Author Topic: செம்பருந்து  (Read 1404 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
செம்பருந்து
« on: October 17, 2012, 04:19:34 PM »
செம்பருந்து

கருடன், இந்தியா

காப்பு நிலை

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்


உயிரியல் வகைப்பாடு
திணை:(இராச்சியம்)    விலங்கு
தொகுதி:    முதுகுநாணிகள்
வகுப்பு :   பறவை
வரிசை:    வல்லூறு, q.v.)
குடும்பம்:    வல்லூறு
பேரினம்:    பருந்து
இனம்:    H. indus
இருசொற்பெயர்
செம்பருந்து

(Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர்.

விவரிப்பு


    * இவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.

பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும்.

 சிறப்புகள்


   * கருடன் என்ற பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின் வாகனமாகவும் வழிபடுகின்றனர்.
    * இந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.

கருடன்
« Last Edit: October 17, 2012, 04:25:14 PM by Global Angel »