Author Topic: ம(னி)தம்  (Read 1784 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ம(னி)தம்
« on: July 21, 2011, 06:09:16 AM »
ம(னி)தம்

இன்றைய உலகில் விவாதிக்கக் கூடிய தலைப்புகளில் முக்கியமானது “மதம்”. மதம் என்றால் என்ன? இதற்கு பல விளக்கங்கள் கொடுக்கலாம். மனிதனுக்கு மனிதன் இந்த விளக்கம் வேறுபடும். மதம் என்பது “மனிதனின் தலை விதியை நிர்னயிக்கும் இயற்க்கையின் சித்துவிளையாட்டின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை” (அதாவது “a strong belief in a supernatural power or powers that control human destiny”). மதம் என்பது ஒரு மனிதனின் அல்லது ஒரு குழுவின் நம்பிக்கை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியை அடைவதின் வழி. இப்படி மதத்தைப் பற்றி பல விளக்கங்கள் கொடுக்கலாம். என்னைப் பொருத்த வரை மதம் என்பது இறைவனை அடையும் பல வழிகளில் ஒன்று. சில வழிகள் கரடுமுரடானதாக இருக்கலாம். சில வழிகளில் மேடு பள்ளமாக இருக்கலாம். ஆனால் சென்று அடையும் வழி ஒன்றுதான்.

இந்த உலகில் பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். இடம், கால சூழ்நிலை, உட்கொள்ளும் உணவு போன்றவை அவர்களை வித்தியாசப்படுத்துகின்றன. அந்த வித்தியாசங்கள் நிறம், உயரம், பழகும் விதம், உணவு, மொழி போன்றவை ஆகும். இந்த வரிசையில் நிச்சயமாக மதத்தை சேர்த்துக் கொள்ளலாம். மதம் என்பது எப்படி தோன்றியது? தோன்றுகிறது? இந்த உலகை ஏதோ ஒரு சக்தி ஆட்டிப் படைப்பதை அனைவரும் நம்புகிறார்கள். மனிதனின் இறப்பிற்குப் பிறகு என்ன இருக்கிறது என்று யாருக்கும், சத்தியமாக, தெரியாது. (அப்படி தெரியும் என்று யாராவது சொன்னால் முதலில் சொன்னவர்க்கு கால் இருக்கிறதா என்று பார்க்கவும்). ஆனால் மதங்கள் அந்த உலகை ஓரளவு காட்டுகிறது. மரனத்திற்க்குப் பிறகு இவ்வாறாக இருக்கும், இருக்கலாம் என்று விளிம்புகிறது, நம்பவைக்கிறது. கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றோடொன்று பின்னப்பட்டது.

சரி! மதம் எப்படி தோன்றியிருக்கலாம்? இது என் கற்பனை. மனிதன் தன் பரினாம வளர்ச்சியை அடைந்த பொழுது தன்பழக்க வழக்கங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான். சமுதாயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறு இன்னொரு மனிதனை பாதிக்கலாம் அல்லது பாதிக்காமல் போகலாம். இன்னொரு மனிதனை அந்த தவறு பாதிக்காமல் போனால் எந்த பிர்ச்சினையும் இல்லை. ஆனால் பிரச்சினையே இன்னொரு மனிதனை பாதிக்கும் தவறுகளால் தான். உதாரணமாக, ஒரு குடிகாரன் தினமும் குடிக்கிறான் என்றால் அவனுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை என்றால் அது அவனை மட்டுமே பாதிக்கும். ஆனால் அவனே ஒரு மணமானவனாக இருந்தால், அவனுடைய குடி அவன் மனைவி, மக்களை பாதிக்கும். இப்படி பட்ட தவறுகளை செய்பவன் நிச்சயம் தண்டணை அனுபவிக்க வேண்டும். அதற்காக கொண்டு வரப்பட்டது தான் சட்டங்கள். ஒரு மனிதன் ஒரு இனம் அல்லது ஒரு குழுவில் இருக்க வேண்டும் என்றால் அவன் அந்த இனம் அல்லது குழுவின் சட்ட திட்டங்களின் படி வழி நடக்க வேண்டும். அந்த சட்டங்களை மீறினால், தண்டனை கொடுக்கப்படும். தண்டனை பற்றி பிறகு பார்ப்போம். பிற்பாடு பழக்க வழக்கங்களுக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும். அதை மீருபவர்க்கு ஒரு வரை முரை வகுக்கப்பட வேண்டும். ஆனால் அது கடினமானது. காரணம் ஒருவன் செய்யும் மனதில் நினைக்கும் செயலை கண்டுபிடிக்க முடியாது. சட்டம் என்பது எழுதப்பட வேண்டியது. அது ஒரு Compile செய்யப்பட்ட மென்பொருள் (Software). அதற்கு இரக்கம் கிடையாது. அது சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை. அதை இயக்குவது நம்மைப் போல ஒரு சராசரி மனிதன். ஆனால் சட்டங்களை பயன்படுத்தும் பொழுது மனிதனுக்கு சிலவற்றில் கருத்து பேதம் வரும். இது இயற்கை. இதை தடுக்க முடியாது. அதனால் சிலவற்றை அதன் அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். உதாரணமாக, கடவுள் நம்பிக்கை சிலருக்கு இருக்கும் சிலருக்கு இருக்காது. அதனால் தான் முதல்வராக பதவி ஏற்க உருதிமொழி எடுக்கும் பொழுது கூட “உளமாற உறுதி கூறுகிறேன்” என கலைஞர் கூற அனுமதித்தது நம் அரசியல் சாசனம். அப்படி (கண்ணுக்கு தெரியாத) கடவுளை நம்பும் மக்களுக்கு ஒரு சட்டப்படி தண்டனை இல்லாத ஆனால், சட்டங்கள், தேவைப்பட்டது. அதற்காக கொண்டு வரப்பட்டது தான் மதமும் அதன் சட்டங்களும் என்பது என் கருத்து. அதாவது ஒரு குழுவின் பெரும்பான்மையான மக்களின் கருத்து தான் சட்டமாக, மதச் சம்பிரதாயமாக உருவானது. மதச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடுகள் இதற்கு விதிவிலக்கு.

மதம் என்பது ஒரு மனிதனை நழ்வழிப்படுத்தத்தான். மனிதன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள, அடுத்தவற்கு தீங்கு செய்யாமல் ஒரு வழியில் செல்ல பயன்படும் ஒரு குறியீடு (concept) தான் மதம் என்பது. கடவுள் என்ற சக்தியை சென்றடைய ஒரு வழி மதம். மதம் மனிதனின் மாற்று சட்டை. கடவுள் என்னும் மாய சக்தியை சென்று அடைய பழ வழிகள் உள்ளன. பல வழிகள் என்று நான் சொன்னது, பல மதங்கள். இந்து, இஸ்லாமியம், கிருத்துவம், ஜைனம், சீக்கியம், பௌத்தம் என்பது பல மதங்கள் என்னும் வழிகள். இந்த மதங்கள் இடம், காலம், சூழ்நிலை, சக மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பல்வேறு parameter-களால் பலவாறு உருவானது. அந்த அந்த மதங்களின் கோட்பாடுகள், வழிகள், வழிபடும் முறை மதத்திற்கு மதம் வேறுபடும். ஆனால் அனைத்து மதங்களின் இலக்கு கடவுள் மட்டும் தான், அல்லது கடவுள் என்ற சக்தி தான். வழிகள் வேறுபடலாம். ஆனால் இலக்கு கடவுள். கடவுள் என்பது எங்கும் இருக்கலாம் என்று இந்து மதத்தின் நம்பிக்கை. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அது தான் நாம் மற்றவரிடம் செலுத்தும் அன்பு. என்னடா இது, எங்கோ கேட்டது போல இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆமாம்! ஆன்பு தான் கடவுள்!! இந்த உலகில் கடவுள் என்று ஒன்று இருக்கிறதா? இல்லயா? என்பதல்ல என் வாதம். மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்துகிறார்களா? என்பது தான் என் கேள்வி.

இன்று உலகில் ஒரு பகுதியினரை மட்டும் ஒதுக்கி விட்டதாக நான் நினைக்கிறேன். இஸ்லாம் மதம் என்றாலே தீவிரவாதம் என்று நினைக்கிறார்கள். அதற்கு யார் காரணம் என்று ஆராய்வதை விட்டு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும். (என்னுடைய வாதம் தீவிரவாதத்தைப் பற்றி அல்ல. மதம்.) மனிதன் சக மனிதனை நேசிப்பதைத் தான் மதங்கள் வலியுறுத்துகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழிப்பதற்கு அவனுக்கு உரிமை இல்லை. சட்டம் ஒரு மனிதனுக்கு மரண தண்டனை கொடுத்தால் அது கொலைக்கு சமம். ஆனால் அது சட்டப்படி வந்துள்ளதாலும், மற்றவருக்கு தீங்கு விளைவித்ததால் மரண தண்டனை கொடுக்கப்படுகின்றது. ஒரு மனிதன் சக மனிதனை துன்புறுத்துகிறான் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அன்பு என்பது அங்கு அடி பட்டுப் போகின்றது. அவனை சட்டம் தண்டிக்கிறது. அனால் அவன் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் பொழுது அவன் தேடும் குற்றவாளியாகவோ அல்லது தீவிரவாதியாகவோ அறிவிக்கப்படுகிறான். சரி! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பொழுது இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். இந்த நிலையில் ஒருவன் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க தன் உயிரையே கொடுக்கிறான் என்றால் அது சற்று சிந்திக்கப் படவேண்டிய விசயம். உயிர் என்பது திரும்ப கிடைக்காதது. அவனை இப்படி ஆக்கியது யார்? அதற்கு காரணம் என்ன??

இப்படி ஒருவன் மாறுவதற்கு அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே காரணம். அவன் செயல்பாடுகள் உருவாவதர்க்கு அவனை சுற்றி நடப்பவையே காரணம். ஒருவன் ஒருவனாக இருப்பதற்கு சுற்றுச் சூழலே காரணம். ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டாக வந்தவள் தனு. தனு என்ற பெண் மனிதவெடிகுண்டாக மாறுவதற்காக பிறக்கவில்லை. அவள் அவ்வாறாக மாறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவளுடய ஒரு சகோதரன் இந்திய ரானுவத்தால் கொல்லப்பட்டதாகவும், தனுவும் அவள் சகோதரியும் இந்திய ரானுவத்தினரால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவள் மனிதவெடிகுண்டாக ஆசைப்பட்டாள். இது தனுவாக முன்வந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவளும் எதோ ஒன்றால் பாதிக்கப்பட்டதால் தான் அவளை இந்த வேலைக்கு ஏற்றவளாக முடிவு செய்தனர் விடுதலைப் புலிகள். இதுவும் உன்மை. என்னுடய நன்பனின் சகோதரன் ஒருவன் விடுதலைப் புலிகளின் போரினால் ஈர்க்கப்பட்டதால் அந்த இயக்கத்தில் சேர சென்றான் (எங்கள் ஊரில் நக்சலைட்டுகள் அதிகம். மேலும் எங்கள் ஊரின் அருகில் நிறைய போராளிகள் இருந்தனர்). ஆனால் அவர்கள் அவனை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். காரணம் கேட்டதற்க்கு, “நீ வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எங்கள் இயக்கத்தில் சேர வந்துள்ளாய்! மகிழ்ச்சி. ஆனால் உன்னிடம் ஒரு வெறி இருக்காது. காரணம் நீ உன் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் பட்டிருப்பது போல தெரியவில்லை. உனக்கு எங்கள் இயக்கத்திற்க்கு உதவ ஆசைப்பட்டால் எங்களுக்கு பொருளாக கொடுக்கலாம்” என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். (இது நடந்தது சில வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை). ஆக ஒரு மனிதன் மனிதனாக இருப்பதற்கும் மிருகமாக (அதாவது மற்றவரின் பார்வையில்) இருப்பதற்கும் காரணம் அவனை சூழ்ந்திருக்கும் மனிதர்களே! அந்த மனிதர்கள் நானும் நீங்களும் மற்றும் அனைவரும் தான்!!

சரி! வெருப்பு எப்படி ஏற்படுகிறது? ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொல்வதை பாருங்கள்…

“நாம் எப்போது விரிவடைகிறோம். எப்போது குறுகிப்போகிறோம் என்று நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை னாம் அறிந்து கொண்டால் நம்மிடமிருந்து யாராலும் புன்னகையை அகற்ற முடியாது. இல்லை என்றால் யாரோ சொல்லும் ஒரு சில வார்த்தைகள் கூட நம்மை கொதிக்க வைத்து விடும்.

‘எதிரியிடம் கூட இறைவனை கான முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறார்களே…அது எப்படி முடியும்?’ என்று சிலர் கேட்கிறார்கள்.

நீங்கள் விரும்பாத ஒருவரைப் பற்றி நினைக்கும் போது எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை கவனித்திரிக்கிறீர்களா? உங்களுக்குள் கோபம் கொப்பளிக்கும். எரிச்சல் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் வெறுக்கும் அந்த நபரின் தீயகுணங்கள் அனைத்தும் உங்கள் உடலில் பிரதிபலிப்பதைக் காணமுடியும். நான் யாரை வெறிக்கிறோமோ அவர்களைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கிறோம். அவர்களைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதால் அதிகமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் யாரை வெறுக்கிறீர்களோ அவர்களிடம் இறைவனை காண முயற்சி செய்ய வேண்டாம். குறைந்த பட்சம் வெறுமையை அதாவது வெற்றிடத்தை காண முயற்சி செய்யுங்கள்.

ஏனெனில். வெறுமையிலிருந்துதான் எல்லா உணர்வுகளுமே தோன்றுகின்றன. எல்லா எண்ணங்களுமே வெறுமையிலிருந்து தான் புறப்படுகின்றன. உள்ளுணர்வு, கவிதை, இவை அனைத்துமே எங்கிருந்து வருகின்றன? எல்லா எண்ணங்களுமே நம் மனதின் ஆழத்தில் உள்ளே இருக்கும் ஒரு வெற்றிடத்தில் இருந்து தான் வருகின்றன. அந்த வெற்றிடமாக இருக்க பழகிக்கொண்டால் வாழ்க்கை ஒரு புதிய கோனத்தில் தொடங்கும்.

உங்களால் எப்பொதும் அனைவரையும் நேசிக்க முடியும் என்று னான் சொல்லவில்லை. அது இயலாது. ஏனெனில், நேசிப்பது என்பது வெறும் செயல் அல்ல. அது நீங்கள் சுலபமாகப் பயிற்சி செய்துவிடக் கூடியது ஒன்றும் அல்ல. நேசம் என்பது உங்களிடம் தானாகவே நிகழவேண்டும்.

ஒரு பெரிய கடைக்கு சென்றால், அங்கே பல பொருள்களைப் பார்க்கிறீர்கள். அங்கே இருக்கும் அனைத்துப் பொருள்களையும் நீங்கள் விரும்புவது இல்லை. இந்த பொருள்கள் எல்லாம் விரும்ப வேண்டும் என்று அந்த கடைக்கு போகும் போது நீங்கள் உங்களுக்கு சொல்லிக் கொள்வது இல்லை. அதாவது, உங்களது விருப்புகளை நீங்கள் தயாரிப்பது இல்லை. நேசமும் அது போலத் தான்.

ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளூங்கள்…உங்களை நீங்கள் நேசிக்காத போது எவ்வாறு நீங்கள் அனைவரையும், அதுவும் நீங்கள் வெறுக்கும் ஒருவரை நேசிக்க முடியும்?

நேசம் என்பது ஒரு செயல் அல்ல. அது ஒரு நிலை. ஆழ்ந்த தியானத்தில், வெறுமையான நிலையில், இயல்பாகப் பாய்வது தான் நேசம். அது தினிக்கப் படுவதில்லை. வாழ்க்கையில் நேசம் என்பது ஒரு நிலையாக ஆகும் போது உங்களால் உங்கள் எதிரியைக் கூட நேசிக்காமல் இருக்க முடியாது.” (நன்றி. உபயம்: ஆனந்த விகடன்)

இஸ்லாம் மதம் மற்ற மதத்தைப் போலவே பல உன்னதமான கருத்துக்களை கொண்டது தான். உலகில் உள்ள மதங்களை இப்படி பிரிக்கலாம். மூன்று மதங்களை எடுத்துக் கொள்வோம். அவை இந்து, இஸ்லாம், கிருஸ்துவம். கிருஸ்துவ மதம் கண்டிப்புடன் நடந்துக் கொள்ளாத மதம் என்று சொல்லலாம். கிருஸ்துவம் போதிப்பது அஹிம்சை. “உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு” என்பது கிருஸ்துவத்தின் பிரபலமான வரி. அதே சமயம் அதன் மதச் சட்டங்கள் அந்த மதத்தை பின்பற்றுபவர்களை கட்டுப்படுத்துவதில்லை. கிருஸ்துவத்தின் சட்டங்கள் சற்று Relax செய்யப்பட்டவை. விமரிசனங்கள் இங்கு வரவேற்க்கப்படுகின்றன. அதற்கு நேர் எதிராக இஸ்லாம், அதனை பின்பற்றுபவர்களை தினமும் ஐந்து வேளை கட்டாயம் மதச் சம்பிரதாயங்களை பின்பற்றவேண்டும் என சொல்கிறது. இஸ்லாம் சற்று கண்டிப்பான மதம் என்று சொல்லலாம். மேலும் இஸ்லாம் மதத்தில் “ஒருவன் அண்டை வீட்டாரை மனதளவில் வெறுத்தாலும் அவன் உன்மையான இஸ்லாமி இல்லை” என்று சொல்லப்படுகிறது. (அப்படி என்றால் அதே இஸ்லாம் மதத்தில் தான் “ஜிகாத்” என்று சொல்லப்படிகின்ற “புனிதப் போர்” பற்றியும் சொல்லப்படிகின்றது. அப்படியானால் தவறு இஸ்லாம் மதத்திலா? இல்லை!!! இஸ்லாம் மதத்தை புரிந்து கொண்டவர்களினால்.) ஆனால் இஸ்லாம் மதத்தில் விமரிசனங்கள் வெறுக்கப்படிகின்றன. ஒருவன் இஸ்லாம் பற்றி விமரிசனம் செய்தால் அவன் இஸ்லாத்தை அழிப்பவனாகப் பார்க்கப்படுகின்றான். அவன் இஸ்லாத்தின் விரோதியாக அறிவிக்கப்படுகின்றான். இந்து மதத்தை எடுத்து கொண்டால் அது இந்த இரண்டு மதங்களுக்கும் இடைப்பட்ட மத சடங்குகள் கொண்ட மதம் என சொல்லலாம். அதிகமான கண்டிப்பும் இல்லாமல் அதே சமயம் அதிக சுதந்திரம் கொடுக்காத மதம் என சொல்லலாம்.

சரி! இஸ்லாம் மதம் மட்டும் ஏன் தவறாக சித்தரிக்கப்படுகின்றது? காரணம்! இஸ்லாம் இன்னும் அறிவியலை ஏற்றுக் கொள்ளாததினால். இது எந்த அளவு உண்மை? இஸ்லாம் உலகை எடுத்துக் கொண்டால் இரு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று! அரிவியலை ஏற்றுக் கொண்ட நாடுகள். உதரணமாக, இந்தோனேஷியா, எகிப்து, மலேசியா, துருக்கி, சவூதி அரேபியா, ஈராக், குவைத் போன்றவை. மற்றொரு பிரிவில், அறிவியலை ஏற்றுக் கொள்ளாத பிரிவில் உள்ள அப்கானிஸ்தான், ஈரான், வங்காள தேசம் மற்றும் சில நாடுகள். அரிவியலில் சேர்ந்த நாடுகள் மற்ற நாடுகளோடு ஒத்துப் போயின. ஆனால் ஒரு சில மேலை நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை) இந்த (அமெரிக்காவின் பார்வையில்) காட்டுமிராண்டி நாடுகளை அரிவியல் ரீதியாக ஆக்கிரமிப்பு செய்யப் பார்த்தன. உதாரனமாக ஈராக் யுத்தம். அதனால் இந்த நாடுகளோடு நேரடியான யுத்தம் செய்ய முடியாமல், ஆனால் வேறு வழியில்லாமல் மனித வெடிகுண்டாக மாறுகின்றனர். எல்லா நாடுகளுக்கும் நடுநிலையாக செயல்படவேண்டிய ஐ.நா. சபையும் இன்று அமெரிக்கா சொல்லுக்கு கட்டுப்பட காரணம், ஐ.நா. சபைக்கு பாதி நிதி அமெரிக்காவிடமிருந்து வருகிறது என்பது தான். முதலில் இந்த ஐ.நா. சபையின் தலைமையிடத்தை அனிசேரா நாடுகளில் ஒன்றில் மாற்ற வேண்டும்.

இந்த நிலைக்கு காரணம் பார்த்தால், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் வளராத நாடுகளை அரவனைத்து செல்ல மறுப்பதே காரணம். சற்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு வேளை நாமும் அரிவியலை ஏற்காமல் இருந்திருந்தால், இன்று நசுக்கப்பட்டிருக்களாம்!!!

ஆக, ஒவ்வொறு மதமும் சமதானம், அன்பு, மனித நேயம் ஆகியவை பற்றி மட்டுமே சொல்கிறது. சக மனிதனை நேசிக்க சொல்கிறது. நான் முன்பே சொன்னது போல இறைவனை சென்றடைய பல வழிகள் தான் மதம். அந்த வழிகளின் தன்மை வேறுபடலாம்…ஆனால் சேரும் இடம் இறைவன் என்னும் ஒரே பரம்பொருள். இதை புரிந்து கொண்டாலே போதும். இந்த உலகம் தன்னால் அமைதியுறும்.