Author Topic: ராணியுடன் ஒரு பயணம்  (Read 862 times)

Offline SweeTie

ராணியுடன் ஒரு பயணம்
« on: October 24, 2016, 07:30:22 AM »
நானும் என் தோழி   ராணியும்  ஒன்றாகவே
 பேரூந்தில்  வேலைக்கு செல்வோம்
பேரூந்தில்  சிலவேளைகளில்  நிற்கக்கூட
இடம் இருக்காது.   ஆனால்  என் தோழி ராணிக்கு
எப்படியோ இடம் கிடைத்துவிடும்.
அவளும் உட்க்கார்ந்து  சௌகர்யமாய்
அலுங்காமல் வந்துவிடுவாள்.
நானோ அவளை பார்த்து  சிரித்துக்கொள்வேன்.
பொறாமையும் கொள்வேன்.
ஒரு நாள் ஒரு வயதானவர்  ராணி  பேரூந்தில்
ஏறியதும் எழுந்து  இடம் கொடுத்தார்.
ராணி வேண்டாம் என்று மறுத்தும்
அவர் விடவில்லை.     ராணிக்கு  என்னசெய்வது
என்று தெரியாமல்  அவளும் அமர்ந்துவிடடாள்.
எனக்கோ ஒரே சிரிப்பாய் போய்விட்ட்து. 
நாங்கள்  இறங்குமிடமும் வந்தது.
அப்போது அந்த பெரியவர் ராணியிடம்
ஒரு கேள்வி கேடடார்.    ...
பல வருடங்களாக  உங்களை
இப்படிதான் பார்க்கிறேன்.   
உங்களுக்கு  எத்தனை  குழந்தைகள்
என்று கேட்ட்தும்.    நான்  என்னையும் மீறி
வாய்விட்டு  சிரித்துவிடடேன்.
ராணிக்கோ என்ன  சொல்வதென்று 
தெரியாமல்  தவித்தாள். 
ஒருபடியாக  சமாளித்துக்கொண்டு
ஐயா எனக்கு இன்னும் திருமணமே
ஆகவில்லை என்றாள்.   பெரியவர்
திக்குமுக்காடி போய்விடடார். 
நாங்களும்  இறங்கவேண்டிய இடம்வரவே
இறங்கிவிட்டொம்.   இருவருக்கும் 
சிரிப்பை அடக்க முடியவில்லை.
ராணிக்கு சின்ன வயதிலிருந்தே பெரிய வயிறு.
பார்ப்பவர்களுக்கு அவள்  கர்ப்பிணி
என்ற எண்ணத்தைக் கொடுக்கும் .
அது அவளுக்கு பேரூந்தில் செல்வதற்கு
மிகவும்   உதவி  புரிந்தது.  அவளும்
கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிடடாள்.
அன்றுதான்  அவளுக்கு  ஞானம்  பிறந்தது.
எப்படியாவது இந்த வயிற்றை இல்லாமல்
செய்துவிடவேண்டும்  என்ற  முற்சியில்
ஈடுபட ஆரம்பித்து  இன்று  அதில்
வெற்றியும் கண்டுவிடடாள்.   
அனால்  பேரூந்தில்  இடம் கிடைப்பதில்லை
பாவம் ராணி.  இப்போதெல்லாம் 
நின்றுகொண்டே பிரயாணம் செய்கிறாள். 
« Last Edit: October 24, 2016, 07:33:06 AM by SweeTie »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: ராணியுடன் ஒரு பயணம்
« Reply #1 on: November 01, 2016, 04:05:48 PM »
நகைச்சுவை உணர்வுடன் ஒரு செல்லக் கிண்டலில்
கதை. அருமை அருமை! ஆனந்தம் என்னவோ ராணியின்
தொழிக்குத்தான்.
:) :) :) :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ராணியுடன் ஒரு பயணம்
« Reply #2 on: December 15, 2016, 07:28:49 PM »
சகோதரி இனியவளுக்கு வணக்கம்,

ராணியுடன் ஒருபயணம்

இப்படியான உடல்நிலை கொண்ட பொண்கள்
உலகில் இருக்கவே செய்கின்றனர்,

உங்கள் தோழிபோல் அனைவருக்கும் உடல்
மெலிந்து விடாது, இதனை வாழ்வின் பெரும்
நிர்ப்பந்தமாக கொண்டு கண்ணீரில் மூழ்கும்
பெண்களும் உண்டு.

உங்கள் தோழிக்கு புண்ணியம் செய்தார் பெரியவர்.
தோழியாக இருந்தும் தோழியை சீர்செய்ய
எண்ணாமல் பேனீர்களே நீங்கள், இதுவா நட்பு?
கிண்டல் கேலியாக எடுத்து கொள்ளுங்கள்.

சிறிய பயணம் அழகான ரசனை, சிரிக்கச் செய்தீர்கள்,

சகோதரி வாழ்க வளமுடன், நன்றி.


உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....