FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 31, 2016, 10:05:13 PM

Title: ~ பீட்சா (இத்தாலி) ~
Post by: MysteRy on March 31, 2016, 10:05:13 PM
பீட்சா (இத்தாலி)

(http://vijaytamil.net/wp-content/uploads/2015/10/102046292-153784617.530x298.jpg)

பிரெட் பேஸுக்கு…

மைதா – 1/4 கிலோ,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பால் – 2 கப்,
ஈஸ்ட் – 20 கிராம்,
சர்க்கரை – 2 டீஸ்பூன்.

பீட்சா சாஸுக்கு…

தக்காளி சாஸ் – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
ஓரிகானோ இலை – 2 டீஸ்பூன்.

ஒரு கண்ணாடி டம்ளரில் சர்க்கரையைப் போடவும். மிதமான சூடுள்ள பாலை சர்க்கரையில் ஊற்றவும். அதில் ஈஸ்ட்டை போட்டு ஸ்பூனால் அடிக்கவும். அதை சிறிது நேரம் வைத்திருந்தால் நுரைத்து வரும். மைதாவையும் பேக்கிங்பவுடரையும் சலித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து, அகலமான தட்டில் கொட்டி நடுவில் குழித்துக் கொள்ளவும். ஈஸ்ட் கலவையை மாவின் நடுவில் கொட்டி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
மூடி வைக்கவும். 2 மணி நேரத்தில் மாவு புஸ்ஸென்று இரு மடங்காக ஆகி இருக்கும். அதை அடித்துப் பிசைந்து, தட்டையாக்கி இரண்டு, மூன்று அலுமினியத் தட்டுகளில் பரத்தவும். தட்டின் உயரம் குறைவாக இருக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் சிறிது நேரத்தில் புஸ்ஸென்று பொங்கி வரும். மேலே சிறிது வெண்ணெய் தடவி வைத்தால் மாவு காய்ந்து போகாது (பேக்கிங் செய்யஅலுமினியத் தட்டையே உபயோகிக்கவும்).

பீட்சா சாஸ்…

சாஸுக்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொதிக்க வைத்து பீட்சா மாவின் மேல் முழுவதுமாகத் தடவவும். அதன் மேல் தேவையான வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, சிறிது வெண்ணெயில் வதக்கி, சாஸின் மேலே தூவவும். மீண்டும் சில்லி சாஸ், தக்காளி சாஸ் பரவலாக விடவும். இதை 180°C உஷ்ணத்தில் பேக் செய்யவும்.
வெளியில் எடுப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னால் 100 கிராம் சீஸ் துருவித் தூவி,மீண்டும் அந்த சூட்டிலேயே வைத்தால், உருகி பீட்சா வெண்மையான தோற்றத்துடன் காணப்படும். தக்காளி ஸ்லைஸ், குடை மிளகாய் ஸ்லைஸ் அலங்கரித்துப் பரிமாறவும்.