Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
Friends Tamil Chat Team Conveys🎁 Birthday (21-05-2024) wishes🎁 to our lovable friend ⭐ Ms. PRADEEPA ⭐ and wishes her Good Luck.

12


கடவுளின் படைப்பில்,
உலகின் அதிக நிகழ்வுகள்.. அடங்கி நிற்பது இரண்டு இரண்டாகவே...
ஓர் நாளின் இரட்டை தோழிகள்...  இரவும் பகலும்...
உயிர்களின் இரட்டை வதனம்... ஆணும் ... பெண்ணும்.....
ஒலியின் இரட்டை பிறவிகள்... சப்தமும்.. நிசப்தமும்..
ஒளியின் இரட்டை கிளவிகள் .. கரிய இருளும்..  வெண்  பிரகாசமும்....

நாதத்தின் இரட்டை தோழர்கள்... ஆரோகணமும் .. அவ்ரோகணமும்..
கணிதத்தின் இரட்டை சிசுக்கள்.. எண்களின் ஒன்றும்... சுழியும்..
பூதங்களின் இரட்டை அடிநாதம்.. நீரும்... நெருப்பும்..
அண்டத்தின் இரட்டை பிரிவுகள்.. காற்றிடம்.. வெற்றிடம்..
இன்னும் பல பல.. உண்டு... இப்பிரபஞ்சத்தில்...

ஆண்டவனின் படைப்பில்,
அண்டத்தை  இப்படி... ஜோடி ஜோடியாக படைத்திருக்க..
நம்முளும் உருவெடுக்கும் சில இரட்டையர்கள்..
நம் நாசிகளிலும்...  இரு சுவாசங்கள் உண்டென்பர்...
இதயத்தின் துடிப்புகளும் இரண்டு.. நாளங்கள்... நாடிகள்...

விழி.,செவியின் இரட்டையர்களை..தனித்தனியே பிரித்து..
எடுத்து சொல்ல.. பல்லாயிரம் நாழிகைகள் ஆகுமே.....
மொத்தத்தில் சுருங்க உரைத்தால்.. நம் முழு தேகமுமே..
ஒன்றில் மறைந்திருக்கும்.. இரு எதிர்மறை பகுதிகளே..

இறைவனின் படைப்பில்,
பிறருக்கு நன்மை செய்து.. அதில் நிறைவுபெறும் மனம் ஒன்று..
தான் மட்டும் வாழ... பிறர் நலம்.. நோக்கா..  மனம் ஒன்று..
எல்லா மனித படைப்புகளிலும் வாழுமே .. இவ்விரு சக்திகள்..

நன்மைகள் மட்டுமே செய்து.. நல்லவனாக வாழவும் முடியாது..
தீமைகள் மட்டுமே செய்து.. கெட்டவனாக வாழவும் முடியாது..
உன் அன்பும் கருணையும் வேண்டுவோரிடம்..தெய்வமாக.. வாழ்..
உன்னிடம் அடைக்கலம் வேண்டுவோரின். துயர்துடைக்க. அரக்கனாய் வாழ்... . 

என்றுமே.. நாம்..  இடம்,பொருள்,ஏவல் ஆராய்ந்து அறிந்து..
அக்கணப்பொழுதில்.. நம்முள் உறைந்திருக்கும்.. இருவரில்...
யார்.. எப்போது எப்படி.. உருவெடுத்து.. வெளிப்பட வேண்டுமென..
ஆழ்ந்து சிந்தித்து.. தீர்க்கமாக முடிவெடுத்து.. வாழ்வதே வாழ்க்கை...

13
"இருள் சூழ்ந்த மனம்"
மனிதனின் மறுப்பக்கம் அகமும் புறமும் ஒன்றுகாட்டும் சாத்தான் ஒரு கருப்பு சரித்திரம் அல்ல தரித்திரம்!
பிறர்வாடி நிற்க கொடுங்கோல் பாவியானோம்!
தீயோனை முன்னிலையாக்கும் விந்தை மனிதர்கள் அல்ல நாம் மாக்களாகி நிற்கதியற்றுபோனோம்?
விபத்தின் புகைப்படங்கள் எடுத்து
வேடிக்கை காட்டும் அரக்கர்
கூட்டம் முன்டு!
வலைத்தளங்களை பார்த்து சீரழியும் கூட்டம் ஓர் பக்கம் - பெண் பித்தேடுத்து சிறுமிகளின் கனவுகளை நசுக்கும் நஞ்சும் உண்டு,
ஓட்டை கூவி விற்பனை செய்யும்
கடையும் முன்டு, கடமையைவிற்கும் கயவர்களும் விலைமாதர்களுமுன்டு!
நல்லவை எல்லாம் தீக்கிரையாக்கும் சாத்தானே! உனை ஒழிக்க எவருமல்லை எனன இறுமாப்போ! - இரத்தம் சூடான எம் படையுண்டு ஜல்லிக்கட்டு போராட்ட களம் நினைவிருக்கிறதா!
ஓடி ஒளிந்து கொள்ள சாத்தானே சாட்டையடி கிடைக்கும்....... முனைவர்.நாகராஜசோழன்... ♥️


14
SMS & QUOTES / Re: MILLIONAIRE SAYINGS RAJINI VERSION
« Last post by MysteRy on May 20, 2024, 01:27:41 PM »
15
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on May 20, 2024, 01:26:13 PM »
16
Hi guys 24th May, 2024 my space enjoy to all, dance to all please come to all...
17
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 343

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

19
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on May 19, 2024, 02:06:37 PM »
20
GENERAL / Re: Karutthu of the Day🔥
« Last post by MysteRy on May 19, 2024, 02:05:39 PM »
Pages: 1 [2] 3 4 ... 10