FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 14, 2011, 02:53:43 PM

Title: ஈசி snacks
Post by: kanmani on July 14, 2011, 02:53:43 PM
ப்ரட் உப்புமா
தேவையான பொருட்கள்:

    * வெங்காயம் -- 2 என்னம்
    * தக்காளி -- 2 என்னம்
    * உப்பு -- ருசிக்கேற்ப
    * கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
    * கடுகு,உளுத்தம் பருப்பு -- 1/2 டீஸ்பூன்
    * கறிவேப்பிலை -- 1 இனுக்கு
    * எண்ணைய் -- 3 ஸ்பூன்
    * சிவப்பு மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
    * ப்ரட் -- 8 என்னம் (ஓரத்தை வெட்டி மற்றவைகளை சதுரமாக நறுக்கவும்)


செய்முறை:

    * வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
    * பின் சிவப்பு மிளகாய் தூள் போட்டு நன்கு வதக்கி மிளகாய்தூள் வாசம் போனதும் கைஅளவு தண்ணீரை தெளித்து ப்ஃரட்டை போட்டு நன்கு பிரட்டவும்.
    * தேவை எனில் புதினா, கொத்தமல்லி தழை சேர்க்கலாம்.
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:03:48 PM
ஆப்பிள் டிலைட்
தேவையான பொருட்கள்:
பெரிய ஆப்பிள்கள் - 3
பொடி செய்யப்பட்ட காய்ந்த ரொட்டியின் பாகங்கள் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய் - 1 கப்
பழ கலவை ஜாம் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த ரொட்டி - 1 துண்டு
லவங்கப்பட்டை - 1 டீஸ்பூன்
முட்டையின் மஞ்சள் பாகங்கள் - 2

அலங்கரிக்க:

சிறிய ஆப்பிள் - 3
சிவப்பு ஜெர்ரி பழங்கள் - 6
அடித்து கலக்கப்பட்ட க்ரீம்
செய்முறை:
ரொட்டியின் கெட்டியான மேல் பாகத்தை எடுத்து விட்டு அதன் மிருதுவான பாகத்தை விரல்கள் அளவு மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் வெண்ணெயை எடுத்து உருக வைத்துக் கொள்ளவும். உருகிய வெண்ணெயில் வெட்டி வைத்திருக்கும் ரொட்டித் துண்டுகளின் இரண்டு முனைகளையும் தோய்த்து எடுக்கவும். ஆப்பிளின் தோலை சீவி விட்டு, அதன் உள்ளிருக்கும் பாகங்களைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளில் வெண்ணெய்யைத் தடவி, கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். அவை மிருதுவாக மாறியதும், நன்கு அவற்றை மசித்து, கூழாக தயாரித்து வைத்து கொள்ளவும். முட்டையின் மஞ்சள் பாகங்கள், பழ மிக்சர் ஜாம், பொடியாக்கபட்ட லவங்கப்பட்டை முதலியவைகளை மசித்து வைத்து ஆப்பிளுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.ஃபுட்டிங் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதன் உட்பக்கம் சுற்றிலும் வெண்ணெயை தடவவும். அதன் பின்பு மெலிதாக வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகளை ஃபுட்டிங் நடுவில் ஆப்பிள் கலவையை ஊற்றி வைக்கவும். ரொட்டித் துண்டில் வெண்ணெய் தடவி, ஆப்பிள் கலவையின் மேல் பாகத்தில் அதை மூடுவது போல வைக்கவும். வெண்ணெய் பேப்பரினால் ஃபுட்டிங் பாத்திரத்தை மூடி இறுக கட்டி விடவும். பின்பு ஃபுட்டிங் பாத்திரத்தை குக்கரில் வைத்து 30 நிமிடங்கள் குக்கரை அடுப்பில் தொடர்ந்து வைக்கவும். ஆப்பிளை இரு சமபாதிகளாக வெட்டி, ஜாமையும், க்ரீமையும் அந்த பாதிகளில் தடவி, ஜெர்ரி பழங்களையும் இடையிலே வைத்து, அலங்கரித்து விடவும். இப்போது சுவையான ஆப்பிள் டிலைட் ரெடி.
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:09:12 PM
ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு
தேவையானவை:
[/color]உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
[/color]
உருளைக்கிழங்குகளை நன்றாக கழுவி, கத்தியினால் மேல் தோலை சுரண்டி எடுக்கவும். இவற்றை மேலிருந்து கீழ்வரை, கத்தியால் நறுக்கவும். (கவனம்: கடைசி வரை நறுக்கிவிட வேண்டாம்). கிழங்குகளை "அவன்"-ல் வைத்து, "மைக்ரோ ஹை"யில் 5 நிமிடம் வேகவைக்கவும். தேங்காய் துருவல், தனியாதூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை, பெருங்காயம், மிளகுத்தூள் இவற்றை சேர்த்து கலந்து வைக்கவும். பிறகு உருளைக்கிழங்குகளை ஒவ்வொன்றாக எடுத்து, கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் அடைத்து, ஒரு மைக்ரோ, வேவ் கண்ணாடி பாத்திரத்தில் வரிசையாக வைக்கவும். இதன் மேல், மீதமுள்ள பொடியை தூவி, சிறிது எண்ணெய் (1 அல்லது 2 டீஸ்பூன் வரை) தெளித்து, 5-லிருந்து 7 நிமிடங்கள் "மைக்ரோ ஹை"யில் வைக்கவும். கமகமக்கும், அட்டகாசமான ஸ்டஃப்டு
[/color][/b]
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:16:51 PM
சிஸ் ரைஸ் பால்ஸ்

தேவையானவை:
குழைய வேக வைத்த சாதம் - 2 கப், சிஸ் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வேக வைத்த சேமியா - அரை கப், மைதா - கால் கப், மல்லி தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

சாதத்தை கையால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மசித்த சாதத்துடன் சிஸ், பச்சை மிளகாய் விழுது, சேமியா, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, உப்பு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.இந்தக் கலவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சூடான சிஸ் பால்ஸீம் தொட்டுக்கொள்ள சாஸீம் இருந்தால், பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லமால் நிமிடத்தில் காலி செய்துவிடுவார்கள்.
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:20:05 PM
வெஜிடபிள் மஞ்சூரியன் பால்ஸ்
தேவையானவை:
துருவிய கேரட் - அரை கப், நறுக்கிய கோஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய குடமிளாகாய், பீன்ஸ் - தலா கால் கப், நறுக்கிய வெங்காயம் - 2, சோள மாவு - அரை கப், மைதா மாவு - அரை கப், அஜினமோட்டோ - அரை டீஸ்பூன், வெங்காயத்தாள் - அலங்கரிக்க, பூண்டு - 3 பல், பச்சைமிளகாய் - 3, எண்ணெய் - பொரிக்க, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:

பூண்டு, பச்சை மிளகாயை நசுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன், நறுக்கிய காய்கறிகள், அஜினமோட்டோ, சோயா சாஸ், சோள மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுங்கள். வெங்காயத்தாளால் அலங்கரித்து பரிமாறுங்கள்.
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:24:23 PM
சேனைக்கிழங்கு கட்லட்
தேவையான பொருட்கள்:-
 
சேனைக்கிழங்கு - 1கப் (கேரட் துருவலில் துருவியது)
பொட்டுக்கடலை மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
காரத் தூள் - 1/4 ஸ்பூன்
மசாலாத் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
ரஸ்க் தூள் - 2 ஸ்பூன்
[/color] 
 
செய்முறை:-
 
சேனை கிழங்கை துருவி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து, வெங்காயம், இஞ்சி, உப்பு, காரத்தூள், மசாலாத் தூள், கறிவேப்பிலை என போட்டு பிசையவும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்   பொரித்தெடுத்த கலவையை, ரஸ்க், தூளில் புரட்டி எடுக்கவும், தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பி போட்டு எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பரிமாறலாம்.
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:29:07 PM
ஆப்பிள் பகோடா


தேவையான பொருட்கள்:-
துருவிய ஆப்பிள் - ஒன்றரை கப்
கடலை மாவு - முக்கால் கப்
அரிசி மாவு - அரை கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:-
மேலே கூறிய எல்லாப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து, நன்றாகப் பிசைந்துகொள்ளவும் ஆப்பிளில் இருக்கும் நீர்ச்சத்தே போதுமானது தேவை என்றால், சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையலாம்.பிறகு எண்ணெயைக் காயவைத்து, பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பகோடாக்களாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் அரித்தெடுத்து, சூடாகப் பரிமாறவும். பண்டிகைக் காலத்துக்கு மட்டுமல்ல, மழைக்காலத்துக்கும் ஏற்ற ஸ்நாக்ஸ் இது. ஆப்பிள் சிஸனில் செய்து அசத்தலாம்.
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:33:34 PM
பிரட் கட்லட்
தேவையான பொருள்கள்:-
சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6
உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3
கப்கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப்
மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு
தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2
கப்சீரகப்பொடி - 1ஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:-
முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சிரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிரட்டை தண்ணீரில் நனைத்து இரண்டு கைகளுக்குகிடையே வைத்து நன்றாக பிழியவும்.இரண்டு பிரட்டிற்கு இடையிலோ அல்லது ஸ்லைஸின் நடுவிலோ காய்கறிகளை வைத்து நன்கு மூடி வைக்கவும் தேவைக்கேற்ற வடிவத்தில் (உருண்டையாகவோ, தட்டையாகவே செய்து, எண்ணெயில் சிவக்கும் பதத்தில் பொரித்தெடுக்கவும்).தயிரில் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கடைந்து பொரித்து வைத்திருக்கும் கட்லெட் மீது இரண்டு டீஸ்பூன் அதன் மேல் சீரகப் பொடி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.


Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 05:44:26 PM
மில்க்கி ஆப்பிள்
தேவையான பொருட்கள்:-
பால்பவுடர் - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
சர்க்கரை - முக்கால் கப்
சிவப்பு உணவு கலர்பொடி - தேவைக்கேற்ப
டால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 10
செய்முறை:-

சர்க்கரையை 1 கப் தண்ணீரில் போட்டு, அடி கனமான வாணலியில் பாகு காய்ச்சவும், பின், தேங்காய்த் துருவலை அதில் போட்டுக் கலந்து, கலர் பவுடரையும் போட்டு, நெய்யையும் ஊற்றிக் கிளறவும், பின் பால்பவுடரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலந்து கொண்டே இருக்கவும்.கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, சற்று ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும், பின் ஒவ்வொரு உருண்டையிலும் ஒரு லவங்கத்தை வைத்து அழகுபடுத்தவும். லவங்கம் வைக்கும் போது சிறிது பள்ளமாகச் செய்து வைத்தால் பார்ப்பதற்கு ஆப்பிள் போன்றே காட்சி தரும். பிறந்த நாள் போன்ற வைபவங்களுக்கு
விரைவில் செய்யக்கூடிய "சிம்பிள் ஸ்வீட்".
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 06:41:48 PM
கீரை பக்கோடா
தேவையான பொருட்கள்:-
கடலைப் பருப்பு - 1 1/2 கப்
அரைக் கீரை - 1 கட்டு
புதினா - 1 கைப்பிடி
கறிவேப்பிலை சிறிது
மல்லித்தழை சிறிது
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:-

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். அரைத்த விழுதுடன் உப்பு கீரை வகைகளைச் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.
 
Title: Re: ஈசி snacks
Post by: kanmani on July 19, 2011, 07:00:34 PM
ரவை நக்கட்ஸ்

தேவையான பொருட்கள்:

பாம்பே ரவை - 1 கப்
சேமியா - 1 கப்
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு - 2 டீ ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

* 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஒரு கடாயில் காய வையுங்கள்.* அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வதக்குங்கள்.* பின்னர் ரவையையும் சேருங்கள்.* 5 நிமிடம் நன்கு வதக்கியபின், சேமியாவை கையால் நன்கு நொறுக்கி சேருங்கள்.* அத்துடன் மிளகாய்த்தூள், மல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.* ஒரு பாத்திரத்தில் நாலரை கப் தண்­ணீர் கொதிக்க வைத்து, ரவை கலவையில் சேர்த்து நன்கு கிளறி இறுகும் வரை வேகவிடுங்கள்.* கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கிளறுங்கள்.* ஆற வைத்து வேண்டிய வடிவத்தில் செய்துகொள்ளுங்கள்.* மைதாவை சற்று கெட்டியாக கரைத்து, செய்து வைத்துள்ள ரவை நக்கட்ஸை அதில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.* தக்காளி சாஸ், இதற்குப் பொருத்தமான காம்பினேஷன்.