Author Topic: ~ பக்தி கதைகள் ~  (Read 7568 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #45 on: February 25, 2013, 06:59:45 PM »





மகாபாரதத்தை ஸ்லோக வடிவில், வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய காலத்தில் ச என்ற அக்ஷரத்தை (எழுத்து) அதிகமாக பயன்படுத்தியிருந்தார். ஒருமுறை, கவிப்பேரரசர் காளிதாசர் ஒரு காட்டுவழியே சென்றார். வழியில் வியாசர் சிலை இருந்தது. தன் ஆட்காட்டி விரலை சிலையின் தொப்புளுக்குள் விட்டு குடைந்தபடியே. நீர் பெரிய சகாரப் பிரியராச்சே! உம்மைப் போய் பெரிய கவிஞன் என்கிறார்களே! ச இல்லாமல் உம்மால்
ஒரு ஸ்லோகம் எழுதி விட முடியுமா என்ன! என்று கேலியாகக் கேட்டார். அவ்வளவு தான்! தொப்புளுக்குள் சிக்கிய விரல் வெளியே வரவில்லை. சிலை பேசியது. ஆம்...சிலைக்குள் இருந்து வியாசரே பேசினார்.

அடேய் புத்திசாலி! ச இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம் சொல்லு, அப்படியானால் தான் விரல் விடுபடும், என்றார். இதென்ன பிரமாதம்...சொல்கிறேன், என ஆரம்பித்தவரை தடுத்த வியாசர், ஏற்கனவே நீ மனதில் தயாராய் வைத்துள்ளதை ஏற்கமாட்டேன். நான் சொல்லும் விஷயத்துக்கேற்ற  ஸ்லோகம் சொல் பார்க்கலாம், என்றவர்,  திரவுபதிக்கு பஞ்சபாண்டவர்கள் எவ்வெப்போது என்னென்ன முறை ஆக வேண்டும், சொல் பார்க்கலாம், எனக் கேட்டார். காளிதாசர் படுவேகமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். விரல் விடுபட்டது. வியாசர் அவர் முன் தோன்றி, நான் பாரதத்துக்காக ஒரு  லட்சம் ஸ்லோகம் எழுதினேன். எழுதியவர்  மகாகணபதி. ஆனால், இப்போது நீ சொன்னது போல, பாரதத்தில் ஒரு ஸ்லோகம் கூட அழகாக வரவில்லை, என்று பாராட்டினார். வியாசரையும் விட சிறந்த கவிஞர்  காளிதாசர் என்பது இதிலிருந்து  தெரிகிற விஷயம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #46 on: February 25, 2013, 07:01:24 PM »
பரதன்!




பூனைக்குட்டியிடம் நம் குழந்தை விளையாடினால் கூட, டேய் பார்த்து...கையை  கடிச்சுட போகுது, என்று எச்சரிக்கை செய்கிறோம். ஆனால், நம் பாரத தேசத்துக்கு அந்தப்பெயர் வரக்காரணமாக இருந்த அந்தச் சிறுவன் சிங்கக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு மகாராஜா... அங்கு வந்தார்.  அவரது பெயர் துஷ்யந்தன். துர்வாச முனிவரின் சாபத்தால், தன் மனைவி யாரென்று தெரியாமல் நினைவை இழந்தவர். கண்வமகரிஷியின் வளர்ப்பு பெண்ணான சகுந்தலையை மணம் செய்தவர். மாபெரும் வீரர். அசுரர்களுடன்  போர் வரும் காலங்களில், அவரையும் உடனழைத்துச் செல்வான் தேவேந்திரன். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர் அன்று, காட்டுவழியே விமானம்  ஒன்றில் வந்த போது, சிங்கக்குட்டியுடன் விளையாடும் சிறுவனைக் கண்டார். ஆகா! எனக்கு வீரன் என்ற பட்டம் இருப்பதே தவறு. நான் பகைவர்களைத் தோற்கடித்திருக்கிறேன். ஆனால், இந்தச் சிறுவனைப் போல சிங்கத்துடன் விளையாடும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கவில்லையே! இவன் யார்! விசாரித்து செல்லலாமே!
விமானம் தரை இறங்கியது.

தம்பி! நீ யார்! சிங்கத்துடன்  விளையாடுகிறாயே! பயமாக  இல்லையா! சிறுவன் கலகலவென சிரித்தான். நாம் மனிதர்கள். சிங்கத்தை விட  ஓரறிவு அதிகமுள்ளவர்கள். நாம்  பயப்படலாமா? சிறுவனின் பதில்  மகாராஜாவை சிந்திக்க வைத்தது.  இவன் வீரன் மட்டுமல்ல,  புத்திசாலியும் கூட...யார் பெற்ற  பிள்ளையோ! அவர்கள் கொடுத்து  வைத்தவர்கள். அப்போது சலங்கை  சத்தம் பலமாகக் கேட்டது. சில பெண்கள் ஒரு சேர  வந்தார்கள். பரதா! கிளம்பு!  முனிவர் மரீசி உன்னை அழைக்கிறார்,. ஆம்...அவனது பெயர் பரதன். சற்று பொறுத்து  வருகிறேன். ஆமாம்... அம்மா  எங்கே? அன்னையார் நீராடச் சென்றுள்ளார். சற்று  நேரத்தில் வந்து விடுவார்... என்றவர்கள் அவனது கையைக் கவனித்தனர். பரதா! உன் கையில் கட்டியிருந்த ரøக்ஷ (மந்திரக்கயிறு) எங்கே?சிறுவனும் அப்போது தான் கவனித்தான்.  ஐயையோ! அதை எப்படியாவது தேடிப்பிடியுங்கள். ரøக்ஷயைத் தொலைத்தால், முனிவர் என்னைத் தொலைத்து விடுவார்,.

சிறுவன் பதட்டத்துடன் அங்கும் இங்கும் தேடினான். பணிப்பெண்களும் தேடினர். மன்னர் இதைக் கவனித்து, அவரும் தேடத் துவங்கினார். ஒரு செடியின் அடியில் கிடந்த ரøக்ஷயை எடுத்து பெண்களிடம் நீட்டி, இதுவா பாருங்கள், என்றனர். அந்தப்பெண்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஐயா! தாங்கள் யார்? இந்தக் கயிறை இந்தச் சிறுவனின் தந்தையும், தாயும் தவிர மற்றவர்கள் தொட்டால் பாம்பாகி விடும் என முனிவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் இவனது தந்தையா? இதற்குள் அவனது தாய் அங்கு  வர, ராஜா அதிர்ச்சியுடன் பார்த்தார். சகுந்தலா...அவளும் அதிர்ச்சியுடன் அவனை அணைத்துக்  கொண்டாள். சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்த்த போது, நீ யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். இப்போது நினைவு வந்து விட்டதா? துர்வாசரின் சாபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சகுந்தலாவிடம் விளக்கினார். அந்த ராஜா தான் துஷ்யந்தன்.  அவருக்கும் சகுந்தலைக்கும் பிறந்த  வீரத்திருமகனான பரதனே  நம் ஆண்டை ஆண்ட மாபெரும் சக்கரவர்த்தி.  அவரது பெயரால் தான் நம் தாய்த்திருநாடு பாரதம் எனப்படுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #47 on: February 25, 2013, 07:03:19 PM »
பேசும் தெய்வம்!




மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது, இந்த பூலோகத்தில் பிறந்த ஒரு தெய்வப் பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத் தெரியுமா!  சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார். பெரிய பணக்காரர். அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையைச் சந்தித்தார். அவளது அழகு, ஆடல், பாடலில் மயங்கி காதல் கொண்டார். அவள் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். நடிகையோ, சாதுவனைவிட அவர் வைத்திருந்த பொருள்மீது ஆசை வைத்திருந்தாள். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் தனக்கு தரும்படி கேட்டாள். சாதுவனும் கொடுத்து விட்டார். பொருள் கிடைத்ததும் அவரை விட்டுச் சென்றுவிட்டாள்.  தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத்  திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.

அவர்களைச் சந்தித்த சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.  கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல் அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள் நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்டபிறகு அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல் வந்துவிட்டார். ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால் மனைவியிடம் தனக்கு உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என வருந்தினார். புயலோ நின்றபாடில்லை. கப்பல் கடலில் மூழ்கி விட்டது. கடலில் விழுந்த வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. அதிர்ஷ்டவசமாக அவை சாதுவனை ஒன்றும் செய்யவில்லை. அவர் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார். தனக்கு துரோகம் செய்தவர் என்றாலும் கூட, கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம்.

அவளது பிரார்த்தனைக்கும், கணவர் திருந்திவிடுவார் என்று பொறுமையுடன் காத்திருந்ததற்கும் பலனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.  ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கியதும் செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்துவிட்டார் என முடிவு செய்த ஆதிரை கலங்கிப் போனாள். இதயமே வெடித்துவிட்ட நிலையில், மயானத்திற்குச் சென்று தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும், என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.  ஆனால், அந்தக் கற்புக்கரசியை அக்னிதேவன் சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் அக்னிதேவனைச் சுட்டது. அவள்  உயிருடன் மீண்டாள். நெருப்பில் குதித்தும் உயிர் போகாததால், ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார், என்றது. ஆதிரை மகிழ்ந்தாள். இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னான். அரசர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.  அரசர் சாதுவனிடம், நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?, என்று கேட்டார்.  சாதுவன் அவரிடம், அரசே! நான் ஏற்கனவே மது, மாது, மாமிசத்திடம் சிக்கிச் சீரழிந்தவன். இனி, நான் மாமிசம் உண்பதாக இல்லை. மனதை மயக்கும் கள்ளும் குடிக்கமாட்டேன். இலை, காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை கடவுள் நமக்கு தாராளமாக வழங்கியுள்ளார். இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக் கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும். நாமும் அடுத்தபிறவியில், அதே கொலைகாரனால் கொல்லப் படுவோம். இந்த பிறவி நீடிப்பதை விரும்பவில்லை, என்றான்.  இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார். சாதுவனை காவிரிப் பூம்பட்டினம் கிளம்பிய ஒரு கப்பலில் அனுப்பி வைத்தார். ஆதிரையிடம் மன்னிப்பு கேட்டு, அவளுடன் பலகாலம் வாழ்ந்தார் சாதுவன்.  கற்புக்கரசியான ஆதிரையே  நட்சத்திரமாக வான மண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின் பெருமையை மெச்சியே, அந்த நட்சத்திரத்திற்கு திரு என்ற அடைமொழியும் சேர்க்கப்பட்டு திருவாதிரை என வழங்கப்படுகிறது.  அம்மையப்பனாகிய சிவபெருமானும் ஆதிரைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அதை தனது சொந்த நட்சத்திரமாக ஏற்றார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #48 on: February 25, 2013, 07:05:21 PM »
வியாக்ரபாதர்




மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மழன் எனப் பெயர் சூட்டி, வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன், தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய்வது தானே!, என்று கேட்டான்.மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும், என்றார்.மழன் அன்றுமுதல் சிவனையே நினைத்து எதையும் செய்தான். அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள் அழைத்தனர்.மழமுனிவர் சிவபூஜை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார்.  சிவனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது.

விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும் என்று வேண்டினார்.சிவனும் அந்த வரத்தை வழங்கினார். புலியை சமஸ்கிருதத்தில்வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார்.

சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும் பாராட்டினர்.ஒருசமயம், வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லை வனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது, என்றார்.அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடனதரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #49 on: February 25, 2013, 07:08:05 PM »
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!




திருமாலும், லட்சுமியும் ஆதி சேஷனின் மீது அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.  கலியுகத்தில்  மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென  திருமால் எழுந்தார். கருடன் கணப் பொழுதில் அவர் முன் வந்து நின்று, சுவாமி ஏறுங்கள் என்றான். அவர் எங்கு போகிறார் எனத்தெரியாவிட்டாலும், தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம்.  பெருமாளும் கருடன் மேல் ஏறி, அதோ! வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ, என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், வேண்டாம்... வைகுண்டத்துக்கே திரும்பி விடு, என்றார். கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான்.

அவரைப் பார்த்த லட்சுமி,சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல்  அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே! என்றாள். திருமால் சிரித்தபடியே, லட்சுமி! ஒரு இளைஞன் என் திருநாமத்தை உச்சரித்த படியே ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றான். கவனக்குறைவாக, வழியில் சலவைத் தொழிலாளி ஒருவன் காயப்போடப்பட்டிருந்த ஒரு சேலையை மிதித்து விட்டான். அதைப் பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவனை விரட்டினான்.  நான் அவனைக் காப்பாற்ற புறப்பட்டேன். ஓடிய இளைஞன், என் திருநாமம் சொல்வதை விட்டு விட்டு வழியில் கிடந்த கல்லை எடுத்து, சலவைத் தொழிலாளி மீது எறிவதற்கு ஓங்கினான். ஆகா! இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை என திரும்பி விட்டேன், என்றார். எந்த நிலையிலும் இறைசிந்தனையுடன் இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #50 on: February 25, 2013, 07:10:16 PM »
அபகரித்தால் அம்பேல் தான்!




மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள், சகோதர பிரச்னையில் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டி பொருளைப் பறிப்பவர்கள்...யாரானாலும் பறித்த சொத்து நிலைக்காது. இதோ ஒரு சம்பவம். கலிங்கநாட்டை ஆட்சி  செய்த வாகுலனுக்கு இன்ப  முகன், நண்பமுகன் என்ற பிள்ளைகள். தன் மறைவுக்குப் பின், மூத்தவன் இன்பமுகன் ஆட்சி நடத்த வேண்டுமென்றும், அவனுக்குப் பின் இளையவன் ஆட்சி செய்ய வேண்டுமென்றும் எழுதி வைத்தான். ஒப்பந்தத்தை எழுதியது மற்றவர்களுக்கு  தெரியாது. அன்றிரவே, வாகுலன் இறந்து விட, ஒப்பந்தத்தை இன்பமுகன் எரித்து விட்டான். தனக்குப் பின் தன் மகன் நாடாள வேண்டுமென்பது அவன் விருப்பம். தம்பி நண்பமுகனுக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதையறிந்த நண்பமுகன் மனம் வெறுத்தான்.

சொந்த  சகோதரனே, தனக்கு துரோகம் செய்ததைப் பொறுக்க மாட்டாமல், அரண்மனையை விட்டு வெளியேறினான். காலம் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தான். அவந்தி தேசத்துக்கு சென்றான். அங்கே, தன்னை இளவரசனாகக் காட்டிக் கொள்ளாமல், போர்ப்பயிற்சி தரும் ஆசிரியராகக் காட்டிக் கொண்டான். அந்நாட்டு மன்னன் இளங்கோவன், அவனது திறமை பற்றி கேள்விப்பட்டு, தன் அந்தரங்க பாதுகாவலனாக நியமித்துக் கொண்டான். இளங்கோவனின் மகள் சுந்தரி, பெயருக்கேற்றாற் போல்  பேரழகி. கட்டிளங்காளையான நண்பமுகன் மீது அவளுக்கு காதல். அவனைத் திருமணம் செய்ய விரும்பி, தந்தையிடம் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். மகளே! மன்னாதி மன்னர்களெல்லாம் உன்னை மணக்க போட்டியிடுகின்றனர். நீ சாதாரண வீரனை விரும்புகிறாயே! உலகம் என்னை மதிக்குமா? என்றான். அப்பா! நீங்கள் வாள்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் என்னை மணக்க விரும்புவோர் பங்கேற்கட்டும்.

வெற்றி பெறுபவருக்கு, என்னை மணம் முடித்துக் கொடுத்து, நம் நாட்டின் மன்னனாகவும் ஆகலாம் என அறிவியுங்கள். நண்பமுகன் நிச்சயம் வெல்வார் என்று நம்புகிறேன், என்றாள். மாபெரும் மன்னர்கள்  முன்னால் நண்பமுகன் தூசாகி விடுவான். யாரோ ஒரு மன்னன் தான் வெற்றி பெறப் போகிறான்! அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என இளங்கோவன் கணக்கு  போட்டான்.  ஆனால், போட்டியில்  நண்பமுகன் வென்றான்.  இளங்கோவன் நண்பமுகனிடம், உண்மையைச் சொல், ஒரு வீரனால் இங்குள்ள மன்னர்களை ஜெயிக்க முடியாது. நீ யார்? என்று கேட்டான்.  தான் கலிங்கதேச இளவரசன் என்றும், நடந்த விபரங்களையும் அவன் கூறவே, போட்டிக்கு வந்த அரசர்கள் எல்லாரும் அவனுக்கு நண்பர்களாயினர். எல்லாருமாக இணைந்து கலிங்கத்திற்கு  வந்தனர். இன்பமுகனை  விரட்டியடித்து விட்டு, நண்பமுகனை கலிங்கத்தின் ராஜா வாக்கினர். ஒன்றுக்கு இரண்டாக, கலிங்கத்தையும், அவந்தியையும் இணைத்துஅவன்  அரசாண்டான். அடுத்தவர்  சொத்தைப் பறிப்பவர்கள், அதை  அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய் விடுவார்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #51 on: February 25, 2013, 07:12:32 PM »
அவன் இப்போது இல்லை!




ஒரு ராஜா கொடுங்கோலாட்சி செய்தான். கண்டபடி வரிவிதித்து கசக்கிப் பிழிந்தான். விரும்பிய பெண்களை அந்தப்புரத்தில் அடைத்து வைத்தான். இவன் செத்து தொலைய மாட்டானா என்று மக்கள் இறைவனிடம்  பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டனர். ஒருநாள், ஒரு மகான் அவ்வூருக்கு வந்தார். அவரிடம் மக்கள் தங்கள் கஷ்டத்தைச்  சொன்னார்கள். மகான் அவர்களிடம்,நான் மன்னனை நேரில் சந்தித்து அவனுக்கு  அறிவுரை சொல்கிறேன், நல்லதே நடக்கும், மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள், என்று சொல்லி தேற்றினார்.

அரசவைக்கு சென்ற அவரை மன்னன் எழுந்து நின்று கூட வரவேற்கவில்லை. என்ன சாமியாரே! காடு, கரை என  எங்காவது சுற்றினால் என்ன! அரண்மனைக்கு வந்து யாகம் நடத்துகிறேன்...அது...இது  என சன்மானம் வாங்க வந்திருக்கிறீரா? என எகத்தாளமாகக் கேட்டான். மகானுக்கு கோபம் வந்துவிட்டது. அட மூடனே! உன் கொடிய ஆட்சியில்  மக்கள் படும் பாட்டை எடுத்துரைக்க வந்தால், எடுத்தெறிந்தா பேசுகிறாய்? இன்னும்  ஓராண்டில் உனக்கு சாவு நிச்சயம், என்று சாபம் கொடுத்து விட்டு வெளியேறி விட்டார். மக்களுக்கு இந்த செய்தி எட்டியது. மகானின் சாபம் பலித்தே தீரும் என அவர்கள்  மகிழ்ந்தனர். துறவிகளின் சாபம் பலிக்குமென்பதால்,  மன்னனையும் பயம் தொற்றியது. அன்று முதல், தன்னை நாடி வந்தோருக்கெல்லாம் வாரிக் கொடுத்தான்.

மக்களின் வரிச்சுமை  பெருமளவு குறைக்கப்பட்டது. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மக்கள் அவனை வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வாழ்த்து அவனுக்கு அரணாக இருந்தது. ஓராண்டும் கழிந்து விட்டது. மகானின் சாபம் பலிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் அங்கு வந்தார். சுவாமி! உங்களிடம் தவறாக நடந்ததற்காக மன்னியுங்கள். உங்கள் சாபம் பலிக்காமல் போனது எப்படி? என்றான் மன்னன். யார் சொன்னது, சாபம் பலிக்கவில்லையென! கெட்டவனான ராஜா இறந்து விட்டான். இப்போது நற்குணமுடைய ராஜாவல்லவா ஆட்சி செய்கிறான்! என்றார். மன்னனும்  மக்களும் மகிழ்ந்தனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #52 on: February 25, 2013, 07:13:59 PM »
இந்தக்கல்லுக்கு ஈடாகுமா?




ஒரு ராஜாவைப் பார்க்க, மகான் ஒருவர் வந்தார். அவரிடம், ராஜா தன் அருமை பெருமையை எல்லாம் கொட்டித் தீர்த்தான்.  ஒரு வைரக்கல்லை காட்டி, சாமி! இது மாதிரி கல் எந்த நாட்டிலேயும் இல்லே! இதற்கு கோடி கோடி பணம் விலை. என் மார்பிலுள்ள தங்கச்சங்கிலியில் இதை பதிக்கப் போகிறேன். அப்புறம் நான் தான் உலகத்திலேயே செல்வந்தன், என்றான். மகான் சிரித்தார். அதிருக்கட்டும், இந்த கல்லை உன் மார்பில்  பதிப்பதால் என்னாகப் போகிறது? என்றார். இது என் பெருமையை பறைசாற்றும்.

இதை அணிந்துள்ள என்னைப் பாதுகாக்க நூறு வீரர்களை நியமித்திருக்கிறேன், என்றான் இன்னும் பெருமையுடன். இதை விட உயர்ந்த கல் இதே ஊரில் இருக்கிறது. பார்க்க வருகிறாயா? என்றதும், ஆசை உந்தித்தள்ள ராஜா கிளம்பினான். ஒரு குடிசைக்கு ராஜாவை அழைத்துச் சென்ற மகான், உள்ளே பார்! அந்தப் பெண் இந்தக் கல்லால் மாவாட்டி விற்றுப் பிழைக்கிறாள். அவள் குடும்பத்தையே அந்தப் பணம் பாதுகாக்கிறது. நீ வெறுமனே ஒரு கல்லைக் கழுத்தில் அணிவதால் உனக்கோ, பிறருக்கோ என்ன பலன்? என்றார். ராஜாவுக்கு சுரீரென்றது. கல்லை விற்றுக் கிடைத்த தொகையை கஜானாவில் சேர்த்து மக்களுக்கு  செலவிட்டான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #53 on: February 25, 2013, 07:16:04 PM »
அம்மாவின் போதனை!




சதத்துவஜர் என்ற  அரசரின் மனைவி  மதாலஸா. இவள் பக்திப்பூர்வமானவள். மனிதனே தன் செய்கைகளால் தெய்வமாகலாம் என நினைப்பவள். மதாலஸா கணவரிடம், அன்பரே! நம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைக்க வேண்டும். யாரும் அதில் தலையிடக்கூடாது, என்றாள். காரணம் தெரியாத அரசரும் சரியென வாக்கு கொடுத்து விட்டார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்ததும் அரசர் விக்ராந்தன்
(ஊர் ஊராக சுற்றுபவன்) என்று பெயரிட்டார். இதைக் கேட்டு அரசி சிரித்தாள். அதற்கான  காரணம் அரசருக்குப் புரியவில்லை. ஆனால், கேட்கும் தைரியம் இல்லை. அந்தக் குழந்தையை அரசி நிராஞ்ஜன் என்று அழைத்தாள். இதற்கு பற்றில்லாதவன் என்று பொருள்.  பாலூட்டும் பருவத்திலேயே வாழ்க்கை என்றால் இன்னதென்று, குழந்தைக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

இந்த வாழ்வு பொய்யானது. பிரம்மம் (தெய்வம்) ஒன்றே மெய்யானது, என்று சொல்லிக் கொண்டே பால் கொடுப்பாள். குழந்தை பெரியவனான பின்   தவமிருக்க போய்விட்டான். இதையடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் இதே போல் தவமிருக்க சென்று விட்டனர். அரசருக்கு கவலை வந்து விட்டது. ராணி இப்படியே செய்தால், தனக்குப் பிறகு நாடாள யார் இருக்கிறார்கள்? இந்த தேசம் பாதுகாப்பற்று, வாரிசற்று போய் விடுமோ என அஞ்சினார். இதையடுத்து ஒரு குழந்தை பிறந்தது. இம்முறை ராஜா பெயர் வைக்க வந்த போது, ராணி  அவரைத் தடுத்தாள்.  உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வைக்கும் பெயர் சரியாக அமையவில்லை. நான் இவனுக்கு அலர்க்கன் என்று பெயர்  சூட்டுகிறேன், என்றாள். ராஜா அதிர்ந்து விட்டார். ஏனெனில், அந்தப்பெயருக்கு  பைத்தியக்கார நாய்என்று அர்த்தம். இவளுக்கு தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எண்ணிய அவர். ராணியிடம், நீ இப்படி செய்யலாமா? என்றார். நீங்கள் முதல் குழந்தைக்கு  விக்ராந்தன் என்றும், அடுத்தவனுக்கு சுபாகு( வலிமை  மிக்க தோள்களை உடையவன்) என்றும், மூன்றாமவனுக்கு சத்துருமர்த்தனன் (எதிரிகளை துவம்சம் செய்பவன்) என்றும் பெயர் வைத்தீர்கள். அந்தப் பெயருக்கேற்றாற் போல் அவர்களும் நடக்கவில்லை. அப்படியிருக்க, இவனுக்கு பைத்தியம் என்று பெயர் வைத்ததால், அவன் பைத்தியமாகி விடுவானா என்ன! தீ என்றால் நாக்கு சுட்டு விடாது.

இந்தப் பெயரே இருக்கட்டும்,  என அடித்துச் சொல்லி விட்டாள். ஒன்றும் புரியாத ராஜா,  இவனையாவது அரசாள தயார்படுத்து. இவனையும் விட்டால் நாடாள யார் உள்ளனர்?  என்றார்.  அதை ராணி ஏற்றுக்  கொண்டாள். மகனுக்கும்  அரசாளும் வித்தையைக் கற்றுக் கொடுத்தாள். அவன் பொறுப்பேற்றதும், ராஜாவும், ராணியும் காட்டுக்கு புறப்பட்டனர். மகனுக்கு ஒரு பதக்கத்தை அணிவித்த ராணிமகனே! உனக்கு கஷ்டம் வந்தால் மட்டும் இந்த பதக்கத்திற்குள் இருக்கும் ஓலையை படித்துப் பார்,  என்றாள். பலகாலம் கழிந்ததும், அவனுக்கு வாழ்வில் ஏதோ வெறுப்பு தட்ட, ஓலையை  எடுத்துப் படித்தான். நீ பற்றற்றவனாக இரு, அப்போது  ஆத்மஞானம் அடைவாய்,  என்றிருந்தது. அதிலுள்ள உண்மையை அலர்க்கன் புரிந்து கொண்டான். அவனும் தவமிருக்ககாட்டுக்குப் போய்விட்டான். குழந்தைகள் அதிக  ஆசையின்றி, ஒழுக்கமாக வளர இந்தக் கதையை மார்க்கேண்டய புராணத்தில் சொல்லிஉள்ளனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #54 on: February 25, 2013, 07:18:04 PM »
இது தான் வாழ்க்கை!




மகரிஷிக்கு நிதாகர் என்ற சீடர்.  இவருக்கு ஆத்ம ஞானம் அடைய வேண்டும் என்பது விருப்பம்.ஆத்மா என்பது அணு போன்றது. அதற்கு உறுப்பெல்லாம் கிடையாது. பிராமணன், வைஸ்யன், சூத்திரன் என்பதெல்லாம் உடலைப் பொறுத்த விஷயம். ஆத்மாவுக்கு இந்தப் பாகுபாடு கிடையாது. தற்போது சூத்திரனாக இருப்பவன், அவன் செய்யும் வினைகளுக்கேற்ப பிராமணனாகவும் பிறக்கலாம், க்ஷத்திரியனாகவும்  (அரசன்) மாறலாம், கீழ்நிலையான மிருகமாகவும் பிறக்கலாம், என்று உபதேசித்தார் ரிஷி. நிதாகருக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது. ஆயிரம் வருஷம் இதுபற்றி சிந்தித்தார்.ஒருநாள் காட்டில் தர்ப்பை அறுத்து வந்தார். அவ்வூர் ராஜா யானை மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது மகரிஷி ரிபு வந்தார். நீண்டகாலம் ஆகிவிட்டதால் ரிபுவை, நிதாகருக்கு அடையாளம் தெரியவில்லை.

யாரோ சாமியார் என நினைத்து விட்டார். ஏன் இங்கே நிற்கிறாய்? ரிபு கேட்டார்.எதிரே ராஜாவின் யானை ஊர்வலம் வருகிறது? அதனால் ஒதுங்கி நிற்கிறேன்,.ராஜாவா யார் அது?யானை மேல் உட்கார்ந்திருக்கிறாரே...அவர் தான்.யானையா...அப்படியானால் என்ன? மகரிஷியாக இருக்கீறீர்! இது கூட உமக்கு தெரியாதா! கருப்பாக நீண்டு வளைந்த கையுடன் குண்டாக இருக்கிறதே ராஜாவுக்கு கீழே! அதுதான்!. அப்படியா! ராஜா மேலே... யானை கீழே..  என்றீரே! மேலே என்றால் என்ன? கீழே என்றால் என்ன?. ரிபு இப்படி கேட்டாரோ இல்லையோ...நிதாகர் டென்ஷனாகி விட்டார். மகரிஷியைக் கீழே தள்ளினார். அவர் மீது இரண்டு பக்கமும் காலைத் தூக்கிப் போட்டார். இப்போது புரியுதா? நீர் கீழே...நான் மேலே!அப்போதும் ரிபு அமைதியாக கேட்டார். நீர் என்பது யார்? நான் என்பவர் யார்? இப்போது தான் நிதாகர் சிந்தித்தார்.இவர் சாதாரண ஆளல்ல! யாரோ மகான்.

ஒரே கேள்வியில் மடக்கி விட்டாரே! கோபமே வரவில்லையே! இவர் மாபெரும் தபஸ்வி, என நினைத்தவரின் முகத்தை உற்றுக்கவனித்த நிதாகர், அவர் தனது குரு என்பதை தெரிந்து கொண்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.நிதாகா! நான் உன் குரு என்பதை ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறந்து விட்டாய். இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆத்மஞானம் என்றால் என்ன என்பது பற்றி அறியாமல் இருந்து விட்டாயே! நான் யார்? என்ற கேள்வியை திரும்பத்திரும்ப உன்னிடமே கேள். உன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லா உறவுகளுமே மாயை. இவை உன்னிடம் சில காலம் இருந்து விட்டு போய் விடும். ஏன்... நீயும் மறைந்து போவாய். இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார். நாம் இறைவனிடம் இருந்து வந்தவர்கள். அவன் மட்டுமே நமக்கு நிரந்தர சொந்தம் என்ற ஆத்மஞானம் கைகூடும், என்றார்.நிதாகருக்கு சிந்தனையில் தெளிவு பிறந்தது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #55 on: February 25, 2013, 07:20:43 PM »
இதுவல்லவோ குருபக்தி!




காஞ்சி மகாப்பெரியவருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள் காசிக்கண்ணன், வைத்தியநாதன் என்ற தொண்டர்கள். இருவரும் பெரியவர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்கள். ஒருசமயம் மகாப்பெரியவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருந்தார். அப்போது, ஒரு ஊழியர் ஓடிவந்து, பெரியவா! கண்ணன், வைத்தா (வைத்தியநாதனை இப்படி சுருக்கிச்சொல்வார் பெரியவர்) இருவருமே உங்களிடம் பக்தி செலுத்துகிறார்கள், இவர்களது பக்தியில் ஏதாவது வித்தியாசம் காண்கிறீர்களா? என்றார். பெரியவர் சிறிது யோசித்தார். காசிக்கண்ணனிடம் நீ போய், பெரியவர் உன்னைக் கிணற்றில் குதிக்கச்சொன்னார் என்று சொன்னால், அவன்பெரியவாளா சொன்னா! எதற்குச் சொன்னார், காரணமில்லாமல் அவர் ஏதும் சொல்லமாட்டாரே! சரி, பெரியவரிடமே கேட்டுவிட்டு பின் குதிக்கிறேன் என்று சொல்வான். வைத்தாவோ, பெரியவா சொன்னாளா! என்னையா! என்று கனஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, உடன் கிணற்றில் குதித்து விடுவான். இதுதான் வித்தியாசம். இருவருமே என்னைப் பொறுத்தவரை சமமானவர்கள் தான். காசிக்கண்ணன் யோஜனையுடன் செய்வான். வைத்தா யோசிக்காமல் செய்வான். கைங்கர்யத்தில் இருவரும் சமமே! என்று பதிலளித்தார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #56 on: February 25, 2013, 07:24:17 PM »
அண்டங்காக்கைக்கு பிறந்தவரே!




தருமபுரம் ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர், துறவி சம்பந்த சரணாலயர். இவர் கந்தபுராணத்தைச் சுருக்கமாகப் பாடிய புலவர். திருத்தல யாத்திரையாக கர்நாடகா சென்றிருந்தார். மைசூரு மன்னர் இவரின் பெருமையைக் கேள்விப்பட்டு அரசவைக்கு அழைப்பு விடுத்தார். பல்லக்கு, பரிவாரங்கள் சரணலாயரை அழைத்து வர அமைச்சர் மேற்பார்வையில் கிளம்பின. அவர் அரண்மனைக்கு சகல மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டார். சரணாலயர் நல்ல கருப்பு. அவரைக் கண்ட மன்னர், சிரித்தபடி, அமைச்சரின் காதில் மெல்ல, சுவாமி, அண்டங்காக்கை போல கருப்பாக இருக்கிறாரே! என்றார்.  மன்னரின் வாய் அசைவைக்கொண்டே, புலவர் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து கொண்டார்.

சபையில் அனைவரும் கேட்கும் விதத்தில் கம்பீர தொனியில், மன்னர் பெருமானே! அண்டங்காக்கைக்குப் பிறந்தவரே! நீர் வாழ்வாங்கு வாழ்க! உமது பெருமை எங்கும் ஓங்குக!, என்றார்.  அப்பேச்சைக் கேட்டு கோபமடைந்தார் மன்னர். மன்னா! உண்மையைத் தானே சொன்னேன். அண்டம் என்றால் உலகம். நீர் இந்த உலகத்தைக் காப்பதற்காகத் தானே பிறந்திருக்கிறீர்! என்ன... நான் சொல்வது சரிதானே! என விளக்கம் அளித்தார்.  புலவரின் அறிவுத் திறத்தைக் கண்ட மன்னன் மகிழ்ந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும், பட்டாடைகளும் பரிசளித்தார். சம்பந்த சரணாலயரும் அங்கு அருளுரை நிகழ்த்தி விடைபெற்றார். சம்பந்த சரணாலயரின் மதிநுட்பத்தை எண்ணி தருமபுரம்
ஆதீனமும் மகிழ்ந்தார்.  நிறத்தைக் காரணமாக வைத்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது...புரிகிறதா!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #57 on: February 25, 2013, 07:26:02 PM »
தெய்வப்பிறவிகள்!




குஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் வசித்தவர் ஹர்சன்ஜிலால்ஜி. சிவபக்தராக திகழ்ந்தார். குபேரநாத மகாதேவர் என்ற பெயருடன் சிவன் கோயில் ஒன்றை கட்டினார். இவரது மூத்தமகன் மூலசங்கரன். இவரை தயாராம் என்றும் தயானந்தர் என்றும் அழைப்பார்கள்.மூலசங்கரன் இளமையிலேயே வேதங்கள் பல கற்றார். வடமொழி ஸ்லோகங்களில் இவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. தந்தையைப்போலவே மகனும் பக்தி மார்க்கத்தில் இறங்கினார். இது தயாராமின் தாய்க்கு பிடிக்கவில்லை. அந்த தாயாரும் சிவபக்தையே என்றாலும், தங்களைப்போல ஆழமான பக்தி வழியில் செல்லவேண்டாம் என்றுமகனிடம் சொன்னார். ஆனால் ஹர்சன்ஜி, மகனின் சிவபக்திக்கு ஆதரவு தெரிவித்தார். சிவராத்திரி நாட்களில் மூலசங்கரன் விடிய விடிய பூஜை செய்வார். 13 வயதிலேயே அவர் சிவராத்திரி விரதம் இருக்க துவங்கிவிட்டார். ஒரு சிவராத்திரியின்போது ஏராளமான பக்தர்கள் சிவன் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல எல்லாருக்கும் தூக்கம் வந்துவிட்டது. மூலசங்கரனின் தந்தையும் கோயில் சுவரில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டார். மூலசங்கரன் மட்டும் கண்விழித்து எல்லாரும் இப்படி தூங்குகிறார்களே என வருந்தியபடியே, சிவலிங்கத்தை கவனித்தார். லிங்கத்தின் மீது சில எலிகள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. அவை நைவேத்தியப் பொருட்களை கொறித்துக் கொண்டிருந்தன. யாராலும் தொடமுடியாத லிங்கத்தை இந்த எலிகள் தொட்டு விளையாடுகிறதே. இதைத்தடுக்க இந்த சிவனால் முடியாதா? என மூலசங்கரன் சிந்தித்தார். தன் தந்தையை எழுப்பி எலிகளை காட்டினார். இவற்றை விரட்டாவிட்டால் சிவனுக்கு உரிய பொருட்களை எலிகள் தின்றுவிடுமே. இது சிவனுக்கு நாம் செய்யும் அபச்சாரம் ஆகாதா? சிவன் இருப்பது உண்மையானால், அவரே இந்த எலிகளை விரட்டலாம் அல்லவா? என கேட்டார். மகனிடம், இப்படியெல்லாம் பேசக்கூடாது. சிவபெருமான் கயிலாயத்தில் வசிக்கிறார். அவரை நாம் வணங்குவதற்காக சிலை வடிவில் இங்கு வைத்துள்ளார்கள். சிலையால் எலிகளை விரட்டமுடியாது, என்றார்.அப்படியானால் சக்தியில்லாத இந்த சிலையை என்னால் வணங்கமுடியாது. இது அர்த்தமற்றது, என சொல்லிவிட்டு தயாராம் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிவராத்திரி விரதத்தை கைவிட்டார். உடனே சாப்பிட்டார். இதைக்கேள்விப்பட்ட அவனது தந்தை கடுமையாக திட்டினார்.

ஆனாலும், உருவங்களை வழிபடுவதில் அர்த்தமில்லை என மூலசங்கரன் உணர்ந்தார். கோயிலுக்கு செல்வதை விட்டுவிட்டு படிப்பில் அக்கறை செலுத்தினார். அவருக்கு 16 வயதானபோது அவரது பாசத்திற்குரிய தங்கை கொடிய நோயால் இறந்துவிட்டார். உறவினர்கள் அனைவரும் அழுதனர். மூலசங்கரன் தங்கை மீது பாசம் கொண்டிருந்தாலும்கூட அசையாமல் அமர்ந்திருந்தார்.மரணத்தை வெல்லும் சக்தி யாருக்கும் இல்லை. மரணத்தை தவிர்க்க பிறவியற்ற நிலைக்கு செல்லவேண்டும். இதற்கு தியானமே சிறந்த வழி, என உணர்ந்தார். இதே போல அவரது மாமாவின் மரணமும் அவரை இதே சிந்தனையில் தள்ளியது. பாசத்தை மறந்து துறவறம் மேற்கொண்டால்தான் முக்தி பெறுவதற்குரிய வழி பிறக்கும் என உணர்ந்தார். அன்று முதல் பைத்தியம் போல காணப்பட்டார். மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகும் என பெற்றோர் எண்ணினர். மூலசங்கரன் மறுத்துவிட்டார்.யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் சித்திப்பூர் சென்று துறவு வாழ்க்கையை ஆரம்பித்தார். சுத்த சைதன்யன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த விஷயத்தை அவரது தந்தைக்கு சிலர் தெரிவித்தனர். ஹர்சன்ஜி அவரை தேடிபிடித்து அழைத்துவந்தார். வரும் வழியிலேயே மூலசங்கரன் தப்பி விட்டார். மகனைக் காணாமல் தவித்த தந்தை சில நாட்களில் இறந்துவிட்டார். மற்ற மகன்களும் இறந்து போனார்கள். தப்பியோடிய மூலசங்கரன் பரோடாவில் வசித்த பரமானந்த பரமஹம்சரிடம் வேதம் பற்றி அறிந்தார். சன்னியாசம் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை பரமானந்தரிடம் தெரிவித்தார். சிறுவரான மூலசங்கரருக்கு துறவறம் வழங்கி பரமானந்தர் தயங்கினார். எனவே சிருங்கேரி மடத்திலிருந்த பூர்ணானந்த சரஸ்வதி சுவாமியைச் சந்தித்த மூலசங்கரன் தனக்கு சன்னியாச தீட்சை வழங்கும்படி கேட்டார்.பூர்ணானந்தர் மூலசங்கரனுக்கு சன்னி யாச தீட்சை அளித்து தயானந்த சரஸ்வதி என்ற பெயர் சூட்டினார். மூலசங்கரன் தயானந்தர் ஆனார். தயானந்தரின் காலத்தில்தான் இந்தியாவின் பலஇடங்களிலும் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்தது. கான்பூர், மீரட் நகரங்களில் பெரும் கலவரம் நடந்தது. ஏராளமான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர்.

இதைப் பார்த்த தயானந்தர் வேதனை அடைந்தார். பின்னர் பஞ்சாபிலுள்ள கர்த்தார்பூர் என்ற இடத்திற்கு சென்ற அவர் விரஜானந்தர் என்பவரை சந்தித்தார். அவருக்கு பார்வை கிடையாது. இந்த நிலையிலும் கூட கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு ரிஷிகேஷ் வரை நடந்தே சென்றவர் அவர். தனது 15வது வயதிலேயே இந்த சாதனையை செய்தார். விரஜானந்தரை சந்தித்த தயானந்த சுவாமி அவரது சீடரானார். அவரிடம் பல போதனைகளைக் கற்றார். முக்தி பெறவேண்டும் என்ற தயானந்தரின் எண்ணத்தை மாற்றி, நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான தெய்வ வழிபாடு என்ன எடுத்துக் கூறினார். அதன்பின் விரஜானந்தர் இறந்துவிட்டார். விரஜானந்தரின் கருத்தை ஏற்ற தயானந்தர் மதமாற்றம், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மூடக் கொள்கைகள் மக்களுக்கு ஆகாது என எடுத்துக் கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழி என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றார். 1875ம் ஆண்டில் மும்பையில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பை துவக்கினார். இந்த சமாஜத்தின் மூலம் கல்விக்கூடங்கள் அமைத்தார். தன்னிடம் வலியவந்து யாராவது பொருள்கொடுத்தால் அதை கல்விக்காக செலவிட்டார். ஜோத்பூர் மன்னர் தயானந்தரை அரண்மனைக்கு வரும்படி அழைத்தார். மன்னர் ஒரு பெண்பித்தர். எனவே தயானந்தரை அரண்மனைக்கு செல்லவேண்டாம் என அவரை சார்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் சுவாமிகள் அவர்கள் சொன்னதை பொருட்படுத்தாமல் அரண்மனைக்கு சென்று மன்னரை கண்டித்தார். அப்போது மன்னரின் அருகில் நன்னிஜான் என்ற தாசிபெண் இருந்தாள். அவளைப்பார்த்த தயானந்தருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதுபோன்ற நாய்களுடன் அரசர்கள் தொடர்பு வைக்கலாமா? என கேட்டார். இதைக்கேட்டதும் நன்னிஜானுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.  தயானந்தரை கொல்ல திட்டமிட்டாள். விஷம்கலந்த பாலை அவருக்கு கொடுத்தாள். இதைக்குடித்த தயானந்தருக்கு எவ்வளவோ சிகிச்சை செய்தும் உடல்நிலை மோசமானது. அவரை ஆஜ்மீருக்கு அழைத்துச்சென்று வைத்தியம் செய்தனர். ஆனாலும் மருந்து எதுவும் பலனளிக்காமல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி உயிர்நீத்தார். பாசத்தை மறந்து முக்தி பெறுவதற்கான அவரது போதனைகளை இன்றும் ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218401
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #58 on: February 25, 2013, 07:28:01 PM »
மனுஷனை மனுஷன் மதிக்கணும்




மனிதனுக்குள் எவ்வளவோ திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்போதெல்லாம், பணத்தை வைத்து தான் ஒருவரது மதிப்பு எடையிடப்படுகிறது. திறமைக்கு மரியாதை கொடுப்பவர்கள் ரொம்ப சிலர் தான்! செல்வி என்ற பணக்கார பெண்ணின் வீட்டுக்கு  இன்னொரு பணக்காரியான மல்லிகா விருந்தாளியாக வந்தாள். விருந்தினர் அறையில், செல்வி பல ஓவியங்களை மாட்டி வைத்திருந்தாள். அவற்றை வாங்கிய விதம், அவற்றுக்காக ஆயிரக்கணக்கில் செலவு  செய்தது பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். மல்லிகாவுக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஏனடி! உனக்கு அறிவிருக்கா! யாராவது ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு ஓவியங்களை வாங்குவார்களா! இது எவ்வளவு காலமடி நிலைக்கும்!

வெறும் வண்ணத்துக்கும், திரைச்சீலைக்குமா இவ்வளவு காசு கொடுப்பார்கள்! பைத்தியக்காரி! என்னைப் பார்! நீ இங்கு வாங்கி வைத்துள்ள ஓவியங்களுக்கு நிகரான தொகைக்கு வைர நெக்லஸ் வாங்கி, கழுத்தில் அணிந்திருக்கிறேன், எப்படி டாலடிக்கிறது பார், என்றாள் கர்வம்  பொங்க! செல்வி அவளிடம்,மல்லி! நீ கரிக்கட்டையாய் கிடந்து சற்று பளபளப்பைப் பெற்றுள்ள  ஒரு பொருளுக்கு மதிப்பு  கொடுக்கிறாய். நானோ, இவற்றை வரைந்த மனிதனின் திறமைக்கு மதிப்பளிக்கிறேன். பகட்டுக்கு செலவழிப்பதை விட, மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர செலவழிப்பது தான் எனது கொள்கை. மனிதனின்  திறமைக்கு மதிப்பளிக்கும் நாட்டிற்கு செல்வம் தானாகவே வந்து சேரும், என்றாள். ஆம்...அவள் சொன்னது நிஜம் தானே!