FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on July 16, 2011, 01:06:27 PM

Title: அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்!!!
Post by: Yousuf on July 16, 2011, 01:06:27 PM
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு – சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது. நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா?
Title: Re: அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்!!!
Post by: Global Angel on July 16, 2011, 09:22:22 PM
vaasanai vantha pasi thaanaa varuthe.... kekeke enna panna...? nalla thagaval... kadai pidipathu kadiam....vaaikum vajiththukum pottu poda mudiyaathappa... ;D
Title: Re: அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்!!!
Post by: Yousuf on July 16, 2011, 10:22:22 PM
Ke ke ungal udal yedaikkum nichayam pootu poda mudiyathu anjel...!!! :P :D :D