FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on December 18, 2011, 06:50:57 AM

Title: யார் இப்போது முட்டாள்?
Post by: ஸ்ருதி on December 18, 2011, 06:50:57 AM
அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு நாள் ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அதே பாதையின் மறு முனையில் இருந்து ஒரு முரட்டு ஆள் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது யார் என்று அறிந்த அந்த முரடன் வேண்டுமென்றே வழியை மறைத்துக் கொண்டு வழி விடாமல் நின்றான்.

வழியை விடுங்கள் என்று பெர்னாட்ஷா அமைதியாக கேட்டார்.

அந்த முரடனோ முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லை என்று கூறி வழியை மறைத்துக் கொண்டான்.

பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே எனது பழக்கம் வேறு விதமானது, ' நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பேன்' என்று கூறிவிட்டு பாதையில் ஒரு புறமாக விலகி நின்றார்.

மிகவும் சாதுர்யமாக அவமானப்படுத்தப்பட்ட அந்த முரடன் பெர்னாட்ஷாவை முறைத்துக்கொண்டு அவரைக் கடந்து சென்றான். ;) ;) ;)
Title: Re: யார் இப்போது முட்டாள்?
Post by: Global Angel on December 18, 2011, 10:51:27 PM
ஹஹா நல்ல மூக்கறுப்பு  ... அறிஞர்கள் எபவும் சமயோசித புத்தி உள்ளவர்கள்  
Title: Re: யார் இப்போது முட்டாள்?
Post by: RemO on December 19, 2011, 02:34:14 AM
ha ha
avarum enai pola puthisali than