Author Topic: பென்டிரைவ் மற்றும் கணினியில் கோப்புகளை மறைத்துவைக்க உதவும் மென்பொருள்...  (Read 2184 times)

Offline kanmani

வணக்கம் நண்பர்களே.. பென்டிரைவ் (Pendrive)பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பென்டிரைவின் பயனை இப்போது அனைவரும் அறிந்திருக்கின்றனர். பென்டிரை மற்றும் கணினியில் உள்ள ஒரு சில கோப்புகளை மறைப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம்.

பென்டிரை மற்றும் கணினியில் உள்ள கோப்புகளை ஏன் மறைக்க வேண்டும்?

இதற்கு ஒரு சில காரணங்கள் சொல்ல முடியும். உதாரணமாக உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய கோப்புகள்(Secret files or secret folders) அதில் இருக்கலாம். எனவே அதை பிறர் பார்க்காதபடி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதேபோல உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகை, நடிகர்கள்(Cinema actress photos  or personal photos) படங்களை வைத்திருக்கலாம். அதை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும்.

ஒரே பென்டிரைவை பலர் பயன்படுத்த நேரிடும்போது உங்கள் கோப்புகளை தவறுதலாக மற்றவர்கள் கையாள நினைக்கலாம். எனவே கோப்புகளை மறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

நீங்கள் அலுவலகம் அல்லது பள்ளியில் பணிபுரிகிறீர்களென்றால் உங்கள் மேலதிகாரிகள் போன்றவர்களின் முன்னிலையில் உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளைப் பயன்படுத்த நேரிடும்போது, அதில் உங்களுடைய சொந்த படங்களோ, அல்லது கோப்புகளோ இருக்குமானால் அவர்கள் கண்ணிலும் படும். இது உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படும். இதனாலும் நீங்கள் கோப்பு மறைக்க வைத்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

இத்தனைக்கும் மேலாக ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இத்தகைய கோப்புகளை மறைத்து வைப்பதே சிறந்தது.

எப்படி மறைப்பது?(How to Hide Folder or files in perdrive or pc?)

உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளை மறைத்து வைக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளின் பெயர்: WinMend Folder Hidden software என்பது. இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளை மறைக்க இயலும்.

இந்த பயனுள்ள மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு முதல் முறையாக மென்பொருளை இயக்கும்போது இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும்.

அதில் உங்களுக்கான Password கொடுத்து சேமித்துவிடுங்கள். இந்த கடவுச்சொல்லை நீங்கள் மறக்காமல் வைத்திருப்பது அவசியம்.

பிறகு தோன்றும் விண்டோவில் WinMend Folder Hidden 1.4.6 என்ற திரையில் Hide Folder , Hide Files என்ற பட்டன்களை கிளிக் செய்து வேண்டிய கோப்புகள் அல்லது கோப்புறைகளை மறைத்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணினி மற்றும் பென்டிரைவ் இப்படி மறைக்க வேண்டிய கோப்புகள் எங்கிருந்தாலும் அதனைத் தேர்வு செய்து மறைத்துவிடலாம்.


மறைத்த வைத்த கோப்புகளை வேறொரு கணினியிலோ(other computer) அல்லது உங்கள் கணினியிலோ(your pc) பார்க்க வேண்டுமெனில் அந்த மென்பொருளை இயக்கி சரியான கடவுச்சொல்லைக் கொடுத்துதான் பார்க்க முடியும். பிற நபர்களால் உங்கள் கோப்புகளை பார்க்க முடியாது.

மறைத்து வைத்த கோப்புகளை மீண்டும் பார்க்க இம்மென்பொருளை இயக்கவிட்டு Unhide என்பதினை கிளிக் செய்து மீண்டும் கோப்புகளை பெறலாம். இவ்வாறு Unhide  என்ற பட்டனை கிளிக் செய்யும்போது கடவுச்சொல்(Password) கேட்கும். நீங்கள் முதலில் உள்ளிட்ட கடவுச்சொல்லை(Password) மீண்டும் உள்ளிட்டு மறைத்து வைத்த கோப்புகளை காணலாம்.

பென்டிரைவில் மட்டுமல்ல.. கணினியில் உள்ள கோப்புகளையும் இதன் மூலம் மறைத்து வைக்கலாம். இதனால் பிறர் உங்கள் ரகசிய கோப்புகளை பார்க்க முடியாமல் தவிர்த்துவிடலாம்.