Author Topic: சோழர்  (Read 12592 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சோழர்
« on: April 30, 2012, 04:40:18 AM »
சோழர்



சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)


சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். [1] சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
 
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
 
கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
 
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #1 on: April 30, 2012, 04:41:48 AM »
சோழ மன்னர்களின் பட்டியல்




கி.பி.1030-ல் சோழ மண்டலம்





« Last Edit: April 30, 2012, 04:51:36 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #2 on: April 30, 2012, 04:44:45 AM »
தோற்றமும் வரலாறும்
 
சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன


முற்காலச் சோழர்கள்
 

கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120
இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்கள் தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். இவனே முதலாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #3 on: April 30, 2012, 04:46:45 AM »
முதலாம் கரிகாலன்


கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன்இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.கரிகால சோழனுக்கு திருமாவளவன்,மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது(எதிரிகளின்)யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.
 
கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
 
கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.




கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #4 on: April 30, 2012, 04:47:34 AM »
பிற சோழ மன்னர்கள்
 
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #5 on: April 30, 2012, 04:49:24 AM »
முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி 'களப்பாளர்' அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது.
 

களப்பிரர்கள்
 
நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
 
இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.
 
ரேனாண்டு சோழர்கள்
 
களப்பிரர் ஆட்சி காரணமாக சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச் சென்று குடியேறி ஆட்சியை நிறுவினார்கள்.இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.இவ்வாறு சென்ற சோழர்கள் கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்' என்று சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.
 
மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
 
'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகச் சோழர்கள்
 
சங்க கால மன்னனான திருமாவளவன்(கரிகால் பெருவளத்தான்) ஆட்சிக்குப் பின் சோழ நாடு களப்பிரர் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்தது. அச்சுத விக்கிராந்தகன் என்னும் களப்பிர மன்னன் சோழநாட்டை ஆண்டான். அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை போன்ற பகுதிகளில் ஏறத்தாழ நூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். இக் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்ற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை.
 தமிழகத்தில் இருந்த சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணந்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். இறுதியில் உறையூரை ஆண்ட சிற்றரசனான விசயால சோழன், களப்பிர மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #6 on: April 30, 2012, 04:54:26 AM »
பிற்காலச் சோழர்கள்

பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன



பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை

விசயால சோழன் (கி.பி.850-871)
 
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்


முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907 )
 
விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் [[பல்லவர்|பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்கு சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #7 on: April 30, 2012, 04:55:58 AM »
முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-955)
 
கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான்[3]. இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

 
கண்டராதித்த சோழன் (கி.பி.950-951)
 
பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்ர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

 
அரிஞ்சய சோழன்
 
கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான்.

 
சுந்தர சோழன்(கி.பி.957-973)
 
சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
 அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #8 on: April 30, 2012, 04:57:44 AM »
உத்தம சோழன் (கி.பி.970-985)



உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.

கி.பி 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.
 
இராசராச சோழன் (கி.பி 985-1014)


பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #9 on: April 30, 2012, 04:59:31 AM »
காந்தளூர்ச் சாலை


தஞ்சைப் பெரிய கோயிலின் விமானம்

இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.


 
கங்கபாடி, நுளம்பாடி
 
சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின்தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டைஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #10 on: April 30, 2012, 05:01:03 AM »
ஈழத்துப் போர்



சோழப் பேரரசின் எல்லைகள். கி. பி 1014


இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களை தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும்இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #11 on: April 30, 2012, 05:02:35 AM »
முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)

இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.

 
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்



இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030


வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
 வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #12 on: April 30, 2012, 05:03:35 AM »
பின்வந்த சோழ மன்னர்கள்

முதலாம் இராசாதிராசன்
 
இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

 
இரண்டாம் இராசேந்திரன்
 
இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
 
 பிற மன்னர்கள்
 
இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #13 on: April 30, 2012, 05:05:10 AM »
சாளுக்கிய சோழர்கள்

முதலாம் குலோத்துங்கன் கி.பி.1070-1120



குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120

இராசராசசோழனின் மகளான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.

 
முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.

 
குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சோழர்
« Reply #14 on: April 30, 2012, 05:06:08 AM »
வெளிநாட்டுத் தொடர்புகள்
 
முதலாம் இராசராசன்மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவை சீனத்திற்கு அனுப்பிவைத்தான்[4] மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.
 
ஆட்சிப் பணிகள்
 
குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழக்கப்பட்டான்.[5].இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக் இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார்.
 
சோழப் பேரரசின் வீழ்ச்சி
 
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
 
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.