Author Topic: Naan padithu rasitha kavithaigal  (Read 2136 times)

Offline kanmani

Naan padithu rasitha kavithaigal
« on: July 20, 2011, 11:36:56 PM »
நினைவில் கொள்!!!

தவறு செய்வது குற்றம் இல்லை
குறை சொல்லாத சுற்றம் இல்லை
யானைக்கும் அடி சறுக்கும் - இதைப்
புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்...

வாழ்கை என்பது
வழுக்கு பாறை - அதில்
வழுக்கி விழுவது தவறல்ல
வழுக்கி விழுவதையே வழக்கமாய்
கொண்டிருத்தல் வாழ்க்கையல்ல....

தோல்வியில்லாத வெற்றி இனிக்காது
முயற்சியில்லாத கனவு பலிக்காது..!!!

Offline kanmani

Re: Naan padithu rasitha kavithaigal
« Reply #1 on: July 20, 2011, 11:38:38 PM »
நிலையில்லா வாழ்க்கை

நிலையில்லா வாழ்க்கை
இதில் தீமைகள் என்று ஒன்றுமில்லை
உணர்வுகளை ஒழித்து வைத்தால்
வாழ்வினில் நிம்மதி வருவதில்லை
வாழ்க்கையே கொஞ்ச காலம்
வாழ்ந்து தான் பார்ப்போம் வாடா
எதிர்பார்ப்புகள் ஒருவனுக்கு
என்றும் இன்பத்தை கொடுக்காது
எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை
எவனுக்கும் இங்கு வாய்க்காது
இந்த உலகத்திலே எதுவும் சொந்தமில்லை
நீ மண்ணுடன்
போகும் போது தெரிகிறதே
கண் மூடி நீ தூங்கி விட்டால்
இந்த உலகம் உன்னை விட்டு செல்லும்
கை கொடுத்து உன்னை கூட்டி செல்ல
உன் நிழலே உனக்கு தடை விதிக்கும்
வாழ்வோடு போராடும் வரைக்கும்
தீராத இந்த நடுக்கம்
உலகத்தில் எத்தனை கோடி
இன்பங்கள் வாழ்கையில் தொலைத்திருப்போம்
அத்தனையும் என்றும் திரும்பி வராதே
பணம் இருந்தால் நீ யார் என்று
உன்னை உனக்கே தெரியாது
பணம் இல்லா மனிதனை தான்
இந்த உலகம் என்றும் மதிக்காது
பழி போடும் இந்த உலகம்
உன் பாதையை என்றும் கூறாதே

Offline kanmani

Re: Naan padithu rasitha kavithaigal
« Reply #2 on: July 20, 2011, 11:40:06 PM »
இன்றைய காதல்


பார்த்தோம்
சிரித்தோம்
பழகினோம்
துடித்தோம்
தவித்தோம்
திரிந்தோம்
உலாவினோம்
அளாவினோம்
இணைந்தோம்
கலந்தோம்
இன்புற்றோம்
இறுதியில்
மணந்தோம்
வேறு வேறாய்!

Offline kanmani

Re: Naan padithu rasitha kavithaigal
« Reply #3 on: July 20, 2011, 11:41:24 PM »
விட்டுக்கொடு பெண்ணே...


நீ என்னை பார்க்காதே,
என் மனம் உன்னை காணாது!
நீ ஒன்றும் சொல்லாதே,
என் உள்ளம் கேட்காது!
கண்முன்னே மறைந்தாயே,
கானல் நீர் போல....
உயிர் போகும் நேரத்தில் காண கண் துடித்திருக்கும்,
உள்ளம் இளகுதடி உன்னை காணமல் போனதற்கு!
வராமல் போனதற்கு மன்னிப்பாயா....
தொடரும் தோல்விகளாய், துரத்துதடி ஞாபகங்கள்.
மாறி போன வாழ்க்கையில், மறந்து போன நினைவுகள்
வாழ்ந்த வாழ்க்கையே மாயமாய் போன பின்
வாழ்க்கையை துறந்து விட, வயது என்னை தடுக்குதடி!
முற்றும் துறந்து நான் முனிவனாய் மாறினால்.
அங்கும் நீ அமர்ந்திருப்பாய் அம்மன் சிலையாக...
வல்லக்கோட்டை முருகா வல்லமை தாராயோ....

Offline kanmani

Re: Naan padithu rasitha kavithaigal
« Reply #4 on: July 20, 2011, 11:43:20 PM »
நீ இல்லாதபோது!...

நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
மறைக்க மனமில்லை மறைத்தால்
மனம் செய்யும் தற்கொலை!
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
தினமும் சொல்லும் "அமுதமொழி"
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....

Offline kanmani

Re: Naan padithu rasitha kavithaigal
« Reply #5 on: July 20, 2011, 11:45:10 PM »
வாழ்வை தொலைத்தவர்கள்

திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தாலும்
போதுமென்ற மனதுடன்
சந்தோஷமாய் வாழ்ந்தனர் அன்று
வலைகடலில் மூழ்கி
இறுதி காலம் வரை திரவியம்
தேடுகின்றனர் இன்று......

காலம் நேரம் பாராமல்
கணினி முன் பணிபுரிகின்றனர்
வீட்டுகடனுக்கும் வாகனகடனுக்கும்
பிள்ளைகளின் கல்விக்கும்
ஆடம்பர தேவைகளுக்கும்
தன் வாழ்வை அடமானம் வைக்கின்றனர்.....

அன்பு, பாசம், நேசமென்றால்
தேவையில்லாத பேச்சு என்கின்றனர்
கணினியில் உழன்று உழன்று
இயந்திரமாய் மாறி போனவர்கள்
சொத்துக்கள் சேர்கின்றன
பிள்ளைகள் வளர்ந்து தன்வழியே போகின்றனர்....

பணத்தின் பின்னே போனவர்கள்
தன்னந்தனியே வாழ்கின்றனர்
வங்கியின் இருப்பை கொண்டு
வைத்தியர்களின் துணையோடு
இழந்த வாழ்வை எண்ணி கொண்டு.....

Offline kanmani

Re: Naan padithu rasitha kavithaigal
« Reply #6 on: July 20, 2011, 11:47:35 PM »
கள்ளிச்செடி

திருமணச் சந்தையில்
கன்னியர் கிடையாது
அவதியுறும் காளையரின்
சாபத்தில் வெட்டியெறியப்பட்டன
பால் சுரந்த குற்றம் சுமத்தி.

புறம்போக்கு இடங்களை
ஆக்கிரமித்த காரணம் சொல்லி
களைந்தெறியப்பட்டன
அமைச்சரின் வைப்பாட்டி
தொடங்கும் தொழிற்கூடத்திற்கு.

குளத்தின் தடயம் பல அழித்து
மழைக்காலத்திற்க்கு முன்பான
புதுமனை புகுவிழா
நடந்தேற்ற வேண்டிய அவசரத்தில்
கவனியாது விட்டுவிடக் கூடும்
காம்பவுன்ட் சுவர் ஓரம்
வாசம் கொள்ள.

கணக்கில்லா காயக்களிம்புகள்
கடைத்தெருவில் கிடைக்கையில்
"என்சைக்ளோபீடியா"வில்
வரலாறு எழுதப்படலாம்.