FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on November 21, 2011, 05:05:28 AM

Title: விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்?
Post by: Global Angel on November 21, 2011, 05:05:28 AM
விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்?  


விவேகானந்தர் காவி உடை அணியாமல் இருந்திருந்தால் அவரை இந்து மத துறவி என்று யாரும் கூற இயலாது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொளும்படியாக உள்ளது. மதத்தை தாண்டி சீர்திருத்தவாதிகளின் நன் மதிப்பையும் பெற்றவர் அவர்.

"ஒரு  விதைவையின்   கண்ணீரைத்  துடைக்க  முடியாத , ஓர்  அனாதையின்  வயிற்றில்  ஒரு  கவளம்  சோற்றை  இட  முடியாத  கடவுளடித்திலோ,சமயத்திலோ  எனக்குக்  கொஞ்சம்  கூட  நம்பிக்கை  கிடையாது"  என்று  அவர்  கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம்.ஆனால்  உண்மையில்  அவர் ஒரு ஆன்மீகவாதியே.


அவரின் ஜாதகம்:  தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், இரண்டில் சுக்கிரன் மற்றும் புதன், ஐந்தில் செவ்வாய் ஆட்சி,  ஆறில் கேது, பத்தில் சந்திரன் மற்றும் சனி, பதினொன்றில் குரு.
இவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்ப்பட, தியானத்தில் மூழ்க காரணம்  பதினொன்றில் இருக்கும் குருபகவான் ஐந்தில் ஆட்சி பெற்று இருக்கும் தியான அதிபதியை பார்ப்பதுதான். அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதியான குரு ஐந்தாம் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். .  (இதுவே என் கருத்து).


இவர் ஏன் இளமையில் இறந்தார் ?
இவர் இறக்கவில்லை. இவரே விரும்பித்தான் உடலை விட்டார். அதாவது மகா சமாதி அடைந்தார். 


இவரே நெருங்கியவர்களிடம் நான் நாற்பது வயது வரை வாழ மாட்டேன் என்று கூறியுள்ளதாக சில குறிப்புகள் உள்ளது. (இது அவரின்  தீர்க்க தரிசனத்தை காட்டுகின்றது) அதுபடியே அவர் நாற்ப்பது வயது பூர்த்தியாவதற்கு முன் பூத உடலை நீத்தார். அதாவது மகா சமாதி அடைந்தார் .

ஏன் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்க கூடாது என்ற கேள்வி எழலாம். எனக்கு தெரிந்து பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார்.