FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on October 26, 2013, 10:54:15 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 26/10/2013 (26th Oct)
Post by: kanmani on October 26, 2013, 10:54:15 PM
இன்றைய ராசி பலன்கள் - 26/10/2013



மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.


மிதுனம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப் பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


கடகம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவ தால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர் களை குறை கூறுவதை நிறுத்துங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். எதிர்பார்ப்பு கள் தாமதமாகி முடியும் நாள்.


சிம்மம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் அலைச் சல் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோ கத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.


கன்னி: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


துலாம்: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


விருச்சிகம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன், மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். உற்சாகமான நாள்.


தனுசு: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவ தால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரியதகராறில் போய் முடியும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


மகரம்: பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்து வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.