Author Topic: சமையல்:தயிர் சிக்கன்  (Read 1353 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
சமையல்:தயிர் சிக்கன்
« on: July 30, 2011, 05:53:40 AM »
சுவையான எளிதில் செய்யக்கூடிய தயிர் சிக்கன் இது. இதனை சாலட்டுடன், சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.....

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைத்துக்கொள்ள:

பூண்டு - 6 பெரிய பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 10
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

* சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

* சுமார் 10 - 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்­ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

* கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் வேகவிடவும்.

குறிப்பு:

* மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

* தயிரினை இஞ்சி, பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 Sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.

* தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

* இந்த சிக்கனை சாலட்டுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்