FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on September 29, 2013, 09:30:24 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 29/09/2013 (Sep 29th)
Post by: kanmani on September 29, 2013, 09:30:24 PM
இன்றைய ராசி பலன்கள் - 29/09/2013



மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.



ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


மிதுனம்:  கடந்த 2  நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர் களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


கடகம்: ராசிக்குள்சந்திரன் நுழைவதால் வெளுத்ததெ ல்லாம் பாலாகநினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளா தீர். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை குறையும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்க வேண்டி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பெற் றோரின் ஆதரவு பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.


துலாம்: உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சாதிக்கும் நாள்.



விருச்சிகம்: கடந்த 2 நாளாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


தனுசு:  சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர். வேலைச்சுமை மிகுந்த நாள்.


மகரம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப் பீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.



கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.


மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்