Author Topic: ~ ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! ~  (Read 457 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்!

ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்!
கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப உலகில், சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினி   வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதால், சிறிய வகை  கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும்.

அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம்,  கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது.



கங்காரு கணினியின் சிறப்பம்சங்கள்:

* உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது.

* இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட்,  எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2.0 போர்ட், யு.எஸ்.பி-3.0 போர்ட், டி.சி பவர் போர்ட் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 200 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இதில் விண்டோஸ் ஹெல்லோவுக்கு கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



* கங்காரு கணினியில் குவாட் கோர் செர்ரிடிரயல் ஆடம் எக்ஸ்-5-இசட் 8500 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

* 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியோடு கூடுதலாக 128 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

* நான்கு மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் பேட்டரியும், சார்ஜ் செய்ய மைக்ரோ-யு.எஸ்.பி போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

* கங்காரு கணினி,  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டிருக்கின்றது.



* இந்த சிறிய கணினியில் வை-பை 802.11ac மற்றும் ப்ளூடூத் 4.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் கங்காரு கணினியின் விலை ரூ.6,500 ஆகும்.

* நவம்பர் மாதத்தின் மத்தியில் மைக்ரோசாப்ட் ஸ்டோர் மூலம் கங்காரு கணினி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இந்த கணினியை கொண்டு இண்டர்நெட் ப்ரவுசிங், வீடியோ கேம், மற்றும் ஃபுல்-எச்.டி வீடியோ உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும்.