Author Topic: பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க  (Read 604 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


I  பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க

சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?
கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.


பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது

01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்

02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.

03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.

II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க

சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.

01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்

02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt 

03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.

04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.

05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.

III  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய

01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK
     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)
      எடுத்துகாட்டாக : C:\>tracert www.arivu-kadal.in

 
[அல்லது]

01 START கிளிக் செய்து

02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK   
     செய்யவும்.

03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்

04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

IV  Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ்

01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க

word +filetype:pdf

எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls 
உதாரணம் : Seven Wonders+filetype:pdf   

02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண

map : <city name>

உதாரணம் : map :chennai

03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய

time: <Country name>

உதாரணம் : time:china

04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய

weather :<city name>

உதாரணம் : weather : mumbai

05. விமானத்தின் விவரம் அறிய

Airline Name <Flight Number>

உதாரணம் : Air India 605

V  வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   
     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?

நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.

எ . கா : அன்னையும் பிதாவும்

இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க

Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .

எ . கா : அன்னையும்  பிதாவும்

பயனுள்ளதாக  இருக்குமென நினைக்கிறேன்



நன்றி

நா சுரேஸ் குமார்