FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ReYoN on July 13, 2011, 07:19:20 AM

Title: "கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்"
Post by: ReYoN on July 13, 2011, 07:19:20 AM
(http://i1215.photobucket.com/albums/cc504/reyon1/lgbrz02dog1712.jpg)

சிற்பி ஒருவனின் மகன் செய்யாத குற்றத்திற்காக அரசனால் தண்டனை பெற்று சிறை சென்றான், அதை அறிந்த சிற்பி மனம் நொந்து, அரசர் வழக்கை விசாரிக்காமல், மற்றவர்கள் சொல் கேட்டு தன் மகனுக்கு தண்டனை வழங்கியதை அரசருக்கு உணர்த்த முனைபட்டார்.

சிற்ப கலைஞர் தன் கடும் முயற்சியால் நாய் இன் சிலை ஒன்றை தத்ரூபமாக அசல் நாயை போலவே செதுக்கினர்.
அதை அரசவையில் அரசருக்கு காண்பிப்பதற்காக கொண்டு செல்லும் வழியில், பலரும் "என்ன இந்த மனிதர் நாயை தோளில் வைத்து செல்கிறார்?" என்று கூறினார்கள், சிலர் இவர் வடித்த அந்த நாயின் சிலையை கண்டு இரசித்தனர்
அரசவையிலும் இதே போல் குழப்பம் ஏற்பட்டது, சிலருக்கு உண்மையான நாய் போலவும், சிலருக்கு கல்லில் வடித்த சிலை  போலவும் தெரிந்தது.

"அப்போது அரசருக்கு செய்தி வந்தது, சிற்பி ஒருவர் நாயுடன் வந்து இருப்பதாகவும், கல் சிலையுடன் வந்து இருப்பதாவும் இரு வேறாக செய்தி வந்தது, அரசவையில்  அதை காண எண்ணி அரசர்  வந்த பொழுது, அவருக்கும் நாயாகவும், கல்லாகவும் இரு வேறு கட்சியில் தெரிந்தது "

அப்போது சிற்பி அரசருக்கு விளக்கினர் "அரசே நீங்கள் இதை கல் என்று நினைத்து பார்த்தால், உங்களுக்கு கல் ஆகவே தெரியும், நாய் என்று நினைத்து பார்த்தால் நாய் அகவே தெரியும், எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.

உண்மையில் இது நாய் போன்று வடிவமைக்க பட்ட கற்சிலை,  நிரபராதியான என் மகன் கூட உங்கள் கண்ணுக்கு குற்றவாளியகதான் தெரிந்து இருக்கிறன், அதை தீர விசாரிக்காமல் தண்டனை வழங்கிவிட்டீர்களே". என்று சிற்பி கூறிய பின்பு அரசர் தன் தவறை உணர்ந்து, பின்பு வழக்கை விசாரித்து விடுதலை வழங்கினர்"

எனவே நண்பர்களே எந்த ஒரு விஷயமும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது, அதை வைத்து மட்டும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்து விட கூடாது, தீர விசாரிக்க வேண்டும். நாம் தவறு என்று நினைத்து பார்த்தல் தவறாதான் தெரியும், நல்லதையே நினைத்து பார்த்தல் நல்லதாகவே தெரியும்.
Title: Re: "கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்"
Post by: Global Angel on July 13, 2011, 10:38:24 PM
நல்லவர்கெல்லாம் சாட்சிகள் 2  ஒன்று மனசாட்சி  ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தல் நல்லதே காட்சியம்மா அதுதான் உண்மையின் காட்சியமா ...

nice story rippanu tharkaalathukum nadanthukonderukum sampavankalukkum poruthamana kathai... keep it up ;)