Author Topic: இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)  (Read 3821 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஓவியத்தில் உடல்நிலைகள், சைகைகள், உணர்வுகள்

லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு ஓவியம் இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றினைச் சித்தரிக்கும் முறையில் மட்டுமே அமையவில்லை. மாறாக, ஓவியத்தில் வருகின்ற ஒவ்வொரு நபரும் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய உடல்நிலை, கை அசைவு, முகம், உதடு, வாய், கண் ஆகியவற்றின் வழியாக ஓவியர் எடுத்துரைக்கிறார்.

லியொனார்டோவின் ஓவியம் "சொற்களின்றிப் பேசுகின்ற கவிதை" எனலாம். அவரே தமது குறிப்புப் புத்தகத்தில் கீழ்வருமாறு விளக்குகின்றார்:

“   அதுவரை குடித்துக்கொண்டிருந்த ஒருவர் கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு, தலையைச் சாய்த்து இன்னொருவர் கூறுவதைக் கேட்குமாறு அவர் பக்கம் திரும்புகிறார். வேறொருவர், தம் கைவிரல்களை ஒன்றொடொன்று இறுகப் பிணைத்துக்கொண்டு, தம்மை அடுத்திருப்பவரை முகத்தைச் சுளித்து நோக்குகிறார். மற்றொருவர் வியப்பினால் வாயடைத்துப் போய், தம் உள்ளங்கைகளை விரித்துக் காட்டி, தம் தோள்களைக் காது நோக்கி உயர்த்துகிறார். வேறொருவர் தம் ஒரு கையில் ஒரு கத்தியை பிடித்துக்கொண்டு, மறு கையில் சிறிது வெட்டப்பட்ட அப்பத்தை வைத்துக்கொண்டு, தம்மை அடுத்திருப்பவரின் காதுகளில் எதையோ கூறுகிறார். இவரும் மற்றவர் கூறுவதைக் கேட்க தம் செவியை அவரை நோக்கித் திருப்புகிறார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உணர்வுகளின் வெளிப்பாடுகள்

லியொனார்டோ தருகின்ற குறிப்புகளையும் நம் கண்களுக்கும் உள்ளத்திற்கும் தோன்றுகின்றவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஓவியத்தை நாம் உள்வாங்கினால் அங்கே அச்சம், ஆச்சரியம், கோபம், நம்பவியலாத் தன்மை, மறுப்பு, ஐயம் போன்ற பல உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

சீமோன் பேதுருவின் வலது கையில் கத்தி இருக்கிறது. இது மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் வழக்கமாக உள்ள சித்தரிப்புத் தான். அவர் இயேசுவை ஒருவர் காட்டிக்கொடுக்கப் போகிறார் என்பதை இயேசுவின் வாயிலிருந்து கேட்டதும், ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாமல், அருகிலிருக்கின்ற யோவானின் தோளைத் தம் இடதுகையால் பிடித்து அசைத்து, "யாரைப் பற்றிக் கூறுகிறார் எனக் கேள்" (யோவான் 13:24) என்று சொல்கிறார்.

"இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் யார்" என்னும் கேள்வியைச் சீடர்கள் கேட்கின்றனர்.

தோமாவுக்கு இயேசு கேட்ட கேள்வியின் பொருள் என்னவென்று புரிந்துகொள்வதில் "ஐயம்" ஏற்படுகிறது. அவர் தம் கையைத் தூக்கி, சுட்டு விரலை உயர்த்தி, இயேசுவிடம் "விளக்கம்" கேட்பது போல் தோன்றுகிறார்.

பிலிப்பு இயேசுவின் சொற்களைக் கேட்டவுடன் இருக்கையிலிருந்து எழுந்து, இயேசுவைக் காட்டிக் கொடுப்பதன் விளைவு என்னவாகுமோ என்று "மலைத்துப்போய்" நிற்கிறார்.

பர்த்தலமேயுவும் (ஓவியத்தின் இடது ஓரம்) எழுந்து நின்று, அந்திரேயாவை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அவரோ, தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவதுபோல கைகளை விரிக்கிறார்.

திருத்தூதர்களில் சிலர் கேள்வி கேட்கின்றனர். மற்றும் சிலர் கோபம் கொண்டு, தாம் குற்றவாளிகள் அல்ல என்று கூறுகின்றனர்.

யூதாசு இஸ்காரியோத்து மட்டும் ஒதுங்கி இருக்கிறார். வழக்கம்போல அவரது ஒரு கையில் பணப்பை இருக்கிறது (காண்க: யோவான் 13:29). மறு கை அப்பத்தை நோக்கி நகர்கிறது. விரைவில் அவர் அப்பத்தை எடுத்து "இயேசுவுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பார்." அவரே இயேசுவைக் காட்டிக் கொடுப்பவர் (காண்க: மத்தேயு 26:23). ஓவியத்தில் உள்ள அனைவர் மீதும் ஒளி தெரிகிறது; ஆனால் யூதாசு மட்டும் "இருளில்" இருக்கிறார். அவரது முகமும் இறுகிப்போய் இருக்கிறது. இயேசு கூறிய வார்த்தைகள் தம்மைக் குறித்தனவே என்று உணர்ந்த யூதாசு அடைந்த அதிர்ச்சியில் பின்வாங்குகிறார்; உப்புக் குமிழைத் தட்டிப்போடுகிறார்.

லியோனார்டோ யூதாசைச் சித்தரிப்பதில் சில தனிப் பண்புகள் உள்ளன. பெரும்பான்மையான மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் யூதாசு ஒரு மூலையில் பணப்பையோடு இருப்பார். யூதாசுக்கு மட்டும் ஒளிவட்டம் இருக்காது. லியொனார்டோ அப்படிச் செய்யவில்லை. அவரது ஓவியத்தில் யூதாசு மற்ற திருத்தூதர்களுள் ஒருவராக, அவர்களோடு சேர்ந்தே இருக்கிறார். அவர் தம் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, தம் மனச்சாட்சிக்கு உண்மையுள்ளவராக நடக்க வேண்டும். அவர் சபிக்கப்பட்டவர் என்று முன் கூட்டியே விதி என்று ஒன்றும் இருக்கவில்லை என்னும் கருத்தை லியொனார்டோ ஓவியம் உணர்த்துகிறது.

இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உகந்தவராய் இருந்தவர் யோவான். அவரை இளைஞராகச் சித்தரிப்பது வழக்கம். லியொனார்டோவும் அப்படியே செய்துள்ளார். யோவான் இயேசுவைப் போலவே அமைதியாக இருக்கின்றார். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. அவர் சீமோன் பேதுருவின் பக்கம் திரும்பி அவர் கூறுவதற்குச் செவிமடுக்கின்றார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்றார் என்பதை அறிந்தவர் போல அவரது முக பாவனை உள்ளது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
"த டா வின்சி கோட்" புதினம் லியொனார்டோவின் ஓவியத்திற்குத் தரும் விளக்கம்

2003ஆம் ஆண்டில் டான் பிரவுன் என்னும் அமெரிக்க பரபரப்புப் புனைகதை எழுத்தாளர் த டா வின்சி கோட்: ஒரு புதினம் (The Da Vinci Code: A Novel) என்னும் தலைப்பில் மர்ம-துப்பறியும் புனைகதை ஒன்றை வெளியிட்டார். அது புனைகதையாக இருந்தாலும் பல வரலாற்றுக் குறிப்புகளயும் உள்ளடக்கியிருந்ததால் கதையில் உள்ள எல்லா செய்திகளும் உண்மையே என்றொரு தவறான எண்ணம் உருவானது. புனைகதையின் ஆசிரியர், "இந்த நாவலில் வருகின்ற கலைப்பொருள்கள், கட்டடக் கலை, ஏடுகள், இரகசிய சடங்குகள் ஆகியவை பற்றிய எல்லா விவரிப்புகளும் சரியானவை" (All descriptions of artwork, architecture, documents, and secret rituals in this novel are accurate) என்று நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார்.
டான் பிரவுன் எழுதிய புனைகதை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்திற்குக் கற்பனை அடிப்படையில் விளக்கங்கள் தந்தது. அந்த விளக்கப்படி, லியொனார்டோ "சீயோன் மடம்" (The Priory of Sion) என்னும் ஐரோப்பிய இரகசிய குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் வரைந்த ஓவியத்தில் இயேசுவின் வலப்புறம் அமர்ந்திருப்பவர் திருத்தூதர் யோவான் அல்ல, மாறாக, மகதலா மரியாதான் அவர். இயேசு மகதலா மரியாவை மணம் செய்திருந்தார். அவர் வழியாக ஒரு பெண்குழந்தைக்கும் தந்தை ஆனார். இயேசுவின் வாரிசைத் தாங்கிய மகதலா மரியாதான் "திருக் கிண்ணம்" (Holy Grail). லியொனார்டோ வரைந்த இராவுணவு ஓவியத்தில் "கிண்ணம்" இல்லை; ஆனால் "திருக் கிண்ணமாகிய" மகதலா மரியா இருந்தார்.

டான் பிரவுன் மேற்கூறிய கற்பனை ஊகத்தின் அடிப்படையில் விறுவிறுப்பானதொரு மர்ம-துப்பறியும் புனைகதை (mystery-detective novel) எழுதினார். அந்தப் புனைகதை நூலில் லியொனார்டோவின் ஓவியம் பற்றிய டான் பிரவுன் கற்பனை விளக்கங்கள் குறிப்பாக 55,56,58 அதிகாரங்களில் உள்ளன.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
"த டா வின்சி கோட்" புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு

"த டா வின்சி கோட்" புனைகதை இயேசு பற்றிய உண்மையைத் திரித்தும், வரலாற்றுச் செய்திகளைத் தவறாக விளக்கியும், சில தகவல்களை மிகைப்படுத்தியும் எழுதப்பட்டதோடு, நூலில் வருவதெல்லாம் உண்மை போன்றதொரு பிரமையை உருவாக்கியது என்று கூறி, கிறித்தவ சபைகள் அந்நூலின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு பற்றிய உண்மையைத் தம் சமய நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ள கிறித்தவ சமயத்தை அடிப்படையின்றி விமர்சிப்பது ஏற்கத்தகாதது என்றும் கிறித்தவ சபைகள் கருத்துத் தெரிவித்தன.

லியொனார்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ஒரு இரகசியத்தை உள்ளடக்கியிருந்தது என்றும், ஓவியர் அந்த இரகசியத்தை யாருக்கும் தெரியாமல் குறியீடுகள் வழியாக மறைத்துவைத்தார் என்றும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. நாவலாசிரியர் கற்பனை செய்து ஒரு கதையை உருவாக்கிவிட்டு, தம் கற்பனை லியொனார்டோவின் ஓவியத்தில் உள்ளதைத்தான் கண்டுபிடித்தது என்று கூறுவதைப் பகுத்தறிவு ஆய்வின்படி ஏற்கமுடியாது. இதை வேண்டுமானால் "இரகசியத் திட்ட எடுகோள்" (conspiracy theory)[4]என்று கூறலாமே ஒழிய வரலாற்று உண்மை என்பது தவறு.

மேற்கூறிய சமயம் தொடர்பான மறுப்பைத் தவிர, கலை வரலாற்றாசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் போன்றோரும் டான் பிரவுன் லியொனார்டோ டா வின்சியின் ஓவியத்துக்கு அளித்த விளக்கம் தவறானது என்று நிறுவியுள்ளனர். இந்த மறுப்புப் பற்றிய விவரங்கள் இதோ:
டான் பிரவுன் 2003இல் "த டா வின்சி கோட்" என்னும் புனைகதையை எழுதுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் "த டெம்ப்ளார் ரெவலேஷன்" (The Templar Revelation) என்னும் புத்தகத்தை லின் பிக்னெட், க்ளைவ் ப்ரின்ஸ் என்போர் வெளியிட்டிருந்தனர்[5]. டான் பிரவுன் அப்புத்தகத்திலிருந்து பல தகவல்களை அப்படியே எடுத்து (குறிப்பாக, லியொனார்டோ ஓவியத்தில் மகதலா மரியா இயேசுவின் அருகில் அமர்ந்திருப்பது, அவர்கள் இருவருக்கும் உள்ள உறவு போன்ற ஊகங்கள்), அவற்றைத் தமது நாவலின் கதைக்கு அடித்தளமாகக் கொண்டார். அந்நூலிலுள்ள ஓர் அதிகாரத்தின் தலைப்பிலிருந்து டான் பிரவுன் தம் நாவலுக்கான தலைப்பைத் தேர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.

டான் பரவுன் மேற்கூறிய நூலிலிருந்து தகவல்கள் பெற்றார் என்பதற்கு இன்னொரு காரணம் அவர் அந்நூலில் இருந்த தவறான சில வரலாற்றுத் தகவல்களை அப்படியே தமது நூலிலும் உண்மைத் தகவல் போலத் தருகிறார். எடுத்துக்காட்டாக, பாரிசில் உள்ள புனித சுல்ப்பீஸ் கோவில் பற்றிய தகவல்கள் தவறாகத் தரப்படுவதைக் குறிப்பிடலாம்."சீயோன் மடம்" என்னும் நிறுவனம் கற்பனையே என்றும் அதற்கும் சுல்ப்பீஸ் கோவிலுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் ஒரு அறிவிப்புப் பலகை அக்கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. டான் பரவுனின் புனைகதையை வாசித்த பலர் அதில் வரும் தகவல்களை உண்மை என நம்பி, பாரிசில் போய் அது தொடர்பான இடங்களைத் தேடியதைத் தொடர்ந்து மேற்கூறிய அறிவிப்புப் பலகை வைக்கவேண்டியதாயிற்று.

கலை வரலாற்றாசிரியர்களுள் மிகப் பெரும்பான்மையோர் கூறுவது: இறுதி இராவுணவு ஓவியங்களில் நற்செய்தி நூல்களைப் பின்பற்றி, இயேசுவும் அவருடைய பன்னிரு சீடர்களும் உணவருந்துவதாகச் சித்தரிப்பதே மரபு. லியொனார்டோவின் ஓவியத்தில் இயேசு உட்பட பதின்மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஆகவே, பன்னிரு சீடரும் இயேசுவோடு இருந்தால் மகதலா மரியா அங்கே இருந்திருக்க முடியாது. டான் பிரவுன் (த டெம்ப்ளார் ரெவலேஷன் நூலிலிருந்து எடுத்த தகவல்படி) கூறுவது உண்மையானால் பன்னிரு சீடர்களுள் ஒருவர் இராவுணவின்போது இயேசுவோடு இருக்கவில்லை என்றாகும். ஆனால் இது நற்செய்தி நூல்களுக்கும் கிறித்தவ மரபுக்கும் மாறுபட்ட செய்தியாகும். எனவே, டான் பிரவுனின் கருத்து ஏற்கப்பட முடியாதது.

டான் பிரவுன் தமது புனைகதையில் கூறுவது: லியொனார்டோவின் ஓவியத்தில் சீமோன் பேதுருவுக்கு முன்னால், ஒரு கை கத்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கையின் உடைமையாளர் யார் என்று ஓவியத்திலிருந்து தெரியவில்லை. எனவே அது ஓவியத்தில் காட்டப்படாமல், இரகசியமாக மறைத்துவைக்கப்பட்ட ஒருவரின் கைதான்.
இதற்கு, கலை வரலாற்றாசிரியகள் தரும் விளக்கம்: லியோனார்டோவின்.ஓவியத்தின்.தெளிவான பிரதிகளைப் பார்க்கும்போது, கத்தியைப் பிடித்திருக்கின்ற கை பேதுருவின் கைதான் என்று ஐயமற நிறுவ முடியும். அவர் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, உள்ளங்கை தெரியுமாறு இருக்கின்றார். அக்கையானது பர்த்தலமேயுவை நோக்கி இருக்கின்றது. பர்த்தலமேயு கத்தியால் உயிருடன் தோலுரிக்கப்பட்டார் என்னும் மரபுச் செய்தியைக் குறிக்கும் விதத்தில் இதை லியொனார்டோ சேர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இயேசுவைக் கைதுசெய்ய வந்த ஒருவரைப் பேதுரு வாளால் தாக்கிய செய்தி நற்செய்தியில் உள்ளது: "சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார்" (யோவான் 18:10). இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் விதத்தில் லியொனார்டோ பேதுருவின் கையில் கத்தியை வைத்து ஓவியம் வரைந்திருக்கலாம். இப்பொருள் குறித்து விரிவான .ஆய்வு.உள்ளது. அதன்படி, கத்தியைப் பிடித்திருக்கும் கை பேதுருவுடையதே.

டான் பிரவுன், இயேசு அணிந்திருக்கும் ஆடை போலவே அவர் அருகே இருப்பவரும் அணிந்திருக்கிறார் என்கிறார். அது உண்மையென்றால் இயேசுவைப் போலவே அவர் அருகே இருப்பவரும் ஓர் ஆண் என்று முடிவுசெய்ய வேண்டும்.

லியொனார்டோ இராவுணவு ஓவியத்தை வரைந்த அதே காலத்தில் கஸ்தாஞ்ஞோ (Castagno), தொமேனிக்கோ கிர்லாண்டாயோ (Domenico Ghirlandaio) போன்ற ஓவியர்களும் இராவுணவுக் காட்சியை வரைந்தனர் (ஆண்டு: 1447; 1480). அவர்களும் வேறு எத்தனையோ ஓவியர்களும் இயேசுவின் வலப்புறத்தில் யோவான் திருத்தூதரை அமர்த்தியிருக்கின்றனர். யோவான் இளைஞராக, பெண்தோற்றம் கொண்டவராக, நீண்ட முடியுடையவராகக் காட்டப்படுகிறார்.[9]யோவான் மற்றெல்லாத் திருத்தூதர்களை விடவும் வயதில் இளையவர்; இயேசுவுக்கு இறுதிவரை விசுவாசம்.உடையவராக இருந்து, சிலுவை அடியில் நின்றவர்; "இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, 'ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?' என்று கேட்டவர்" (யோவான் 21:20) என்னும் தகவலை யோவான் நற்செய்தி மிகத் தெளிவாகவே தருகிறது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
டான் பிரவுன் தருகின்ற லியொனார்டோ ஓவிய விளக்கம் பற்றிய விமர்சனம்



இறுதி இராவுணவு ஓவியம். பகுதிப் பார்வை: பேதுரு, யூதாசு, யோவான்


லியொனார்டோ ஓவியத்திற்கு டான் பிரவுன் எழுதிய "த டா வின்சி கோட்" என்னும் புனைகதை தருகின்ற விளக்கம் கற்பனையே தவிர, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்பது கலை வரலாற்றாசிரியர்களின் முடிவு.

மேலும், ஞானக் கொள்கை என்னும் தொடக்க காலக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான நூல்கள் இயேசு பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் துல்லியமாகத் தருகின்றன என்னும் முற்கோள் (assumption, premise) டான் பிரவுனின் நாவலின் அடிப்படையாக உள்ளது. அந்த அடிப்படையை வரலாற்றாசிரியர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

கிறித்தவ சபைகள் ஏற்கின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்திகளில் இயேசு பற்றி வருகின்ற தகவல்களின் அடிப்படையில்தான் லியொனார்டோ இறுதி இராவுணவு என்னும் எழில்மிகு ஓவியத்தை வரைந்தார் என்னும் கருத்து மிகப் பெரும்பான்மையான கலை வரலாற்றாசிரியர்களால் ஏற்கப்பட்டுள்ள
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆதாரங்கள்

↑ டா வின்சி வரைந்த "இறுதி இராவுணவு" ஓவியம்
↑ லியொனார்டோ ஓவியத்தின் பிரதி
↑ வரலாற்று உண்மையும் புனைவும்
↑ இரகசியத் திட்ட எடுகோள்
↑ த டெம்ப்ளார் ரெவலேஷன்
↑ புனித சுல்ப்பீஸ் பற்றிய தவறான தகவல்கள்
↑ P.B. Barcilon and P.C. Marinin, Leonardo: The Last Supper, University of Chicago Press, 1999, p.19]
↑ த டாவின்சி கோட் நாவலில் உண்மை
↑ Anwender (2006-04-14). "St. John at the Last Supper". Home.arcor.de. பார்த்த நாள் 2011-10-19.
↑ கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று பற்றிய இணையத்தளம்
↑ டான் பிரவுன் விளக்கத்தை மறுத்து, கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று