Author Topic: தமிழக அரசு துறைகளில் 240 புள்ளியியல் உதவி ஆய்வாளர் (Assistant Statistical Investigator) .....  (Read 1040 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தமிழக அரசு துறைகளில் 240 புள்ளியியல் உதவி ஆய்வாளர் (Assistant Statistical Investigator) காலி பணியிடங்கள் !!!




(விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய மார்ச் 20-ஆம் தேதி கடைசி நாள். )

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 240 புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை அறிவித்து உள்ளது

தேர்வு செய்யப்படுவோர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இவற்றில் சேராத பிற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கணினி அடிப்படையிலான தேர்வுக்கான பாடத் திட்டம், தேர்வு மையங்கள், விவரக் குறிப்புகளை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net ஆகிய இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

உதவி ஆய்வாளர் பணி தேர்வுக்கான தேவையான அடிப்படைத் தகுதிகள்:
புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், கணினி பயன்பாட்டியல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 10+2+3 என்ற அடிப்படையிலேயே தங்கள் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

Operation Research, Econometrics, Mathematical Economics உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலைப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் புள்ளியியல் துறையில் Bayes Theorem, Normal T, Chi Square and F, Statisticals Tests like Z, T, F உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இதேபோல விண்ணப்பதாரர்கள் புள்ளியியல் சார்ந்த தர ஆய்வை மேற்கொள்ளத் தேவையான MS-Excel-ஐ கையாளும் திறனைப் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் 50 ரூபாயுடன், தேர்வுக் கட்டணம் 250 ரூபாயை வரைவோலையாக எடுத்து விண்ணப்பிக்கவும்.

ஏற்கெனவே ஒருமுறை பதிவு செய்து பதிவு எண்களைப் பெற்றுள்ளவர்கள், 50 ரூபாய் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய மார்ச் 20-ஆம் தேதி கடைசி நாள். கட்டணங்களை செலுத்த மார்ச் 22-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புள்ளியியல் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வுகள், இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் ஏப்ரல் 4-ம் தேதி காலையிலும், இரண்டாம் தாள் அன்று மதியமும் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விவரக் குறிப்புகள் என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.