Author Topic: நீங்கள் கேட்டவை  (Read 6693 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நீங்கள் கேட்டவை
« Reply #30 on: September 27, 2012, 07:47:49 PM »
-சுபம்-

 
இது?


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #31 on: September 27, 2012, 09:18:24 PM »
 ;D ;D ;D ;D

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #32 on: September 28, 2012, 05:13:37 PM »

பாகம் 7 : முடிவுக்கு பின்

"A short film by Rajesh" வெள்ளை எழுத்துக்கள் திரையில் மங்கலாய் மறைய அந்த அரங்கம் வண்ணவண்ண விளக்குகளால் உயிர்பெற்றது. மேடையில் நின்றிருந்த எனக்கு சற்றே கண்கள் கூசியது. இக்குறும்படத்தின் இயக்குநர். அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கத்தில் கைதட்டல்கள். பிரபல தொலைக்காட்சியின் குறும்பட இயக்குநருக்கான போட்டி அது. நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உலகமே இதை பார்த்துக்கொண்டிக்கும்.

"சொல்லுங்க ராஜேஷ். உங்க படத்துக்கு நீங்கள் கேட்டவைனு பேர் வச்சிருக்கீங்க. உங்கள நாங்க கேட்டமா?" என் நிலைமை புரியாமல் அந்த பெண் தொகுப்பாளர் மொக்கை போட்டுக்கொண்டிருந்தார். சிரித்து வைத்தேன். அவர் கேள்விக்கு பதிலளிப்பது தற்சமயம் முக்கியமில்லை.

"ஓக்கே. கூச்சப்படுறீங்க. நம்ம ஜட்ஜஸ்கிட்ட கேப்போம். உங்க படத்த பத்தி. அதுக்கு முன்னாடி நீங்க எவ்ளோ நம்பிக்கையா இருக்கீங்க?"

"நம்பிக்கை இருக்கு." சொல்லி வைத்தேன்.

"சரி. நாம இப்போ இயக்குநர் திலகத்திடம் கேட்போம். சொல்லுங்க சார்"

திரையுலகின் முன்னணி இயக்குநர் பேச ஆரம்பித்தார்.

"ராஜேஷ். எனக்கு ஒரு சந்தேகம். இது என்ன ஜானர்?"

"லவ் பேஸ்டு டிராமா"

"லவ்னு சொல்றீங்க. ஆனா கடைசி வரைக்கும் எந்த பொண்ணையுமே காட்டல. படத்துல முக்கால்வாசி நேரம் ஹீரோ சாட் பண்றதுலேயே போகுது. படத்துல எனக்கு புடிச்ச சில பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ்.

ரொம்ப கம்மியான ஆட்கள். இன்டெர்நெட்டில் எப்படியெல்லாம் சிக்கி இருக்காங்கனு சொல்ற மாதிரி. அப்புறம் லைட்டிங். லொகேஷன்னு பாத்தீங்கன்னா ஒரு ரூம், அப்புறம் அந்த காஃபி ஷாப். குறிப்பா சொல்லணும்னா அந்த ஹீரோ காரெக்டர் முகபாவத்துலேயே காதல் வருதுன்னு காட்டியிருக்கீங்க. ஒரே மாதிரி ஷாட்ஸ்லேயே அந்த எஸ்பிரஷன் சேஞ்ச் நல்லா இருந்துச்சு. அதுக்கு தகுந்த மாதிரி பேக்ரவுண்ட் ம்யூசிக். ஆனாலும் பாத்தீங்கன்னா கதை அந்த அளவுக்கு கனமா இல்லே. இன்டெர்நெட் காதல்ங்கறது கொஞ்சம் பழைய கான்செப்ட். அதுல சில யுத்திகள புகுத்தியிருக்கீங்க. ஒரு சஜஷன். கதையை திரைக்கதையா மாத்தும் போது கொஞ்சம் கவனம் எடுத்து பண்ணனும். அவன் நெனைக்கிறது எல்லாம் பேக்ரவுண்ட் வாய்ஸாவே வருது. வேற மாதிரி காமிச்சிருக்கலாம். ஏற்கனவே அத யூஸ் பண்ணி அலுத்தாச்சு.

ஒரு இடம் நல்லா இருந்தது என்னன்னா. அது கதைன்னும் அத நீங்க அந்த எடிட்டர்கிட்ட காமிக்கறீங்கனு இருக்கற சீன். இல்லாட்டி போரா இருக்கற படமாயிருக்கும். எப்படா முடியும்னு நெனைக்கும் போது அந்த ட்விஸ்ட் நல்லா இருந்துச்சு. ஆரம்பிச்ச இடமே முடியற மாதிரி. அதிலேயும் உங்க காதல் ஜெயிச்சுதானு சொல்லல. என்னை பொறுத்த வரை படம் ஓக்கே. ஆனா இன்னும் பெட்டரா பண்ணலாம்."

பாராட்டினாரா திட்டினாரா. பதட்டத்தில் சுத்தமாய் புரியவில்லை. தலையாட்டி மட்டும் வைத்தேன்.

அடுத்து அமர்ந்திருந்த இன்னொரு பிரபல இயக்குநர் பேச ஆரம்பித்தார்.

"சார் சொன்ன பாயிண்ட்ஸ் தான். இன்னும் என்னன்னா ஏதோ சீரியஸா போயிட்டு இருக்கற கதையில காமெடிய சொருகின மாதிரி அந்த கவிதை. யாரு எழுதினா?"

"நான் தான் சார்."

"கவிதைனும் சொல்ல முடியாது. ஆனா அந்த எடத்துக்கு பொருத்தமா இருந்தது. அதிலேயும் அதுக்கு நீங்க கொடுத்த விளக்கம். லாஜிக்கா நிறைய விஷயங்க இருக்கு. போகப்போக கத்துக்குவீங்க. சிறப்பா இருந்துச்சுன்னும் சொல்ல முடியாது. ஆனா அவ்வளவு மோசமுமில்ல. பாக்கலாம் கடைசியில"

தொகுப்பாளினி பேச ஆரம்பித்தாள்.

"ஓக்கே ராஜேஷ். உங்க படத்த பத்தி ஜட்ஜஸ் மிக்ஸட் கமெண்ட்ஸ் குடுத்திருக்காங்க. மத்த படங்களையும் பாத்துட்டு ரிசல்ட் சொல்லுவாங்க. நீங்க உங்க இடத்துல உட்காருங்க".

மௌனமாய் தலையாட்டிவிட்டு இருக்கைக்கு வந்தேன். வட்டமான ஒளி என்னை பின்தொடர்ந்தது. சந்தோஷமா பரிதவிப்பா என்னதென்று தெரியவில்லை. முடிவுக்காக இறுதிவரை காத்திருக்க வேண்டும். எப்படியும் அடுத்த கட்டத்துக்கு போகலாமென்ற நம்பிக்கை இருக்கிறது. சிந்தனைகள் பலப்பட முன்னாடி இருந்த மேடையிலிருந்த தொகுப்பாளினி பேச ஆரம்பித்திருந்தாள்.

"வாங்க. சுரேஷ்.. நீங்க என்ன ஜானர்ல படம் எடுத்திருக்கீங்க.."

கேட்டுக்கொண்டே மொபைலை ஆன் செய்தேன். உயிர்பெற்றதும் அந்த ஆண்ட்ராய்ட் போனிலிருந்த வாட்ஸாப் அப்ளிகேஷன் ஒளிர்ந்தது.

"எனக்கு நல்லாவே கேட்டது. எப்போ மீட் பண்ணலாம்?"

"இந்த படம் லவ் ஜானர்.. படத்துல....." மேடையில் சுரேஷ் பேசிக்கொண்டிருந்தது எங்கோ பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து பேசுவது போலிருந்தது.....

(தயவு செஞ்சு அடிக்க ஆள கூட்டிட்டு வந்துடாதீங்க. சத்தியமா இதுக்கப்புறம் இனி இக்கதை தொடராது )

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நீங்கள் கேட்டவை
« Reply #33 on: September 28, 2012, 06:30:08 PM »
hahaha:D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #34 on: September 29, 2012, 12:56:03 AM »
ஒரு வேளை கதை புரிஞ்சுடுச்சோ?  ::)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நீங்கள் கேட்டவை
« Reply #35 on: October 15, 2012, 03:03:45 AM »
தெரியம்தான்  கேட்குறேன்  காதல் நிலைமை  இப்டியகிடிச்சா  ... இது பணிந்தான் காதல் வரும் அது பணிநாதன் காதல் வரும்னா ...நாளைக்கே ஒருதனவிட இநோருதன் அத விட அதிகமா பநிட காதல் மாறிடுமே .... இதுக்கு காதலிகமலே இருந்திடலாமே ..

ஆமா மதி ... உங்களுக்கு போன் பில் உங்க ப்வருமானதவிட அதிகமாக போரதுமட்டும் உறுதி ... மடபடி ஒன்னும் விளங்கும்னு தோணலை ...


கதை அருமை :D சிரிச்சுட்டேன் ...
                    

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #36 on: October 15, 2012, 09:38:38 AM »
ஹாஹா.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் புரிஞ்சிடுச்சு..


இத நான் காதல்ன்னே சொல்லலியே. நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டீங்க? :)


அப்புறம் என் வருமானத்தை விட என் போன் பில் கம்மி தான். அதுவும் ஆபிஸே கட்டிடறாங்களே..  8)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நீங்கள் கேட்டவை
« Reply #37 on: October 15, 2012, 08:17:32 PM »
:D appo enna karumamya itehllam
                    

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #38 on: October 15, 2012, 08:22:31 PM »
haha
unggal karpanaike.!  8)

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: நீங்கள் கேட்டவை
« Reply #39 on: December 03, 2012, 02:30:10 AM »
gotham kathai viru viruppa poguthu supera eluthuringa machi thodaradum, padika aavala ullen
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: நீங்கள் கேட்டவை
« Reply #40 on: February 28, 2013, 07:03:48 PM »
கோதம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதைப்படி  'அவங்க கேட்ட ' அதுனால மாறிய ' நீங்கள் கேட்டவை '  கதையைப் படித்தேன்..விமர்சனங்கள் எழுத விரும்பவில்லை..(கதையிலே ஒரு காபி டே மற்றும் டிவி நிகழ்ச்சிலே சொல்லுற போல அதுலே மாறுபட்ட விமர்சனங்களை வச்சுடீங்க)வாசகனா எனக்கு தோணுனத சொல்லிட்டு ஓடிறேன்..வரிகள் விடாம வாசிக்க வைக்கிற  வார்த்தை கோர்வைகள்..எதிர்பாராத திருப்பங்கள் வைக்கணும் அப்டின்னு நினைக்காம என்ன சொல்லணுமோ அது மட்டும் இயன்ற அளவு நேர்த்தியா சொல்லிருக்கீங்க ..புதுமையை புகுத்துறேன் பேர்வழின்னு  மொக்கை போடாம, உள்ளது உள்ளபடின்னு கீறல் இல்லாம உயிரோட்டத்தோட சொல்லிருக்கீங்க ..கதை கேட்ட,படித்த,தெரிந்த விசயமா தான் இருக்கும் எவ்ளோ யோசிச்சு சொன்னாலும்..சொல்லுகிற விதம் ,சொற்களின் இதம் இரண்டும் படிக்கும் போது அலுப்பு தெரியாம பயணிக்க வைக்கணும்..அந்த வகைல உங்க நடை ,கதைக்கரு சிதைக்காத உரையாடல்கள் பலம்...

        நெருடலா அல்லது கேக்கணும் தோணுன விஷயம் கதையின் இறுதிகட்டம்ல (பாகம் 6 ,7) கதையை மதியே சொல்லுவது போல வச்சுருக்கீங்க...purpose ஆ  வச்சதா?? இல்லை கதையின் முடிவுல கதாபாத்திரமே சொல்லணும் பண்ணீங்களா? எனக்கு என்ன ஆரம்பத்துல தோணுச்சுனா மதி சொல்வது போலவே கொண்டு போகலாமே அப்டின்னு..அப்பறம் கதை ஆசிரியர் திறமைக்கு களம் வேணும்னு இப்டி கொண்டுபோறீங்க நினைச்சேன் ..இறுதில மாத்திடீங்க ?? அப்ப படிச்சு முடிக்கும் தருவாயில் இவரு இதுக்கு ஆரம்பத்துல இருந்தே மதி சொல்வது போல சொல்லிருந்தா இன்னும் ஊன்றி ஒன்றி இருக்கலாமே நான் அப்டின்னு தோணுச்சு ...?

               மத்தபடி நிதானமான நடையின் போக்கு காரணமாக களைப்பில்லாத நதியின் பயண அனுபவம் கிடைச்சது..வாழ்த்துக்கள்...எதிர்வரும் உங்கள் கதைகளுக்கு காத்திருக்கும் நபர்கள் வரிசையில் நானும்...
:)

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #41 on: February 28, 2013, 07:41:09 PM »
பின்னூட்டத்திற்கு நன்றி பயனரே...

சில சம்பவங்களின் பாதிப்பு தான் கதைக்கு காரணி. மற்றபடி இணையக்காதலால் இணைந்தனரா இல்லையா என்பது அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம் என ஐந்தாம் பகுதி எழுதும் போது தான் தோன்றியது. அதனால் ஆறாம் பாகத்தை மதி சொல்லும் மாதிரி முடித்தேன். சுபம் போட்டதற்கு பின் தோன்றியது தான் ஏழாம் பாகம். இன்ஸெப்ஷன் மாதிரி கதைக்குள் கதையாக ஆக்கிப்பார்த்தலென்ன என்று. எல்லாமே பரிட்சார்த்தம் என்று இறுதியாய் எழுதினேன். :)