FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on June 25, 2015, 09:48:16 PM

Title: ~ ஒரு நிமிடக் கதை: கடன் ~
Post by: MysteRy on June 25, 2015, 09:48:16 PM
ஒரு நிமிடக் கதை: கடன்

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11046371_1464102190553918_2205468268532578300_n.jpg?oh=e85d41a90a827e68ba759cab11d61271&oe=5627AF1F&__gda__=1441653024_a82bf3295e1cb9a478d8bb14a10b4406)

அக்கா... கொஞ்சம் சர்க்கரை இருந்தால் கொடுங்களேன்” என்றவாறு காலையிலேயே பக்கத்து வீட்டு மீனா வந்தாள்.

மீனாவிடம் ஒரு கிண்ணத்தில் சர்க்கரை எடுத்து கொடுத்த அமுதா, “மீனா, நானே கேட்கணும்னு நெனச் சேன். கொஞ்சம் தோசை மாவு இருந்தா கொடேன். சுத்தமா மாவு இல்லை. இந்நேரம் கடையிலும் இருக்காது” என்றாள்.

“இதோ கொண்டு வரேன்கா” என்று மீனா சென்றுவிட்டாள்.

பேப்பர் படித்தவாறு இதைப் பார்த்துக்கொண்டிருந்த அமுதாவின் கணவன் சிவாவுக்கு எரிச்சலாக வந்தது. நேற்றுதானே மாவு ஆட்டி ப்ரிஜ்ஜில் எடுத்து வைத்தாள் என்று எண்ணினான்.

ஒரு வாரத்துக்கு பிறகு வெளியூரில் இருந்து சிவாவின் தங்கை காயத்ரி தன் கணவனுடன் ஒரு திருமணத்துக்காக வந்திருந்தாள்.

“அண்ணி, உங்ககிட்ட ஒரு வெளிநாட்டு கைகடிகாரம் இருக் குமே. அதை கொஞ்சம் தர்றீங்களா? இந்தப் புடவைக்கு நல்லா இருக்கும். கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்து தந்துடறேன்” என்று அமுதா விடம் உரிமையாக கேட்டாள்.

அமுதாவும் அவளிடம் கைக் கடிகாரத்தைக் கொடுத்தவாறு, “காயத்ரி, உன்னோட அந்த ஹாண்ட் பேக் அழகா இருக்கு. அதை கொஞ்சம் கொடுத் தேன்னா, காலையில நான் கடைக்கு போய் அதே மாதிரி வாங் கிட்டு வரேன்” என்றவாறு அவள் கைப்பையை வாங்கிக்கொண்டாள்.

அவர்கள் கல்யாண வீட்டுக்கு போன பின் அமுதன், “ஏண்டி, உன்கிட்ட இல்லாத பைகளா? அன்னைக்கும் மீனா கிட்ட மாவு கேட்ட. அவங்க கடன் கேட்டா நீயும் கடன் கேக்கணுமா ?” என்று எரிந்து விழுந்தான்.

“வாஸ்தவம்தாங்க. எல்லா பொரு ளுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. மீனா, காயத்ரி எல்லோருமே நமக்கு வேண் டியவங்கதான். இருந்தாலும் ஓசியா கொடுக்குற பொருளுக்கு மதிப்பு இல் லைங்க. ஓசி தானேன்னு அவங்களும் திருப்பி கொடுக்க மறந்துடுவாங்க. அவங்க பொருளை எதுனாலும் நாம வாங்கிட்டு கொடுத்தா, அவங்களும் மறக்காம நம்மகிட்ட கொடுத்திடு வாங்க” என்றாள் புன்முறுவலுடன்.