FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on March 13, 2012, 05:15:11 AM

Title: குப்பையில் வீசுகிறாய்...
Post by: ஸ்ருதி on March 13, 2012, 05:15:11 AM

எனக்கான கவிதையாய்
உன்னை மட்டுமே
எழுதி வருகிறேன்...

உன்னுள் நான்
இருப்பதாய் கருதி
என்னுள் உன்னை
பொக்கிஷமாய்
பார்த்துவருகிறேன்..
தூரத்தில் உன் குரல்
உன் இதயமட்டும் எனதருகில்...

உன்னை பார்த்திருக்கிறேன்
நீ பாராமல் இருக்கும் தருணத்திலும்...

ஒவ்வொரு நொடியிலும்
ஓவ்வொரு மணியிலும்
ஒவ்வொரு நாளும்
கடந்து போகையில்
நாட்களின் முடிவு
என்னை கலங்க செய்கிறது....

நாட்களை நிறுத்தி விடு
மணித்துளிகள் மாறாமல்
மடிந்து போகட்டும்...
என்னோடு நீ பேசும் தருணங்கள்
நீண்டு போகட்டும்

என்னை பலரும் கடந்து போக
நீ மட்டும் நிலைத்து விட்டாய்
என் இதயத்தின் துடிப்பாய்...

இப்போதெல்லாம்
ஏனோ என்மனம் பதற...
துடிப்பு மட்டும் இரேட்டிப்பாகிறது

பொறுமை இருந்த நெஞ்சில்
இன்று பொறாமை குடிகொள்ள
எனக்காக மட்டுமே நீ
ஏங்குகிறது நெஞ்சம்

அறிந்தும் அறியாமல்
புரிந்து புரியாமல்
நீ நடத்தும் நாடகத்தில்
ஓவ்வொரு நாளும்
போராட்டம் என் மனதுள்....

உரிமையில்லா உன்னிடம்
நேசம் கொண்டேனோ
உணர்வை புரியா உன்னில்
உயிரை தந்தேனோ...
எப்போது உணருவாய்??

தேடி தேடி வரும் என்னை
அலையவைகிறாய்...
கொட்டிதரும் பாசத்தை
குப்பையில் வீசுகிறாய்...

இலையின்
பனித்துளியல்ல
என் நேசம்..
நீ உணரும் தருணம்
ஒருவேளை
என் துடிப்பை நான்
மறந்திருக்கலாம்... :'( :'( :'( :'(
Title: Re: குப்பையில் வீசுகிறாய்...
Post by: Global Angel on March 13, 2012, 06:02:34 PM
உண்மையான  வரிகள் ஸ்ரு நன்று உன் கவிதை .... ஏக்கம் .,,,,,
Title: Re: குப்பையில் வீசுகிறாய்...
Post by: ஸ்ருதி on March 13, 2012, 11:34:33 PM
நன்றிகள் ரோஸ்

ஏக்கமே கவிதையாய் மாறி போகிறது சிலநேரங்களில்


Title: Re: குப்பையில் வீசுகிறாய்...
Post by: Dharshini on March 14, 2012, 02:31:35 AM
என்னை பலரும் கடந்து போக
நீ மட்டும் நிலைத்து விட்டாய்
என் இதயத்தின் துடிப்பாய்...

romba nala varigal chlm palar varuvar povar miga silar than pathivargal athilum manathuku migavum pidipathu oruvarai matum than athu nam vazhum kalam varai nilaithu nindru nindru vindum super:-*

நாட்களை நிறுத்தி விடு
மணித்துளிகள் மாறாமல்
மடிந்து போகட்டும்...
என்னோடு நீ பேசும் தருணங்கள்
நீண்டு போகட்டும்(mani thuli endra ondre illamal pogatum athuve niyam chlm  pesum tharunagal idaiveli illamal neelatum really super chlù:-*

பொறுமை இருந்த நெஞ்சில்
இன்று பொறாமை குடிகொள்ள
எனக்காக மட்டுமே நீ
ஏங்குகிறது நெஞ்சம்
 ithu romba unmaiyana varigal chlm alavuku athigamana anbu iruka idathula automatic ah poramai vanthu chair potu ukathudum  ;D



Title: Re: குப்பையில் வீசுகிறாய்...
Post by: suthar on March 15, 2012, 01:13:56 AM
ella lines um  nalla iruku entha line solrathuney therila avlavum nalla iruku shruthi.....
Title: Re: குப்பையில் வீசுகிறாய்...
Post by: RemO on March 21, 2012, 09:42:28 AM
Quote
என்னோடு நீ பேசும் தருணங்கள்
நீண்டு போகட்டும்

apa ini nee than call pananum ok va :D