அமைத்த சாலைகள் தான் என்ன செய்யும்?
அத்துமீறுவதையே கொள்கையாய் கொண்ட மானிடனின் முன்பு சாலை விதிகள் தான் என்ன செய்யும்?

போலீசுகளின் கைவசம்
ஒப்படைப்பு செய்திட்டாலும்
இந்த சாலைகள் யாவும்
குற்றவாளிகள் அல்ல..
காவலர்கள் பிடியில் இருந்தாலும் இந்த சாலைகள் யாவும் ஆயுள்கைதிகளும் அல்ல..

கட்டுக்குள் வைத்திருக்கும் காவல்துறையைத் தாண்டிச் செல்ல இங்கு அனுமதி இல்லை..
இந்த நிலை அப்படியே நீடிக்க போவதுமில்லை..

காவல்துறையின் தடை செய்யப்பட்ட பகுதியாக,
அந்நியர்கள் நுழைய முடியாத இடமாக இன்று இருக்கும் சாலைகள் மீண்டும் புத்துணர்வாகி சுதந்திரம் பெற்று மீண்டும் காவு வாங்கத் தயராகிவிடும்..

மீண்டும் தடைசெய்யப்பட்ட பகுதிகள் உருவாக்கப்படும் ...
மீண்டும் சுதந்திர கைதிகள் உருவாக்கப்படுவர்...
மீண்டும்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: SweeTie on December 13, 2023, 01:31:23 AM
பொய்யும்  புரட்டும்  நிறைந்த உலகமிது
சாட்சியங்கள்   அனைத்துமே  வாய்மூடி 
வேடிக்கை பார்க்கும்   நிலைமை  இங்கு 
குற்றம் புரிந்தவனும்    கொலைகார பாவிகளும்
ரத்தக்கறை இன்றி நடமாடும் பூமி இது

ஓட்டை விழுந்த சட்டங்களும்
விரிசல்காணும்   விளக்கங்களும்
பணத்துக்காக  கைநீட்டும் அதிகாரிகளும்
பாராபட்சம்   காட்டும் அரசுகளும்   
ஏமாற்றும்  உலகம் இன்று

புத்தனும் காந்தியும்  பிறந்த மண்ணில் இன்று
அஹிம்சையும்  சத்தியமும்  தோற்றுவிட்டனவா?
எய்தவன்  இருக்க  அம்பை நோவதுபோல்
சட்டத்தை  புறம் தள்ளி  குற்றவாளியை தப்பவிட்டு
செய்யாத குற்றத்துக்காய் தண்டனையா?

மக்களை  காப்பவர்கள் காவலர்களா ? இல்லை
காவலாளரை காப்பவர்  மக்களா ?
காவல் நிலையங்கள்  காப்பாற்றப்படவேண்டி
சாலைகளை  நிரந்தரமாக மூடி வைத்து
போக்குவரத்தை  தடை பண்ணுதல் தகுமா? 

பண ஓலைகள்  பரிமாற்றத்தில்  மறைந்துவிடும்
பணமுதலைகளின்  குற்றவாளி  புத்திரர்கள்
கண்டும் காணாமல்   காக்கி சட்டைக்குள் 
ஒளிந்திருக்கும்   காவலன்  பாடுகிறான்
காசேதான்  கடவுளடா  பாடல்

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: VenMaThI on December 13, 2023, 05:44:24 AM


தீதும் நன்றும் பிறர் தர வாரா ..
நல்லது வேணுமுன்னா நல்லத செய்யணும்
திணை அறுக்க நெனச்சுப்புட்டு
வினைய விதச்சா விளங்குமாங்க ?...

சீரான வாழ்க்கையை வாழத்தான்
சட்டம் பல வந்ததுங்க ...
மதிக்க வேண்டிய சட்டமதை
மிதிச்சாத்தான் நியாயமாங்க ?...

சிறு சிறு துளிகள் சேர்ந்து
பெரு வெள்ளம் ஆகுமுங்க ..
சின்ன சின்ன குற்றங்கள் தான்
சீனச்சுவர் போல வளருமுங்க ....

புகழுக்காய் சிலர் , இச்சைக்காய் சிலர் ..
பேராசையால் சிலர் .. பழிவாங்கும் படலத்தால் சிலர்
என குற்றத்துக்கான காரணம்
எண்ணிலடங்காம கெடக்குதுங்க ...

பயிரத்தான் பாதுகாக்க
வேலி ஒண்ணு போட்டாங்க .. சில
வேலியே அத மேயுதுங்க
வேதனை தான் மிஞ்சுதுங்க ....

மதத்தின் பேரால் சிலர்
மதம் பிடிச்சு அலையுறாங்க
வாழ்க்கை நெறி மறந்து
வன்முறைய தூண்டுறாங்க ....

சாட்சி சொல்ல வந்தவன
சந்தேகமா பாக்குறாங்க
சூச்சமமா வேல பாத்து பலரை
சூழ்நிலை கைதி ஆக்குறாங்க ....

குளிர் மழைன்னு பாக்காம குடும்பத்தையும் பாக்காம
குற்றம் ஏதும் நடக்காம சுற்றம் வாழ உழைச்சாங்க
காவல் தெய்வமும் எல்லைச்சாமியும்
மனித ரூபத்துல வந்தாங்க ..

அரசியல் ஆதாயமுனும்
அதிகார துஷ்பிரயோகமுனும்
கைதிக்கு பூட்டும் விலங்கெடுத்து
காவலர் கையிலும் மாட்டினாங்க ..

எந்த ஆட்சியையும் நீ எதிர்காலம்
ஏசியும் போகலாம் ..
ஆனால்
உன் மனசாட்சியை என்றும்
நீ எதிர்க்கவும் முடியாது
ஏய்க்கவும்  முடியாது .

மதி கொண்டு இயற்றிய சட்டமதை
சதி செய்து நீயும் மீறாதே
விதிகளை மதிக்க பழகிடு ..
 எதிர்கால சந்ததிக்கு
புது வழியை நீ வகுத்திடு .......

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331
Post by: TiNu on December 14, 2023, 08:41:26 PM

என்ன செய்வதென்றே தெரியவில்லை..
என்ன உலகமடா இது.. வெறுத்து போகிறது..
எல்லோரும் அமைதியாய் ஆழ்ந்து தூங்க..
என்னை மட்டும்..  இப்படி நடுரோட்டில்..  ம்ம்ம்ம்
என்ன பாவம் பண்ணினேனோ... ஐயோ....

"ஏய் ஏய் .. ஏன் இப்படி புலம்புகிறாய்"..
 யாரோ.. அழைக்க சுற்றி சுற்றி பார்த்தேன்..
 "நான் தான் நான்தான் மேலே பாரு. மேலே"..
சாலையோர மின்விளக்கு ஒய்யாரமாக..
நின்றுகொண்டு.. கண்களை சிமிட்டி அழைத்தது..

"ஏனப்பா இப்படி புலம்புறேன்... நீ ஓரிடத்தில் நிற்கமாட்டாய்.. 
ஒலிகளை எழுப்பிக்கொண்டே எப்பொழுதும் ஓடுகிறாய்.
என்னை பார் .. என்னால் அசைய கூட முடியாது..
இதே இடத்தில, பல ஆண்டுகள், .அசையாமல் நிற்கிறேன்..
இந்த சாலையை கடந்து செல்பவர்களை பார்த்தவாறு"...

சொல்லி முடித்த விளக்கு கம்பத்தை பார்த்து..
கடுப்பாகி.. கோவமாக முறைத்தேன்..
"ஹே விளக்கே.. நீ கொடுத்து வைத்தவள்..
பல பல அழகான காட்சிகள் எல்லாம் பார்க்கிறான்..
நானோ! கொலை.. கொள்ளை.. விபத்துக்கள்..
இவைகளை மட்டுமே... பார்க்கிறேன்...
நீ வேற.. என்னை சீண்டாதே.. போ.. போ.."

"ஹலோ... நானும் தான்... தினம் தினம்.. பார்க்கிறேன்...
அக்கம்பக்கம் பார்க்காது.. ஒருவரை ஒருவர்..
முந்திக்கொண்டு. அதி வேகமாக..
தன் வாகனத்தை.. செலுத்துவோர்களை...
பார்க்கும் போதெல்லாம் என்மனம்
அதிகமாக.. படபடக்கும்.. ஐயோ..
ஏன் இந்த அவசரம்.. மெதுவாக செல்லுங்கள்..
என சொல்ல.. என் மனம் துடிக்கும்..."

படபடக்கும் விழிகளில் பயம் சோகம் கலந்து..
சொல்லி முடித்தது சாலை விளக்கு...
"ஆம் தோழியே..  நீ சொல்வதும் சரிதான்.. ஏன் இந்த அவசரம்...
காலத்தை பயன்படுத்த தெரியாத மனிதர்கள்..
செல்லும் இடத்துக்கு திட்டமிட்டு அவர்கள் சென்றாலே..
நான் இப்படி நடுரோட்டில் நிற்க தேவையே இல்லை. "
 
"திட்டமிடல் மட்டும் இல்லை.. தோழா!
மது அருந்தாமலும்.. ஓட்டுநர் ஒழுக்கம் கெடாமலும்..
சாலை விதிமுறைகளை சரிவர கட்டிப்பிடித்து...
ஓட்டுநர் அருகிலிருப்பவர்.. ஒத்துழைப்பு கொடுத்தாலே...
பாதி விபத்துக்கள் சாலையில் இல்லை.. "

ஓரமாக ஒய்யாரமாக நின்றாலும்.. இந்த கம்பம்.
கொஞ்சம்.. புத்திசாலித்தனமாக தான் பேசுறது..
"ஆம் தோழியே.. நீ சொல்வதும் சரி.. தான்..
நம்ம கையில் தான் நமது பாதுகாப்பு ன்னு
இவர்கள் ஒருஒருவரும் நினைத்தாலே போதும்.".

ஹீஹீஹீ எல்லோரும் ஒழுங்கா இருந்த.. எனக்கு வேலை இல்லாமலே போய்விடுமே... ..
மனதுக்குள் சொல்லி சிரித்தது..  இதையெல்லாம் வேடிக்கை பார்த்து "POLICE LINE.. DO NOT CROSS"  RIBBON