Author Topic: தொழுகையின் முக்கியத்துவம்  (Read 842 times)

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
அல்லாஹ் மனிதனைப்படைத்து அம்மனிதனுக்கு பல வணக்கங்களை கடமையாக்கி ”அவ்வணக்கங்களை எந்த அளவுக்கு மனிதன் நிறைவேற்றுகின்றான்” என்பதை நோட்டமிடுகின்றான். தொழுகை அக்கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே தொழுகையின் முக்கியத்துவத்தை தெரிந்து அதை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான வயது வந்த ஆண் பெண் இருபாலர் மீதும் கடமையாகும். தொழுகையில் 5 விஷயங்களை கடைப்பிடிப்பது மிக முக்கியமானதாகும்.

1. அல்லாஹுவுக்காக (தூய எண்ணத்துடன்) தொழுவது.

2. நபியவர்கள் தொழுததைப் போல் தொழுவது.

3. தொழுகையின் முக்கியத்துவம்.

4. உரிய நேரங்களில் கடமையான தொழுகைகளை தொழுவது.

5. ஆண்கள் ஐமாஅத்தோடு தொழுவது..

அல்லாஹுவுக்காக தொழுவது

அல்லாஹ்விடத்தில் நமது அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியமாகும்.

1. இக்லாஸ் (தூய எண்ணம்)

2. நபி வழி

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

எவர் தன் இரட்சகனை சந்திக்க ஆதரவு வைக்கின்றாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம். (18:110)

இந்த ஆயத்தில் வந்திருக்கும் நற்கருமம் என்பதற்கு இக்லாஸ் என்பது பொருள், இணை என்பதற்கு மனத்தூய்மை என்பது பொருளாகும். இந்தக் கருத்தையே இப்னு கதீர் (ரஹி) அவர்கள் தனது தஃப்ஸீரில் விளக்கமழிக்கின்றார்கள்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களபை; பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஆகவே, நாம் அல்லாஹ்வுக்காகவே தொழ வேண்டும்.







« Last Edit: March 18, 2012, 04:20:03 PM by supernatural »
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
நபியவர்கள் தொழுததைப் போல் தொழுவது கடமையாகும்

1. என்னை எப்படி தொழக்கண்டடீர்களோ அதே போல் நீங்களும் தொழுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

நபியவர்கள் தொழுததைப்போல் நாமும் தொழ வேண்டும். யார் நபியவர்கள் கற்றுத்தந்த தொழுகைக்கு மாற்றமாக தொழுகின்றாரோ அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, ஒரு நாள் ஒரு நபித்தோழர் பள்ளியில் தொழுது விட்டு வரும்போது (அவரைப்பார்த்த நபியவர்கள்) உங்களின் தொழுகை சேராது திரும்பிச் சென்று தொழுங்கள் என அத்தோழருக்குக் கூறினார்கள், அவர் இரண்டாவது முறை தொழுது விட்டு வந்தார் நபியவர்கள் அதே போன்றே கூறினார்கள், அவர் மூன்றாவது முறையும் தொழுது விட்டு வந்தார் நபியவர்கள் அதே போன்று மீண்டும் கூறினார்கள், அப்போது அந்த நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! இதைவிட சிறந்த முறையில் தொழத் தெரியாது, தொழும் முறையை எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழருக்கு தொழும் முறையை கற்றுக்கொடுத்தார்கள். நபித்தோழருக்கே இந்த நிலை என்றால், நமது நிலை என்ன? நம் தொழுகைகள் நபியவர்களின் தொழுகையைப்போல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை ஒரே ஒரு முறையாவது பரிசீலனை செய்து பார்க்கக்கூடாதா? ஆகவே நீங்கள் தொழும் தொழுகைகள் நபியவர்கள் கற்றுத்தந்த தொழுகையைப்போல் இருக்கின்றதா? என்பதை பரிசீலணை செய்து கொள்ளுங்கள். நபியவர்களின் தொழுகையை விபரமாக கூறுவதற்கு இங்கு முடியாத காரணத்தினால் அதை விபரமாக எழுதப்பட்ட புத்தகங்களில் படித்து நபியவர்கள் தொழுததைப்போல் தொழப் பழகிக்கொள்ளுங்கள்.
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
தொழுகையின் முக்கியத்துவம்

1. (நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களின் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடிந்து விட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக்காத்து) நிற்கவும், (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், (ஏனென்றால்) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச்சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர். (4:102)

2. இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து , அல்லாஹ்வைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது., தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது. ஸக்காத் கொடுப்பது, ஹஐ; செய்வது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரி, முஸ்லிம்)

3. நாளை மறுமையில் தொழுகையைப்பற்றித்;தான் ஓர் அடியானிடத்தில் முதலில் விசாரிக்கப்படும், அது சரியாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் சரியாக இருக்கும், அது தவறாக இருந்தால் மற்ற எல்லா வணக்கங்களும் தவறாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானி)
தொழுகையை நிறைவேற்றுவது சுவர்க்கம் செல்வதற்கு மிக முக்கிய காரணமாகும்

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (23:9-11)

தொழுகையை விடுவது பெரும் குற்றமாகும்

1. நிச்சயமாக ஒரு மனிதனுக்கும்; குஃப்ருக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. எங்களுக்கும் அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகைதான். அதை (தொழுகையை) யார் விட்டுவிடுகின்றாரோ நிச்சயமாக அவர் காஃபிராகிவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

3. தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (திர்மிதி)
தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்

1. சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) தற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (74:40-43)

2. இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (19:59)

3. யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
கடமையான ஒவ்வொரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் தொழுவது அவசியமாகும்

1. நிச்சயமாக, தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது. (4:103)

2. அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம்; கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது Ê ஆதாரம் – புகாரி

ஆண்கள் ஐமாஅத்தோடு தொழுவதும் மிக முக்கியமானதாகும்

1. நபி (ஸல்) அவர்களிடம் கண்தெரியாத ஒரு மனிதர் வந்து அல்லாஹுவின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருவதற்கு யாருமில்லை (என்று சொல்லி) வீட்டில் (தனிமையில்) தொழுவதற்கு அனுமதி கேட்டார், நபியவர்களும் அனுமதி கொடுத்து விட்டார்கள். அந்த மனிதர் திரும்பிச் செல்லும் போது அவரை அழைத்து பாங்கு சப்தம் கேட்கின்றதா? என வினவினார்கள், அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் தொழுகைக்கு, (பள்ளிக்கு) கண்டிப்பாக வரவேண்டும் என்றார்கள். (முஸ்லிம்)

2. ஜமாஅத்தோடு தொழும் தொழுகை தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு தொழுகையை தொழுவிப்பதற்காக ஒருவரை ஏற்படுத்திவிட்டு தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் வீடுகளை எரித்து விடலாமென நான் முடிவு செய்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
அன்புள்ள சகோதர சகோதரிகளே! ”தொழுகை எவ்வளவு முக்கியமான வணக்கம்” என்பதைத் தெரிந்து கொண்டீர்களா! ஒருவர் முஸ்லிமா? இல்லையா? என்பதை பிரித்தறிவிக்கக்கூடிய ஒரே ஒரு வணக்கம், தொழுகைதான். வயது வந்த புத்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழுவது கட்டாயக் கடமையாகும்.

நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற வணக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கடமைகளில் ஒன்றாக இருந்தாலும் அவைகளில் சில சலுகைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. வசதியில்லாதவர்களுக்கு ஸக்காத் கொடுப்பது. ஹஜ் செய்வது கடமையில்லை, உடம்பில் சக்தியில்லாதவர்கள் நோன்பு நோற்பது கடமையில்லை, ஆனால் ”தொழுகையை விடுவதற்கு புத்தியுள்ள வயது வந்த” எந்த முஸ்லிமுக்கும் எப்படிப்பட்ட நேரத்திலும் அனுமதியில்லை. நின்றுகொண்டு தொழ முடியாவிட்டால் இருந்துகொண்டு தொழ வேண்டும், இருந்துகொண்டு தொழ முடியாவிட்டால் சாய்ந்து கொண்டு தொழ வேண்டும். தண்ணீர் கிடைக்கா விட்டால் அல்லது ”தண்ணீர் கிடைத்தும்; அதைக்கொண்டு உளு செய்ய முடியா விட்டால்” தயம்மம் செய்து கொண்டு தொழ வேண்டும். இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளோடு யுத்தம் செய்யும் நேரத்தில் கூட தொழுகையை விடுவதற்கு அனுமதியில்லையென்றால் இதைவிட கஷ்டமான நேரத்தை நம் வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கின்றதா? யார் தொழுகையை வேண்டுமென்று விட்டுவிடுகின்றாரோ அவர் இஸ்லாத்தை விட்டே வெளியாகிவிடுவார் என்பதை மேலே கூறப்பட்ட ஹதீஸுகளிலிருந்து தெரிந்து கொண்டோம், நாளை மறுமையில் சுவர்க்கவாதிகள் நரகவாதிகளிடம் உங்களை இறைவன் நரகத்தில் வேதனை செய்வதற்குரிய காரணம் என்ன? என கேட்பார்கள். அதற்கவர்கள்; நாங்கள் தொழவில்லை என விடையளிப்பார்கள். நாளை மறுமையில் நரகம் செல்வதற்கு முதல் காரணமே தொழுகையை விடுவதுதான். அல்லாஹ் நம் அனைவரையும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பானாக. தொழுகை எவ்வளவு முக்கியமான வணக்கம் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? இனிமேல் ஐங்காலத் தொழுகைகளை தொழுதே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன். அந்த முடிவு மாத்திரம் போதாது, ஐங்காலத் தொழுகையை தொழுவது எப்படி கடமையோ அதே போல் ஒவ்வொரு தொழுகைகளையும் அதன் அதன் நேரங்களில் தொழுவதும் கடமைதான். எந்த இறைவன் தொழுகைகளை கடமையாக்கினானோ அதே இறைவன்தான் ஒவ்வொரு தொழுகைகளுக்கும் குறிப்பிட்ட நேரங்களையும் கடமையாக்கியிருக்கின்றான், தொழுகை கடமையாக்கப்பட்ட முதலாம் நாளும் இரண்டாம் நாளும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரத்தையும் முடிவையும் கற்றுக்கொடுத்துவிட்டு ஒவ்வொரு தொழுகையையும் இவற்றிற்கு இடைப்பட்ட (அதற்குரிய) நேரங்களில் தொழ வேண்டும் எனவும் கூறினார்கள்;. இன்று முஸ்லிம்களில் பலர் இரண்டு மூன்று தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்து சர்வ சாதாரணமாகத் தொழுதுவிடுகின்றார்கள், இது முற்றிலும் தவறானது, நினைத்த நேரங்களில் தொழலாம் என்றிருந்தால் அல்லாஹ் ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் குறிப்பிட்டிருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறதே! அல்லாஹ் உரிய ஒரு நேரத்தில் ஒரு தொழுகையைத்தான் தொழச் சொல்லுகின்றான் நாம் அதை நாம் விரும்பும் வேறு ஒரு நேரத்தில் தொழுதால் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாகுவோமா? எப்படி ஒரு தொழுகையை அதன் நேரம் வருவதற்கு முன் தொழுதால் கூடாதோ, அதேபோல் அத்தொழுகைக்குரிய நேரம் முடிந்ததற்குப் பிறகு தொழுவதும் கூடாது. ஆகவே ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரங்களில் தொழுது கொள்வதோடு, அதன் ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்ளவும் வேண்டும். இது அமல்களில் மிகச்சிறந்த அமலாகும். இதே போல் ஒவ்வொரு தொழுகையையும் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழவேண்டும், யுத்த நேரத்தில்கூட ஜமாஅத்தோடு தொழும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். நபியவர்கள் நடக்க முடியாத அளவுக்கு கடுமையான நோயுற்றிருந்தும் இரண்டு தோழர்களின் உதவியோடு ஜமாஅத் தொழுகையில் சேர்வதற்காக பள்ளிக்குச் சென்றார்கள். இரு கண்களும் தெரியாத ஒரு நபித்தோழர் வீட்டில் தொழுவதற்கு நபியவர்களிடம் அனுமதி கேட்ட போது பாங்கு சத்தம் கேட்டால் ஜமாஅத்தோடுதான் பள்ளியில் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த அளவுக்கு முக்கியமான ஒன்றுதான் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழும் தொழுகை.

தொழுகைகளை உரிய முறையில் பேணித் தொழுதவர்களாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக…































« Last Edit: March 18, 2012, 04:41:44 PM by supernatural »
<a href="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw</a>
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!