Entertainment > விளையாட்டு - Games

மொழிப் பெயர்க்க முயற்சி செய்யலாம் வாங்க

<< < (2/30) > >>

Yousuf:
நன்றாக மொழிபெயர்த்து உள்ளீர்கள் சுருதி...!!!

வருசயாக அடுத்தடுத்து அடுத்த மொழி பெயர்ப்பை மற்றவர்கள் கொடுத்தல் நன்றாக இருக்கும்...!!!

ஸ்ருதி:

--- Quote from: Yousuf on October 29, 2011, 10:54:47 AM ---நாளைக்கு எனக்கு மருத்துவரிடம் சந்திப்பு முன்பதிவு இருக்கு ஊடு கதிர்ப்பட அறிக்கை எடுத்துக் கொண்டு போகணும்.

--- End quote ---

மீயொலி நோட்ட அறிக்கையை -SCAN REPORT

ஊடு கதிர்ப்பட அறிக்கை- X-RAY

இது தான் சரி யூசப்

நானும் அதை தான் சொல்ல நினைத்தேன்
இபோ நாம விளையாடியதை பார்த்தால் புதிதாக வருபவர்களுக்கு சுலபமாக இருக்கும்


ஸ்ருதி:
நான் ஒரு மொபைல் போன் instalment- ல் வாங்கினேன்
அதில் touch screen facility இருக்கு.. new technology நிறைய சேர்த்து இருகாங்க.. colour fulla-இருக்கு.

மொழிபெயருங்கள் ;)

Yousuf:
நான் ஒரு கைபேசி தவணைமுறையில் வாங்கினேன்
அதில் தொடுதிரை வசதி இருக்கு.. புதிய தொழில்நுட்பம்  நிறைய சேர்த்து இருகாங்க.. வண்ணமயமாக இருக்கு.


என்னுடைய computer -இல் virus வந்து எல்லா documents -ம் delete ஆகிடுச்சு.

RemO:
நான் ஒரு செல்லிடபேசியை தவணை முறையில் வாங்கினேன்.
அதில் தொடுதிரை வசதியும் உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் நிறைய சேர்த்துள்ளனர்.
மிகவும் வண்ணமயமாக உள்ளது.


நீங்கள் முயற்சிக்க : என்னோட laptop ல battery problem அத service பண்ணும்

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version