Author Topic: கூகுள் குரோமில் புதிய வசதி அறிமுகம்  (Read 2166 times)

Offline Dong லீ

இணைய உலாவிகளில் முன்னணி வகிக்கும் கூகுள் குரோம் உலாவியின் வெப் ஸ்டோர்(Web Store) பகுதியில் புதிய வசதி ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.   

இவ்வசதியின் மூலம் இணைய இணைப்பு இல்லாத போதிலும் பயன்படுத்தக்கூடிய பிரயோகப் பொதிகளைத்(Offline Applications) தரவிறக்கம் செய்ய முடியும்.   
இவ்வசதியினை பெறுவதற்கு குரோம் வெப் ஸ்டோர் பகுதியினுள் சென்று அங்கு காணப்படும் Collections பகுதியில் இறுதி அம்சமாக அமைந்திருக்ம் Offline Apps என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த பிரயோகப் பொதிகளைத் தரவிறக்கம் செய்ய முடியும்.   
தவிர கூகுள் வெப் ஸ்டோர் ஆனது மேலும் ஆறு நாடுகளின் மொழியில் செயற்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.